தமிழ் சினிமா பல வகை காதல்களைப் பார்த்திருக்கு. Cringe காதல்ல ஆரம்பிச்சு காவியக் காதல், புரட்சி காதல், தொலைதூரக் காதல், தொலைதூரத்துல இருந்தாலும் துரத்திப் போய் பார்க்கற காதல், பொட்டுன்னு போற காதல், புரியாத காதல், Matured காதல், பார்த்துக்காத காதல்னு இப்படி சொல்லிட்டே போகலாம். அந்தளவுக்கு காதலை எப்படியெல்லாம் பார்க்கணுமோ அதைத் தாண்டியும் படைப்பாளிகள் பார்த்து படம் பண்ணி படைப்பா கொடுத்திருக்காங்க. அப்படி எல்லா காதலையும் நம்மனால பேச முடியாது. அதனால, சில இயக்குநர்களோட பார்வையில காதலானது எப்படி இருக்குன்னுதான் நாம் இந்த வீடியோவுல பார்க்க போறோம்.
செல்வராகவன் காதல்
துள்ளுவதோ இளமையில ஆரம்பிச்சு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்னனு கலவையான காதலை நமக்கு சொல்லி கொடுத்தவர்தான் செல்வராகவன். இவரோட சினிமாட்டிக் யுனிவர்ஸ்ல காதலுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். துள்ளுவதோ இளமை படத்துல அரும்பு மீசை முளைக்கிற ஸ்டேஜ்ல காதலானது எப்படி இருக்கும்னு சொல்லியிருந்தார். காதல் கொண்டேன் வினோத் – திவ்யா தமிழ் சினிமாவுக்கே புதுசான ஒரு காதல். வினோத் மாதிரியான ஒரு இன்ட்ரோவர்ட்டை ஒரு நல்ல மனிதனாக்கி கூச்சத்தைப் போக்க வெச்சு உணர்வுகளை சொல்லி கொடுத்தவர் திவ்யா. அவங்க தனக்கு இல்லனு தெரிஞ்ச வினோத், திவ்யாகிட்ட இருந்து விலகிப் போயிடுறார். 7ஜி ரெயின்போ காலனி மாதிரி ஒரு ராவான தமிழ் சினிமா எப்பவுமே பார்க்க முடியாது. காதல் வர்றதுக்கு முன்னாடி மனசுக்கு பிடிச்ச ஒரு பொண்ணு பேட்மிண்டன் விளையாடும்போதுகூட அந்த வயசுக்கு ஏத்த உணர்வுகளின் ரீதியாதான் அனிதாவைக் கதிர் பார்த்தார். காதல், காமம், இழப்பு, இழப்பினால் வருகின்ற வலி இறுதியா அனிதா இந்த உலகத்துலதான் இருக்கானு நெனச்சுட்டு கதிர் அவருக்குனே கற்பனையா உருவாக்குன உலகம். இதுக்கு முன்னாடி சொன்ன ரெண்டு காதல்லேயும் எதாவது ஒரு காதல் வெற்றியடைஞ்சிருந்தா மயக்கம் என்ன கதைதான் நடந்திருக்கும் செல்வராகவன் உலகத்துல. காதல்ல ஜெயிச்சிட்டா மட்டும் போதுமா காதலுக்கு நிகரான நம்ம passion-ல ஜெயிக்கிறதும் வாழ்க்கையோட முக்கியத்துவம்தான். அதுக்கு யாமினி மாதிரி காதலி/ மனைவி நம்ம கூட இருந்தா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்.
கௌதம் மேனன் காதல்
இது ஒரு வகையில எலைட்டான காதல்னு சொல்லலாம். செல்வராகவன் படத்துல எந்தளவுக்கு ஒரு ராவான காதல் இருக்குமோ அதுக்கு அப்படியே நேரெதிரான காதல்தான் கௌதம் மேனன் காதல். ஒரு ஹீரோ ஹீரோயின் மேல வைக்கிற லவ்தான் இவர் படத்தோட கதையைவே முடிவு பண்ணும். அது எப்படிப்பட்ட காதலா இருக்கும்னு வெளிப்படுத்துறதுதான் இவரோட ஸ்டைல். இவர் படத்துல போலீஸ் லவ் பண்ணுவார், அப்படி இல்லேன்னா லவ் பண்னிட்டு போலீஸோவோ இல்ல மிலிட்டரி ஆஃபிஸராவோ ஆவார். போலீஸ்ன்னா மிடுக்கான பாடி லாங்குவேஜ், துப்பாக்கி எடுத்து டொப்பு டொப்புனு போடுவாங்க, நீதியை நிலை நாட்டுவாங்க. ஆனால், கௌதம் படத்துல இது எல்லாமே இருக்கும் அதோட சேர்த்து லவ்வும் இருக்கும். அதுல ஒரு கவித்துவம், எலைட்னெஸ்னு இதுவும் இருக்கும்.
மணிரத்னம் காதல்
இவரோட காதலை சுருக்கமா சொல்லணும்னா புரட்சிகரமான காதல். கதையின் நாயகன் இக்கட்டான சூழ்நிலையில மாட்டியிருந்தாலும் அவங்களுக்குள்ள இருக்க காதலானது வெளிப்படும். இவ்வளவு கலவரத்துக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது மாதிரி, எவ்வளவு பெரிய கலவரம் வெடிச்சாலும் அதுக்கு மத்தியில ஒரு காதலும் மலரும். பேக்கிரவுண்ட்ல குண்டு வெடிக்கும் அதையே ஹீரோ யூஸ் பண்ணி தில் சே ரேனு பாட்டு பாடிட்டு இருப்பார். இதையெல்லாம் மீறி கல்யாணத்துக்கு முன்னாடியே லிவ்வின்ல இருக்கலாம்னு சொன்னவரும் இவர்தான். அந்த கல்யாணத்தையும் பண்ணிட்டு தனித்தனியா அவங்கவங்க வீட்டுல இருந்துக்கலாம்னு சொன்னவரும் இவர்தான்.
அட்லி காதல்
கமல்ஹாசன் காதல்
படம்தான் இவர் புரியாம எடுப்பார்னு பார்த்தா காதலும் இவர் புரியாமதான் பண்ணுவார். இவரோட காதல்ல பர்சனலா எனக்கு ஃபேவரைட்டான லவ்ன்னா அன்பே சிவம் படமும் உத்தம வில்லன் படமும்தான். இந்த ரெண்டு படத்துக்கு இவர் டைரக்டர் இல்ல; இருந்தாலும் இவருக்கான கதாபாத்திர வடிவமைப்பை இவரேதான் வரைஞ்சுக்குவார். அப்படி இந்த ரெண்டு படத்துக்கு சிற்பி இவர்தான். உத்தம வில்லன் ஒரு மாதிரி டிரையாங்கிள் லவ்ல போகும். அது ட்ரையாங்கிள்தானானு நமக்கே ஒரு டவுட் வர்ற அளவு லவ் பண்ணுவார். காதல்ல எல்லாருமே ஜெயிறக்கிறது இல்ல, சிலர் அவங்களுக்குள்ளே பிரச்னை வந்து பிரிஞ்சிடுவாங்க. சிலர் சமூகத்தின் காரணமா பிரிவாங்க. இந்த சமூகம்னு சொன்னது வீட்டாரையும் சேர்த்துதான் சொல்றேன். அவங்க அப்படி நெனைப்பாங்களோ, நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆகுறது, நமக்கு இவங்கலாம் ஈக்வெலா, நம்ம கோத்திரம் என்ன இவங்க கோத்திரம் என்ன, இதுனால நமக்கு ஒரு ஆதாயம் கிடைக்கும்னு பல பிற்போக்குத்தனமான காரணங்களுக்காகவும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாவும் காதல் ஒண்ணு சேராம போயிடும். அப்படி ஒரு காரணத்துனாலதான் கமலும் அவர் காதலிச்ச பொண்ணும் சேர முடியாம போயிருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலை சரி வராம ஊர்வசியைக் கல்யாணம் பண்ணிப்பார். அப்புறம் ஆண்ட்ரியா மேல ஒரு காதல் வெச்சிருப்பார். இப்படி காதலையே கிரங்கடிக்கிற மாதிரி இவர்னாலதான் பண்ண முடியும். அடுத்தது அன்பே சிவம். கம்யூனிஸ காதலா ஆரம்பிக்கிற கதை கடைசி வரைக்கும் அது கம்யூனிஸக் காதலாவே முடிஞ்சி போயிடும். இவங்க ஒண்ணு சேர்ந்திருந்தா இவங்க ரெண்டு பேர் மட்டும்தான் சந்தோஷமா இருந்திருப்பாங்க. whatever happens life has to go onல. இதைத்தான் கமலும் பண்ணியிருப்பார் கிரணும் பண்ணியிருப்பாங்க. என்ன அதுல ரெண்டு பேருக்கும் ஒரு சுயநலம் இருந்திருக்கும்.
Also Read – `உன்னைப் பார்த்த பின்பு முதல் ஓ சோனா வரை..!’ – அஜித்தின் 9 எவர்கிரீன் 90ஸ் லவ் சாங்ஸ்..!