மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவையானி, சினேகா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் `ஆனந்தம்.’ இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த லிங்குசாமி இயக்கிய முதல் திரைப்படம் இது. இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இன்றும் தொலைக்காட்சிகளில் இந்த திரைப்படம் வெளியாகும்போது மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. ஃபீல் குட் ஃபேமிலி டிராமா வகையைச் சேர்ந்த ஆனந்தம் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த திரைப்படத்தைப் பற்றி தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள் இங்கே…
- லிங்குசாமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வைத்துதான் அவரின் முதல் திரைப்படமான
ஆனந்தம்’ படத்தை இயக்கினார்.
முதலில் இந்தப் படத்தில் மம்முட்டி, முரளி, அஜித், சூர்யா ஆகியோரை நடிக்க வைக்க லிங்குசாமி ஆசைப்பட்டார். பிறகுதான் மம்முட்டி, முரளி, அப்பாஸ், ஷ்யாம் கணேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்தனர்.
ஆனந்தம் கதையோடு தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் மட்டும் போய்விடக்கூடாதுனு ரொம்ப கான்சியஸா லிங்குசாமி இருந்திருக்கிறார். ஏன்னா, வழக்கமான ஆட்களையே வச்சு படம் பண்ண வேண்டிய நிலைமை வந்திடுமோனு அவர் நினைச்சாராம்.
படம் ஃபுல்லா பாசிட்டிவான ஆட்களே இருப்பதாக பல தயாரிப்பாளர்கள் கருத்து சொல்லிருக்காங்க. கடைசில தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு இந்தக் கதை ரொம்பவே புடிச்சு போக அவரே இதை தயாரிக்கவும் செய்தார். முதன்முதல்ல கதை சொல்லும்போது எந்த சீன்ல அவர் அழுதாரோ திரும்பவும் கதை சொல்லும்போது அதே சீன்ல கண்ணீர் விட்டாராம், ஆர்.பி.சௌத்ரி.
மூத்த அண்ணனாக நடித்த மம்முட்டியை டப்பிங் சமயத்தில் லிங்குசாமி பாடாய்ப்படுத்தி எடுத்துவிட்டாராம். படம் வெளியாகி விமர்சனங்கள் வந்தபோது மம்முட்டியின் டப்பிங் தனியாக பேசப்பட்டது.
மம்முட்டியின் ஜோடியாக முதலில் சௌந்தர்யா நடிக்க இருந்தார். ஆனால், அவர் விலகியதால் தேவையானி அவருக்கு ஜோடியாக மாறினார். அதேபோல நந்தா படத்தில் கமிட் ஆனதால் சூர்யாவும் விலகியுள்ளார்.
ஆனந்தம்’ படத்துக்குதிருப்பதி ப்ரதர்ஸ்’ என பெயர் வைக்க விரும்பினர். அதன் பிறகு தாமிரபரணி’ என பெயர் வைக்க திட்டமிட்டனர். இறுதியில்
ஆனந்தம்’ என முடிவு செய்யப்பட்டது.- பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இந்தப் படத்தில் தான் தனது முதல் பாடலை எழுதினார். `பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ என்பதுதான் அவரின் முதல் பாடல்.
- `நான்கு ப்ரதர்ஸ் வச்சு ஒரு நல்ல கதை உங்ககிட்ட இருக்குறதா கேள்விப்பட்டோம். விக்ரமன் சார்லாம் உங்கள தேடிட்டு இருக்காரு. இந்தக் கதையை குடுக்குற ஐடியா இருக்காதானு”,நீ வருவாய் என’ ராஜகுமாரன் லிங்குசாமி கிட்ட கேட்டார். ஆனால், லிங்குசாமி இல்லையென்று கூறி மறுத்துவிட்டார்.
Also Read : நண்பன் படத்துல நீங்க எந்த ஃப்ரெண்ட்… உடனே தெரிஞ்சுக்கங்க!