பிரியங்கா மோகன்

`இன்னசெண்ட் இதயம், நாசுக்கான நடிப்பு, தக்லைஃப் தங்கம்மா’ – பிரியங்கா மோகனை ஏன் பிடிக்கும்… அழகான 5 காரணங்கள்!

நம்ம பசங்களுக்கு Dream ஹீரோயின்கள் அப்பப்போ மாறிக்கிட்டே இருப்பாங்க. ஏன்னா, இவங்கதாண்டா நம்ம லைஃபோட ஹீரோயின்னு கனவுல மிதந்து சைட் அடிக்க ஆரம்பிக்கும்போது. ஒண்ணு, அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க. இல்லைனா, இவர்தான் என் காதலர்னு சோஷியல் மீடியால போஸ்ட் போடுவாங்க. அதுவும் இல்லைனா, ஃபீல்ட் அவுட் ஆகி காணாமல் போயிடுவாங்க. அப்புறம் அவங்கள மறக்க முடியாமல் மனசு பச்சைக்கிளிக்கு ஏங்கின காக்கா மாதிரி தவிச்சுக் கிடக்கும்.

எல்லாத்தையும் மறந்து அந்த விஷயங்களையும் கடந்து இப்போதான் நார்மல் ஆகிட்டே வர்றேன்னு ’பேட்ட’ ரஜினி ஸ்டைல்ல நினைக்கும்போது இன்னொரு ஹீரோயின் எண்ட்ரி கொடுத்து பாழடைஞ்ச பங்களா போல இருக்குற நம்ம மனசை தூசிதட்டி ஒட்டடை அடிச்சு தாஜ்மகாலா மாத்திடுவாங்க. அப்போ வரும் பாருங்க ஒரு சந்தோஷம்… சோஷியல் மீடியால ஒரே நைட்ல ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ் வந்தா எப்படி இருக்கும்? அப்படி இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்லணும்னா கடவுள் நமக்காக அனுப்புன அஞ்சாவது தேவதை இவங்கதான்னு தோணும். அப்படி இப்போ 90’ஸ் கிட்ஸ்ல இருந்து நேத்தைக்குப் பொறந்து வளராத கிட்ஸ் வரைக்கும் பார்த்து சைட் அடிக்கிற ஒரு ஹீரோயின்னா அது பிரியங்கா மோகன் தான்.

பிரியங்கா மோகனை ஏன் பிடிக்கும்னு சொல்றதுக்கு எங்கிட்ட 5 காரணங்கள் இருக்கு. என்னனு ஒவ்வொன்னா பார்த்திடலாமா?இடையில இடையில அவங்களப் பத்தின சில சுவாரஸ்யமான தகவல்களும் சொல்றேன் கவனமா கேளுங்க!

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்

எல்லாமே ஹிட்டு தான்!

பொதுவா தென்னிந்தியால கோலிவுட்ல நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகைகள் ஒரே நேரத்தில் மல்லுவுட், டோலிவுட், சான்டல்வுட் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகுறது ரொம்பவே கஷ்டம். ஒரு வுட்ல ஃபோகஸ் பண்ணி வொர்க் பண்ணவங்க அந்தந்த வுட்ல சூப்பர்ஸ்டாராவே வளர்ந்து வந்துருக்காங்க. ஆனால், அதைத்தவிர்த்து மற்ற எல்லா வுட்லயும் அவங்களால ரீச் ஆக முடிஞ்சுதானு கேட்டா பெரிய கேள்விக்குறிதான். இருந்தாலும் ஒண்ணு, ரெண்டு நடிகைகளை நம்மளால குறிப்பிட்டு சொல்ல முடியும். அந்த லிஸ்ட்ல இப்போ பிரியங்கா மோகன் இணைஞ்சிருக்காங்கனு சொல்லலாம். எக்ஸாம்பிள் சொல்றேன் பாருங்க. சாண்டல்வுட்ல நடிகை பிரியங்கா மோகன் இயக்குநர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ’ந்து கதை ஹெல’ என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். த்ரில்லர் ஜானரில் உருவான அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்ததாக டோலிவுட்டில் ’கேங் லீடர்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவின் இளம் ரசிகர்கள் தங்கள் மனதில் அவரது பெயரை பச்சைக்குத்திக்கொள்ளும் அளவுக்கு இடம்பிடித்தார். அதற்கு அப்புறம் சிவகார்த்திகேயன், சோஷியல் மீடியால பிரியங்கா மோகன் ஃபோட்டோ பார்த்து ’செமயா இருக்காங்களே’னு நினைச்சு இயக்குநர் நெல்சன்கிட்ட அறிமுகப்படுத்த, அவரும் பிரியங்கா மோகனைக் கூப்பிட்டு 4 மணி நேரம் இன்டர்வியூ வைச்சு கோலிவுட்ல ‘டாக்டர்’ படத்துல நடிக்கவைச்சாரு. (அப்படி 4 மணி நேரம் என்னதான் பேசுனாருனு தெரியலை) சரி, அதை விடுவோம். ஆனால், படம் பிளாக் பஸ்டர் ஹிட். அப்புறம் நடந்ததுலாம் நமக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் பேசுவாங்க. சமீபத்துல வெளியான `எதற்கும் துணிந்தவன்’ படத்துலகூட போல்டான கதாபாத்திரத்துல நடிச்சதுக்காக அவங்களுக்கு பல கிளாப்ஸ் கொடுக்கலாம். இப்படி அவங்க நடிச்ச எல்லாப் படமும் பிளாஸ்ட்தான்.

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்
  • பொதுவா தமிழ் சினிமா நடிகைகள் ஃபேஷன் அல்லது விஸ்காம் சார்ந்த படிப்பு படிச்சிட்டுதான் வருவாங்க. ஆனால், நம்ம பிரியங்கா மோகன் என்ஜினீயரிங் பட்டதாரி. அதுவும் பயோ டெக்னாலஜி படிச்சிட்டு வந்துருக்காங்க.
  • படிக்கும்போதே அவங்க கூட படிச்ச ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் `ஏய் நீ ரொம்ப அழகா இருக்க. மாடலிங் ட்ரை பண்ணு’னு சொல்லியிருக்காங்க. அதனால, படிக்கும்போதே மாடலிங் ட்ரை பண்ணியிருக்காங்க. அதன் வழியாகதான் அவங்களுக்கு நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுது.

நாசுக்கான நடிப்பு

என்ன பெரிய நடிப்பு? இதுவரை யாரும் நடிக்காத நடிப்பா நடிச்சிட்டாங்க? அப்டினு நீங்க கேக்கலாம். நெல்சனோட கேரக்டர் எல்லாம் நார்மல் மீட்டரை விட்டு விலகியே இருக்கும். அப்படி இவங்களோட நடிப்பும் நார்மல் மிட்டரை விட்டு விலகியேதான் இருக்கும். இதுவரை வந்த படத்துல பிரியங்கா மோகனோட சீன் எல்லாம் எடுத்துப்பாருங்க, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் நிறைய இருக்காது. கத்தி டயலாக் பேசுறது இருக்காது. ஓவர் ஆக்டிவா அவங்களோட கதாபாத்திரம் இருக்காது. சாஃப்ட்டான மீட்டர்ல படம் ஃபுல்லா நடிச்சுக் கொடுத்துட்டு போய்ட்டே இருப்பாங்க. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லணும்னா ரொம்பவே அலட்டிக்கொள்ளாத நடிப்பு. ’கேங்க் லீடர்’, ’டாக்டர்’ இரண்டு படத்துலயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நடிப்பைதான் வெளிப்படுத்தியிருப்பாங்க. ஆனால், நமக்கு அந்த ஃபீல் இருக்கவே இருக்காது. அதுதான் பிரியங்கா மோகனோட மேஜிக். எதற்கும் துணிந்தவன் படத்துலகூட ரொம்பவே தைரியமா பண்ண வேண்டிய கேரக்டரை அதற்கு ஏற்ப ஆனால், அலட்டிக்காம அழகா நடிச்சுக் கொடுத்துருப்பாங்க.

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்
  • நடிக்கிற வாய்ப்பு கிடைச்சதும் கேமரா முன்னாடி நிக்க ரொம்பவே ஷையா ஃபீல் பண்ணுவாங்களாம். இப்படியே இருந்த சரிவராதுனு சொல்லி பெங்களூர்ல மேடை நாடகங்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஒண்ணுல சேர்ந்து நடிப்பைக் கத்துக்கிட்டாங்க. நிறைய மேடை நாடகங்கள்ல பிரியங்கா மோகன் நடிச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க.

மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ

பிரியங்கா மோகனைப் பத்தி பேசும்போது அழகைப் பற்றி பேசாமல் எப்படி இருக்க முடியும்? உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் பெயரை சொல்லி இவங்களும்தான் அழகுனு நீங்க சொல்லலாம். ஆனால், எங்க ஆளு கொஞ்சம் வேற ரகம். நஸ்ரியா, ஸ்ரீதிவ்யாவுக்கு அப்புறம் கொஞ்சம் க்யூட்டான அழகு பிரியங்கா மோகனுக்குதான் இருக்குனு சொல்லலாம். திரையில அப்படியே மினுங்குவாங்கனா பார்த்துக்கோங்க. செல்லம்மா பாடல்ல வர்ற `மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ’ வரிகள் எல்லாம் பிரியங்கா மோகனுக்குனே அளவெடுத்து எழுதுன மாதிரி இருக்கும். அவ்வளவு அழகு. ஒரு ஜென் முகம் அவங்களோடது. அவங்க முகத்தை மனசுல நினைச்சா அப்படியே மழையடிக்கும். இதுவரைப் பார்த்தப் பெண்ணில் பிரியங்கா மோகனைப் போல இளைஞர்களை யாருமே அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டுத் தரவில்லைனா பார்த்துக்கோங்க. ஒவ்வொருத்தருக்கும் ரியல் லைஃப்ல ஒரு மேனரிஸம் இருக்கும்ல, அப்படி பிரியங்கா தன்னோட உதட்டை சுழிச்சு ஒண்ணு பண்ணுவாங்க. அதுக்கு நாங்கலாம் அடிமை மக்களே! அடிமை!

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்
  • பிரியங்கா மோகன்க்கு மேக் அப் போடுறது அவ்வளவா பிடிக்காதாம். எப்பவும் சிம்பிளா இருக்குறதுதான் அவங்களுக்குப் பிடிக்குமாம். ஆனால், சினிமாவுக்கு வந்த பிறகு வேற வழியில்லைன்றதுனால மேக் அப் போட்டு பழகிக்கிட்டாங்களாம்.
  • பிரியங்கா மோகன் கொஞ்சம் சோம்பேறியும்கூட. ஷூட்டிங்லாம் இல்லாத நாள்ல காலைல 10 மணிக்குதான் எழும்புவாங்களாம். நைட்டும் சீக்கிரமா தூங்கிருவாங்களாம்.

இன்னசென்ட் இதயம்

பிரியங்கா மோகனோட இண்டர்வியூ எல்லாம் பார்த்தா உங்களுக்கே தெரியும். அவங்க எவ்வளவு இன்னசென்ட்னு. யார் மனசும் நோகக்கூடாது. எல்லாரும் சந்தோஷமா இருக்க எல்லாரும் என்ன பண்ணனுமோ அதான் பண்ணனும்ன்ற தொணிலதான் அவங்க பேசுவாங்க. இன்னசென்ட்னால சிலசமயம் தெரியாமல் எதாவது வார்த்தை வாய் தவறி ஸ்லிப் ஆனாக்கூட அதை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. இண்டர்வியூல டேர் கொடுக்கும்போதுகூட கியூட்டா அவங்க மனசு நோகாத அளவுக்குதான் டேர் கொடுப்பாங்க. அவங்களோட இன்னசென்ஸுக்கு உதாரணமா ஒரு சம்பவம் சொல்றேன். சிவகார்த்திகேயன், ஒரு கடையைப் பார்த்து, `இது என்னது?’னு பிரியங்கா மோகன்கிட்ட கேட்ருக்காரு. ‘இது ஷாப்’ அப்டினு சொல்லியிருக்காங்க. ’ஏங்க கண்ணு முன்னாடி பார்க்குறேன் இது ஷாப்னு எனக்குத் தெரியாதா? இது என்ன மாதிரியான ஷாப்னு கேட்டேன். அதுக்கு இவங்க பதில் இது’னு ஆதங்கப்பட்டுருக்காரு. அதை அவங்க கலாய்க்கலாம் சொல்லல. ஆன்ஸராதான் சொல்லியிருக்காங்க. அதுக்கு சிரிச்சா அப்செட் வேற ஆயிடுவாங்களாம். அவ்வளவு இன்னசென்ட் அவங்க. சிவகார்த்திகேயன் ஒரு இண்டர்வியூல சொல்லியிருப்பாரு, ‘நம்ம கேள்வி கேட்டால் நம்மள அசற வைக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லுவாங்க பிரியங்கா’ அப்டினு. நெல்சனும் சொல்லுவாரு, `அவங்க சொல்ற பதில்ல நம்மள சுத்தி இருக்குறவக்க எல்லாரும் நம்மள கலாய்ப்பாங்க அப்டி’னு. இதை அவங்க சொன்ன சம்பவத்தோட பொருத்திப் பார்த்தா அவ்வளவு கனெக்ட் ஆகும். இன்னும் சொல்லப்போனால் படத்துலகூட ரொம்ப சண்டை போடுற சீன்லாம் இருக்காது. அதைக்கூட தனக்கே உரிய நடிப்புல ஹேண்டில் பண்ணுவாங்க.

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்
  • எப்பவுமே பாஸிட்டிவா இருக்குறதுதான் பிரியங்கா மோகனுக்குப் பிடிக்கும். அதுக்காக நிறைய மோட்டிவேஷனல் புக்லாம் படிப்பாங்களாம். வீட்டுல கொஞ்சம் மோட்டிவேஷன் புக்ஸ் கலெக்‌ஷனே வைச்சிருக்காங்களாம். எப்போலாம் ஃப்ரீயா இருக்காங்களோ அப்போலாம் புக்ஸ்தான் படிப்பாங்களாம்.
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் இங்கிலீஷ்னு சுமார் 5 மொழிகள் சரளமா பேசுவாங்க. கேங் லீடர் படத்துலயும் சரி, டாக்டர் படத்துலயும் சரி அவங்களுக்கு அவங்களேதான் டப்பிங் பேசினாங்க.
  • பிரியங்கா மோகன் ரஜினிகாந்தோட மிகப்பெரிய ஃபேன்.

தக்லைஃப் தங்கம்மா

பொதுவா இண்டர்வியூ எடுக்குறவங்க எல்லாம் பிரியங்கா மோகன்கிட்ட நிறைய மொக்கைகள் வாங்குவாங்க. ஏற்கெனவே சொன்ன மாதிரி அவங்க இதை கான்சியஸா பண்றது கிடையாது. எதார்த்தமா அவங்க பேசுறது அப்படி அமைஞ்சுடுது. ஒரு இண்டர்வியூல நீங்க மார்னிங் பெர்சனா? இல்லை நைட் பெர்சனா? அப்டினு கேள்வி கேப்பாங்க. அதுக்கு பிரியங்கா மோகன் நான் பேஸிக்கலி ஈவ்னிங் பெர்சன் அப்டினு தக் லைஃப் மொமண்ட்ல ஒரு பதில் சொல்லுவாங்க. அதேபோல ட்விட்டர் Or ஃபேஸ்புக் அப்டினு கேள்வி கேட்க. இன்ஸ்டாகிராம்னு ஒத்தை வார்த்தைல பதில் சொல்லிட்டு தக் லைஃப் மொமண்ட கிரியேட் பண்ணிடுவாங்க. இப்படி நிறைய தக் லைஃப் மொமண்ட்ஸ் பண்ணியிருக்காங்க.

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்

சரி, பிரியங்கா மோகனை உங்களுக்கு ஏன் புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: ‘இருவர்’ மோகன்லால் Vs ‘தலைவி’ அரவிந்த்சாமி – யார் சூப்பர் எம்.ஜி.ஆர்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top