சிசர் மனோகர்

`சிவாஜியின் செல்லப்பிள்ளை, வித்தியாச கேரக்டர்… விநோத மாடுலேஷன்…’ சிசர் மனோகர்

சிசர் மனோகர் | தமிழ் சினிமாவின் குணச்சித்திரக் கலைஞர்களைக் கொண்டாடும் தமிழ் சினிமாவின் முதல் விருது மேடை Tamilnadu Now நடத்திய Golden Carpet Awards விழா மிக பிரமாண்டமாக சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

சிசர் மனோகர்

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேலைகளில் தொடங்கி, புரடக்‌ஷன் மேனஜராக பணி புரிந்து, சிவாஜியின் செல்லப்பிள்ளையாக இருந்தவர், வித்தியாசமான வசன உச்சரிப்பால் பலரையும் கவர்ந்தவரை துணை நடிகராக்கி, பிரதான நகைச்சுவை நடிகராக்கி தமிழ் சினிமா பழனிச்சாமியை ‘சிசர் மனோகர்’ ஆக மாற்றிக் கொண்டாடியது. மீம் டெம்ப்ளேட்டுகளில் முக்கிய இடம்பிடித்தவர் சிசர் மனோகர்.

சிசர் மனோகர்

பஸ் கண்டக்டராக கலவரம் செய்வார், பூமா தேவி பொளக்கப்போறாடா என சாபம் விடுவார், நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ஒன்னும் நடக்காது என நையாண்டி காட்டுவார், இம்சை அரசனின் கேள்விக்கு விடை தெரியாமல் விழி பிதுங்குவதும், பேருந்து முன் படுத்து கலவரம் செய்வதுமான ரகளையான பெர்ஃபார்மர் சிசர் மனோகர். இவரின் நிஜப்பெயர் பழனிச்சாமி என்பதே பலருக்கும் தெரியாத அளவுக்கு முதல் படத்தில் நடித்த கதாபாத்திரப் பெயரே இவருடைய பெயராகிப்போனது. தமிழ் சினிமாவில் கடந்த நாற்பதாண்டுகளில் ஒரு நகைச்சுவை நடிகராக விருந்து படைத்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் அவருக்கு விருது வழங்கி பேசும் போது, “இவர் நடிகராவதற்கு முன்பே எனக்கு இவரோட அறிமுகம் உண்டு. ஷூட்டிங் ஸ்பாட்டில் தாயுள்ளம் கொண்டு எல்லாருக்கும் சாப்பாடு போடுற புரடக்‌ஷன் அஸிஸ்டென்டா எனக்கு அவரைப் பழக்கம். அங்க இருந்து எத்தனையோ தூரம் உழைச்சு முன்னுக்கு வந்திருக்கார். அவருக்கு இந்த விருது ஒரு அங்கீகாரம்” என்றார்.

Also Read -கோலிவுட்டின் எனர்ஜி பூஸ்டர், ஏஜெண்ட் உப்பிலியப்பன் aka சந்தான பாரதி!

“இந்த விருதை என் முதலாளி கிட்ட வாங்குறது எனக்கு மிகப்பெரிய பாக்கியம்.” என நெகிழ்ந்தார். தேவர் மகன் படத்தில் சிவாஜிக்கு புரடக்‌ஷன் அஸிஸ்டெண்ட்டாக ஒருவரை நியமித்திருக்கிறார்கள், ஒரே நாளிலேயே இவன் செட்டாவ மாட்டான், வேற ஒருத்தரை அனுப்பு என சிவாஜி சொல்ல, இன்னொருவர் போயிருக்கிறார், அவரும் சிவாஜிக்கு செட்டாகவில்லை. அதற்குப் பிறகுதான் இவர் போயிருக்கிறார், இவரை சிவாஜிக்குப் பிடித்துப்போக, பழனிச்சாமி என்ற இவர் பெயரையே பழனியப்பா பழனியப்பா என சிவாஜி செல்லமாக மாற்றிக் கூப்பிட அதுவே அவர் பெயராகிப் போனது. அவர் நடித்த முதல் படத்தில் அவர் கேரக்டர் பெயரான சிசர் மனோகர் என்பதே பின்னாளில் அவர் பெயராக மாறிப்போனது.

சிசர் மனோகர்

மேடையில் அவருக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் காத்திருந்தது. பஸ் கண்டக்டர் உடையுடனும், பேக் உடனும் அவர் அடித்த லூட்டிகளையும் இன்னும் பல சுவாரஸ்யங்களையும் Tamilnadu Now Youtube Channel-ல் முழுமையாகப் பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top