Road Trip

Road Trip பிளான் பண்றீங்களா… அதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

ஒரு சக்ஸஸ்ஃபுல்லான Road Trip-ஐ எப்படி பிளான் பண்றது.. அப்படியான ஒவ்வொரு டிரிப்புக்கும் முன்னாடி நாம செக் செய்ய வேண்டியது என்ன… இதைப்பத்திதான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப்போறோம்.

ரோடு ட்ரிப்
ரோடு ட்ரிப்

Destination-ஐ முடிவு பண்ணிக்கோங்க!

எங்க போறோம்னு தெளிவா முடிவு எடுத்துக்கோங்க. முதன்முதல்ல ரோட் ட்ரிப்புக்கு பிளான் பண்றீங்கன்னா, ஒரே நாள்ல Destination போய்ட்டு திரும்ப வீட்டுக்கு வர தூரத்துல இடம் இருக்குற மாதிரி பிளான் பண்ணிக்கோங்க. உங்க வீட்டுல இருந்து நீங்க போக வேண்டிய Destination எவ்வளவு தூரம்? அவ்வளவு தூரம் உங்களால போய்ட்டு வர முடியுமா? எல்லாத்தையும் பிளான் பண்ணிக்கோங்க. நம்மளோட முக்கியமான குறிக்கோள் ரோட் ட்ரிப்பை எஞ்சாய் பண்ணனும். சேஃப்ட்டியா வீட்டுக்கு திரும்ப வரணும். அப்டின்றதுதான். அதனால, எந்தவிதமான ரிஸ்க்கும் பெருசா எடுக்காமல் கவனமா முடிவுகளை எடுக்கணும். அதேநேரம், Destination போய்ட்டு சீக்கிரம் வீட்டுக்குப் போணுமேனு அவசரப்படாமல், அந்த லொகேஷன்ல இருக்குற விஷயங்களை அனுபவிச்சுட்டு வரணும்னும் தெளிவா இருங்க.

போற வழியை முடிவு பண்ணிக்கோங்க!

நீங்க போக விரும்புற Destination-க்கு உங்க வீட்டுல இருந்து பல வழிகள் இருக்கலாம். அதனால, எந்த வழில நாம ரோட் ட்ரிப் போகப்போறோம்னு முடிவு பண்ணிக்கோங்க. பெரும்பாலும் இரண்டு பக்கமும் இயற்கை காட்சிகள் நிறைஞ்சு இருக்குற வழியைதான் மக்கள் தேர்ந்தெடுப்பாங்க. அது உங்களளுக்கு செட் ஆகுமானு பார்த்துக்கோங்க. இண்டர்நெட்ல அந்த வழிகள் பற்றிய விவரங்கள் இப்போலாம் எளிதாகவே கிடைக்குது.

ரோடு ட்ரிப்
ரோடு ட்ரிப்

நீங்க போற வாகனத்தை செமயா தயார் பண்ணிக்கோங்க!

நீங்க கார்ல போறீங்களா இல்லைனா, பைக்ல போறீங்களா? எதுவா இருந்தாலும் அதை முடிவு பண்ணிக்கோங்க. அதைவிட முக்கியமான விஷயம்… உங்கக்கிட்ட இருக்குற காரோ அல்லது பைக்கோ ரோட் ட்ரிப் போறதுக்கு ஏற்ற மாதிரி இருக்குதானு செக் பண்ணிக்கிறது. பெட்ரோல்/டீசல் இருக்கா, டயர், பிரேக் எல்லாம் நல்ல கண்டிஷன்ல இருக்கா எல்லாத்தையும் செக் பண்ணிக்கோங்க. ஒருவேளை பாதி வழில உங்க வாகனத்துக்கு எதாவது ஆச்சுனா உடனே தகவல் தெரிவிச்சு விஷயத்தை சொல்லவும் ஆள்களை தயாரா வைச்சிக்கோங்க.

இடை இடையே பிரேக் எடுத்துக்கோங்க!

ரோட் ட்ரிப்ல முக்கியமான விஷயம் பிரேக் எடுத்துக்குறதுதான். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை மோட்டல், பார்க், ரெஸ்டாரண்ட் இப்படி எங்கயாவது வாகனத்தை நிறுத்தி கொஞ்சம் பிரேக் எடுத்துக்கோங்க. இதன்மூலமா நீங்க ரிஃப்ரஷ் ஆகிடுவீங்க.

லக்கேஜை கம்மி பண்ணிக்கோங்க!

முடிஞ்ச அளவு ரொம்பவே கம்மியா லக்கேஜ் எடுத்துக்கோங்க. நீங்க எடுத்துட்டுப் போற லக்கேஜ் எந்த விதத்துலயும் உங்களுக்கு சுமையா மாறிடக்கூடாதுன்றதுல கவனமா இருங்க. கார்ல போறீங்கனா பேக் பண்ண பொருள்களில் எடை அதிகமாக உள்ள பொருள்களை கார் உள்ளே மையப்பகுதியிலும் இலகுவான பொருள்களை காரின் மேல் பகுதியிலையும் வைங்க.

ரோடு ட்ரிப்
ரோடு ட்ரிப்

எண்டர்டெயின்மெண்டை மிஸ் பண்ணிடாதீங்க!

ஜன்னல் பக்கத்துல உட்காந்துட்டு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல வேடிக்கை பார்த்துட்டு வர்றது உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். அப்போ, பாட்டு கேக்குறது, படிக்கிறது, படம் பார்க்குறதுனு உங்க மைண்ட டைவர்ட் பண்ணுங்க. அதுக்கு தேவையான பொருள்களையும் முன்கூட்டியே எடுத்து வைச்சிக்கோங்க.

திரும்பவும் சொல்றேன்…. எல்லாத்தையும் கடந்து நம்மளோட அல்டிமேட் கோல் அந்த ட்ரிப்பை எஞ்சாய் பண்ணி, பாதுகாப்பா வீட்டுக்கு வர்றதுதான். அதுல கவனமா இருங்க. எஞ்சாய் பண்ணுங்க!

Also Read: #RevengeTravel – கொரோனாவுக்குப் பிறகு வேகமெடுக்கும் சுற்றுலா!

42 thoughts on “Road Trip பிளான் பண்றீங்களா… அதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!”

  1. mexican drugstore online [url=https://foruspharma.com/#]best online pharmacies in mexico[/url] buying prescription drugs in mexico online

  2. canadian family pharmacy [url=http://canadapharmast.com/#]canada drug pharmacy[/url] canadian pharmacy 24h com safe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top