‘சூரரைப் போற்று’ ரிலீஸ் ஆனப்போ சோஷியல் மீடியா முழுக்க “பொம்மி மாதிரி ஒரு மனைவி நம்ம லைஃப்ல வந்தா ரொம்ப நல்லாருக்கும்ல?”னு நிறைய பசங்க போஸ்ட் போட்டுட்டு இருந்தாங்க. இன்னைக்கும் தமிழ் சினிமால வந்த பெஸ்ட் ஃபீமேல் கேரக்டர் லிஸ்ட் எடுத்தா அதுல பொம்மியும் கண்டிப்பா இருப்பாங்க. அந்த பொம்மி கேரக்டர்ல நடிச்ச நம்ம அபர்ணா பாலமுரளி, அந்தப் படத்துக்காக நேஷனல் அவார்ட் வாங்கிட்டாங்க அப்டினு தெரிஞ்சதும் சந்தோஷப்பட்ட ஆள்கள்ல நானும் ஒருத்தன். அப்புறம், இவங்க எப்படி சினிமாக்குள்ள வந்தாங்க? அவங்க சின்ன வயசு ஆசை என்ன? நல்ல நடிகையா இருந்தும் குண்டா இருந்ததால நிறைய வாய்ப்புகள் இவங்களுக்கு கிடைக்காம போன கதை தெரியுமா? டான்ஸ்ர், சிங்கர், ஆக்டர்னு பல முகங்களையும் அபர்ணா பாலமுரளி எப்படி மேனேஜ் பண்றாங்க. இதெல்லாம் தேடி பார்க்கும்போது செம இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. அதைத்தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
அபர்ணாவோட அம்மா, அப்பா ரெண்டுபேருமே நல்லா பாட்டுப் பாடுவாங்க. அதனால, அபர்ணாவ சினிமால பெரிய பாடகியாக்கணும்னு ரெண்டு பேருக்கும் ஆசை. இருந்தாலும் ரொம்ப சின்ன வயசுலலாம் பாட்டு படிக்க தொடங்கல. கொஞ்சம் லேட்டா ஐந்தாவது படிக்கும்போதுதான் பாட்டு படிக்கத் தொடங்கியிருக்காங்க. முதல்ல டான்ஸ்தான் படிக்க ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. 12 வருஷம் டான்ஸ் படிச்சிருக்காங்க. ஒரு கட்டத்துக்கு அப்புறம் பாட்டு படிக்கிறதை சீரியஸா பண்ணலனா, இனி சரியாகாதுனு பாட்டு கத்துக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. ஸ்கூல் படிக்கும்போதே மலையாளத்துல ஃபேமஸா இருக்குற லக்ஷ்மி கோபால ஸ்வாமியோட பொண்ணா நடிச்சிருக்காங்க. அப்புறம் சில ஷார்ட் ஃபிலிம்கள்ல நடிச்சிருக்காங்க. ஸ்கூல் படிக்கும்போது நடிச்ச படத்துல உள்ள ஒரு ஆர்டிஸ்ட் ‘ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’ படத்துக்காக அபர்ணாவ ரெக்கமண்ட் பண்ணியிருக்காங்க. அப்படிதான் தன்னோட முதல் படத்துல வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியா நடிச்சாங்க. அதுவும் அந்தப் படத்துல வர்ற ‘அம்பாழம் தனலிட்ட’ பாட்டு வேறலெவல்ல இருக்கும்.
தமிழ்ல ‘பொம்மி’னு சொன்னா எல்லாருக்கும் அபர்ணா நியாபகம் வருவாங்க. ஆனால், கேரளால ‘ஜிம்சி’னு சொன்னா எல்லாருக்கும் டக்னு அபர்ணாதான் நியாபகம் வருவாங்க. ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்துல ஃபகத் ஃபாஸிலுக்கு ஜோடியா இவங்க ‘ஜிம்சி’ன்ற கேரக்டர்ல கலக்கியிருப்பாங்க. ஜிம்சினு மக்கள் அபர்ணாவ கூப்பிட இதுதான் காரணம். இந்தப் படத்துக்கு இவங்க ஹீரோயினா செலக்ட் ஆனதும் செம இண்ட்ரஸ்டிங் சம்பவம். அபர்ணா ஸ்கூல் முடிச்சதும் ஆர்கிடெக்சர் படிச்சாங்க. அங்க அவங்களுக்கு புரொஃபஸராஇருந்தது, மகேஷிண்ட பிரதிகாரம் படத்துக்கு கதை எழுதுன ஷ்யாம் புஷ்கரனோட மனைவி ‘உன்னிமாயா. அவங்க இந்த படத்துக்கு காஸ்டிங் டைரக்டர். அபர்ணாவ ஆடிஷனுக்கு கூப்பிட்டு நடிப்புலாம் பார்த்து செலக்ட் பண்ணியிருக்காங்க. அந்தப் படம் அவங்களுக்கு செமயா பேர் வாங்கிக் கொடுத்துச்சு. ஷூட் தொடங்கிய பிறகுதான் அவங்க ஹீரோயின் அப்டினு சொல்லியிருக்காங்க. ஃபகத் ஃபாஸிலிக்கு ஹீரோயின் அப்டினு சொன்னதும் அபர்ணாவுக்கு செம ஹேப்பி.
மகேஷிண்ட பிரதிகாரம், படம் பார்த்தவங்களுக்கு தெரியும். அந்தப் படத்துல டயலாக்லாம்விட, வெறும் கண்ணூ வழியா நிறைய எமோஷன்ஸ காமிச்சிருப்பாங்க. கண்ணு வழியா நிறைய பேசியிருப்பாங்க. அதை ஃபகத்துக்கு ஈக்குவலா அபர்ணாவும் அடிபொழியா பண்ணியிருப்பாங்க. இதுக்கப்புறம் ‘ஒரு முத்தசி கதா’ படத்துல நடிச்சாங்க. தமிழ் மக்கள் எல்லாரும் மலையாளத்துல இவங்களை கவனிக்கும்போது திடீர்னு ‘8 தோட்டாக்கள்’ தமிழ் படத்துல ஹீரோயினா நடிச்சாங்க. அதுல மீரா அப்டின்ற கேரக்டர் பண்ணாங்க. படம் ஹிட்டுதான். ஆனால், அவங்க கேரக்டர் பெருசா பேசப்படலை. திரும்பவும் மலையாளத்துக்கே திரும்பின அபர்ணா, ஏகப்பட்ட படங்கள் நடிச்சு ஹிட் கொடுத்தாங்க. திரும்பவும் தமிழ்ல ஜி.வி.பிரகாஷ் நடிச்ச ‘சர்வம் தாளமயம்’ படத்துல நடிச்சாங்க. அந்தப் படமும் பெருசா அவங்களுக்கு பெயர் வாங்கிக்கொடுக்கலை. மலையாளத்துல இருந்து தமிழுக்கு வந்து காணாமல் போன ஹீரோயின்கள்ல இவங்களும் ஒருத்தரா இருந்துட்டு போய்டுவாங்கனு நினைக்கும்போதுதான் ‘சூரரைப் போற்று’னு ஒரு படம் கொடுத்து வேற மாரி வந்து நின்னாங்க.
சுதா கொங்கரா நடத்துன ஆடிஷனுக்கு முதல்ல அபர்ணா போய்ருக்காங்க. அப்போ அவங்களுக்கு சூர்யா தான் அந்தப் படத்துக்கு ஹீரோனுகூட தெரியாது. ஆடிஷன்ல அபர்ணா செலக்ட் ஆயிட்டாங்க. அபர்ணா நடிச்ச மகேஷிண்ட பிரதிகாரம் சுதாக்கு ரொம்பவே ஃபேவரைட்டான படம். ஜி.வி பிரகாஷ் ஒருநாள் அபர்ணாவை மீட் பண்ணுங்கனு சுதாக்கிட்ட சொல்லியிருக்காங்க. அபர்ணாவும் சுதாவைப் பார்க்கணும்னு சொல்லியிருக்காங்க. ஃபஸ்ட் டைம் சுதா, அபர்ணாவைப் பார்த்ததும் அந்த கேரக்டருக்கு பெர்ஃபெக்டா இருப்பாங்கனு ஃபீல் பண்ணியிருக்காங்க. அதாவது சிம்பிளா, யூனிக்கா, பவர் ஃபுல்லா அபர்ணா இருந்துருக்காங்க. நிறைய பேர்கிட்ட அது இருக்காதுனு சுதா சொல்லியிருக்காங்க. அஸிஸ்டண்ட்கிட்ட சில டயலாக்ஸ்லாம் சொல்லிக்கொடுக்க சொல்லி பெர்ஃபார்ம் பண்ண சொல்லியிருக்காங்க. அதைப் பார்த்துட்டு இவங்க தான்னு முடிவு பண்ணியிருக்காங்க. இருந்தாலும் அதுக்கப்புறம் சிலரை ஆடிஷன் பண்ணியிருக்காங்க. ஆனால், “யார் பண்ணாலும் அபர்ணா பண்ண மாதிரி இல்லையே”னு ஃபீல் பண்ணி அவங்களையே லாக் பண்ணி நடிக்க வைச்சிருக்காங்க. அந்தப் படத்துல அவங்க பெர்ஃபாமன்ஸ் பத்தி தனியா சொல்ல வேண்டிய தேவை இல்லை. அடிச்சு தூள் கிளப்பியிருப்பாங்க.
சூர்யா அபர்ணாகிட்ட கடன் கேக்குற சீன் ஒண்ணு வரும். படத்துலயே எனக்கு ரொம்ப புடிச்ச சீன் அதுதான். அதுவும் பொம்மி, “பெரிய விஷயம் பண்றதைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க. கொஞ்சம் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க. எங்கிட்ட எதுக்கு இந்த வறட்டு கௌரவம்”னு சொல்ற டயலாக்லாம், ப்பா… பொம்மி மாதிரிதான்யா பொண்டாட்டு வேணும்னு தோண வைச்சிரும். அந்தப் படத்துக்கு நேஷனல் அவார்ட் கொடுக்காமல் வேற எந்தப் படத்துக்கு கொடுப்பாங்க? ஹேட்ஸ் ஆஃப் பொம்மி. இந்தப் படத்துல ரொமான்ஸ் செமயா இருக்கும். ஆனா, அபர்ணாவுக்கு ரொமான்ஸ் காட்சிகள்ல நடிக்கதான் ரொம்பவே பயமாம். அந்தப் படத்துல துறுதுறுனு இருக்குற மாதிரிதான் நேர்லயும். செம எனர்ஜியான ஆளு. எவ்வளவோ நல்ல கேரக்டர் பண்ணியிருக்காங்க. ஆனால், அவங்க கொஞ்சம் வெயிட் போட்டுட்டாங்க. அதனாலயே நிறைய படங்கள்ல அவங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போச்சாம். அதை நினைச்சு வருத்தமும் பட்ருக்காங்க. வீட்டுல விசேஷம் படத்துலயும் பெர்ஃபாமன்ஸ் வைஸ் கலக்கியிருப்பாங்க.
தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 6,7 படங்கள் இப்போ பிஸியா நடிச்சிட்டு இருக்காங்க. அபர்ணா நடிப்புல ஒருபக்கம் கலக்குனாலும், பெரிய பாடகி ஆகணும் அப்டின்றதும் அவங்களுக்கு மிகப்பெரிய ஆசைதான். மகேஷிண்ட பிரதிகாரம் படத்துல ‘மௌனங்கள் மிண்டுமொரு’னு ஒரு பாட்டு வரும். விஜய் யேசுதாஸ்கூட சேர்ந்து அந்தப் பாட்டை பாடியிருப்பாங்க. செம ஹிட்டு. இன்னைக்கு மழை டைம்ல இந்தப் பாட்டுலாம் கேட்டா வேற லெவல் ஃபீல் கொடுக்கும். எட்டுத்தோட்டாக்கள் படத்துலயும் ‘மன்னிப்பாயா’னு ஒரு பாட்டு இருக்கும். அதேமாதிரி மலையாளத்துல நிறைய ஆல்பம் பாடல்களையும் பாடியிருக்காங்க. சின்ன வயசுல அம்மாப்பா அபர்ணாகிட்ட பாட்டு படிக்க சொல்லும்போது, நான் டான்ஸ் ஆடப் போறேன்னு சொல்லியிருக்காங்க. மகேஷிண்ட பிரதிகாரம் படத்துல ‘ஃப்ளாஷ் மாப்’ டான்ஸ் ஒண்ணு வரும். அதுல இவங்க ஆடுன டான்ஸ் பார்த்தாலே தெரியும். அபர்ணா சரியான டான்ஸர்னு. இன்னைக்கு டான்ஸர், பாடகி, எல்லாத்தையும் தாண்டி மிகச்சிறந்த நடிகைன்ற பேரும் வாங்கிட்டாங்க. இன்னும் வெரைட்டியா நிறைய கேரக்டர்களை அபர்ணா பண்ணுவாங்கனு எதிர்பார்ப்போம்.
அபர்ணா பாலமுரளி படங்கள்ல உங்களுக்கு புடிச்ச படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
awesome