லோகேஷ் கனகராஜ், கமலோட தீவிரமான ஃபேன் இயக்குநர்னு நமக்கெல்லாம் தெரியும்தான். அவரோட ஃபேவரைட்டான படங்கள்னு பார்த்தா நிச்சயம் விருமாண்டி மாதிரியான கமலின் படங்களைக் குறிப்பிடுவார். கமலோட படங்கள் மட்டுமில்லீங்க வேறு சில படங்களுமே அவரின் மனசுக்கு நெருக்கமா இருந்ததா ஒரு சில இடங்கள்ல பதிவு பண்ணிருக்காரு. அது என்னென்ன படங்கள்.. எதைப்பத்தி அந்தப் படம் பேசியிருக்குங்குறதைப் பத்திதான் இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறோம்.
லோகேஷ் கனகராஜ் படங்கள்ல டீடெய்லிங் ரொம்பவே முக்கியமான இடத்தைப் பிடிச்சிருக்கும். அதே மாதிரி அவரோட கேரக்டரைசேஷனுமே யுனீக்கா இருக்கும். அவர் உருவாக்குற கேரக்டர்களை லிங்க் பண்ற விதமுமே ரொம்ப அழகா இருக்கு. அதுதான் LCU-வா விரிஞ்சு நிக்குது. எங்க இருந்துப்பா இப்படியான ஸ்டோரி லைனைப் பிடிக்குறார்னு அவரைப் பார்த்து பாலிவுட் திரையுலகமும் மலைச்சு நிக்குதுனுதான் சொல்லணும். வருண் தவான் அதை ஒரு இண்டர்வியூல ஓபனாவே சொல்லியிருப்பார். கைதி படத்தைப் பத்தி அவ்வளவு சிலாகிச்சுப் பேசியிருப்பார். அப்படியான லோகேஷ் கனகராஜ், கமலுக்கு ஒரு ஃபேன் பாயா பண்ண சம்பவமான விக்ரமோட அவுட்புட் எப்படி இருந்துச்சு… அதை மக்கள் எப்படி ஏத்துக்கிட்டாங்குறதையும் நாம பார்த்தோம். கமல் படங்கள் தவிர அவருக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள்னு சில படங்களை அவர் ஒரு சில இடத்தில் மென்ஷன் பண்ணியிருந்தார்.

ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குநர்கள்ல ஒருத்தரான மார்டின் ஸ்கார்சஸியோட Good Fellas, The Departed, அப்புறம் விஜயகுமாரோட உறியடி படத்தையும் சொல்லியிருப்பார். உறியடி படம் பத்தி பேசும்போது, படம் ரிலீஸானப்ப விஜயகுமார் யாருன்னே தெரியாது. படத்தோட ரிலீஸுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்து பேசி, இப்போ ஃப்ரெண்டா இருக்கோம். அந்த அளவுக்குப் படத்தைப் பார்த்து பிரமிச்சுப் போனேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரோட சேர்ந்து ஒரு படம் பண்ணனும்னு 5 வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணியிருந்தோம். அது இன்னும் நடக்கலை. கூடிய சீக்கிரம் நடக்கும்னு நினைக்கிறேன்னு சொல்லியிருந்தார். சாதியப் படிநிலைகளைக் கடுமையாகச் சாடியிருந்த உறியடி படம் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருந்த படம்.
லோகேஷ் தன்னோட அடுத்த படத்துல டயலாக் எழுத இளம் இயக்குநர் ஒருவரை அழைத்திருக்கிறாராம். அவர் யாருனு தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க!
Also Read : நம்பிக்கை நாயகன் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை!
Good Fellas
நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த Henry Hill எனும் ஒரு கேங்க்ஸ்டரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் “குட்பெல்லாஸ்”. ஹில்லின் டீன் ஏஜில் இருந்து கேங்க்ஸ்டர் குழுக்களுடன் சுற்றித் திரிந்து அடியாளாகி, படிப்படியாக வளர்ந்து வருகிறான். கேங்க்ஸ்டராக மாறும் இந்தப் பயணத்தில் படிப்படியாக அவன் வளர வளர அவனுக்குள் ஒரு குழப்பமும் பயமும் சேர்ந்தே வளர்கிறது. அந்தக் குழப்பமும் பயமும் அவனை எந்த எல்லைக்குக் கொண்டு செல்கிறது, எவ்வளவு பெரிய வீழ்ச்சியை அவனுக்கு மட்டுமல்லாமல் அவன் சகாக்களுக்கும் கொண்டு வந்து சேர்த்தது என, வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களில் இருந்து வித்தியாசமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் மார்டின் ஸ்கார்சேஸி இயக்கிய இன்னுமொரு மாஸ்டர் பீஸ் இந்த குட்பெல்லாஸ்.
The Departed
லோகேஷூக்குப் பிடித்த பட வரிசையில் இடம்பிடித்திருக்கும் இந்தப் படமும் மார்டின் ஸ்கார்சஸி இயக்கியதுதான். அமெரிக்காவின் பாஸ்டன் நகரம்தான் கதைக்களம். ஐரிஷ் மாஃபியா கும்பல், லோக்கல் போலீஸில் உளவு பார்ப்பதற்காகத் தங்களது ஆள் ஒருத்தரை போலீஸாக்கும். அதேநேரம், போலீஸ் தரப்பும், தங்களது உளவாளி ஒருவரை கேங்ஸ்டர் குரூப்புக்குள் ஊடுருவச் செய்யும். இப்படி போலீஸின் மூவ்மெண்டுகளை கேங்ஸ்டர் குரூப்புக்கு லீக் செய்யும் ஒருவர், அப்படியே எதிராக மாஃபியா கும்பலின் நடமாட்டம் பற்றிய தகவல்களை போலீஸுக்கு லீக் செய்யும் நபர் என இரண்டு பேரின் உளவியல் சிக்கல்களைப் பேசும் படம் இது. போலீஸின் உளவாளியான டிகாப்ரியோவும் மாஃபியா கும்பலின் உளவாளியான மேட் டேமோனும் நடித்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்குமே தங்களது வேலை சார்ந்து ஏற்படும் மனரீதியிலான சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்க்கொண்டார்கள் என்பதை வலுவான திரைக்கதையோடு பேசியிருப்பார்கள். இதில், இருவருமே எதிர்த்தரப்பில் இருக்கும் உளவாளி யார் என்பதைத் தங்களது உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொண்டே தேடும் முயற்சியில் ஈடுபடும் காட்சிகள், அந்தப் பதற்றத்தை நமக்கும் பற்றவைத்துவிடும். 2006-ல் வெளியான இந்தப் படம் சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த இயக்குநருக்காக மார்டின் ஸ்கார்சஸி ஆஸ்கர் விருது வென்ற ஒரே படம் இதுதான்.
ஜாங்கோ அன்செயின்ட்
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான குயிண்டின் டொராண்டானோவின் மாஸ்டர் பீஸ்களில் ஒண்ணு இது. 1850-களின் பிற்பகுதியில் நடக்கும் கதைக்களம். கறுப்பினத்தைச் சேர்ந்த அடிமையாக இருக்கும் நாயகன், பிரிந்துபோன தனது மனைவியுடன் சேரப் போராடும் களம். ரத்தமும் சதையுமாக லோகேஷின் கதைக்களத்துக்குக் கொஞ்சம் ஒத்து வரக்கூடியது.

அய்யப்பனும் கோஷியும்
ரூடான ஒரு ரிட்டையர்டு மிலிட்டரி ஆபிஸருக்கும் போலீஸ் ஒருத்தருக்குமான ஈகோ மோதல்தான் அடிப்படை. வழக்கமா லோகேஷ் படங்கள்ல இருக்க மாதிரியே ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கியமான கேரக்டர்கள். அந்த இரண்டு கேரக்டர்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்குற மாதிரியா ஸ்கிரீன்பிளேவுல இயக்குநர் சாச்சி மிரட்டுன படம். இது தெலுங்குல பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆச்சு. தமிழ்ல ரீமேக் ஆகுற வாய்ப்புகள் அதிகம்.
பேட் மேன் ட்ரையாலஜி
ஸ்கிரீன்ப்ளேவுல மிரட்டுல கிறிஸ்டோஃபர் நோலன் கையில பேட் மேன் மாதிரியான சூப்பர் ஹீரோ கிடைச்சா என்ன நடக்கும்… அப்படியான 3 படங்கள்தான் பேட்மேன் டிரையாலஜி. சாதாரண மனுஷங்கள் மாதிரியான போராட்டங்கள் சூப்பர் மேன் கேரக்டர்களுக்கும் இருக்கும். அது எப்படி அவங்களோட தினசரி வாழ்க்கையைப் புரட்டிப் போடுதுனு… ஆரம்பத்துல இருந்தே நம்பும்படியான ஸ்கிரீன்பிளே படத்தோட ஆகப்பெரும் பலம்.
அன்ஃபர்கிவன்

விக்ரம் மாதிரியான ஒரு வயசான கில்லரோட படம்தான் அன்ஃபர்கிவன். கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடிச்சு, தயாரிச்சு இயக்குன இந்தப் படம், ஆஸ்கர்ல 4 விருதுகளை வென்ற படம். வயசான ஒரு கில்லர், கடைசியா ஒரு ஜாப் எடுத்து, எப்படி எதிரிகளை துவம்சம் பண்றாருனு ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லிருப்பாங்க.
பீக்கி பிளைண்டர்ஸ்
இதுவும் ஒரு கிரைம் டிராமாதான். ஆனா, மேலே சொன்னதுமாதிரி இல்லாம இது ஒரு டிவி சீரிஸ். முதலாம் உலகப்போர் முடிவுல பீக்கி பிளைண்டர்ஸ்ங்குற பேர்ல இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் இருக்கும் ஒரு கிரைம் கேங்கை ஹீரோ சிலியன் மாஃர்பி எப்படி டிராக் பண்றாரு… அவங்களோட கிரைம்களை எப்படி கண்டுபிடிக்குறார்னு சொன்ன சீரிஸ். நெட்ஃபிளிக்ஸின் ஆல்டைம் ஃபேவரைட் சீரிஸ்களில் முக்கியமானது.

எல்.ஏ.கான்ஃபிடன்ஷியல்
இதுவும் ஒரு கிரைம் ஃபிலிம்தான். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 1950-களில் இருந்த போலீஸ் சிஸ்டம், அவர்களிடையே விரவிக்கிடந்த ஊழல்னு ரொம்பவே விவரமா பேசுன படம். 1990கள்ல இதே பெயர்ல ஜேம்ஸ் எல்ராய் எழுதுன நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம், 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.
தி யூஷுவல் சஸ்பெக்ட்ஸ்
விக்ரம், கைதி படங்களில் வரும் கோஸ்ட் கேரக்டரைப் போன்றே இந்தப் படத்திலும் கைஸர் சோஸே என்கிற கேரக்டர் வரும். லாஸ் ஏஞ்சலிஸ் துறைமுகத்தில் நடக்கும் ஒரு கிரைம் காரணமாக ஒரு படகில் இருந்து 27 சடலங்களைக் கண்டெடுக்கிறார்கள். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே சந்தேகப்படும் நபர்களாக 5 பேரை விசாரிக்கிறார்கள். அவர்கள் வெர்பல் என்கிற கேரக்டர் வாயிலாக ஃபிளாஷ் நகர்கிறது. இறுதியில் யார் அந்த கைஸர் என்கிற முடிச்சு அவிழும்போது நிச்சயம் ஆடியன்ஸ் மிரண்டிருப்பார்கள்.
தி கேர்ள் வித் டிராகன் டாட்டூ
இதுவும் ஒரு கிரைம் திரில்லர் வகை படம்தான். சூழ்நிலை காரணமாக பத்திரிகையாளர் மைக்கேல், 40 வருடங்களுக்கு முன்னர் மாயமான ஒரு பெண்ணைப் பத்தி விசாரிக்கத் தொடங்கவே, அவிழும் முடிச்சுகள் ஒவ்வொன்றும் வேற ரகத்தில் இருக்கும். ஜேம்ஸ்பாண்ட் புகழ் டேனியல் கிரேக், பத்திரிகையாளர் மைக்கேல் கேரக்டரில் நடித்திருப்பார்.

7
பைபிளில் கூறப்பட்டிருக்கும் 7 பாவங்களை அடிப்படையாகக் கொண்டு கிரைம்களை நிகழ்த்தி வரும் சீரியல் கில்லரைத் தடுக்க போலீஸ் டிபார்ட்மெண்ட் என்னவெல்லாம் செய்கிறது என்பதைப் பற்றி பேசும் சீரியஸான கிரைம் த்ரில்லர் இது.
வழக்கமா தன்னோட படங்கள்ல டயலாக் ரைட்டிங்குக்குத் தனது நண்பரும் இயக்குநருமான ரத்னக்குமாரைப் பயன்படுத்துவார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தனது அடுத்த படத்தில் கூடுதலாக `ஜில் ஜங் ஜக்’ பட இயக்குநரான தீரஜ் வைத்தியையும் பயன்படுத்த இருப்பதாகவும் லோகேஷ் பகிர்ந்திருக்கிறார். அதேபோல், 2022-ல் வெளியான படங்களிலேயே தனக்குப் பிடித்த படமாக மலையாளத்தில் வெளியான தள்ளுமலா படத்தை ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். காலீத் ரகுமான் இயக்கியிருந்த அந்தப் படத்தை நான்கு முறைகளுக்கு மேல் பார்த்துவிட்டதாகவும் சொல்லியிருந்தார்.