திருமணத்தின்போது மணமகன், மணமகள் தவிர்த்து நிறைய பேரோட கவனத்தை ஈர்க்கும் மற்றொரு முக்கியமான அம்சம் Wedding Stage. இதை எப்படி கலக்கலா டிசைன் பண்றது?
Wedding Stage
எல்லா திருமணங்களின்போதும் புதுமணத் தம்பதியினர் நிற்கும் Wedding Stage முக்கியமான அட்ராக்ஷனாகவே திகழும். பாரம்பரிய திருமண நிகழ்வுகளின்போது குடும்பத்தினர், நண்பர்களோடு அவர்கள் போட்டோ எடுத்துக்கொள்ளும் மேடை என்பது தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கும். இந்த வெட்டிங் ஸ்டேஜ்களின் டிசைனும் காலத்துக்கேற்ப மாறி வந்திருக்கிறது.
உங்கள் திருமண விழாவை கூடுதல் சிறப்பாக்க வெட்டிங் ஸ்டேஜை கலக்கலா டிசைன் பண்றது எப்படி… அதற்கான 4 ஐடியாக்கள்!
Peach drapes, Flowers
துணி மடிப்புகளால Peach drapes மற்றும் ஃபிரெஷ்ஷான பூக்களைப் பின்னணியாகக் கொண்ட டிசைன் வேற லெவல் லுக் கொடுக்கும். அதற்கேற்ப Fairy லைட்டுகள், மலர்களின் இதழ்கள் போன்ற பசுமையான பின்னணியோடு, பிரைட் கலர்களைக் கொண்ட கேண்டில் ஹோல்டர்களோடு ஒரு மெஜஸ்டிக்கான வெள்ளை நிறத்தில் டச் கொடுக்கும்போது உங்கள் திருமண மேடை கலக்கலாக இருக்கும்.
கிளாசிக் சிவப்பு – வெள்ளை – தங்க நிற காம்பினேஷன்
எத்தனை வருஷமானாலும் உன் அழகும், ஸ்டைலும் மாறவே இல்லைன்கிற நீலாம்பரி டயலாக் அப்படியே இந்த டிசைனுக்குப் பொருந்தும்னே சொல்லலாம். மேடையின் பேக்ரவுண்டில் சிவப்பு, வெள்ளை நிறங்களில் பூக்களையோ அல்லது திரைசீலைகளையோ பயன்படுத்திவிட்டு, புதுமணத் தம்பதி அமரும் சோஃபாக்களை கோல்டன் கலரில் டிசைன் செய்துவிட்டால், அது கொடுக்கும் லுக்கே தனிதான். கிளாசிக்கான இந்த டிசைன் உங்க வெட்டிங் ஸ்டேஜுக்கு அசத்தலான லுக்கைக் கொண்டு வந்துவிடும்.
White – Gold
உங்க வெட்டிங் ஸ்டேஜூக்கு ஒரு ரிச் லுக் கொடுக்கணும்னு நீங்க நினைச்சா, தயங்காம வெள்ளை – கோல்டன் கலர் காம்பினேஷனை டிரை பண்ணிப் பார்க்கலாம். குளிர்காலத்தில் திட்டமிடும் திருமணங்களுக்கு, இந்த காம்பினேஷன் பெஸ்ட் சாய்ஸ். பூந்தொட்டிகள், ஃபிரெஷ்ஷான பூக்கள், பிங்க் அல்லது ஆலிவ் நிற திரைச்சீலைகளின் பின்னணியில் சோஃபாக்களை வெள்ளை நிறத்தில் பிளான் பண்ணலாம்.
விண்டேஜ் தீம்
கடற்கரை அல்லது புரதானமிக்க அரண்மனைகள் போன்ற டெஸ்டினேஷன் வெட்டிங் நீங்க பிளான் பண்ணா, இது உங்களுக்கான வெட்டிங் ஸ்டேஜ் ஐடியாதான். இந்த மாதிரியான இடங்களில், அங்கே இருக்கும் மாடிப்படிகளுக்கு லைட்டிங் செட் செய்வது போன்ற ஹைலைட் செய்யும் விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள். இயற்கையான பின்னணியில் லைட்டிங்கும் சிறப்பாக அமைந்தால், உங்கள் திருமணத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு போட்டோவும் சிறப்பாக அமைந்துவிடும்.
Also Read – Pre-Wedding போட்டோஷூட்டில் கலக்குவது எப்படி… கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!