மதுரை முத்து…ஹோட்டல் சர்வர் டிரெண்டிங் காமெடியன் ஆன கதை! #EmotionalStory 

’மதுரை’ முத்துவுக்குத் தனியா அறிமுகம் தேவையில்லை. தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது டிரேட் மார்க் சிரிப்பு வெடிகள் மூலம் அறிமுகமாகி, சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை சிரிப்பு அதகளம் பண்ணிட்டு இருக்கவர். ஒன்லைனர்கள், கவுண்டர்கள் என ஸ்டேண்ட் அப் காமெடியில் வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் மதுரை முத்து அவ்வளவு ஈஸியா இந்த இடத்துக்கு வந்துடல… அவரோட ஜர்னி எப்படி இருந்துச்சு… மதுரை முத்துங்குற கலைஞனுக்குப் பின்னால் இருக்க சோகம்னு அவரோட பயணத்தைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

மதுரை முத்து
மதுரை முத்து

மதுரை முத்துவின் முதல் பெரிய மேடைனா… அது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மேடைதான். 2005-ல் மதுரையில் ஒரு கல்லூரியில் எம்.காம் படித்துக் கொண்டிருந்தபோது, அந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் அவரைக் கலந்துகொள்ளும்படி ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். மிமிக்ரி, லுக்லைக் போன்ற விஷயங்கள் பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில், ஸ்டேண்ட் அப் காமெடி செய்யும் தனது காமெடிகளுக்கு வரவேற்பு இருக்குமா என்கிற சந்தேகத்திலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால், அவரது திறமையால், அந்த சீசனின் இறுதிப் போட்டிவரை முன்னேறி கலக்கினார் மதுரை முத்து.

அந்த ஷோவோட டைரக்டர் கூட மதுரை முத்து முதன்முதலில் ஆடிஷன் போல பேசி ஓக்கே ஆன சம்பவம் ரொம்ப சுவாரஸ்யமானது. வீடியோவை முழுசா பாருங்க.. அப்போ என்ன நடந்துச்சுங்குறத நானே பின்னாடி சொல்றேன்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கத்துல இருக்க ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவர்தான் மதுரை முத்து. இவரோட இயற்பெயர் முத்து இருளப்பாண்டி. ரொம்பவே கஷ்டப்படுற குடும்பம். எம்.காம் வரை படிச்சவர், அதுக்கு மேலயும் அப்பாவுக்குத் தொந்தரவா இருக்கக் கூடாதுங்குறதுக்காக ஒரு ஹோட்டல்ல சர்வர் வேலை பார்த்திருக்கிறார். சின்ன வயசுல இருந்தே ஹ்யூமரால் தன்னைச் சுற்றி இருப்பவர்களை கலகலப்பாகவே வைத்திருப்பவர். கலக்கப்போவது யார் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளிவந்தவுடன், நண்பர்களோட உந்துதலால அந்த ஷோவுக்குப் போயிருக்கார். கலக்கப்போவது ஷோவில் இவர் கலந்துக்கிட்ட முதல் நிகழ்ச்சி ஒரு மாட்டுப்பொங்கல் தினத்துல விஜய் டிவில ஒளிபரப்பாகியிருக்கு. அந்த நிகழ்ச்சியோட பல எபிசோடுகள் ஒளிபரப்பான ஆரம்ப காலத்துல இவரோட வீட்ல டிவியே இல்லையாம். சரியான பேருந்து வசதியும், கரண்ட் வசதியும் இல்லாத ஊரில் இருந்து புறப்பட்ட மதுரை முத்து இன்னிக்கு உலகத்தோட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணிச்சு மக்களை மகிழ்விச்சுட்டு இருக்கார்.

மதுரை முத்து
மதுரை முத்து

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியோட வெற்றிக்குப் பின்னர், அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி இவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தது. 200 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி இவரை உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு அடையாளப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் கலைஞர்களைப் பாராட்டிப் பேசிய வடிவேலு, `நீங்க எல்லாம் மற்ற நடிகர்களுக்குக் கைதட்டு வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். மதுரை முத்துதான் அவனுக்குனு கைதட்டு வாங்கிட்டு இருக்கான்’ என்று பெருமைமிகு அடையாளம் கொடுத்தார். அசத்தப்போவது நிகழ்ச்சிக்குப் பிறகு சன் டிவி, விஜய் டிவி என சின்னத்திரையின் முக்கிய சேனல்களில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவர், போட்டியாளர், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கலக்கி வருகிறார். கலக்கப்போவது சாம்பியன்ஸ், ராஜூவூட்ல பார்ட்டி என இப்போதும் சின்னத்திரையின் டிரெண்டிங் ஸ்டார் நம்ம மதுரை முத்து அண்ணன்தான்.

ஒருத்தரை ஈஸியா அழ வைச்சிடலாம். மனசு விட்டு சிரிக்க வைக்குறது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனா, அந்த வேலைதான் எனது மனதுக்குத் திருப்தியா இருக்குங்குறார் மதுரை முத்து. மக்களை மகிழ்விக்குற கலைஞர்களுக்குப் பின்னாடி பெரிய சோகம் ஒளிஞ்சிருக்கும்னு சொல்வாங்க. அது மதுரை முத்து விஷயத்துல நிதர்சனமான உண்மை. இவரது காதல் மனைவி லேகா, கடந்த 2016-ம் ஆண்டு மதுரையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு காரில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்த முத்து, சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே மதுரை வந்தார். அந்த சோகம் இவரை ரொம்பவே பாதித்திருக்கிறது. இதுக்குப் பிறகு மதுரை முத்துவோட சேப்டரே அவ்வளவுதான் என்ற விமர்சனங்களும் கமெண்டுகளும் அப்போது பரவலாக எதிரொலித்தன. ஆனால், அந்த சோகத்தில் இருந்து மீண்டு பழைய பன்னீர்செல்வமா முத்து மீண்டு வந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். `உன் வேலையை கஷ்டப்பட்டு செய்யாம, இஷ்டப்பட்டு செஞ்சா, நிச்சயம் ஜெயிப்ப’ இதுதான் அவருக்கு இன்ஸ்பிரேஷனா நிக்குற லைன். அதை அனுதினமும் தனது வாழ்வில் கடைபிடித்து வருகிறார்.

Also Read: வாரிசு இயக்குநர் வம்சியின் இந்தப் படங்கள் பத்திலாம் தெரியுமா?

ஆரம்ப காலம் தொட்டே பெரும்பாலும் தனியாக காமெடி மேடைகளில் கலக்குவதுதான் மதுரை முத்துவோட ஸ்டைல். ஆனால், காமெடி மேடைகளின் சமீபத்திய சென்சேஷன் ஜோடி முத்து – அன்னபாரதி காம்போ. ரியாலிட்டி ஷோ மேடைகள் தொடங்கி பட்டிமன்ற மேடைகள் இவர்கள் அடிக்கும் லூட்டி சோசியல் மீடியாவின் வைரல் கண்டெண்டுகள். இருவரும் மாறி மாறி கொடுக்கும் கவுண்டர்களுக்குத் தனி ரசிகர் வட்டமே உருவாகிடுச்சு. அந்த அளவுக்கு சோசியல் மீடியாவிலும் ஃபயர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

மதுரை முத்து
மதுரை முத்து

முதல்முறையா கலக்கப்போவது யார் ஷோவோட டைரக்டர் இவர்கிட்ட நைட் 11 மணி போல பேசியிருக்கார். ஒரு ரூபாய் காயின் ஃபோனில் பேசிய இவரிடம் ரெண்டு ஜோக் சொல்லுங்க என கேட்கப்பட்டிருக்கிறது. கையில் காயின்களோடு ஷோவோட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த டைரக்டரிடம் இவர் சொன்ன ஜோக்குகள் ஓகே ஆகவும், நாளைக்கே ஷூட்டிங் வந்துடுங்க என்று கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் பேருந்து வசதியே இல்லாத ஊரில் இருந்த முத்து, கொடியில் காய்ந்துகொண்டிருந்த ஈரத்துணிகளை பையில் அள்ளிப்போட்டுக் கொண்டு சென்னை கிளம்பியிருக்கிறார். டிரெயினில் சென்னை வந்திறங்கி பப்ளிக் டாய்லெட்டில் குளித்து ரெடியாகி ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார். ‘Rest is History’!

மதுரை முத்துவோட கவுண்டர்களில் உங்க ஃபேவரைட்டான கவுண்டர் எது… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top