யானைகள் எப்பவும் பிரமிக்க வைக்கக்கூடியவை. அவ்வளவு பெரிய யானை அன்புக்கு கட்டுப்பட்டு நிக்கிற விஷயங்கள் எல்லாம் ஆச்சரியமா இருக்கும். அந்த யானைகளை அன்னாசிப்பழம்ல வெடி மருந்து வைச்சு கேரளால கொன்ன சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அதேபோல, ஆப்பிரிக்கால யானையின் தும்பிக்கையை வெட்டி எடுத்த புகைப்படம் உலகையே உலுக்கிச்சு. மசினகுடில தீ வைச்ச வீடியோ செம வைரல் ஆச்சு. இந்த சம்பவங்களைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
கேரளால மலப்புரம் பகுதியில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்துல வெடி மருந்து வைச்சு கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியதுனு சொல்லலாம். வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் இந்த சம்பவம் தொடர்பா தன்னோட ஃபேஸ்புக் பக்கத்துல, “காட்டுல இருந்து உணவைத் தேடி இந்த பெண் யானை மனிதர்கள் வாழக்கூடிய பகுதிக்கு வந்துருக்கு. உணவு கிடைக்காமல் அங்கயும் இங்கயும் அலைஞ்சிருக்கு. அப்போ, சில நபர்கள் அன்னாசிப்பழம் கொடுத்துருக்காங்க. மனுஷங்களை முழுசா நம்பின இந்த யானை அதை சாப்பிட்ருக்கு. யானை அந்த அன்னாசிப்பழத்தை சாப்பிடத் தொடங்கினதும் வாய்லயே அன்னாசிப் பழத்துல இருந்த வெடிமருந்து வெடிச்சிருக்கு. அந்த வெடிமருந்து வெடிச்சப்போ கண்டிப்பா தன்னைப் பத்தி அவள் சிந்திச்சிருக்க மாட்டாள். அவள் வயித்துல இருந்த குட்டியைப் பத்திதான் யோசிச்சிருப்பா. வலியோட தெருக்கள்ல அலைஞ்சப்போகூட அவள் யாரையும் தாக்கலை. அதனாலதான் சொல்றேன் அவள் ரொம்ப நல்லவள்” அப்டினு உருக்கமான பதிவை போட்ருந்தாரு. இந்திய அளவில் இந்த போஸ்ட் வைரல் ஆச்சு. அந்த யானை கடைசில பக்கத்துல இருந்த நீர்நிலைல இறங்கி தன்னோட காயத்தை அதுல நனைச்சிட்டு நின்னுட்டு இருந்துருக்கு. விஷயம் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துருக்காங்க. ஆனால், அதே காயங்களோட வலியோட ஏக்கத்தோட நின்ன நிலைலயே அந்த யானை இறந்துடுச்சு. இந்த சம்பவம் தொடர்பா வழக்கு விசாரணை நடந்துச்சு. சிலர் கைது செய்யப்பட்டாங்க. தற்செயலாக யானை இந்த பழத்தை சாப்பிட்டுருக்கலாம்னும் செய்திகள் வெளியாச்சு. இருந்தாலும் அந்த யானையோட புகைப்படம் பலரோட மனசையும் கலங்க வைச்சுது. தூங்க விடாமல் பண்ணிச்சு. இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடப்பது இதுதான் முதல்முறைனு நிறைய அதிகாரிகள் கருத்து தெரிவிச்சிருந்தாங்க.
பாண்டிச்சேரியோட அடையாளங்கள்ல ஒண்ணு, மணக்குளம் விநாயகர் கோயில். அந்த கோயிலுக்கு சுமார் 5 வயசுல இந்த யானையை பரிசா கொடுத்துருக்காங்க. அப்போல இருந்து இப்போ வரைக்கும் லட்சுமி யானை அந்த கோயிலுக்கும், பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாகவே இருந்துட்டு வந்தது. லட்சுமி யானைக்கு ரொம்பவே சாந்தமான குணம், லட்சுமி ஆசீர்வாதம் பண்ணா நம்ம நினைச்சது நடக்கும்னு லட்சுமி யானை பற்றி பக்தர்கள் சொல்லுவாங்க. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்லகூட இந்த லட்சுமி யானை அடிக்கடி வருவது உண்டு. உள்ளூர் மக்கள்லாம் இந்த யானை மேல அவ்வளவு அன்பா இருப்பாங்களாம். திடீர்னு இந்த யானைக்கு உடல் நினை சரியில்லாமல் போகியிருக்கு, அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துட்டும் வந்துருக்கு. இந்த நிலைல, காலை வழக்கம்போல நடைபயிற்சிக்கு செல்லும்போது லட்சுமி யானை சுருண்டு விழுந்து இறந்தது. அந்த வீடியோவ பார்க்கவே ரொம்ப சங்கடமா இருந்துச்சு. மக்கள்லாம்கூட அந்த யானைக்கு இறுதி அஞ்சலி செலுத்துனாங்க. பாகன், மக்கள்னு எல்லாரும் அழுத வீடியோக்களும் சோஷியல் மீடியால செம வைரல் ஆச்சு. யானையில்ல தோழினு தமிழிசை சௌந்தர்ராஜன் வருத்தம்லாம் தெரிவிச்சாங்க. கோயில் யானை மேல மக்கள் எவ்வளவு அன்பா இருக்காங்கனு பார்க்கும்போது ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்துச்சு. கோயில் யானைகள் மரணம் இந்தியா முழுக்கவே நிறைய இடங்கள்ல நடந்துருக்கு. அது எப்பவுமே வருத்தமளிக்கும் விஷயமாதான் இருக்கு. அதேபோல, யானைகள் ரயில், மின்வேலிகள்ல அடிபட்டு இறக்குறதும் அடிக்கடி நடக்கும். அப்பவும் சமூக ஆர்வலர்கள் இதுதொடர்பா குரல் கொடுப்பாங்க. கேரளா சம்பவத்துக்கு அப்புறம் இந்த சம்பவம் பலரையும் கலங்க வைச்சிருக்கு.
ஆப்பிரிக்கால உள்ள போட்ஸ்வானா காட்டுல இங்கிலாந்தைச் சேர்ந்த ஆவணப்போட இயக்குநர் ஒருத்தர் ட்ரோனை பறக்கவிட்டு காட்சிகளை பதிபு பண்ணாரு. அதுல அவருக்கு கிடைச்ச புகைப்படம் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியதுனே சொல்லலாம். போட்ஸ்வானா காட்டுல தந்தங்களுக்காக யானை அதிகளவில் கொல்லப்படுவது வழக்கமாகவே மாறியது. இதுதொடர்பான ஆவணப்படம் எடுக்கும்போது இந்த புகைப்படம் அவருக்கு கிடைச்சுது. அந்த புகைப்படத்துல தந்தத்துக்காக யானையோட தும்பிக்கையை மட்டும் தனியா வெட்டி போட்ருந்தாங்க. தும்பிக்கை இல்லாமல் செத்து கிடந்த யானையைப் பார்த்து கண் கலங்கி நிறைய பேர் போஸ்ட் போட்ருந்தாங்க. இதுதொடர்பா ஆவணப்பட இயக்குநர் ஜஸ்டின் சுள்ளிவான், “யானை ஒண்ணு கொல்லப்பட்ருக்குனு கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் அந்த இடத்துக்குப் போய் டிரோன் பறக்கவிட்டு பார்த்தேன். அப்போதான் இந்தப் படம் எனக்கு கிடைச்சுது. அதைப் பார்த்தா எல்லாரும் வருத்தத்துல மூழ்கிட்டாங்க. உயரத்துல இருந்து பார்த்தாதான் அந்த யானையின் வலியை உணர முடியும்”னு உருக்கமா சொல்லியிருந்தாரு. அந்த புகைப்படத்துக்கு டிஸ்கனெக்ஷன்ன்னு கேப்ஷன் வைச்சிருந்தாரு. “துண்டிக்கப்பட்டிருப்பது யானையின் தும்பிக்கை மட்டுமல்ல. மனித குலத்தின் சூழலும்தான்”னு போஸ்ட் போட்ருந்தார். அந்தக் காட்டுல ஒவ்வொரு வருஷமும், அதாவது 2017-ல் இருந்து 100 யானைகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கு. இந்த ஃபோட்டைவைப் பகிர்ந்த நிறைய பேர், “மனிதர்கள் எதை நோக்கி போறாங்க. அவங்களுக்கு மனசாட்சியே இல்லையா?”னு கேட்டு கண்ணீர் விட்ருந்தாங்க. உலகத்தையே இந்த புகைப்படம் உலுக்கிச்சு. இன்னும் அந்த வடு குறையல அதுக்குள்ள அடுக்கடுக்க யானைகள் அங்க கொலை செய்யப்பட்டுட்டுதான் இருக்கு,
தமிழ்நாட்டுல நீலகிரி மாவட்டத்துல மசினகுடி பகுதில யானைக்கு தீ வைத்த சம்பவமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டுச்சு. அந்த வீடியோ வைரல் ஆகி பலரையும் மனவேதனைக்கு ஆளாக்கிச்சு. பொதுவாக மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள்ள யானைகள் வந்தால் வெடி வெடிச்சோ, சப்தம் போட்டோ, தீயை காட்டி யானையை விரட்டுவாங்க. அப்படி மசினகுடில யானை ஒண்ணு வந்துருக்கு. அப்போ, யானை மேல தீயை கொழுத்தி போட்ருக்காங்க. யானை தீக்காயங்களோட காட்டுக்குள்ள ஓடியிருக்கு. இந்த வீடியோ சமூக வலைதளங்கள்ல வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திச்சு. காது, முதுகு பகுதில அந்த யானைக்கு அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுச்சு. அதை குணமாக்க வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் பழங்கள்ல மருந்து வைச்சு கொடுத்து வந்தாங்க. அந்த காயம் ஆராமல், அதிகமாகிட்டே இருந்துருக்கு. நுரையீரல் வரைக்கும் அந்த யானைக்கு பாதிப்பு ஏற்பட்டுச்சுனு மருத்துவர்கள் சொன்னாங்க. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சில நாள்கள்லயே யானை இறந்தது. இந்த சம்பவம் தொடர்பா சிலரை அதிகாரிகள் கைது பண்ணாங்க. ரிசார்ட் ஒண்ணுக்கும் சீல் வைச்சாங்க. இப்படி யானைகளை மனிதர்கள் விரோதி மாதிரி பார்க்குறதும் தந்தங்களுக்காக கொல்றதும் தொடர்ந்து உலக அளவில் நடந்துட்டேதான் இருக்கு. இலங்கைல டிக்கிரின்ற யானை மெலிந்த உடலோடு இருக்குற புகைப்படமும் உலக அளவில் வைரலாச்சு. எலும்பும் தோலுமாக இருக்கும் அந்த யானைகளை பார்த்தாலே அவ்வளவு பாவமா இருக்கும். கென்யால வறட்சியால யானைகள் மயங்கி விழுந்து பலியால சம்பவங்களும் உலக விலங்குநல ஆர்வலர்களை வருத்தப்பட வைத்தது. இப்படி யானைகள் என்றால சுகமான நினைவுகளைவிட கொடுமையான விஷயங்கள்தான் நினைவுக்கு வருது.