EPS Stalin

சட்டப்பேரவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் டிராக் ரெக்கார்டு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகத் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஸ்டாலின் தலைமையில் களம் காண்கிறது. இவர்கள் இருவருக்கும் முதல் தேர்தல் எது… எத்தனை முறை வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியின் பெயரோடு அறியப்படுகிறார். இவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் 7வது முறையாகப் போட்டியிடுகிறார். 1989ம் ஆண்டு முதல் 2021 வரை 7 முறையுமே இவர் எடப்பாடி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். 2001 தேர்தலில் மட்டும் எடப்பாடி பழனிசாமி போட்டியிடவில்லை.

  • 1989 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி
  • 1991 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி
  • 1996 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – தோல்வி
  • 2006 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – தோல்வி
  • 2011 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி
  • 2016 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி

2016ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றிருந்தார். அந்தத் தேர்தலில் பா.ம.க இரண்டாவது இடத்தையும் தி.மு.க மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தன. 2021 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் 37 வயதான சம்பத்குமார் களம்காண்கிறார்.

மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஸ்டாலின் தலைமையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொள்கிறது. 1984ம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்டாலின் இதுவரை 8 முறை களம்கண்டு, இரண்டு முறை தோல்வியடைந்திருக்கிறார். இந்த முறை அவர் களம் காணும் கொளத்தூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

  • 1984 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி
  • 1989 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
  • 1991 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி
  • 1996 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
  • 2001 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
  • 2006 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
  • 2011 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை கொளத்தூர் தொகுதி – வெற்றி
  • 2016 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை கொளத்தூர் தொகுதி – வெற்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top