Horoscope

`மேஷம் முதல் மீனம்…’ வார ராசிபலன் மே 31 முதல் ஜூன் 06-ம் தேதி வரை..!

மேஷம் முதல் மீனம் வரை இந்த வார ராசிபலன் எப்படி இருக்கும்? எந்த ராசிக்கு என்ன பலன்?

மேஷம்

நீண்டகாலமாக உங்களைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னைக்கு இந்த வாரம் முடிவு கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கான மரியாதையை உயர்த்திக் கொள்வீர்கள். இந்த வாரத்தில் உங்களுக்கு பணவரவு இருக்கும். மாணவர்களின் பெர்ஃபாமன்ஸ் இந்த வாரம் வேற லெவல்ல இருக்கும். வாரத்தின் மத்தியில் அதிக செலவு வைக்கும் காரியம் நடக்கலாம். ஒரு குட் நியூஸ் இந்த வாரம் உங்களுக்கு வரலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, பணியிடத்தில் உங்களுக்காக அங்கீகாரம் உயரும். சீனியர்கள், கொலீக்ஸின் நல்ல சப்போர்ட் உங்களுக்கு இந்த வாரத்தில் கிடைக்கலாம். பெரிய போஸ்டிங்குக்கான இண்ட்ர்வியூவை நீங்கள் எதிர்கொண்டால், அது உங்களுக்கு ஃபேவராக நடக்க வாய்ப்புகள் அதிகம். பணவரவில் தடை இருக்காது. வார இறுதியில் செலவு வைக்கும் சில காரியங்கள் நடக்கலாம் மக்களே.

மிதுனம்

இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் உடல் நலனில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். எல்லாவிதமான மூவ்களிலும் லக் உங்களுக்குத் துணையிருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு ஃபேவராக இருக்கும். குடும்ப வாழ்க்கை ஹெல்தியா இருக்கும். பணவரவு இருக்கலாம், கடன் பிரச்னைகளுக்கும் தீர்வு கிட்ட வாய்ப்புகள் உருவாகும். லவ்வர்களுக்கு ரொமான்ஸ் விஷயத்தில் சாதகமான பதில் கிட்டலாம்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இந்த வாரம் உங்களுக்கு மனரீதியாகவும் எமோஷனலாகவும் நல்ல ரிலீஃப் கிடைக்கலாம். பொழுதுபோக்கு, ஆடம்பரம், அழகு தொடர்பான பொருட்கள் வாங்கக் கூடிய நேரம். மாத சம்பளக்காரர்களுக்கு உயர்ந்த பதவியும் கூடுதல் பொறுப்பும் கைகூடி வரலாம். பண வரவு இருந்தாலும் உழைப்பதை நிறுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையோடு மென்மையான போக்கைக் கடைபிடியுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, இந்த வாரம் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறைய வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள். எதிர்பார்ப்பைவிட அதிகமான பணவரவு இருக்கும். எல்லா கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால், பணியிடத்தில் நீங்கள் தொட்டது துலங்கும். உங்க பாட்னர் எல்லா விஷயங்களிலும் உங்களுக்குத் துணையிருப்பார். இந்த வாரத்தில் உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். அதனால், செலவுகளும் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, வேலை பார்க்கும் இடத்தில் அழுத்தமான முத்திரை பதிக்க இந்த வாரம் உங்களுக்கு வாய்ப்புகள் உருவாகும். சீனியர்களுடன் நல்ல ராப்போ இருக்கும். பண வரவுக்கான உங்கள் முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். வாழ்க்கைத் துணை அல்லது காதலில் பிரிந்துபோனவர்கள் சேர்வதற்கான சூழல் உருவாகும். இந்த வாரம் உடல்நலன் சார்ந்த சிக்கல்களை எதிர்க்கொள்ளலாம் கவனம்.

Horoscope
Horoscope

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, பணியிடத்தில் நீங்கள் இந்த வாரம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எஃபர்ட் போட வேண்டியிருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் பலன் கிட்டும். மாணவர்கள், தங்கள் புரஃபஷனில் ஜொலிக்க நல்ல வாய்ப்புகளை இந்த வாரம் ஏற்படுத்திக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையோடு நல்லிணக்கத்தைக் கடைபிடிப்பீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வரவில் குறைவிருக்காது. வாழ்க்கைத் துணை சப்போர்ட் கிடைக்கும். ஆக மொத்தத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டமான வாரம் இது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, உங்களது பெண்டிங் வேலைகள் பல இந்த வாரத்தில் முற்றுப்புள்ளி பெறும். வொர்க் லோட் என்பது அதிகமாக இல்லாமல், உங்களால் சமாளிக்கக் கூடிய வகையில் இருக்கும். வழக்கமான இடங்கள் மட்டுமல்லாது, எதிர்பாரா இடங்களில் இருந்தும் பணவரவு இருக்கும். நீண்டநாள் உடல் நலக் குறைபாட்டில் இருந்து இந்த வாரம் மீளும் வாய்ப்பு உருவாகும். மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வாரமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, இந்த வாரம் முழுவதும் உங்கள் வேலை விஷயத்தில் நம்பிக்கையுடன், உற்சாகத்துடனும் இருப்பீர்கள். புரஃபஷனலாக அடுத்த அடி எடுத்துவைக்க வாய்ப்புகள் கிட்டும். வியாபாரரீதியாக அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான திட்டங்கள் கைகூடும். உங்களுக்குப் பல வகைகளிலும் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான வாரம். வார இறுதியில் பணவரவு இருக்கலாம். விருப்பமானவர்களோடு இணக்கமாக இருப்பது நல்லது.

மகரம்

மகர ராசி நண்பர்களே, இந்த வாரம் உங்களுக்குப் பண வரவு அதிகமாக இருக்கலாம். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழியும். பணியிடத்தில் வொர்க் லோட் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். உங்க லைஃப் பாட்னரோட உடல் நலன் பத்தி கவலையோடு இருப்பீர்கள். ஆன்மீகத்தில் அதிகமான நாட்டம் ஏற்படும். மாணவர்களுக்குக் கலவையான ரெஸ்பான்ஸ் கிட்டும் வாரம் இது.

Horoscope
Horoscope

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, இந்த வாரம் உங்கள் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. சேலரி வாங்குபவர்களும் பிஸினஸில் இருப்பவர்களுக்கும் அனுகூலமாகப் பல விஷயங்கள் நடக்கும். எந்தவொரு விஷயத்திலும் சீனியர்களின் சப்போர்ட் உங்களுக்கு முழுமையாகக் கிட்டும். பண வரவு இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. உங்க வருமானம் நெக்ஸ்ட் லெவலுக்குப் போகும். உறவினர்களோடு இணக்கமான சூழல் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சின்ன பிரச்னை ஏற்பட்டாலும், அது தற்காலிகமானதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மீனம்

வேலை பார்க்கும் இடத்தில் ஃபேவரான சூழல் இருக்கும். வழக்கமான வசதி, வாய்ப்புகள் இந்த வாரம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப வாழ்வில் எதிர்பாரா சச்சரவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தற்காலிகமான அந்த சச்சரவால், வாழ்க்கைத் துணையோடு புதிய புரிதல் உண்டாகும். இந்த வாரம் கோபத்தையும், வாயையும் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. வார இறுதி உங்களுக்கு பண வரவையும் குட் நியூஸையும் கொண்டுவந்து சேர்க்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

Also Read – மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி இந்த 20 தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top