அதாவது வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோஸ்ட்!

இந்திய ரூபாய் நோட்டு மதிப்பு எங்க குறைஞ்சுது? அமெரிக்க டாலர் மதிப்புதான் கூடிருக்கு!, நாங்க வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தை சேர்ந்தவங்க. நீங்க கவலை படாதீங்க, ஓலா, ஊபர்லாம் மக்கள் அதிகமா யூஸ் பண்றாங்க. அதுனாலதான், ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சியடையுது, இந்திய பொருளாதாரத்தின் கவலைக்கிடமான நிலைக்கு கடவுள்தான் காரணம், நீங்க ஏன் ஹோட்டல்ல போய் சாப்பிடுறீங்க? வீட்டுல சமைச்சு சாப்பிடுங்க. இப்படி நிறைய அரிய கருத்துகளை சொல்லி வீட்டுல போனபிறகு நம்மள யோசிக்க வைக்கிற ஆளு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பிதாமகன் சூர்யாவைவிட பயங்கரமா அவங்க உருட்டுன உருட்டுகளைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

நம்ம மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்பவுமே, நம்ம ஒண்ணு கேட்டா நம்மள அசற வைக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லுவாங்க பாருங்க, அது நமக்கு இங்க புரியாது. வீட்டுக்கு போனாதான் புரியும். சில பேர் பதில் தெரியாமலேயே பயந்து ஓடியிருக்காங்க. அதாங்க, எம்.ஏ, எம்.ஏ ஃபிளாசபி, ஃபிளாசபி. அப்படிதான் இப்போ அமெரிக்காவுக்கு உலக நிதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்க போய்ருந்தாங்க. அங்க இருக்குற பத்திரிக்கையாளர்கள் நம்ம நிதியமைச்சர்கிட்ட, டாலருக்கு எதிராக இந்திய ரூபார் மதிப்பு குறைஞ்சு வர்றது பத்தி உங்க கருத்து என்னனு கேட்ருக்காங்க. அதுக்கு “வளர்ந்து வரும் நாடுகளின் ரூபாய் மதிர்ப்புகளை ஒப்பிட்டால் இந்திய மதிப்பு நல்லாவே இருக்கு. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வர்றதா நான் பார்க்கலை. அமெரிக்க ரூபாய் மதிப்புதான் அதிகமாகிட்டே வருது” அப்டினு ஒரு பதிலை சொல்லி பத்திரிக்கையாளர்களை வாயடைக்க வைச்சிட்டாங்க. சரியாதான நம்ம நிதியமைச்சர் சொல்லியிருக்காங்ல. அப்புறம் என்னனு நீங்க கேள்வி கேக்கலாம். அதான், நானும் சொல்றேன்.

ஆன்டி இந்தியன்ஸ் இருக்காங்கள்ல அவங்க நம்ம அமைச்சரை விடுறதா இல்லை. “இங்க இருந்து சின்னமனூர்க்கு எத்தனை கி.மீ? 22 கி.மீ. அப்போ, சின்னமனூர்ல இருந்து நம்ம ஊருக்கு?, அண்ணே நான் எட்டாவது பாஸ்!, டேய் நான் பத்தாவது பெயில் டா!, அண்ணே! பாஸ் பெரிசா? பெயில் பெரிசா மொமண்ட்!, அஞ்சலி சக்தியை லவ் பண்ணல, சக்தியைதான் கவுதம் லவ் பண்றான்”ன்னு மீம்ஸ் போட்டு தாளிச்சு எடுத்துட்டு இருந்தாங்க. அல்டிமேட்டான மீம்ஸ்னா அப்பா படத்துல சமுத்திரகனி மகனுக்கு அட்வைஸ் பண்ற ஃபோட்டோ போட்டு, “ரூபாய் மதிப்பு கீழ இறங்கிச்சுனு ஏன் நெகட்டிவா பார்க்குற, டாலர் மதிப்பு ஏறிடுச்சுனு பாஸிட்டிவா பாரு”னு மீம்ஸ் போட்ருந்தாங்க. அடேய், நீங்க இருக்கீங்களே! இன்னும் சிலபேர், “ஒரு நாட்டோட நிதியமைச்சர் பேசுற பேச்சா இது?, உங்களை நம்பி பொருளாதாரத்தை கையில கொடுத்தா, அதை வைச்சு விளையாடினு இருக்கீங்க?”னு சீரியஸா கேள்வி கேட்ருந்தாங்க. முக்கியமான விஷயம் என்னனா சுப்பிரமணிய சாமியே காண்டாகி, “நாங்கள் தோற்கவில்லை. எங்களின் ஆப்போசிட் டீம்தான் ஜெயித்துவிட்டது. Congrats. JNU never fails”னு ட்வீட் போட்டு கலாய்ச்சு விட்ருக்காரு.  

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

இந்திய மக்களோட அன்றாட உணவுப் பொருள்கள்ல தவிர்க்க முடியாத ஒண்ணு, வெங்காயம். இந்த பூண்டு, வெங்காயம் விலை கடந்த சில வருஷத்துக்கு முன்னாடி கடுமையா விலை உயர்ந்துச்சு. வெங்காயம் விலை திடீர்னு எப்படி விலை ஏறிச்சுனு பயங்கரமான காரசார விவாதங்கள் எல்லாம் சோஷியம் மீடியால அனலா பறந்துச்சு. அப்போ, பாராளுமன்றத்துலயும் இந்த வெங்காயம் விலை சம்பந்தமா விவாதங்கள் நடந்துச்சு. எதிர்க்கட்சி எம்.பி சுப்ரியா சுலே, “வெங்காய விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மத்திய அரசு இதுக்கு உடனே தகுந்த நடவடிக்கை எடுக்கணும்”னு பேசுனாங்க. இடைல இன்னொரு எம்.பி, “நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீங்கள்ல? அப்போ, உங்களுக்கும் அந்த பாதிப்பு தெரியும்ல?”னு கேள்வி கேட்க, அதுக்கு நிர்மலா சீதாராமன், “நான் வெங்காயம், பூண்டு அதிகமா சாப்பிடமாட்டேன். அதுனால, நீங்க கவலைப்படாதீங்க. வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ளாத குடும்பத்தில் இருந்துதான் நான் வந்திருக்கேன்”னு சொல்லிருக்காங்க. இதுபோதுமே, செல்லத்தை தூக்கினு வாங்கடானு இன்னைக்கு வரை மீம்ஸ் போட்டு இந்த விஷயத்தை வைச்சு நிதியமைச்சரை நிலைகுலைய வைச்சிட்டுருக்காங்க. நிர்மலா சீதாராமன் பேசியதை வெறும் எதிர்வினையா மட்டுமே பார்க்க முடியாது. அதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய சாதிய மனநிலை இருக்குனும் புரிஞ்சிக்கணும்னும் நிறைய பதிவுகளை பார்க்க முடிஞ்சுது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசு 100 நாள்கள் நிறைவு செய்ததை குறித்து நிர்மலா சீதாராமன் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினாங்க. அப்போ, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்துட்டு வர்றதுக்கு காரணமா, ஒலா, ஊபரை மக்கள் பயன்படுத்துறதுதான்னு சொன்னாங்க. “இந்தியால அதிகமா ஏன் பிரேக்கப் நடக்குது தெரியுமா? ஏன்னா, நிறைய பேர் காதலிக்கிறாங்க்கள்ல. அதுனாலதான். மக்கள் ஸ்டாண்டப் காமெயை பெரும்பாலும் ரசிக்கிறது இல்லை. ஏன் தெரியுமா? ஏன்னா, நிறைய பேர் பி.ஜே.பி பிரஸ் கான்ஃபெரன்ஸ பார்க்குறாங்க. அதுனாலதான்” – இப்படி நிறைய மீம்ஸ்களைப் போட்டு நிர்மலா சீதாரமனை கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆக்சுவலா, இவங்க பேட்டர்னே இப்படித்தான் இருக்கு. அது ஏன் நடக்கலைனு கேட்டா, அதுக்கு சம்பந்தமே இல்லாம, அப்போசிட்ல இருக்குறவங்களை குறை சொல்லி தப்பிக்கிறது. ரைட்டு நடத்துங்க. அமைச்சராக்கிட்டோம். கேட்டுதான ஆகணும். நான் சொல்லல. பஸ்ல நிறைய பேர் புலம்பிக்கிட்டு இருந்தாங்க. அதைச்சொன்னேன்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சிக்கு போய்க்கொண்டிருந்த சமயத்துல மிகப்பெரிய அளவில் விவாதம் நடந்துச்சு. அப்போ, ஜி.எஸ்.டி கவுன்சிலின் 41-வது கூட்டம் நடந்துச்சு. அது முடிஞ்சதும் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள்கிட்ட பேசுனாங்க. “கொரோனா தாக்கத்தால பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைஞ்சுருக்கு. கடவுளின் செயல்தான் இதுக்குக் காரணம்”னு சொல்லியிருப்பாங்க. `இந்தப் பெருந்தொற்று ‘கடவுளின் செயல்’னு சொல்றீங்க. அப்போ, பேரிடருக்கு முந்தைய காலங்களில், பொருளாதாரத்தில் நிகழ்ந்த தவறான நிர்வாகத்தை எப்படி சொல்லுவீங்க? கடவுளின் தூதராக இருக்குற நிதியமைச்சர் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுவாங்களா?’னு பா.சிதம்பரம் ட்வீட் போட சோஷியல் மீடியால அவங்க பேசுனது பத்தி எரிஞ்சுத்து. இதன் தொடர்ச்சியா #ResignNirmala ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆக ஆரம்பிச்சுது.

நிர்மலா சீதாராமன்கிட்ட வரிகள் பயங்கரமா விமர்சனத்துக்கு உள்ளான சமயத்துல ஹோட்டல்கள்ல உணவு பொருள்களுக்கு ஏன் வரி போட்டீங்கனு கேள்வி கேட்ருந்தாங்க. ஆனால், அதுக்கு நம்ம அமைச்சர், “பாமர மக்கள் வீட்டுல சமைச்சு சாப்பிடுறதுக்கு என்னவேணுமோ அதுக்குலாம் வரி ஜீரோதான். ஹோட்டல் போய் சாப்பிடுறவங்களுக்கு வரி விதிக்கக்கூடாதுனா அது எப்படி முடியும்?”னு கேள்வி கேக்குறாங்க. அதாவது, நீ ஏன் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுறனு கேள்வி கேட்டாங்க. சரி, வீட்டுல சமைச்சு சாப்பிடுற பாமர மக்களுக்கு இவங்க என்ன பண்ணாங்க? சிலிண்டர் விலைல இருந்து அரிசி, பருப்பு வரைக்கும் பாமர மக்கள் பயன்படுத்துற எல்லா பொருள்களுக்கும் வரிதான் வாங்குறாங்க. சரி, நகரங்களுக்கு வேலை தேடி வர்ற இளைஞர்கள் தங்களோட உணவை பெரும்பாலும் ஹோட்டல் போய்தான் சாப்பிடுறாங்க. அவங்க பாமர மக்கள் இல்லையா? இல்லை, இவங்க சொல்ற பாமர மக்கள் யாரு? மொத்தத்துல நிர்மலா சீதாராமனின் மொத்த பேச்சையும் சுறுக்கி ஒரேலைன்ல பார்த்தோம்னா, “நீ எதுக்கு வாழ்ற?”ன்ற ரேஞ்சுலதான் இருக்கும்.

மதிப்பிற்குரிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேல தனிப்பட்ட முறையில் யாருக்கும் வன்மங்கள் கிடையாது. ஆனால், பொறுப்புமிக்க பதவில இருந்துட்டு அவங்க பண்ற, பேசுற விஷயங்களையெல்லாம் பார்க்கும்போது அதுக்கு எப்படி எதிர்வினையாற்றனு நிறைய பேர் குழம்பி மீம்ஸாவும் ரோஸ்ட்டாவும் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறாங்க. அப்படியான பதிவுதான் இதுனு வைங்க. அதையும் தாண்டி அழுத்தமா நீங்க எதாவது கேள்வி கேட்டா, பதில் சொல்ல முடியாதுனு சொல்லுவாங்க. அவ்வளவுதான். நிதியமைச்சர் பண்ண இந்த விஷயத்தைப் பார்த்து செம ஷாக்கா இருந்துச்சுனு நீங்க நினைக்கிறது எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top