‘சின்னத்திரை நயன்தாரா?’ – அறந்தாங்கி நிஷாவின் இன்ஸ்பிரேஷன் பயணம்!

சமூகத்துல எல்லாருமே எதாவது ஒரு விதத்துல, எதோ ஒரு சமயத்துல நிறம், உயரம் இதெல்லாம் வைச்சு கிண்டல், கேலிக்கு ஆளாகியிருப்பாங்க. அதையெல்லாம் ஒரு பொருட்டா மதிக்காமல் கடினமா உழைச்சு கடந்து வந்தவங்கதான் சாதனையாளர்களா இன்னைக்கு நம்ம கண் முன்னாடி நின்னுட்டு இருக்காங்க. அதுக்கு எக்ஸாம்பிளா நிறைய பேரை சொல்லலாம். அதுல ஒரு ஆள், அறந்தாங்கி நிஷா. என்னடா மோட்டிவேஷன் ஸ்டோரி சொல்ற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா என்ன? அப்டினு நீங்க கேக்கலாம். அவங்க கடந்து வந்த பாதைகள், அவங்க நிறத்தால பட்ட கஷ்டங்கள் எல்லாம் பார்க்கும்போது நிறைய பெண்களுக்கு, ஆண்களுக்கு கொஞ்சம் மோட்டிவேஷனா இருக்கும்ணு தோணிச்சு. இடையில அப்படியே, அவங்களோட காதல் கதைகள், சமூகத்துக்காக அவங்க செய்த வேலைகள் எல்லாத்தையும் இந்த வீடியோல நாம பார்க்கலாம்.

நிஷாவோட உண்மையான பெயர், ஜகுபர் நிஷா. புதுக்கோட்டைல உள்ள அறந்தாங்கிதான் இவங்களுக்கு சொந்த ஊர். அங்க உள்ள அரசுப்பள்ளிலதான் படிச்சாங்க. அதுக்கப்புறம் ஜே.ஜே காலேஜ்ல பி.பி.ஏ, எம்.பி.ஏ எல்லாம் முடிச்சிருக்காங்க. சின்ன வயசுல இருந்தே கருப்பா இருக்குறதால ஸ்கூல்லயே கூட்டத்துல முன்னாடி நிக்க விட மாட்டாங்களாம். இந்த பிரெயர்ல ஜனகனமன பாடும்போதுலாம் பின்னாடிபோய் நிக்க சொல்லுவாங்களாம். ஸ்கூல் முழுசாவே இதே பிரச்னையைதான் நிஷா அனுபவிச்சாங்களாம். ஆனால், பேசணும், ஸ்டேஜ்ல ஏறி நின்னு கைதட்டு வாங்கணும்னுலாம் நிஷாவுக்கு ரொம்பவே ஆசை. அவங்க அம்மா நிஷாவுக்கு பயங்கரமான சப்போர்ட். ஏன்னா, அவங்க அம்மா படிக்கலை. சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க. குழந்தை பெத்துக்கிட்டாங்க. அதுனால, தன்னோட மகளை நல்லா படிக்க வைக்கணும்னு அவங்க அம்மாவுக்கு ஆசை. அதேமாதிரி நல்லா படிக்க வைச்சாங்க. ஆனால், அவங்க சொந்தக்காரங்க எல்லாரும், படிக்க வைக்காதீங்க. படிக்க வைச்சா காதல்னு ஓடிருவானுலாம் சொல்லியிருக்காங்க. அவங்க முன்னாடி படிச்சு நிக்கணும்னு ஒரு வைராக்கியத்தோட இருந்துருக்காங்க.

ஸ்கூல் படிக்கும்போது நிறைய அவமானங்களை சந்திச்சாங்க. ஆனால், அதுலயெல்லாம் கொஞ்சம்கூட துவண்டுபோகலை. கல்லூரி வந்ததும் பட்டிமன்றங்கள்ல பேச ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. அங்கயும் கொடுமை என்னனா, அவங்கள கடைசீலதான் பேச வைப்பாங்களாம். ரொம்பவே அவாய் பண்ணுவாங்களாம். ஆனால், தொடர்ந்து நிறைய மேடைகள்ல பேசிட்டே இருந்துருக்காங்க. பட்டிமன்றம் இவங்களுக்கு தனி அடையாளத்தை அப்பவே கொடுத்துச்சுனு சொல்லலாம். காலேஜ் படிக்கும்போது இவங்க கேங்காதான் திரிவாங்களாம். அந்த கேங் பேரு, ‘ரௌடி டீம்’. படிப்பு முக்கியம் இல்லைனு இன்னைக்கு நிறைய பேர் இளைஞர்களை திசை மாத்துறாங்க. ஆனால், இதையெல்லாம் நிஷாக்கிட்ட சொன்னால் செம காண்டாயிடுவாங்க. படிப்பு எவ்வளவு முக்கியம்னு நிஷாவுக்கு தெரியும். இப்படியே போகும்போதுதான் கலக்குப் போவது யாருல கலந்துகிட வாய்ப்பு அவங்களுக்கு கிடைச்சிருக்கு. முதல்ல ஆடிஷன் போனதும் அந்த ஷோ டைரக்டர் தாம்சன்கிட்ட ஒரு ஜோக் சொல்லியிருக்காங்க. அந்த ஜோக் அவருக்கு உடனே பிடிச்சுப்போக, செலக்ட் ஆயிருக்காங்க. ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி.

அன்னைக்கு கருப்பா இருக்காங்கனு புறக்கணிக்கப்பட்டவங்க, இன்னைக்கு அவங்க ஊருக்கே அடையாளமா இருக்காங்க. முதல் நாள் கலக்கப்போவது யாரு ஷோல பெர்ஃபார்ம் பண்றதுக்கு முன்னாடி ஜட்ஜஸ் எல்லாரும், “நீங்க எந்த ஊருல இருந்து வறீங்க?”னு கேட்ருக்காங்க. உடனே, “அறந்தாங்கி”னு சொல்லியிருக்காங்க. ஆனால், ஜட்ஜஸ் யாருக்குமே அந்த ஊரு தெரியலை. ரொம்பவே வருத்தப்பட்ருக்காங்க. அதுக்கப்புறம் ரக்‌ஷனைக் கூப்பிட்டு, “இனிமேல் என்னைக் கூப்பிடும்போது அறந்தாங்கி நிஷானு கூப்பிடுங்க”னு சொல்லியிருக்காங்க. ரக்‌ஷனும் அப்படியே கூப்பிட்ருக்காரு. நிஷாவின் நகைச்சுவையும் மக்களுக்கு பிடிச்சுப்போச்சு. அவங்க பெயரும் பிடிச்சுப்போச்சு. ஜவகர் நிஷா, அறந்தாங்கி நிஷாவாக மாறுனது இப்படிதான். இன்னைக்கும் அவங்க அட்ரெஸ் ப்ரூஃப், ஆதார் கார்டு எல்லாமே அறந்தாங்கிதான். அந்த ஊர்ல இருந்து வர்றேன்னு சொல்றதும், மற்ற மக்கள் அறந்தாங்கினு சொன்னதும் டக்னு நிஷாவோட பெயர் நியாபகம் வர்றதும் அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். 

காலேஜ் படிக்கும்போது அவங்க நிறத்தால ரேக்கிங்கூட யாரும் பண்ணமாட்டாங்களாம். அதை நினைச்சும் ரொம்ப வருத்தப்படுவாங்களாம். அவங்ககூட படிக்கிற பிள்ளைங்களுக்கு லவ் லெட்டர்லாம் நிறைய வருமாம். ஆனால், இவங்களுக்கு அதெல்லாம் வராதாம். ஒருதடவை வாய்விட்டு கேட்டுட்டாங்களாம். “ஏன், எனக்கு மட்டும் யாரும் லவ் லெட்டர் கொடுக்க மாட்றாங்க?”னு. இப்படி இருந்த நிஷாவோட கல்யாணம், ஒரு காதல் கல்யாணம்தான் தெரியுமா. ஆமா, நிஷாவோட அத்தைப் பையன்தான் ரியாஸ். ஸ்கூல் படிக்கும்போது சொந்தக்காரங்க கல்யாணம் ஒண்ணு நடந்துருக்கு. அப்போ, கரெண்ட்போன நேரத்துல பின்னாடி போய் லவ் புரொபோஸ் பண்ணியிருக்காரு. அதுக்கப்புறம் அவங்க சந்திச்சுக்கவே இல்லையாம். ஃபோனும் கிடையாது. லெட்டர்கள் நிறைய போட்டு பேசுவாங்களாம். அந்த லெட்டர் எல்லாத்தையும் அவங்க அத்தை பத்திரமா எடுத்து வைச்சிருக்காங்களாம். கல்யாணத்து அன்னைக்குகூட நிஷா நிறைய சம்பவங்கள்லாம் பண்ணியிருக்காங்க. கல்யாணத்துக்கு அன்னைக்கு கிட்டத்தட்ட 5 மணிநேரம் லேட்டாதான் போனாங்களாம்.

ரியாஸ் நிஷாவுக்கு செமயான பேக் போன்னு சொல்லலாம். அறந்தாங்கி நிஷாவோட காமெடிகள் எல்லாம் மக்களுக்கு சீக்கிரம் கனெக்ட் ஆகுறதுக்கு காரணம், குடும்பங்கள்ல நடக்குற விஷயங்களை வைச்சும், கணவர்கள் பண்ற அலப்பறையை வைச்சும் ஜோக் சொல்றதுதான். தன்னைத் தாழ்த்தி அடுத்தவங்கள சிரிக்க வைக்கிறவங்க எப்பவும் உயர்ந்தவங்கனு சொல்லுவாங்கள்ல. அது நிஷாவுக்கு அப்படியே செட் ஆகும். நிஷாவுக்கு துவண்டு போகும்போதுலாம் தூக்கி விட்டது வடிவேலு காமெடிகள்தான். அவரைப் பார்த்துதான் நிறம் முக்கியம் இல்லைனும் காமெடி பண்ணனும்னும் முடிவு பண்ணாங்கனு சொல்லலாம். நிகழ்ச்சிகள்லலாம் அவங்கள சின்னத்திரை நயன்தாரானுதான் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. அவங்களும் அதை ரொம்பவே எஞ்சாய் பண்ணுவாங்க. அதுனால இன்னைக்கு அவங்க இண்ட்ரோவே சின்னத்திரை நயன்தாரா அறந்தாங்கி நிஷானு மாறிடுச்சு. ஃபேஸ்புக் பேஜ்லகூட அந்தப் பெயரைதான் வைச்சிருக்காங்க.

அறந்தாங்கி நிஷா வந்தாலே மேடை ஜாலியா இருக்கும். முன்னாடி இருக்குற எல்லாரையும் சிரிக்க வைச்சிருவாங்கனு நமக்கு தெரியும். அப்படி ஒரு தடவை அவங்களுக்கு குழந்தை பிறந்திருக்கும்போது 60 நாள்கூட ஆகலையாம். அதுக்குள்ள ஷூட்க்கு கிளம்பி வந்துருக்காங்க. அப்போ ஆக்ஸிடண்ட்ல மாட்டிக்கிட்டாங்க. கஷ்டப்பட்டு நிறைய அவமானங்களை சந்திச்சு இந்த இடத்துக்கு வந்துருக்கோம். இதை விட்றக்கூடாதுன்ற நினைப்புல அவங்க கிளம்பி வந்துருக்காங்க. வாழ்க்கைல ரொம்ப மோசமான இன்சிடண்டா இதைதான் நிஷா நினைப்பாங்க. இதை நிறைய இண்டர்வியூல, பிக்பாஸ் நிகழ்ச்சிலலாம் சொல்லி வருத்தப்பட்ருக்காங்க, அழுதுருக்காங்க. இப்போ அதுல இருந்துலாம் மீண்டு வந்துட்டு இருக்காங்க.

திறமை இருந்தால் போதும், நிறம்லாம் தேவையில்லைனு நிஷா நினைக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், ரொம்பவே போல்டான லேடியா மாறிட்டாங்க. தன்னை வாழ வைச்ச மக்களுக்காவும் இந்த சமூகத்துக்காகவும் நிஷா நிறைய விஷயங்கள் செய்துருக்காங்க. செய்துட்டு இருக்காங்க. குறிப்பா கஜா புயல் வந்தப்போ ஃபீல்டுல இறங்கி வேலை பார்த்தாங்க. சின்ன வயசுல இருந்தே சேர்த்து வைச்ச காசுலாம் வைச்சு நிறைய பேருக்கு உதவி பண்ணுவாங்களாம், அதேமாதிரிதான் இப்பவும் ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க. நிதியை மக்கள்கிட்ட வாங்கிலாம் ஹெல்ப் பண்ணாங்க. அப்போ, “என்ன பிச்சை எடுக்குறியா?”னுலாம் கேட்டு அவங்களை அசிங்கப்படுத்தியிருக்காங்க. எதையும் கண்டுக்காமல் தன்னோட உதவியை செஞ்சிட்டே இருந்தாங்க. கஜா புயல் பாதிப்பு தொடர்பா ஆல்பம் பாட்டு ஒண்ணையும் பாடியிருக்காங்க. ஷார்ட் ஃபிலிம்லலாம் நடிச்சிருக்காங்க. அறந்தாங்கி நிஷாவோட திறமைடை பார்த்துட்டு நிறைய இயக்குநர்கள் அவங்களுக்கு படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்துருக்காங்க. மாரி 2-ல இவங்க பெர்ஃபாமெண்ஸ் மக்களால பேசப்பட்டுச்சு. கோவை சரளாவுக்கு அப்புறம் தமிழ் சினிமால பெண் காமெடியன்ஸ் யாரும் பெருசா இல்லை. நல்ல கேரக்டர்ஸ் கிடைச்சா, அறந்தாங்கி நிஷா வெள்ளித்திரையையும் ஒரு கலக்கு கலக்குவாங்க. அதுக்கு வாழ்த்துக்கள். 

நீங்க எப்பவும் எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷன்தான்!

அறந்தாங்கி நிஷாவை உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்கும்னா ஏன் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top