புயல் சின்னம்

Cyclone: புயல் முன்னெச்சரிக்கை, புயலின்போதும், கடந்தபின்னரும் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை!

புயல் சின்னம் உருவானால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புயல் வீசும்போதும், புயலுக்குப் பின்னரும் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைகள் என்னென்ன?

தமிழகம் முழுவதுமே நவம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், புயல்கள் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • வானிலை தொடர்பான அரசின் அறிவிப்புகளை சரியாகப் பின்பற்றுங்கள். புயல் குறித்த அறிவிப்புகள் பற்றி அப்டேட்டாக இருங்கள். வானிலை தொடர்பான போலி செய்திகளைத் தவிர்க்க நம்பகத்தன்மையான ஊடகங்கள்/அரசின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்றுங்கள். உங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டால், தாமதிக்காமல் வெளியேறுங்கள்.
  • உங்கள் வீடு அல்லது அருகில் இருக்கும் ஏதேனும் பொருட்கள் புயலின்போது தூக்கி வீசப்படலாம் என்று தோன்றினால், உடனே அதைப் பத்திரப்படுத்துங்கள்.
  • கண்ணாடிக் கதவுகள் இருந்தால், புயல் வீசும்போது சேதமடையலாம் என்பதால் அதன்மீது மரத்தால் ஆன பாதுகாப்பை ஏற்படுத்துங்கள்.
  • அவசரகாலத்தில் பயன்படும் டார்ச் லைட், மெழுகுவத்தி, அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ளும் நிலை ஏற்படலாம் என்பதால் மொபைல் போன், எமர்ஜென்ஸி லைட்டுகள் இருந்தால் அதையும் சார்ஜ் செய்து த் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

புயலின்போது..!

  • வீட்டில் இருக்கும் மின் இணைப்புகள், கியாஸ் சிலிண்டர் வால்வு போன்றவற்றை அணைத்து வைக்கவும்.
  • காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கும்போது பாதுகாப்பாக வீடுகளுக்குள்ளேயே இருங்கள்.
  • பாதுகாப்பற்ற, ஆபத்தான கட்டடங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.
  • கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை மூடியே வைத்திருக்கவும்.
  • வாகனங்களை மரங்களுக்குக் கீழ் நிறுத்த வேண்டாம். தள்ளியே பார்க் செய்து வையுங்கள்.
  • வீட்டுக்கு வெளியே ரிப்பேர் வேலைகள், பொருட்களை மாற்றுவது போன்ற வேலைகளைத் தவிருங்கள்.

புயல் ஓய்ந்த பின்னர்..!

  • கட்டட இடிபாடுகள், மின் கம்பங்களில் இருந்து அறுந்து தொங்கும் ஒயர்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
  • புயல் ஆபத்து முழுமையாக நீங்கும் வரை வீடுகளுக்குள் பத்திரமாக இருங்கள்.
  • பாதிப்புகள் குறித்து முறையாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவும்.
  • மழைக்காலத் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க சுகாதாரமாக இருங்கள்.

Also Read – Chennai Rains: மழைக்கால நோய்கள்… பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top