ஃபேவரைட் பவி டீச்சர்… பிரிகிடாவின் இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி!

டீச்சர்னு சொன்னதும் நமக்கு கடலோரக் கவிதைகள் ரேகா டீச்சர், பிரேமம் மலர் டீச்சர் எல்லாம்தான் டக்னு நியாபகம் வருவாங்க. ஆனால், இன்னைக்கு டீச்சர்னு சொன்னதும் ‘பவி டீச்சர்’தான் நியாபகம் வருவாங்க. ‘ஆஹா கல்யாணம்’ சீரீஸ் வெளியான சமயத்துல எல்லார் ஸ்டேட்டஸ்லயும் இவங்கதான் இடம் பிடிச்சிருந்தாங்க. பவி டீச்சர் ஆர்மி, பவி டீச்சர் டை ஹார்ட் ஃபேன்ஸ் அப்டினு ஏகப்பட்ட சோஷியல் மீடியா பக்கங்களை நம்ம பசங்க ஆக்கிரமிச்சு இருந்தாங்க. இன்னைக்கும் அவங்களோட உண்மையான பெயரை சொல்லி கூப்பிடுறதைவிட பவி டீச்சர்னு சொன்னாதான் தமிழ்நாட்டுக்கே தெரியும். நம்ம தளபதி விஜய் பிரிகிடாவ எப்படி கூப்பிடுவாரு தெரியுமா? இயக்குநர் பாலாவோட பிரிகிடா வொர்க் பண்ணியிருக்காங்க. அது என்ன படம்?  அவங்களோட லைஃப் ஜர்னி என்ன? பவி டீச்சர் 90’ஸ் கிட்டா? 2’கே கிட்டா? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம இந்த வீடியோல தெரிஞ்சுக்கப்போறோம்.

பிரிகிடா
பிரிகிடா

பிரிகிடா 2000-லதான் பிறந்தாங்க. சென்னை பொண்ணுதான். பக்கா 2’கே கிட். சின்ன வயசுல சினிமாக்குள்ள வரணும், நடிக்கணும் அப்டிலாம் பெருசா ஆசை இல்லை. ஆனால், டான்ஸ் செமயா ஆடுவாங்க. நிறைய டிக்டாக் வீடியோஸ்லாம் பண்ணி போடுவாங்க. ஃபேமிலியாகூட டிக்டாக் பண்ணுவாங்க. நல்லா பாட்டு பாடுவாங்க. அப்படியே ஸ்கூல் முடிச்சதும் லயோலா காலேஜ்ல விஸ்காம் படிக்க ஜாய்ன் பண்ணாங்க. படிக்கும்போதே நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ்லாம் நடிக்க தொடங்கிட்டாங்க. அப்போ அவங்களுக்கு சினிமா இண்டஸ்ட்ரீக்குள்ள வரணும்னு ஆசை. ஆனால், வீட்டுல “நீ படிச்சு முடிச்சு டிகிரி வாங்கிட்டு என்ன வேணும்னாலும் பண்ணு”னு சொல்லியிருக்காங்க. அதனால, ரொம்பவே சீரியஸா படிச்சிருக்காங்க. படிக்கும்போதே இயக்குநர் பாலாகூட வேலை பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவர் டைரக்ட் பண்ண வர்மா படத்துலயும் இவங்க நடிச்சிருக்காங்க. இதுதான் பிரிகிடாவோட ஃபஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ். அப்புறம் சரி, ஃபுல்லா படிப்புல ஃபோகஸ் பண்ணலாம்னு நினைச்சிருக்காங்க. படிக்கணும்ன்ற ஆசையால சினிமால வந்த நிறைய வாய்ப்புகளை தவிர்த்திருக்காங்க.

பவி டீச்சருக்கு படிக்கும்போது எடிட்டர் ஆகணும், டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. ஒருவேளை நடிப்புல அவங்க பிஸி ஆகலை அப்டினா டைரக்டர் இல்லைனா எடிட்டர்தான் ஆகியிருப்பாங்களாம். நிறைய கதைகள் எல்லாம் எழுதி வைச்சிருக்காங்களாம். டைரக்டரா பிரிகிடா வருவாங்களானு வெயிட் பண்ணிதான் பார்க்கணும். இவங்களுக்கு வெப் சீரீஸ்ல வாய்ப்பு கிடைச்சதே செம இன்ட்ரஸ்டிங்கான விஷயம். ஒருநாள் காலேஜ்ல ‘ஆஹா கல்யாணம்’ சீரீஸோட டைரக்டர் யுவராஜ், பிரிகிடாவைப் பார்த்துட்டு, பவி டீச்சர் கேரக்டரை சொல்லியிருக்காங்க. “நீங்க இந்த கேரக்டரை பண்ணா நல்லாருக்கும்”னு சொல்லியிருக்காங்க. அவங்களுக்கும் இந்த கேரக்டர் புடிச்சுப்போக, வீட்டுல சொல்லி சமாதானப்படுத்தி நடிச்சிருக்காங்க. காலைல ஷூட்டிங், ஈவ்னிங் காலேஜ், சிலநாள் பங்க் பண்ணிட்டு ஷூட்டிங்னு காலேஜ் லைஃப ஓட்டியிருக்காங்க. ஆஹா கல்யாணம் கொடுத்த ரெஸ்பான்ஸ்னால அப்பவே அவங்க பெரிய செலிபிரிட்டி ஆயிட்டாங்க.

பிரிகிடா
பிரிகிடா

ஆஹா கல்யாணம் சீரீஸ்க்கு அப்புறம் சிலபல படங்கள்ல கமிட் ஆகி சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சாங்க. குறிப்பா சொல்லணும்னா மாஸ்டர் படத்துல அவங்க சின்ன கேரக்டர்ல வந்தாலும் ‘ஏய் பவி டீச்சர்’னு சில்லறைய சிதற விடுற அளவுக்கு ஃபேன்ஸ் ரெஸ்பான்ஸ் கொடுத்தாங்க. ‘பவி டீச்சர்’ கேரக்டர் எந்த அளவுக்கு ரீச்னா, நம்ம தளபதி விஜய் பிரிகிடாவை, “சொல்லுங்க பவி டீச்சர்” அப்டினுதான் சொல்லுவாராம். பிரிகிடா சின்ன வயசுல இருந்தே வெறித்தனமான விஜய் ஃபேன். அவங்க அப்பா அஜித் ஃபேன். அவங்க அப்பா கேப்பாராம். விஜய்கூட நடிச்சிட்ட, எப்போ அஜித்கூட நடிக்கப்போற அப்டினு. அதுக்கப்புறம் வேலன், அயோக்யா படங்கள்ல நடிச்சிருக்காங்க. பிரிகிடாக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்து எல்லாரையும் இன்னைக்கு பேச வைச்சிருக்குற கேரக்டர், இரவின் நிழல் படத்துல வந்த சிலக்கம்மா கேரக்டர்தான். அந்த கேரக்டர்குள்ள அவங்க வந்ததும் செம இன்ட்ரஸ்டிங்கான கதைதான். பிரிகிடா தன்னை ஒரு பெர்ஃபாமரா நிரூபிச்சது இந்தக் கேரக்டர்லதான்னு சொல்லலாம்.

பிரிகிடா
பிரிகிடா

விஸ்காம் படிக்கும்போது இன்டர்ன்ஷிப் போனும்ல, அதுக்காக முதல்ல ரெட் கார்பெட் அப்டின்ற கம்பெனில ஜாயின் பண்ணி போய்ட்டு இருந்துருக்காங்க. அப்போ ஒருநாள் இந்தப் படத்தோட ஆடிஷனுக்காக ஃபோன் வந்துருக்கு. அந்த ஆடிஷன்ல போய் கலந்துகிட்டு செலக்ட் ஆயிட்டாங்க. அப்போதான் பார்த்திபன் இது சிங்கிள் ஷார்ட் ஃபிலிம். நிறைய ரிகஸல்ஸ் இருக்கும். கேமரா ஆங்கிள்ஸ் முக்கியம். பிராபர்டீஸ் முக்கியம். அப்டினுலாம் சொல்லி எக்ஸ்பிளையின் பண்ணியிருக்காரு. அப்போ பார்த்திபன்கிட்ட பிரிகிடா, “சார், நான் படிச்சிட்டு இருக்கேன். இன்டர்ன்ஷிப் போய்ட்டு இருக்கேன்” அப்டினு சில்லியிருக்காங்க. அவரு உடனே, “அப்படியா, அப்போ இங்கயே இன்டர்ன்ஷிப் பண்ணுங்களேன்”ன்னு சொல்ல, பிரிகிடாவுக்கு செம சந்தோஷம். அப்படிதான் இந்த புரோஜக்ட்குள்ள வந்துருக்காங்க. முதல்ல அஸிஸ்டன்ட் டைரக்டராதான் வந்துருக்காங்க. ஆனால், பார்த்திபன், சிலக்கம்மா கேரக்டர் இவங்கதான் பண்ணனும்னு ஃபிக்ஸ் பண்ணியிருக்காரு. இந்த விஷயம் பிரிகிடாவுக்கு தெரியாது. அந்த கேரக்டருக்கு நிறைய பேரை பிரிகிடாவே ஆடிஷன் பண்ணியிருக்காங்க.

இரவின் நிழல் படத்துல அஸிஸ்டண்ட் டைரக்டரா இருந்த பிரிகிடாகிட்ட ஒருநாள் பார்த்திபன் சிலக்கம்மா கேரக்டர் நீங்கதான் பண்றீங்கனு சொல்லியிருக்காரு. ஆனால், அந்த கேரக்டருக்கு நியூட் சீன் இருக்குனு சொல்லியிருக்காரு. பிரிகிடா தயங்கியிருக்காங்க. அப்புறம், அவங்கள கன்வைன்ஸ் பண்ணியிருக்காரு. பிரிகிடாவோட அம்மா, அப்பா கால்லயெல்லாம் விழுந்து அவங்களையும் கன்வைன்ஸ் பண்ணி பிரிகிடாவை இந்த கேரக்டர்குள்ள கொண்டு வந்துருக்காரு. இந்த கேரக்டர்ல நடிக்க மென்டலி பிரிகிடா ரொம்பவே தயார் ஆகியிருக்காங்க. “இந்த கேரக்டர் ரொம்பவே புனிதமானது. அந்த ஒரு சிச்சுவேஷன்ல அப்படி இருக்கும்போது அந்த இடத்துல அந்தப் பொண்ணை அப்படி பார்க்க முடியாது”னு பிரிகிடா சொல்லுவாங்க. பார்த்திபனும் அதையேதான் சொல்லுவாரு. ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக், ஸ்ரேயா கோஷல் வாய்ஸ்ல, உலக அளவுல ஃபேமஸா எடுக்கப்படுற இந்தப் படத்துல நான் நடிக்கிறது ரொம்பவே பெருமையா இருக்குனு பிரிகிடா சொல்லியிருக்காங்க. வெறும் பேச்சோட இல்லாமல் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை ரொம்பவே சிறப்பாவும் படத்துல பண்ணியிருக்காங்க.

பிரிகிடா
பிரிகிடா

சிலக்கம்மா கேரக்டரை எல்லாரும் பாஸ்டிட்டாவா சொல்லிட்டு இருக்காங்க. அதேநேரத்துல படத்துல கெட்ட வார்த்தை பேசுனது தொடர்பா பிரிகிடா கொடுத்த விளக்கம் சமூக வலைதளங்கள்ல செம சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு. ஆக்சுவலா என்ன சொன்னாங்கனா, “ஒரு சேரிக்கு போனா அந்த மாதிரியான வார்த்தைகளைதான் நாம கேக்க முடியும். சினிமாக்காக ஏமாத்தலாம் முடியாது. அந்த மாதிரியான சில விஷயங்கள்தான் படத்துல இருக்கு”னு சொன்னாங்க. இது ஒரு பொதுப்புத்தி. இதுதான் இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இருக்கு. இதைதான் நாம உடைக்கணும். ரொம்பவே கஷ்டமான விஷயமும் இதுதான். இதை சமூக வலைதளங்கள்ல வைச்சு செய்தாங்க. ட்விட்டர் மூலமா இப்படி பேசுனதுக்கு மன்னிப்பும் கேட்டாங்க. அப்புறம் ஒரு பிரஸ்மீட்ல பார்த்திபன் பிரிகிடா சார்பா பேசும்போதும், “அந்தப் பொண்ணு சொல்லத் தெரியாமல் ஒண்ணு சொல்லிடுச்சு. பயங்கரமா அதுக்கு எதிர்ப்பும் கிளம்பிடுச்சு. நான் மாத்தி மாத்தி பேசி சமாளிச்சிருவேன்”ன்னு சொல்லியிருக்காரு.

கண்ணுல கண்ணீரோட பேசுன பிரிகிடா, “அப்படி சொன்னதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். இந்தப் படம் மிகப்பெரிய ஸ்டார் என்னோட கரியர்ல. ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அந்த சந்தோஷம் ரெண்டு நாள்கூட தாங்கல. ரொம்பவே உடைஞ்சிட்டேன்” அப்டினும் சொல்லியிருக்காரு. சரி சீரியஸா பேசுனதுனால பவி டீச்சர் ஃபேன்ஸ்லாம் விட்ருங்கப்பா அந்தப் பொண்ணை அப்டினு சொல்லிட்டு இருக்காங்க. எந்த விஷயத்தை  வைச்சும் பிரிகிடா சொன்னதை நியாபப்படுத்த முடியாது. அவங்களே திருந்துனா சரிதான். இதுக்கிடையில பிரிகிடாவை அரஸ்ட் பண்ணுங்கனுலாம் ஹேஷ்டேக் டிரெண்ட் பண்றாங்க.

சரி, பிரிகிடாவை உங்களுக்கு புடிக்குமா? புடிக்கும்னா ஏன் புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top