காலேஜ் கல்ச்சுரல்ஸ் டான்ஸ்னா இந்த 15 விஷயம் கண்டிப்பா இருக்கும்!

நம்ம பசங்க காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல டான்ஸ் ஆடப்போறோம்னு சொன்னாலே அந்த பெர்பாமன்ஸ்ல இந்த சில விஷயங்கள் எப்பவுமே மிஸ் ஆகாது. அப்படி என்னெல்லாம் இருக்கும்னு பார்க்கலாமா?

College Cultural's
College Cultural’s
 • ஓப்பனிங் சாங்கே கரைச்சலா இருக்கும். எப்பவுமே மங்களகரமா பக்தி பாட்டுல இருந்துதான் ஸ்டார்ட் பண்ணுவாங்க. கைல வேப்பிலைய வச்சிக்கிட்டு ஓம்சக்தி சூலம் சூலம்னு ஆரம்பிக்குறப்போவே இவனுங்க என்ன பண்ணப்போறாங்கனு ஹிண்ட் கொடுத்திருவாங்க. மாரியாத்தா மட்டுமல்ல அண்டர்டேக்கர் மியூசிக்கை போட்டு இயேசுநாதரைக்கூட ஒரண்டை இழுப்பாங்க.
 • அந்த வருச ஹிட் பாடல்களை சேர்க்குறது ஒரு எனர்ஜினா எந்த வருசமும் ஹிட் ஆகாத யாழ்ப்பான நூலகத்துல இருந்துலாம் பாட்டெடுத்து ஆடுவாய்ங்க. மாத்தாடு மாத்தாடு மல்லிகே, கொக்கு பற பற இப்படி அந்த லிஸ்ட்டும் வேற லெவல்ல இருக்கும். ஒத்த ரூவாயும் தாரேன், காத்தடிக்குது இதெல்லாம் எப்பவுமே இருக்கும். சமீபத்துல எல்லா டான்ஸ்லயும் மிஸ் ஆகாம இடம்பிடிக்குறது ‘தர லோக்கல்’தான்.
 • ஐட்டம் டான்ஸ் Must. அதுவரைக்கும் ஜானி மாஸ்டர் லெவல் டான்ஸ் போட்டுட்டு ஐட்டம் டான்ஸ் வந்ததும் ஒரு துப்பட்டாவை போட்டு திண்டுக்கல் ரீட்டாவா மாறிடுவானுங்க. ஒரு ப்ரொப்போசல் சீன் கண்டிப்பா வரும். அதுக்கு இவனுங்க வெக்கப்பட்டு ஒரு எக்ஸ்ப்ரசன் கொடுப்பானுங்க பாருங்க. அய்யோ சிணுங்குறானே…!
 • டான்ஸ்ல நிச்சயமா இடம்பிடிக்குற இன்னொரு விஷயம். சீரியல் சாங்… மெட்டி ஒலி, கோலங்கள்னு தேவையானி போடாத ஸ்டெப்பெல்லாம் இவனுங்க போடுவானுங்க.
 • அட இது என்ன பிரமாதம். விளம்பரப் பாட்டுக்கே டான்ஸ் ஆடுவானுங்க. அரசன் சோப், ஆச்சி மசாலா, வுட்வர்ட்ஸ்.. அதைக்கூட விடுங்க. இதுல ஒரு பாட்டு இருக்கு.. ஒரு பீட்டு இருக்கு… சரிகம கார்வான் மினி விளம்பரம்லாம் ஏண்டா சேர்த்தீங்க?
 • பசங்க பாட்டுக்கு மட்டும்தான் பசங்க வைப் பண்ணணும்னு இருக்கா என்ன? Why should girls have all the fun-னு கேர்ள்ஸ் பாட்டுக்கும் இவங்களே ஆடி அலப்பறை பண்ணுவானுங்க. தாடி மீசைல ரக்கர்டு பாய் மாதிரி இருந்துகிட்டு யமுனை ஆற்றிலே பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதை பாக்குறப்போ ஒரே கூத்தா இருக்கும்.
 • நம்ம பயலுங்க காஸ்ட்யூம்தான் ஹைலைட்டே கூச்சப்படாம நைட்டியை போட்டுட்டு வர்றதுலாம்கூட ஓக்கே. ஆனா அந்த லுங்கி மாதிரி ஏத்திக்கட்டுறதுதான் அநியாய லெவல் அக்கப்போர்.
 • கிரியேட்டிவிட்டியா பெர்பாமன்ஸ் பண்றேனு சில விஷயங்கள் பண்ணுவானுங்க. சமயங்கள்ல அநிருத்துக்கே டஃப் கொடுக்குற அளவுக்கு மிக்ஸிங்கை போட்டு மெரட்டுவாய்ங்க. உதாரணத்துக்கு இந்த காலேஜ்ல சந்திரமுகி ராராவையும் செல்லப் பேரு ஆப்பிளையும் மிக்ஸ் பண்ணிருக்காங்க பாருங்க.
College Cultural's
College Cultural’s
 • எல்லா டான்ஸ் கேங்க்லயும் தன்னை விஜய்னு நினைச்சுக்கிட்டு ஆடுற ஒருத்தன் இருப்பான். எதுக்குடா என்னைய ஆடக்கூப்பிட்டிங்கன்ற ரேஞ்சுல தேமேனு ஒருத்தன் ஆடிட்டு இருப்பான். இதெல்லாம்விட ஹைலைட் என்னென்னா க்ரூப்புல ஒரு பொண்ணு ஆடுனா நல்லாருக்கும்னு கூட படிக்கிற பொண்ணு கைல கால்ல விழுந்து ஆட கூட்டிட்டு வருவாய்ங்க. நம்ம ஃபோகஸ் குமுதா தான்னு மொத்த கூட்டமும் அந்த பொண்ணை மட்டும்தான் பாத்திருக்கும். இவனுங்க உசுரைக் குடுத்து ஆடுனதெல்லாம் அவுட் ஆஃப் போகஸ்ல போயிடும்.
 • பசங்க ஆடுறது இந்த மாதிரி நகைச்சுவைனா கேர்ள்ஸ் ஆடுறதும் சும்மா கிடையாது. சரி கம்ப்ளைண்ட்லாம் வேணாம் விடுங்க. நாம அடுத்த டாபிக் போவோம்.
 • ஃபாஸ்ட்டான பாட்டுக்கு ஸ்லோவான ஸ்டெப் போடுறது, எக்ஸர்சைஸ் பண்ற மாதிரி ஸ்டெப் போடுறது, அதெல்லாம்விட ஹம்மிங்குக்குலாம் ஸ்டெப் போட்டு அட்டூழியம் பண்ணுவாங்க. டான்ஸ் ஆடச்சொன்னா ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீங்குற மாதிரி கொரளி வித்தையும் காட்டுவாய்ங்க.
 • அதே மாதிரி முக்கியமான ரெண்டு பேர் ஸ்டெப் இல்லாம பெர்பாமன்ஸ் முழுமை அடையாதுனா ஒண்ணு டி.ராஜேந்தர் இன்னொன்னு சாம் ஆண்டர்சன். 2022-லயும் எக்ஸ்பயரி ஆகாத எக்ஸ்பிரசன்னா தலைவனோடதுதான். ராசாத்தி என் ஆசை ராசாத்தி…!
 • காலேஜ் கல்ச்சுரல்ஸ்னா ஸ்டேஜ் மேல நடக்குற பெர்பாமன்ஸ் மட்டுமில்ல கீழே ஒரு பெர்பாமன்ஸ் ஓடும் பாருங்க அதுவும் சேர்ந்தாதான் ஃபன். அங்க அவனுங்க ஆறு மாசம் பிராக்டிஸ் பண்ணி ஆடிட்டு இருந்தா கீழ ஒருத்தன் அசால்ட்டா மூவ்மெண்ட்ஸை போட்டு ஸ்கோர் பண்ணிட்டு போயிருவான்.
College Cultural's
College Cultural’s
 • டான்ஸ் ஒரு பக்கம்னா கான்சப்ட் ஸ்கிட் பண்ணுவாய்ங்க. அது வருசா வருசம் அப்டேட் ஆகிட்டே இருக்கும். சமீபத்துல ஹாட் டாபிக் கொரோனா, ஆன்லைன் கிளாஸ் இதெல்லாம்தான்.
 • பெர்பாமன்ஸ் எப்படி இருந்தாலும் நம்ம பசங்க ஃபினிசிங் டச் அடிச்சுக்கவே முடியாது. அதெல்லாம் வார்த்தைல சொல்றதைவிட நீங்களே பாருங்க. உங்க காலேஜ் டான்ஸ்ல இதெல்லாம் இருந்ததா? கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top