கொரோனா பெருந்தொற்றால் வொர்க் ஃப்ரம் ஹோம் என வீடுகளுக்குள் முடங்கி ஓராண்டைக் கடந்துவிட்டோம். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க இது முக்கியமான ஸ்டெப் என்றாலும், வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தியிருக்கிறது என்று பலர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் படுக்கையறையிலோ அல்லது கிச்சனில் இருந்தபடியே வேலை செய்துகொண்டே உங்களால் 100% புரடக்டிவிட்டியைக் கொடுக்க முடியாது என்பதே உண்மை.
வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்துக் கொண்டால், அது உங்களுக்கு அமைதியான வேலை பார்க்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலை எப்படி அமைத்துக் கொள்வது?
வொர்க் டேபிள் – இடம்
வேலை மற்றும் அதுசார்ந்த முடிவுகளை எடுக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்கும் பகுதி சிறந்தது என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதன்படி, உங்கள் வொர்க் டேபிளை வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நாள் முழுவதும் நீங்கள் இருக்க வேண்டிய இடம் அது என்பதால், கொஞ்சம் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
வொர்க் டேபிள் – சைஸ்
வொர்க் டேபிள் உங்கள் வேலையில் ரொம்பவே முக்கியமான பங்காற்றுவது. அதனால், அது என்ன வடிவத்தில் இருக்கிறது என்பதும் முக்கியம். அந்தவகையில், முக்கோண வடிவம் போன்ற கூர்மையான வடிவ டேபிளைத் தேர்வு செய்யாமல், சதுரம் அல்லது செவ்வக வடிவ டேபிள்களைத் தேர்வு செய்யுங்கள். இந்த வடிவ டேபிள்கள் உங்களுக்குத் தேவையான பொருட்களை வைத்துக்கொள்ளப் போதுமான இடத்தையும் அளிக்கும்.
நிறங்கள்
வொர்க் ஃப்ரம் ஹோமில் நீங்கள் பாஸிட்டிவாக இருப்பது புரடக்டிவிட்டியில் எதிரொலிக்கும். அதனால், உங்களைச் சுற்றி இயற்கையான நிறங்களில் அமைந்த இண்டீரியர் இருக்கும்படி பிளான் செய்துகொள்ளுங்கள். அதேபோல், வேலை பார்க்கும் சூழலில் உங்களைச் சுற்றி லைட் கலர்ஸ் இருப்பது மனதுக்கு நெருக்கமான அமைதியைக் கொடுக்கும். டார்க் கலர்ஸ் நெகட்டிவிட்டியைக் கொடுப்பதோடு, சோம்பேறித் தனத்தையும் ஏற்படுத்தலாம்.
அமைவிடம்
உங்கள் வொர்க் டேபிள் செட்டப்புக்கு அருகில் எந்தவொரு தடையும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். வொர்க் டேபிளுக்கு அருகில் கதவோ அல்லது பால்கனியோ இல்லாமல் இருப்பது நல்லது. இதன்மூலம் எந்தவொரு இடையூறும் இல்லாமல் நீங்கள் வேலையைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும். உங்களைச் சுற்றிய சூழல் அமைதியாக இருப்பதும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த உதவும்.
நெகட்டிவிட்டி வேண்டாமே பாஸ்
உங்கள் வொர்க் டேபிளில் நீங்கள் பயன்படுத்தாத பேனா, டாக்குமெண்டுகள் உள்ளிட்டவைகளை எடுத்து அப்புறப்படுத்துங்கள். சிறிது நேரம் செலவழித்து உங்கள் டேபிளில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் தேவையில்லாத பொருட்கள் இருக்கின்றனவா என்பதை கிராஸ் செக் செய்யுங்கள். வொர்க் டேபிள் சுத்தமாகவும் அதிக இடத்துடனும் இருப்பது லக் மற்றும் ஹேப்பி ஃபீலிங்க்ஸைக் கொடுக்கும் என்கிறது வாஸ்து. அதேபோல், கருப்பு – நீலம் போன்ற டார்க் கலர்களைத் தவிர்ப்பது நல்லது.
Also Read – ஃபேக் நியூஸ்களிலிருந்து ஒதுங்கியிருக்க என்ன செய்யலாம் – 4 ஐடியாக்கள்!