நிலவைக் கொண்டுவா ரீல்ஸியன்ஸ்… யார் இந்த விக்கல்ஸ் டீம்?

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் இப்படி எந்தப் பக்கம் போனாலும் ‘நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டிவை’ பாட்டோட விக்கல்ஸ் வெர்ஷன்தான் செம டிரெண்டிங்கா கடந்த பல நாள்களா போய்ட்டு இருந்துச்சு. பாட்டைப் பாடின உன்னிக்கிருஷ்ணன்ல இருந்து அந்தப் பாட்டு இடம்பெற்ற வாலி படத்தோட டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா வரைக்கும் இவங்க பண்ணதை ரொம்பவே ஸ்போர்டிவா எடுத்துட்டு கமெண்ட் பண்ணியிருந்தாங்க. ஆனால், இதுக்கு முன்னாடியும் நாம ஸ்கூல்ல ஆடுன பாட்டு, ஸ்டேஜ்ல அந்தப் பாட்டுக்கு ஆடும்போது நடக்குற கொடுமைகள், நமக்கு புடிச்ச பாட்டுலாம் எப்படி ரெக்கார்டிங் நடந்துருக்கும்னு செம இன்ட்ரஸ்டிங்கான நிறைய ரீல்ஸை இந்த விக்கல்ஸ் டீம் போட்ருக்காங்க. போட்டுட்டு இருக்காங்க. யார் இந்த விக்கல்ஸ் டீம்? விக்கல்ஸ் டீம்ல இருக்குற விக்ரம் கமல்ஹாசன்கூட நடிச்சிருக்காரு தெரியுமா? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

சென்னைல பிறந்து வளர்ந்தவர்தான் நம்ம விக்கல்ஸ் டீம் கேப்டன் விக்ரம். சின்ன வயசுல ரொம்பவே நல்லா படிக்கிற ஸ்டுடண்ட். அதனால அவங்க வீட்டுல தேசப்பற்றுலாம் ஊட்டி வளர்த்துருக்காங்க. பேஸிக்கா அவங்க அப்பாம்மா ரெண்டு பேருமே வழக்கறிஞர்கள். பையனை எப்படியாவது ஐ.பி.எஸ் ஆக்கிடணும். இல்லைனா, மிலிட்டரில சேர்த்துடணும்னு வளர்த்துருக்காங்க. இவரு இந்தியாவுக்கு பிரசிடண்ட் ஆகணும்னு நினைச்சிருக்காரு. ஆனால், விக்ரம்க்கு நடிக்கணும்ன்ற ஆசை சின்ன வயசுல இருந்தே இருந்துருக்கு. வீட்டுல சொன்னா அடி வெளுத்துருவாங்கனு சொல்லாமலேயே கொஞ்சம் பயத்தோட இருந்துருக்காரு. இருந்தாலும், ஸ்கூல்ல எல்லாரும் அப்துல்கலாம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி வேஷங்கள் எல்லாம் போடும்போது விக்ரம் மட்டும் கமல்ஹாசன் வேஷம் போட்டுட்டுப் போவாராம். அவர் மாதிரி மிமிக்ரியும் பண்னுவாராம். அப்போ எல்லாரும் இவரை வித்தியாசமா பார்ப்பாங்களாம். அப்படியே காலேஜ்க்கு வந்துட்டாரு. எல்லாரையும் போல மெக்கானிக்கல் இஞ்சினீயரிங்தான் முடிச்சிருக்காரு. காலேஜ் படிக்கும்போது நிறைய டிராமாக்கள் எல்லாம் ஃப்ரண்ட்ஸ்கூட சேர்ந்து விக்ரம் பண்ணுவாரு.

விக்கல்ஸ் டீம்
விக்கல்ஸ் டீம்

விக்ரம், காலேஜ் படிக்கிற அந்த டைம்லதான் வெப்சீரீஸ்லாம் அதிகமா வர ஆரம்பிச்சுச்சு. அப்போ, அவர் கான்டக்ட் வழியா சில ஸ்க்ரிப்ட் டிஸ்கஷன் பண்றதுக்கான வாய்ப்புலாம் அவருக்கு கிடைச்சுது. அதை பண்ணிட்டு இருக்கும்போது பி.எல் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சாரு. பி.இ, பி.எல் ரெண்டுமே முடிச்சிட்டாரு. ஒரு நாள் ஃப்ரண்ட்கூட சேர்ந்து ஓப்பன் மைக் ஸ்டாண்டப் காமெடிக்குப் போய்ருக்காரு. அங்கப்போய் பார்த்து ஸ்டாண்டப் காமெடி ஃபீல்டுக்குள்ள வந்தாரு. அதுல நிறைய கான்ட்ரோவர்ஸீல சிக்கினாரு. அதனால, அந்த ஃபீல்டுல இருந்து கொஞ்சம் விலகி சொந்தமா விக்கல்ஸ் அப்டின்ற யூடியூப் சேனல் ஆரம்பிச்சாரு. அந்த சேனலுகு ஏன் அந்தப் பேரு வைச்சாருனா, நிறைய பேர்கிட்ட என்ன பேரு வைக்கலாம்னு ஐடியா கேட்ருக்காரு. நிறைய பேர் சொல்லியிருக்காங்க. விக்ரமோட முழு பெயர், விக்ரம் அருள் வித்யாபதி. அதனால, அருள் வாக்குனு வைங்கனு சொல்லியிருக்காங்க. அப்புறம், விக்ரம் + நக்கல் = விக்கல்னு வைங்க அப்டினு சொல்லியிருக்காங்க. இது நல்லா இருக்கேனு அந்தப் பெயரையே வைச்சிட்டாரு.

விக்கல்ஸ் யூடியூப் சேனல்ல முதல்ல, “When you speak HINDI in TAMIL NADU” அப்டினு ஒரு வீடியோ போட்டாரு. 3 மாசம் கழிச்சு டிரெண்டாகி 1 மில்லியன் வியூஸ் கிடைச்சுது. சரி, சேனலை பிக்கப் பண்ணி நடத்தை ஆரம்பிச்சிருக்காரு. சேனலை இன்னும் தூக்கி நிறுத்தலாம்னு நினைக்கும்போது கொரோனா வந்துருக்கு. செம டிப்ரஷன்ல போய்ருக்காரு. அப்புறம் வெளிய சின்ன சின்னதா ஆக்டிங், ஸ்கிரிப் வொர்க்கிங் எல்லாம் பண்ணியிருக்காரு. அப்போதான், ஹரி அப்டின்ற பையன் ரீல்ஸ் பண்ணலாம்னு ஐடியா கொடுத்துருக்காரு. கிரிஞ்சா இருந்தாலும் பரவால்ல, டெய்லி ரீல்ஸ் போடுறோம்னு முடிவு பண்ணியிருக்காங்க. ஃபஸ்ட் டிரெண்ட் ஆனது பீஸ்ட் படத்துல வந்த ஜாலியோ ஜிம்கானா ரீல்தான். அப்புறம் அனேகன் படத்துல தனுஷ் பாடுற பாட்டு ஒண்ணு வரும் அதை ரீல்ஸ் பண்ணி போட்டாங்க. அதுவும் செம வைரல். இப்படி ரெக்கார்டிங் ரீல்ஸ் அவங்க பண்றது எல்லாமே பெரும்பாலும் ஹிட்டுதான். அப்போதான் இதையே பண்ண முடியாதுனு டைப்ஸ் ஆஃப் ஸ்கூல் ஆனுவல் டேஸ்னு ஒரு ரீல்ஸ் போட்ருக்காங்க. அதுவும் ஹிட்டு.

விக்கல்ஸ் டீம்
விக்கல்ஸ் டீம்

யூடியூப்ல அவரோட ரீல்ஸ்லாம் பார்த்துட்டு ராதை மனதில் ரீல்ஸ் பண்ணுங்க, நன்னாரே ரீல்ஸ் பண்ணுங்க அப்டினு நிறைய பேர் கேக்க ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. அதெல்லாமே செம ஹிட்டு. விக்ரம் படத்துல வந்த மோனிங் பி.ஜி.எம் எப்படி உருவாகியிருக்கும்னு ஒரு வீடியோ போட்ருப்பாங்ல. அதுவும், “யோவ் என்னயா வேற லெவல்ல யோசிச்சு பண்றீங்க”னு நம்மள ஆச்சரியப்படுத்திச்சு. தமிழ்நாட்டுல வைரல் ஆனது போல நார்த் இந்தியாலயும் இவங்க ரீல்ஸ்லாம் செம ஹிட்டு. பிரியாமணில இருந்து தெலுங்கு பிக்பாஸ் செலிபிரிட்டிகள் வரைக்கும் எல்லாரும் இவங்களுக்கு வாழ்த்து சொல்லி கமெண்ட் பண்ணியிருக்காங்க. சரி, டெய்லி ஒரு ரீல்ஸ் போடணும். அந்த சமயத்துல மும்பைக்கு ஒரு விளம்பர ஷூட்டுக்கு விக்ரம்க்கு ஆஃபர் வந்துருக்கு, ஹரியும் ஊருக்கு போற அவசரத்துல இருந்துருக்காரு. சரி, அவசராவசரமா ஒரு ரீல்ஸ் பண்ணிருவோம்னு ‘நிலவைக் கொண்டுவா’ பாட்டு ரீல்ஸ் பண்ணியிருக்காங்க. அவங்க நினைச்சதைவிட இந்த வீடியோ செம வைரலா போய்ருக்கு.

சினிமால சாதிக்கணும், பெரிய ஆளா வரணும்னு விக்ரம்க்கு ரொம்பவே ஆசை. அவங்க வீட்டுல டிகிரி முடிச்சிட்டு என்ன வேணும்னானும் பண்ணுனு சொல்லியிருக்காங்க. ஸ்கூல் டேஸ்ல நல்ல படிக்கிறவரா இருந்த விக்ரம், காலேஜ் டேஸ்லலாம் நிறைய அரியர் போட்ருக்காரு. கொரோனா காலகட்டத்துலதான் எல்லாத்தையும் கிளியர் பண்ணியிருக்காரு. இன்னைக்கும் எந்த ஆடிஷன்னாலும் விக்ரம் முதல் ஆளா போய்ருவாராம். ஒரு படத்துல கோ ரைட்டரா வொர்க் பண்ணியிருக்காரு. ஒரு வெப் சீரீஸ்ல நடிச்சிருக்காரு. அவங்க ஃபேமிலில அவர் எதோ பண்றான்னு நம்பிக்கை கொடுத்த தருணம் கமல்கூட அவர் விளம்பரத்துல நடிச்சதுதான். கமல்கூட பிக்பாஸ் 5 விளம்பரத்துல நடிச்சிருக்காரு. இப்போ ஸ்டேண்டப் காமெடி பக்கம் திரும்பவும் திரும்பியிருக்காரு. இவரை மாதிரிதான் ஹரியும். நடிப்பு மேல ரொம்பவே ஆர்வம். ஆரம்பத்துல டகால்டி அப்டின்ற சேனல்ல வொர்க் பண்னியிருக்காரு. அங்க விக்கல்ஸ்ல இருக்குற சிபின்றவரை மீட் பண்ணியிருக்காரு. ரெண்டு பேரும் வெளிய வந்து வேற சேனல் ஆரம்பிச்சாங்க. அது சரியா போகலைனு அதையும் மூடிட்டாங்க.

சிபியும் ஹரியும் சேர்ந்து நீலம்ல கொஞ்சம் நாள் வொர்க் பண்ணியிருக்காங்க. அப்புறம் அதுல இருந்தும் வெளிய வர்ற ஒரு சிச்சுவேஷன். அப்புறம் சிபிகூட சேர்ந்து விக்கல்ஸ்ல சேர்ந்துருக்காரு. இப்போதைக்கு ஒரு அடையாளம் வேணும்னு ஹரி ரொம்பவே போராடிட்டு இருக்காரு. சினிமா ஃபீல்டுக்குள்ள சர்வைவ் பண்ண என்னலாம் பண்ண முடியுமோ அதையும் பண்ணிட்டு இருக்காரு. நவாசுதீன் சித்திக்கோட படங்கள், அவர் நடிப்பு இதையெல்லாம் பார்த்து நடிக்கணும்னு சிபிக்கு ஆசை வந்துருக்கு. அப்படிதான் நடிப்பை நோக்கி தன்னோட பயணத்தை தொடங்கியிருக்காரு. ஏற்கெனவே, சொன்னமாதிரி டகால்டி, நீலம் ரெண்டுலயும் வேலை பார்த்துட்டு வெளிய வந்துருக்காரு. அப்புறம் விக்கல்ஸ்ல சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சிருக்காரு. இன்னைக்கு கலக்கிட்டு இருக்காரு. விக்கல்ஸ்ல ஆரம்பகாலத்துல இருந்த மாதுரி இன்னைக்கு வெள்ளித்திரைல கலக்கிட்டு இருக்காங்க. மாஸ்டர் படத்துல ஓப்பனிங்ல ஒரு ஃபைட் சீன் வரும்ல, அதுல விஜய்க்கு பேட்டை தூக்கி போடுறது மாதுரிதான். அதேமாதிரி, கேமரா, எடிட் இதெல்லாம் ஆதித்யானு ஒருத்தர் பார்த்துக்குறாரு. மொத்தமா ஒரு டீமா சேர்ந்துதான் இன்னைக்கும் நம்மள விக்கல்ஸ் செமயா என்டர்டெயின் பண்றாங்க.

விக்கல்ஸ் ரீல்ஸ்ல உங்களுக்கு ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top