இளையராஜா

Remix: ராஜாவின் இந்தப் பாடல்களெல்லாம் ரீமிக்ஸ் செய்யப்பட்டால்… பொருத்தமான நடிகர் யார்?

‘டிக்கிலோனா’ படத்தில் இளையராஜாவின் ‘பேர் வைச்சாலும் வைக்காம’ பாடல் ரீமிக்ஸ் இடம்பெற்றதும் போதும், இப்போது எங்கு பாத்தாலும் ‘காதல் மன்னனா நீயும் கண்ணனா’ வரிகள்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதில் இன்னொருபக்கம் புதிதாக இந்தப் பாடலைக் கேட்ட 2கே கிட்ஸுகளோ ‘மோஸ்ட் அண்டர்ரேட்டட் ஸாங் வ்ரோ’ என காமெடி செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலைப் போலவே இன்றும் காரம் குறையாத வேறு எந்த ராஜா பாடல்கள் சிலவற்றை ரீமிக்ஸ் செய்யலாம் என்பதையும் அதற்கு எந்த நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்பதையும் பார்க்கலாமா..?

`ஆடி மாசம் காத்தடிக்க’ (பாயும் புலி)

ரஜினிக்கு எத்தனையோ பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி இந்தப் பாடலில் மட்டும் வித்தியாசமாக முழுக்க முழுக்க காட்டுக் கத்தலாக ஒரு பாடலை பாடி அசத்தியிருப்பார். அப்படி காட்டு கத்தல் பாட்டாக இது இருந்தாலும் கேட்பதற்கு அவ்வளவு எனர்ஜியாக இருக்கும்படி பாடலை வடிவமைத்திருப்பார் இளையராஜா. கூடவே கொஞ்சும் குரலில் எஸ்.ஜானகி வேறு. கேட்கவா வேண்டும். இந்தப் பாடலை இதற்கேற்ற சிச்சுவேஷனுக்கேற்ப ரீமிக்ஸ் செய்து விஜய் சேதுபதி போன்ற நடிகர் ஒருவர் ஆடி நடித்தால் நிச்சயம் ஹிட்டுதான்.

`உன்ன பாத்த நேரம்’ (அதிசய பிறவி)

கிட்டத்தட்ட `பேர் வைச்சாலும் வைக்காம’ பாடலின் தாளக்கட்டிலேயே அமைந்த இந்தப் பாடலின் துள்ளல் இன்றளவும் குறையவில்லை. ‘பேர் வைச்சாலும்’ பாடலைப் பாடிய அதே மலேசியா வாசுதேவன் குரலில் சித்ராவுடன் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலை சந்தானமே அடுத்துவரும் தனது படங்களில் ஒன்றில் பயன்படுத்தினால் செம்ம ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆட்டமா தேரோட்டமா (கேப்டன் பிரபாகரன்)

எதிரியின் முகாமில் அவனுக்கு புரியாமல், ஆனால் அவனுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது எனும் பொருளில் 90-களின் முற்பகுதிவரையில் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. அப்படியொரு பாடல்தான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ஸ்வர்ணலதா குரலில் உருவான இந்தப் பாடல்.  இந்தப் பாடலுக்கேற்ற டென்சன் சிச்சுவேஷனில் நயன்தாரா போன்ற ஹீரோயின் ஒருவர் நடிப்பில் இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்தால் வைரல் நிச்சயம்.

கடைவீதி கலகலக்கும் (அம்மன் கோவில் கிழக்காலே)

விஜயகாந்த்தின் ஸ்டாக்கிங் பாடல் என்றால் பல பாடல்களைப் பட்டியலிடலாம். அதில் மிகக் குறிப்பிடத்தக்க துள்ளலான ஒரு பாடல் இது. தன் காதலி தனக்கு கிடைத்தால் காதலன் எப்படியெல்லாம் கொண்டாடுவான் என்பதை எஸ்.பி.பி குழைந்து குழைந்து பாடியிருப்பார்.  இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் போன்ற ஒருவர் ஆடி நடித்து ரீமிக்ஸ் செய்தால் இப்போதும் இந்தப் பாடல் செம்ம ஹிட்தான்.

அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி (நீங்கள் கேட்டவை)

இந்தப் பாடல் ஏற்கெனவே 2கே கிட்ஸுகள்வரை ரீச் ஆகித்தான் இருக்கும். அப்படியொரு எனர்ஜிட்டிக் நம்பர் இது. எஸ்.பி.பி – ஜானகி இணை இனைந்து எனர்ஜி ஏற்றிய இந்தப் பாடலை ஏதாவது ஒரு விஜய் படத்தில் ரீமிக்ஸ் செய்து அதில் விஜய் வெறியாட்டம் போட்டால் தியேட்டர் அதிர்ந்துவிடாது?

தண்ணிதொட்டி தேடி வந்த (சிந்து பைரவி)

போதையின் பாதையில் ஹீரோ போடும் கெட்ட ஆட்டம்தான் இந்த பாடல். ‘மங்காத்தா’ படத்தில் இடம்பெற்ற ‘அம்பானி பரம்பரை’ போல ஒரு சிச்சுவேஷனில் அஜித் ஆடுவதுபோல இந்த பாடலை ரீமிக்ஸ் செய்தால் தியேட்டர்களில் நிச்சயம் திருவிழாதான்.

Also Read – `சார்பட்டா’ இவ்வளவு லைக்ஸ் குவித்தற்குக் காரணம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top