“ஒரு டாக்டரை ட்ரோல் பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க. நாட்டுக்காக போராடுற மிலிட்டரி மேன் மாதிரிதான் டாக்டரும், நாட்டுக்கு சேவை பண்றவங்க. எந்த அளவுக்கு மக்களுக்கு சேவை பண்றாங்கனு தெரிஞ்சுக்கோங்க. அவங்களை இவ்ளோ ஹர்ட் பண்ணிங்கனா, சர்வீஸ்குள்ள வர்றது மாதிரி, அவங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது, அதுக்குனு நிறைய செக் ஷன்ஸ்லாம் இருக்கு. இதுலாம் தெரிஞ்சும் அமைதியா இருக்கோம்னா, எங்க வேலையை பார்த்துட்டு இருக்கோம்னு அர்த்தம். நாங்க இறங்குனோம்னா என்ன ஆகும் தெரியுமா?” – ஆக்சுவலா டாக்டர் ஷர்மிகா இப்படி பேசுன பிறகு கொஞ்சம் இந்த வீடியோ பண்ண பயமாதான் இருக்கு. யோசிச்சாச்சு, என்னென்ன விஷயங்களுக்காக அவங்களை ட்ரோல் பண்றாங்கனு பார்க்கலாம்!
ஹீலர் பாஸ்கர் மாதிரியான ஆள்கள் வரிசைல புதுசா இப்போ சேர்ந்துருக்குறது, ஷர்மிகா. முடி கொட்டும் பிரச்னை இன்னைக்கு எல்லாருக்குமே இருக்கு. எதாவது பண்ணி முடியை வளர வைக்க முடியாதானு தினம் தினம் போராடிட்டு இருக்காங்க. சரி, நம்ம டாக்டர் முடி வளர்றதுக்கு செமயான ஐடியா சொல்றாங்க. என்னனா, தினமும் எண்ணெய் தேய்க்கும்போது மசாஜ் பண்ணுங்க. ஆகா, நல்லாதான ஐடியா கொடுக்குறாங்க, அப்புறம் என்னனு யோசிக்கிறதுக்குள்ள, அப்படியே அந்த முடிக்கிட்ட கொஞ்சம் பேசுங்கன்றாங்க. ரைட்ரா, முடிக்கிட்ட போய் “வளர்ந்துருமா, கொட்டாதனு சொல்லுங்க, முடி கேட்டுக்கும். முடிக்கிட்ட மட்டுமில்ல, இப்போ உங்களுக்கு தைராய்டு பிரச்னை இருந்துச்சுனு வைங்க. சரியா போய்டுனு அதுகிட்ட சொல்லுங்க. சரியாயிடும். உடல் பாகங்களோட பேசுங்க”னு சொல்றாங்க. முடிக்கே இப்படினா, இன்னும் என்னலாம் சொல்லப் போறாங்கனு ஆர்வம் வருதுல! நீங்க கருப்பா இருக்கீங்களா, குறிப்பா உங்க நெத்தி ரொம்பவே கருப்பா இருக்கா? அப்போ நீங்க டிப்ரஷன்ல இருக்கீங்கனு அர்த்தம். நான் சொல்லல, டாக்டர் ஷர்மிகா சொல்றாங்க. அப்போ, வெள்ளையா இருக்குறவங்க டிப்ரஷன் ஆனா என்ன ஆகும்? ஏன்டா, ரேஸிஸ்ட்டா யோசிக்கிறனு நீங்க யோசிக்காதீங்க. சும்மா கேட்டேன். அடுத்துதான், ஸ்பெஷல் அயிட்டம். அதாவது, இன்னைக்கு பரபரப்பா பேசப்படுற நுங்கு விஷயம்.
பெண்ணியவாதிகள்ல இருந்து பாடி ஷேமிங்க்கு எதிரா பேசுறவங்க வரைக்கும், இன்னைக்கு பெண்களோட மார்பகம் பத்தின சரியான புரிதலை கொண்டு வர முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கிடைல, நம்ம டாக்டர் மொத்த ஃபர்னிச்சரையும் தூக்கி போட்டு உடைக்கிற மாதிரி கருத்துகளை கொட்டிருக்காங்க. உடம்பை பார்த்துக்குறது எவ்வளவு முக்கியம்னு சொன்னா அது ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கும். ஆனால், பெண்கள் யாராவது டாக்டர்கிட்ட வந்து என்னோட மார்பகம் சின்னதா இருக்குனு சொன்னாங்கனு வைச்சுக்கோங்க, அவங்க முதல்ல அவங்களுக்கு இருக்குற அந்த மனப்பான்மையை உடைக்கணும். அதை விட்டுட்டு நுங்கு சாப்பிட்டீங்கனு வைங்க, உங்க மார்பகங்கள் அழகாயிடும்ன்ற கருத்தை சொல்றதே எவ்வளவு அபத்தம். அதுக்கு, “நம்ம கடவுள் நம்மளோட ஆர்கான்ஸ் எந்தெந்த வடிவத்துல இருக்கோ, அதுக்கு ஏற்ற மாதிரிதான் மூலிகைகளையும் படைச்சிருக்காரு. அப்படிதான் நுங்கையும் படைச்சிருக்காரு”னு உருட்டுறது. அதுக்கப்புறம் எல்லாமே அழகுதான்னு ரசிக்கணும்ன்றாங்க. அதை முதல்லயே சொல்லிட்டு முடிச்சு விடாமல், கடவுள், அணு, துகள், நுங்குனு சொல்றதுலாம், என்னமோ போங்க. சயிண்டிஸ்கள்லாம் இதைக் கேட்டா, தலைகீழாதான் குதிப்பேன்னு குதிச்சிருவாங்க. இன்னைக்கு வேணா, நீ நுங்கு பத்திலாம் பேசலாம். ஆனால், விதை நான் போட்டது. எப்பயோ முருங்கைக்காய் பத்திலாம் பேசிட்டேன்னு பாக்யராஜ் வைச்சு மீம்ஸ் போட்டு அலப்பறை பண்ணிட்டு இருக்காங்க, நம்ம சோஷியல் மீடியன்ஸ். இதெல்லாம், சொல்ல முடிஞ்சது. முடியாமல் எவ்வளவோ மீம்ஸ் இருக்கு. How Do I Tell You!
“நான் சின்ன வயசுல இருந்தே கெமிக்கல் டேபிளட்ஸ்லாம் எடுத்ததில்லை. கேல்சியம் வேணுமா பால் குடிப்போம், புரோட்டீன் வேணுமா சிக்கன் சாப்பிடுவோம், வைட்டமின் டி வேணுமா வெயில்ல போய் நிப்போம்”னு சொல்றாங்க. அப்படியே குடிசைக்கட்டி, மண்ணெண்னை விளக்கு வைச்சு காட்டுல போய் வாழலாம். ஆனால், இவங்க மட்டும் அதை சாப்பிடுங்க, இதை சாப்பிடுங்கனு பேஷண்ட் வந்தா சொல்றது. அப்புறம் தலைமறைவா போய், ஜங்க் ஃபுட்ஸ்லாம் சாப்பிடுறது. இதெல்லாம்விட, ஹைலைட்டான விஷயம் ஒண்ணு இருக்கு. என்னனா, அவங்க ஹாஸ்பிட்டல்க்கு ட்ரீட்மெண்டுக்கு போனால், எல்லாரையும் ஹால்ல உட்கார வைச்சிட்டு ஸ்பீச் கொடுப்பாங்களாம். அதை கேட்டுட்டே, எனக்குலாம் ட்ரீட்மெண்ட் வேணாம்னு ஃப்ரெஷா போவாங்களாம். ஏங்க, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. இவங்க டாக்டர் மட்டும்தான்னு நினைக்கும்போது டக்னு ட்விஸ்ட் அடிச்சு லைஃப் அட்வைஸ்லாம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. காதல் பத்தின அட்வைஸ் எல்லாம் அல்டிமேட்டா இருக்கும். அதாவது 25 வயசுக்கு மேல லவ் பண்ணுங்கனு சொல்றாங்க. 25 வயசுக்கு அப்புறம் தெளிவு வரும்ன்றாங்க. எனக்குலாம் இன்னும் வரலை. இந்த மாதிரி ஏகப்பட்ட விஷயங்களுக்கு அட்வைஸ் பண்றாங்க. ஒரு குலாப் ஜாமூன் சாப்பிட்டா, 3 கிலோ வெயிட் போடுவீங்கன்னு, குலோப் ஜாமூனுக்கு வைச்சாங்க பாருங்க ஆப்பு. அப்புறம், முக்கியமான விஷயம் பீஃப் சாப்பிடக்கூடாதுனு சொன்னது. ஏன்னு கேட்டா, கடவுளா பார்க்குற அழகான விஷயம். அதை சாப்பிடக்கூடாது. இதை சயின்ஸ் இல்லைனு சொல்லலாம். சயின்ஸா இதை சொல்லணும்னா, நம்மளவிட பெரிய மிருகத்தை நம்மளால டைஜஸ்ட் பண்ண முடியாது. இதுக்கு நீங்க ஆடு நிறைய இருக்குறதும் மான் கம்மியா இருக்குறதும் ஆடு தப்பானு எஸ்.ஜே.சூர்யா கேக்குற மாதிரி, பீஃப் பெருசா இருக்குறது அதோட தப்பானு கேக்கக்கூடாதுனும் முன்னாடியே சொல்லிட்டாங்க. அதைப் புரிஞ்சுக்காமல் கேள்வி கேட்டா, அவங்க என்ன பண்ணுவாங்க.
கொரொனாவுக்கு பயந்து எல்லாரும் மாஸ்க் போடுங்கனு கவர்மெண்ட் வாய்வலிக்க சொல்லி, ஃபைன் போடுவோம்னு மிரட்டிட்டு இருந்தா, இவங்க மாஸ்க் போட்டா இன்னும் பிரச்னைலாம் வரும். அதுனால, நாங்க மாஸ்க்லாம் கழட்டிட்டு வெளிய இருக்குற காத்தை இன்ஹேல் பண்ணி இம்யூனிட்டியை பூஸ்ட் பண்ணிட்டு இருந்தோம்ன்றாங்க. பல்லு தேய்க்க சோம்பேறித்தனம் படுற ஆளா நீங்க, உங்களுக்காக சித்தா டாக்டர் சிறப்பான விஷயம் ஒண்ணு சொல்லியிருக்காங்க. காலைல எழுந்ததும் ஃபஸ்ட் வாய்ல இருக்குற பாக்டீரியாஸ் ரொம்ப நல்லதாம். அதனால், அவங்களே நிறைய தடவை பல்லு விளக்காமல் சாப்பிட்ருக்காங்களாம். ஒருவாரத்துல நீங்க சிம்ரன் மாதிரி மாறனும்னா முதல்ல நீங்க சிரிக்கணும். அப்போ டயட், அதுலாம் எதுக்கு? பாதி மருத்துவம், பாதி ரியல் லைஃப்தான் ஷர்மிகா ஸ்டைல் மருத்துவம். நல்ல எண்ணங்களோட இருந்தால், கடவுளா பார்த்து எல்லாமே கொடுப்பாரு. மனசு கிளீன் ஆயிடும். அகத்தின் அழகுதான் முகத்துல தெரியும். அப்புறம் சிம்ரன் மாதிரி மாறிடலாம். என்னென்ன சொல்றாங்க பாருங்க. ரொம்ப நேரம் செக்ஸ் வைச்சுக்கணும்னு மெடிசின்ஸ்லாம் போறாங்க, அதுலாம் தவறுங்க. நல்ல உணவு, நல்ல வொர்க் அவுட் ஃபாலோ பண்ணா எல்லாம் நல்லதாவே நடக்கும். கடவுளே உங்களுக்கு குழந்தை கொடுப்பாருனு சொல்றதுலாம், எந்த டாக்டரும் இதுவரை சொல்லாத விஷயங்கள்தான். நெய் சாப்பிட்டா பளபளனு ஆயிடுவீங்க, கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்னு எந்த விஷயத்தை நீங்க அவங்கக்கிட்ட கேட்டாலும், அதுக்கு வாய்க்கு வந்ததை சொல்லிட்டு போறாங்க. எக்கச்சக்கமான இண்டர்வியூ கொடுத்ததால, எக்கச்சக்கமான கண்டெண்ட் இருக்கு. எல்லாத்தையும் லிஸ்ட் பண்ண முடியலை.
கவலையான விஷயம் என்னனா, இவங்க பேசுறதைக் கேட்டு நிறைய பேர் வீட்டுல மருத்துவம் பார்க்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. எவ்வளவு ஆபத்தான விஷயத்தை பண்றோம்னு புரியாமல், இதை பண்ணிட்டு இருக்காங்க, இந்திய ஹோமியோபதி மருத்துவத்துறையோட இணை இயக்குநர், இவங்க மாட்டுக்கறி, நெய், குலோப் ஜாமூன் பத்தி பேசுன எல்லாமே தப்புனு சொல்லி, யாராவது அவங்க மேல கம்ப்ளெயிண்ட் கொடுத்தா நடவடிக்கை எடுப்போம்னு சொல்லியிருக்காரு. எதாவது பண்ணி அவங்க மிஸ் கயிட் பண்றதை சீக்கிரம் நிப்பாட்டுங்க. இந்த திடீர் டாக்டர் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?