பவதாரணி

இந்தப் பாட்டுலாம் இவங்க பாடுனதா.. பவதாரிணி-யின் பெஸ்ட் பாடல்கள்!

யுவனோட அக்கா பவதாரிணியோட வாய்ஸ் ரொம்பவே யூனிக்கானது. அந்த வாய்ஸ் பண்ற மேஜிக்கை வேற யாராலயும் பண்ண முடியாது. கார்த்திக் ராஜாகூட சமீபத்துல நடந்த நீயா நானால பவதாரிணி வாய்ஸை குறிப்பிட்டு பேசுவாரு. ஆனால், தமிழ் சினிமால அவங்க நிறைய பாடல்களைப் பாடவே இல்லை. பாடுன பாட்டெல்லாம் இன்னைக்கும் நம்ம மனசுல எங்கயோ ஒளிஞ்சு இருந்து அப்பப்போ நமக்கே தெரியாமல் முணுமுணுப்பா வந்துட்டுப் போகும். அப்படி, அவங்க பாடுன பெஸ்ட் பாடல்களையும் அந்தப் பாட்டுலாம் ஏன் ஸ்பெஷல் அப்டின்றதையும் பார்ப்போம்.

பவதாரிணி
பவதாரிணி

ஒளியிலே தெரிவது

மியூசிக் தெரிஞ்ச எல்லாருமே ஒளியிலே தெரிவது பாட்டோட ட்யூன் ரொம்பவே சிம்பிளானதுனு சொல்வாங்க. நமக்கு தெரிஞ்சது எல்லாம் அந்தப் பாட்டை ரசிக்கிறது மட்டும்தான். எவ்வளவோ பேர் அந்தப் பாட்டை பாடிட்டாங்க. ஆனால், கார்த்திக் – பவதாரணி வாய்ஸ் தவிர வேற யார் வாய்ஸ்லயும் கேக்க புடிக்கலைனுதான் சொல்லணும். அழகி படமே ஸ்பெஷல், அதுல இளையராஜா மியூசிக் கூடுதல் ஸ்பெஷல், பாடல்கள் இன்னும் ஸ்பெஷல், ஒளியிலே பாட்டு இன்னும் இன்னும் ஸ்பெஷல், அதுல வர்ற பவதாரணி வாய்ஸ் இன்னும் இன்னும் இன்னும் ஸ்பெஷல். கார்த்திகை தீபம், கேண்டில் லைட் டின்னர்னு ஒளி தெரியுற இடத்துல யாராவது ஃபோட்டோ எடுத்தாலே, அவங்க ஃபோட்டோ கேப்ஷன், ஒளியிலே தெரிவது தேவதையான்றதுதான். அது என்ன மாயமோ.. மந்திரமோ.. அவங்க கேப்ஷன் மாதிரி எல்லாரும் தேவதைகளா தான் இருக்காங்க. சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னன்னு பவதாரணி வாய்ஸ் வரும்போது ஸ்கூல் டேஸ்ல வாழ்க்கைல இருந்த தனலட்சுமி டக்னு நியாபத்துக்கு வந்துட்டுப் போகும். கரெக்ட்டா அந்த ஃப்ரேம்ல கள்ளிச்செடில முள்ளால பெயர் வேற எழுதுவாங்க. எல்லாம் சேர்ந்து நம்மள உலுக்கும் பாருங்க. நமக்குள்ள கிடந்த அந்த தனலட்சுமியை கொஞ்சம் தட்டி எழுப்பி, காதலிச்சதை நினைவுபடுத்திவிட்டு, இதமான அந்த ஃபீல்குட் காலங்களை கண் முன்ன கொண்டு வந்து நிறுத்துற மேஜிக் பவதாரணி வாய்ஸ்ல இருக்குனா, அதை என்னனு சொல்ல?

தாலியே தேவையில்லை

இளையராஜாவோட மியூசிக்ல பாடி பவதாரணி நம்மள கடந்த காலத்துக்கு கூட்டிட்டுப்போனா, யுவன் மியூசிக்ல நிகழ்காலத்து காதலை எஞ்சாய் பண்ண வைப்பாங்க. அட, வேற வேலை செய்ய மனசே விட்டுப் போச்சுனா.. போங்கனா.. திரும்ப திரும்ப இதையே கேட்டுட்டு இருக்கேன்னானுதான் நிறைய பேர் இந்தப் பாட்டுக்கு இன்னும் கமெண்ட்ஸ் போட்டுட்டு இருக்காங்க. யுவனோட கைய புடிச்சு முதல் முதல்ல கீ போர்டுல வைச்சது பவதாரணிதானாம். அவரோட மியூசிக்லயே இந்த பாட்டை பாடும்போது அவங்க ஃபீலிங் வேறமாறி இருந்துருக்கும்ல? ஹரிஹரன் வாய்ஸ் எல்லா எமோஷனுக்கும் செட் ஆகும். அதேமாதிரிதான் பவதாரணியோட வாய்ஸ். ஆனால், குழந்தைத்தனம் ஒண்ணு இருந்துட்டே இருக்கும். ஒளியிலே தெரிவதுலகூட அந்த சைல்டிஷ்னஸ் அவ்வளவா தெரியாது. இந்தப் பாட்டுல அந்த காதலுக்கே உரிய சைல்டிஷ்னஸ் அப்படி தெரியும். இன்னும் ரீல்ஸ் போட்டு இந்தப் பாட்டுக்கு நம்ம 2’கே கிட்ஸ் வைப் பண்னிட்டு இருக்காங்க. நட்டு நடு நெத்தியில, ரத்த நிற பொட்டு வைச்சு, கை புடிச்சு ஊருக்குள்ள போவே நானேதான் இவங்க ஃபேவரைட். ஆனால், கிரிஞ்சா யூஸ் பண்ணிட்டு இருக்காங்கனுதான் வருத்தம்.

தென்றல் வரும் வழியே

ஹரிஹரன் – பவதாரிணி காம்போல வந்த இன்னொரு பெஸ்ட் பாட்டு தென்றல் வரும் வழியே. இந்த பாட்டுல கொஞ்சம் மெச்சூர்டா இருக்கணும்.. அப்போதான் தேவயாணிக்கு அந்தப் வாய்ஸ் செட் ஆகும். அதையும் பவதாரணி கரெக்ட்டா புடிச்சு பாடியிருப்பாங்க. இடைல இடைல னன னன னன னானு வரும். அதை பவதாரணிதான் பாடியிருப்பாங்க. அதுவே அவ்வளவு ஃபீல்குட்டா இருக்கும். அந்த னன னனக்கே திரும்ப முதல்ல இருந்து பாட்டு கேட்ட அனுபவம்லாம் இருக்கு. விஜய், தேவயானி ஃபேன்ஸ்லாம் எப்பவும் செலிபிரேட் பண்ற பாட்டு. இளையராஜா கொஞ்சம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் வந்து மியூசிக் போட்டது மாதிரியும் இருக்கும்.

ஒரு துளிர் ஒண்ணு

அஜித் நடிச்ச தொடரும் படத்துல ஒரு துளிர் ஒண்ணு அரும்புதுனு பாட்டு வரும். ப்பா.. பவதாரணி வாய்ஸ் சும்மா நம்மள உருக்கிரும். உன்னிக்கிருஷ்ணனும் இவங்களும் யார் நல்லா பாடுறாங்கனு பார்ப்பாமானு போட்டிப் போட்டு பாடியிருப்பாங்கனு நினைக்கிறேன். ஆனால், பவதாரணிதான் கடைசில வின் பண்ணுவாங்க. ஸ்பீடா போகும் பாட்டு.. ஆனால், மெலடியா ஃபீல் ஆகும். தேவயானிக்கு பவதாரணி வாய்ஸ் செமயா செட் ஆகுதுலனு இந்தப் பாட்டைக் கேட்டா கன்ஃபார்ம் பண்ணிடலாம். பாட்டு முழுக்க சில்னஸ் ஒண்ணு ஒட்டுக்கிட்டு இருக்கும்.. வேணும்னு பண்ணாங்களானு தெரியல. அந்த டச்தான் முக்கியம் பிகிலே.

மயில் போல பொண்ணு ஒண்ணு

பவதாரிணிக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த பாட்டு. பாரதி படத்துல வரும். மயில், குயில்லாம் சொல்லி தராததையா இந்த வாத்தியாருங்க சொல்லித்தர போறாங்கனு பாரதி சொன்னதும்.. மயில் போல பொண்ணு ஒண்ணுனு பாட்டு ஸ்டார்ட் ஆகும். அட, பாடுறது மயிலா.. குயிலா.. அப்டினு நமக்கே வர்ணனை செய்யணும் போல தோணும். கண்ணை மூடிட்டு ரிப்பீட் மோடுல பாட்டை கேட்டீங்கனா, எப்ப தூங்குனீங்கனு தெரியாது.. அவ்வளவு பெரிய அமைதிக்கு நம்மள அலேக்கா தூக்கிட்டுப் போய்டும். பவதாரணி இப்போகூட ஒரு சின்ன குழந்தைக்கு பாடலாம். அப்படியொரு யூனிக் வாய்ஸ். பாரதி படம்லாம் வந்த புதுசுலதான் விஜய் படத்தோட ஹீரோயினுக்கும் பாடிட்டு இருந்தாங்க. இதெல்லாம் எல்லா சிங்கராலயும் முடியாதுல!

ஆத்தாடி ஆத்தாடி

அனேகன் படத்துல உங்க ஃபேவரைட் பாட்டு என்னனு கேட்டா.. பெரும்பாலும் ஆத்தாடி ஆத்தாடி பாட்டை தான் சொல்லுவாங்க. அதைப் பாடுனது பவதாரணிதான். மயில் போல பாட்டுலாம் வந்து எத்தனை வருஷம் ஆச்சு.. ஆனால், அந்த வாய்ஸ்ல மட்டும் இன்னும் எந்தவித சேஞ்சும் இல்லை. அதுவே அந்த வாய்ஸை ஒவ்வொரு தடவையும் கேட்கும்போது மிகப்பெரிய ஆச்சரியத்தை தருது. கிட்டத்தட்ட தனுஷ உட்பட 4 பேர் அந்தப் பாட்டை பாடியிருக்காங்க. எல்லார் வாய்ஸையும் தூக்கி சாப்ட்டு கூஸ்பம்ப்ஸ் கொடுத்தது பவதாரணிதான். ஹாரிஸ்லாம் அப்போ ஃபார்ம்ல இருந்த டைம். மியூசிக்கலாவே அந்தப் பாட்டை மாம்ஸ் செதுக்கியிருப்பாரு. ஹீரோயினுக்கு பயங்கரமான சுட்டித்தனம் ஒண்ணு இருக்கும். அந்த வாய்ஸ்லயும் அதை அழகா கொண்டு வந்துருப்பாங்க. ஒன்பது கிரகத்துலயும் உச்சம் பெற்ற ஒருத்தர், அதாவது பவதாரணியால மட்டும்தான் இவ்வளவு சுட்டித்தனத்தோட பாட முடியும். அதுவும் உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாதுனு லைட்டா சிரிப்பாங்கள்ல.. மயங்கி அப்டியே விழுந்துடுவோம்.

சடுகுடுகுடு ஆடாதே

காதல், டூயட், குழந்தைப் பருவம்னு எல்லாத்தையும் தன்னோட வாய்ஸ்ல கொண்டு வர்ற பவதாரணி வாய்ஸ்ல பயங்கரமான செக்ஸினஸ் இருக்கு. அதுனாலயே, செமயான ஐட்டம் சாங் அவங்க வாய்ஸ்க்கு செட் ஆகும்னு தோணும். ஐட்டம் சாங்னு சொல்ல முடியாது. ஆனால், யுவன் மியூசிக்ல சடுகுடுகுடு ஆடாதே பாட்டு இவங்க பாடியிருப்பாங்க. ஐயோ அவ்வளவு செக்ஸினஸ் அந்த பாட்டுல நிரம்பி இருக்கும்.

நீ நான்

மங்காத்தா படத்துல இவங்க அதேமாதிரி செக்ஸியான பாட்டு ஒண்ணு பாடியிருப்பாங்க. கண்ணாடி நீ கண் ஜாடை நான். சரண்கூட சேர்ந்து பாடியிருப்பாங்க. ஆரம்பத்துல இவங்க மேஜிக் தெரியாது, என் மேனி நீ, உன் ஆடை நான்னு வரிகள் ஆரம்பிக்கும்போதுதான்.. ஐயோ.. பவதாரணி வாய்ஸ் என்னமோ பண்ணுதுல அப்டினு தோணும். யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்லயும் கொஞ்சம் பாட்டுதான் பாடியிருக்காங்க. ஆனால், எல்லாமே மரணமா இருக்கும்.

Also Read -பெரிய ஹீரோ இல்லை.. பெரிய டைரக்டர் இல்லை.. ஆனால், இந்த படங்கள் எப்பவும் பெஸ்ட்!

காற்றில் வரும் கீதமே

பவதாரிணி வாய்ஸ்ல எல்லாமே இருக்குனு சொன்னன்ல.. செக்ஸினஸ் உட்பட. அவங்க வாய்ஸ்ல தெய்வீகமும் இருக்கு. பெஸ்ட் எக்ஸாம்பிள் ஒரு நாள் ஒரு கனவு படத்துல வர்ற காற்றில் வரும் கீதமே. கேட்டாலே ஒரு கோயில்குள்ள டக்னு போன மாதிரி இருக்கும். கண்ணன் ஃபேன்ஸ் இருப்பாங்கள்ல அவங்களுக்குலாம் இந்தப் பாட்டு ரொம்பவே ஃபேவரைட். நிறைய வெர்ஷன் இந்தப் பாட்டுல இருக்கும். ஆனால், எல்லாருக்கும் புடிச்சது பவதாரணி, ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம், ஹரிஹரன் எல்லாரும் சேர்ந்து பாடுனதுதான். வேறமாறி ஃபீல் கொடுக்கும்.

உங்க ஃபேவரைட் பவதாரணி பாட்டு என்ன?

46 thoughts on “இந்தப் பாட்டுலாம் இவங்க பாடுனதா.. பவதாரிணி-யின் பெஸ்ட் பாடல்கள்!”

  1. You really make it appear so easy together with your presentation however I
    in finding this matter to be really something which I believe I would never understand.
    It sort of feels too complicated and very huge for
    me. I am having a look ahead for your next submit, I’ll try to get the dangle of it!
    Escape rooms hub

  2. mexico pharmacy [url=http://foruspharma.com/#]mexican pharmacy[/url] buying prescription drugs in mexico online

  3. mexican pharmacy [url=http://foruspharma.com/#]best online pharmacies in mexico[/url] buying prescription drugs in mexico

  4. canadian pharmacy world [url=https://canadapharmast.com/#]best canadian online pharmacy[/url] best online canadian pharmacy

  5. After going over a number of the blog posts on your site, I seriously appreciate your way of writing a blog. I saved it to my bookmark webpage list and will be checking back in the near future. Please visit my web site too and tell me what you think.

  6. A motivating discussion is definitely worth comment. I do believe that you should write more about this issue, it might not be a taboo matter but typically folks don’t discuss these topics. To the next! Kind regards.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top