இயக்குநர் ராம்தாஸ்

“டாஸ்மாக்கே இல்லாத பட்ஜெட் சாத்தியம்” – ஆராய்ச்சி எழுத்தாளர் ராம்தாஸ் கதை!

சினிமா சிலருக்கு லட்சக்கணக்கான வாட்ஸ் லைட் வெளிச்சத்தை கொடுத்து அடையாளப்படுத்தும். சிலரை வெறுத்தும் ஒதுக்கிவிடும். இந்த இரண்டிலும் சிக்காத நபர்களே இங்கு ஏராளம். மனோபாலா தொடங்கி, மதன்பாபு வரை இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களில் முக்கியமானவர், கடந்த 23-ம் தேதி மறைந்த நடிகர் ராம்தாஸ். சில படங்களில் சில வேடங்களில் பேசும்படியான கதாபாத்திரங்கள் கிடைக்கும். சில படங்களில் அட்மாஸ்பியரில் நிற்கும்படியான ரோல்கள் கிடைக்கும். இப்படி கிடைக்கும் ஒவ்வொரு இடத்திலேயும் அதை யூஸ் பண்ணிக்கணும். அதை கச்சிதமா பண்ணவர்தான் நம்ம ஈ.இராமதாஸ். ஏங்க ரெண்டுமூணு இடத்துலதான் வருவாரு, அவருக்கு அப்படி என்ன பில்டப்பு இருக்கப்போகுதுனு நீங்க நினைக்கலாம். ஆனா, அவர் பண்ண சம்பவங்களை அடுக்குனா, ஒரு பண்டல் பேப்பரே பத்தாது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை அதிர்வலைகளை ஏற்படுத்தினவர்.

இயக்குநர் இ.ராம்தாஸ்
இயக்குநர் இ.ராம்தாஸ்

பாடல், திரைக்கதை, உதவி இயக்குநர் – ஆரம்பம்!

விழுப்புரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் எதிராஜுலு பிள்ளையோட மகன்தான் ராம்தாஸ். சின்ன வயசுல இருந்தே சினிமாக்களை பார்க்கிறதுதான் இவருக்கு பொழுதுபோக்கு. அப்படியே கல்லூரிக்காலாங்கள்ல திரைக்கதை எழுதுறதுல ஆர்வம் அதிகமாகுது. அதனால சினிமாவுக்கு வர பலமுயற்சிகளை பண்றார். ஆனா பெரிசா வாய்ப்பு எதுவும் அமையலை. கொஞ்ச நாள்ல சென்னை மைலாப்பூருக்கு குடிவருது ராம்தாஸ் குடும்பம். இங்க வந்து மெயின்ஸ்ட்ரீமா சினிமாவுக்கு ட்ரை பண்ணியும் வாய்ப்புகள் அமையல. அப்போ இவர் பக்கத்து வீட்டுக்காரரான மனோபாலாகூட பழக்கம் ஏற்படுது. இதனால கொஞ்சம் கொஞ்சமா நட்பு வட்டாரம் விரிவடைய ஆரம்பிக்குது. மனோபாலா அறிமுகப்படுத்தியவர்களில் முதன்மையான நபர் டி.கே மோகன். இவர்தான் ராம்தாஸ்க்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கிறார். ஆனால், படம் வெளியாகலை. அடுத்ததா பி. எஸ். நிவாஸ் இயக்க சுமன், சுமலதா நடிக்க எனக்காக காத்திரு படத்துல திரைக்கதை எழுதுறார், ராம்தாஸ். அடுத்ததா, இயக்குநர் மணிவண்ணனோட 6 படங்களுக்கு உதவி இயக்குநரா வேலை பார்க்கிறார். எல்லாமே ஹிட் படங்கள்தான்.

ராஜா ராஜாதான்
ராஜா ராஜாதான்

இயக்குநராக!

 நீண்ட காலம் உதவி இயக்குநரா பயணம் செஞ்சதுக்கு பின்னால சினிமா தயாரிப்பாளரான மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பிகிட்ட வேலை செய்றார். பல படங்கள் வெற்றிக்குப் பின்னால ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தை தயாரிக்கிறார், கோவைத்தம்பி. அதன் இயக்குநர் ராம்தாஸ். ராமதாஸை முதன்முதலாக இயக்குநராக அறிமுகப்படுத்தினார் கோவைத்தம்பி. படத்தில் கோவைத் தம்பிக்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட பிளவால் படத்துக்கு பப்ளிசிட்டி அதிகமாகவே கிடைத்தது. மோகன், சீதா நடிக்க படம் வணிகரீதியாக வெற்றிபெற்றது. அடுத்ததாக ராமராஜனை வைத்து ராஜா ராஜாதான் படத்தையும், இரண்டாவதாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என வரிசையாக படங்களை இயக்கினார், ராம்தாஸ். ஆனால் வணிக ரீதியில் அவரது படங்கள் தோல்வியை தழுவின. முதல் படம் வெற்றி, இரண்டாவது படம் கொஞ்சம் சரியாக போகாததால், நட்சத்திர நடிகர்களுடன் இணைய முடியாமல் போனது. அடுத்ததாக மன்சூர் அலிகானுடன் இராவணன், வாழ்க ஜனநாயகம் என இரண்டு அரசியல் படங்களை இயக்கினார். அதன் பின்னர் 14 இயக்குநர்களுடன் எடுக்கப்பட்ட சுயம் வரம் படத்தில் ஒரு இயக்குநராக பணியாற்றினார். அப்படத்தில் பாண்டியராஜன், கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்கினார், ராம்தாஸ்.

எழுத்தாளராக!

மக்கள் ஆட்சி
மக்கள் ஆட்சி

மக்கள் ஆட்சி, அடிமைச்சங்கிலி, சங்கமம், கண்ட நாள் முதல் உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராகவும் வேலைபார்த்தார். பின்னர் இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வார்டு பாயாக நடிப்பை ஆரம்பித்து யுத்தம் செய், காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, அறம், கோலிசோடா-2, மாரி-2 எனப் பல படங்களில் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்தார்.

பலம்!

ராமதாஸின் முக்கியமான பலம் எழுத்துதான். அதில் என்றுமே பலம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார். அதற்கும் இவர் குருவாக எடுத்துக் கொண்டது மணிவண்ணனைத்தான். எதுவுமே இல்லாமலும் ஒரு படத்தை எடுக்கலாம்னு அவர்கிட்டதான் கத்துக்கிட்டாராம், ராம்தாஸ். அதே மாதிரி மணிவண்ணன் எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாராம். அதைத்தான் ராமதாஸும் பாலோ பண்ணியிருக்கார். ராம்தாஸ் திரைக்கதை எழுதுன படங்களும், எழுத்தாளரா வசனங்கள் எழுதுன அடிமைச்சங்கிலி, மக்கள் ஆட்சி, ராஜமுத்திரை, எதிரும் புதிரும் என பல படங்கள் காலத்துக்கும் நின்று பேசக்கூடிய படங்களே. இவர் உயிர்தோடு இருந்தவரை கொடுத்த பேட்டிகள்ல இப்படித்தான் ஆரம்பிப்பார், மணிவண்ணன் இருந்ததாலதான் இன்னைக்கு நான் இங்க பேட்டி கொடுக்கிறேன்னு. அதேபோல மோகனும், ராமராஜனும் ஒரு காலக்கட்டத்துல உசத்துல இருந்த நட்சத்திரங்கள் இவர் அவங்களோட இணைஞ்சு பணியாற்றினது, அன்னைக்கு கோலிவுட்டே கொஞ்சம் வியந்துதான் பார்த்தது.

ஆராய்ச்சி!

இவர் எழுத்தாளரா பணியாற்றின படங்கள்லயே முக்கியமானது, மக்கள் ஆட்சிதான். மிகச் சிறந்த அரசியல் பட வரிசையில் மக்கள் ஆட்சிக்கு முக்கியமான இடம் உண்டு. அதில் எழுத்தாளரா வேலை பார்க்கும்போது, நாயகன் மம்முட்டி டாஸ்மாக்கே இல்லாத பட்ஜெட் போடுற மாதிரி ஒரு சீன் வரும். அதுக்காக அன்னைக்கு 4 ஐ.ஏ.எஸ் ஆபீசர்களை நேர்ல சந்திச்சு, அது சாத்தியம்னு எல்லோரும் சொன்ன பின்னாலதான் அந்த காட்சியே படமாக்கியிருக்காங்க, படக்குழு. அந்த அளவுக்கு எழுத்துக்கு டீட்டெய்லிங் கொடுத்திருப்பார், ராம்தாஸ். எடிட்டர் டிஸ்க்ளைமர் போடுங்க. இது இன்னைக்கும் பொருந்தும், இன்னைக்கும் டாஸ்மாக் இல்லாத பட்ஜெட் சாத்தியம் தான்னு பல பேட்டிகள்ல ராம்தாஸ் சொல்லியிருக்கார். கதைக்கு தேவைன்னா ரிசர்ச் பண்ணி அதை படத்துல வர வைக்கிறதுல கில்லாடி, ராம்தாஸ்.

Also Read – “உசிலம்பட்டி… ராசாத்தி… ஆத்தாடி…” இதெல்லாம் சாகுல் ஹமீது பாடுனதா?

ஏக்கம்!

 இயக்குநர் வாய்ப்புகள் தாண்டி எழுத்தாளர் வாய்ப்புகள் வரிசைகட்ட, கூடவே மாரடைப்பும் சேர்ந்து கொண்டது. சின்ன வயதிலேயே மாரடைப்பு பிரச்னையால் தவிச்சவர், ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாதுனு மருத்துவர்கள் சொல்ல, பட வாய்ப்புகளை குறைச்சுக்கிட்டார். அதனாலயே சினிமா துறையில பெரிசா ஜொலிக்க முடியாம போயிடுச்சு. அதனால நிறைய அரசியல் படங்களுக்கு எழுத முடியாமலே போயிடுச்சு. இது அவருக்கு ரொம்ப நாள் ஏக்கமாவே இருந்திருக்கு. ஒரு நல்ல கலைஞனை தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திக்கலையோங்குற வருத்தமும் அவருக்கு இருந்திருக்கு.

இவர் நடிச்ச படங்கள்லயே எனக்கு ரொம்ப பிடிச்சது விக்ரம் வேதா படம்தான். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top