உடல் எடையைக் குறைக்க சில உணவுகள் எப்போதுமே தடையாக இருக்கும். அப்படியான 5 உணவு வகைகளைப் பற்றிதான் நாம இப்போ பார்க்கபோறோம்.
உடல் எடைக் குறைப்பு
உடல் எடையைக் குறைக்க ஜிம்முக்குத்தான் போக வேண்டும் என்றில்லை. முறையான உணவுப் பழக்க வழக்கங்களோடு நடைபயிற்சி உள்ளிட்டவைகள் மூலமே நாம் எடையைக் குறைக்க முடியும். அதேநேரம், உங்கள் உடல் எடைக் குறைப்புப் பயணத்தின்போது சில உணவுகளை தொடவே கூடாது என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.
அப்படியான 5 உணவுகள்!
பேக்கேஜ்டு சிப்ஸ்
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை இன்றைய இளைஞர்கள் அதிகம் உண்ணும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். வெயிட் லாஸ் ஜர்னியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான உப்பு மற்றும் இனிப்பு ஆகியவை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதேபோல், இந்தவகை சிப்ஸ்களில் இருக்கும் அதிகப்படியான சோடியம் உங்கள் உடல்நலனையும் கெடுக்கும்.
கார்பனேட்டட் டிரிங்ஸ்
இனிப்பு சுவை அதிகம் கொண்ட கார்பனேட்டட் டிரிங்ஸ் உங்கள் உடலனுக்குப் பெரிய எதிரி என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த வகை கூல்டிரிங்ஸ்கள் அதிகப்படியான கலோரிகளைக் கொண்டிருப்பதால், உடல் எடையையும் கூட்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்கிற ஐடியாவில் நீங்கள் இருந்தால், கூடுமானவரை இந்த வகையான கூல்டிரிங்ஸ்களைத் தவிர்த்துவிட்டு ஃபிரெஷ் ஜூஸுக்கு மாறுங்கள். ஒரே ஒரு கிளாஸ் கோலா டிரிங்கில் மட்டும் 139 கலோரிகள் உள்ளது என்கிறார்கள்.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்
இந்தியாவின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிராண்டின் ஒரு பாக்கெட் நூடுல்ஸ் 310 கலோரிகளைக் கொண்டிருக்கிறது. இந்த வகை நூடுல்ஸ்களில் புரோட்டீன் உள்ளிட்ட சத்துகள் குறைவு; ஆனால், அதிகப்படியான கார்போஹைட்ரேட்கள், சோடியம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவை. இதனால், இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இன்ஸ்டன்ட் நூடுல்ஸுக்குப் பதிலாக வீட்டிலேயே தயாரிக்கப்படும் நூடுல்ஸ்களைப் பயன்படுத்தலாம்.
பிஸ்கட்
உடல் எடை அதிகரிக்கும் உணவுகளில் முக்கியமானது பிஸ்கட் வகைகள். இவற்றில் அதிகப்படியான இனிப்பும், கொழுப்பு சத்தும் இருப்பதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். 100 கிராம் பிஸ்கட் மட்டுமே 353 கலோரியை ஏற்றும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்கிற நோக்கில் நீங்கள் இருந்தால், உங்கள் உணவு லிஸ்டில் இருந்து பிஸ்கட்டைத் தூக்கிவிடுங்கள்.
Cereals
Cereals என்பது ஆரோக்கியமான டயட் லிஸ்டில் இருப்பதுதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதிகப்படியான சுகர் கண்டெண்டுடன் சேர்த்து Cereals-ஐ எடுத்துக் கொள்ளும்போது, உடல் எடையைம் அதிகரிக்கும். Cereals-ஐ எடுத்துக் கொள்ளும்போது, அதிலிருக்கும் சுகர் கண்டெண்ட் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வகை உணவுகளை நீங்கள் மிகக்குறைந்த அளவிலேயே எடுத்துக் கொண்டாலும், அவை உங்களின் வெயிட் லாஸ் ஜர்னியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
Also Read: கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டிய `Spices’… சேர்த்துக்கொள்ள வேண்டியவை எவை?