IMDb

IMDb வரலாறு… அதன் ரேட்டிங் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம், சஷாங்க் ரிடம்ஷன் மற்றும் காட்ஃபாதர் ஆகிய படங்களை அடுத்து சர்வதேச அளவில் IMDb ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறது. IMDb என்றால் என்ன… அதன் ரேட்டிங்கை எப்படிக் கணக்கிடுகிறார்கள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்

IMDb பின்னணி

`Internet Movie Database’ என்பதே சுருக்கமாக IMDb என்றழைக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் பல லட்சக்கணக்கான படங்கள், வெப்சீரிஸ், டிவி தொடர்கள் பற்றிய விவரங்கள், அது குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமான ஐ.எம்.டி.பி-யின் தலைமையகம் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமைந்திருக்கிறது. ஆனால், அதன் தலைமை செயலதிகாரியும் நிறுவனருமான கோல் நீதமின் அலுவலகம் மட்டும் இணையதளம் தொடங்கப்பட்ட இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரில் இருக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயரான நீதம், 1980ம் ஆண்டு முதல் தான் பார்த்த படங்கள் குறித்த தகவல்களை `USENET’ என்ற பெயரில் ஒரு இணையப் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்துவந்தார். பின்னர், இது ஐ.எம்.டி.பி என்ற பெயர் மாற்றத்துடன் தனி இணையதளமாக உருவாக்கப்பட்டது. முதன்முதலில் ஐ.எம்.டி.பி இணையதளம் 1990ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி உருவாக்கப்பட்டதாக, அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. 1996ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனி நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட ஐ.டி.எம்.பி இணையதளத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அமேசான் நிறுவனம் கையகப்படுத்தியது.

Col Needham
Col Needham

அமேசான் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்பினும், அது தனித்துவத்தோடே செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை செயலதிகாரியாக நீதமே தொடர்கிறார். 1990களின் இறுதியில் ஆன்லைன் புத்தக விற்பனையாளராக இருந்த அமேசான் நிறுவனம், டிவிடி மற்றும் வீடியோ டேப்களை விற்கும் பிளாட்ஃபார்மாகப் பயன்படுத்த எண்ணி, ஐ.எம்.டி.பி-யை வாங்கியது. படங்கள், டிவி தொடர்கள், வெப் சீரிஸ்களின் பற்றிய தகவல்கள் தொகுக்கும் இணையதளம் மட்டுமல்லாது, உலக அளவில் தயாரிப்பில் இருக்கும் படங்கள், அந்தப் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள், ரிலீஸ் தேதி, டிரெய்லர்கள், சென்சார் விஷயங்கள், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன், குறிப்பிட்ட தயாரிப்பு வென்ற விருதுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களைக் கொண்ட தகவல் களஞ்சியமாக உருவெடுத்திருக்கிறது ஐ.எம்.டி.பி.

இந்த இணையதளத்தில் தேடுவதற்கென பிரத்யேகமாக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதேபோல், அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் படத்துக்கு நீங்கள் ரேட்டிங் கொடுக்க விரும்பினால் கணக்கு ஒன்றைத் தொடங்கிய பிறகே சாத்தியமாகும். இதற்கும் தனியாக எந்தவொரு கட்டணமும் கிடையாது. துறை சார்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கென பிரத்யேகமாக IMDbPro என்ற சேவையை ஐ.எம்.டி.பி 2002-ல் தொடங்கியது. இதற்கென ஒரு சிறிய தொகையும் அவர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள், ஐ.எம்.டி.பி இணையதளத்தில் தங்களது விவரங்கள், பணியாற்றிய படங்கள் உள்ளிட்ட தகவல்களோடு, தொடர்பு விவரங்களையும் கொடுக்கலாம். இதன்மூலம் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையேயான பாலமாக செயல்பட்டு வருகிறது.

IMDb

கடந்த 2008-ல் முக்கியமான இரண்டு நிறுவனங்களை ஐ.எம்.டி.பி கையகப்படுத்தியது. முதலாவது பாக்ஸ் ஆஃபிஸ் மோஜோ எனும் ஹாலிவுட் படங்களில் வசூல் நிலவரங்களை டிராக் செய்யும் இணையதளத்தை வாங்கியது. அடுத்ததாக, 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட வித்தவுட் பாக்ஸ் இணையதளம். இது, உலக அளவில் நடக்கும் நூற்றுக்கணக்கான திரைப்பட விழாக்களைக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தளம். இன்றைய தேதியில் ஐ.எம்.டி.பி-யில் உலக அளவில் வெளியான, வெளியாக இருக்கும் கோடிக்கணக்கான படங்கள், வெப் சீரிஸ்கள் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஐ.எம்.டி.பி ரேட்டிங்

ஐ.எம்.டி.பி ரேட்டிங் என்பது உலக அளவில் பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட படம் அல்லது வெப் சீரிஸுக்குக் கொடுக்கும் மொத்த ரேட்டிங்கின் சராசரி மதிப்பீடு ஆகும். ஒவ்வொரு ஐ.எம்.டி.பி பயனாளரும் எந்தவொரு ரிலீஸான படம் அல்லது வெப் சீரிஸுக்கு ஒன்று முதல் 10-க்குள் ரேட்டிங் கொடுக்க முடியும். மொத்த ரேட்டிங் கணக்கிடப்பட்டு அதன் சராசரி அந்தப் படத்துக்கான ரேட்டிங்காக ஐ.எம்.டி.பி-யால் கொடுக்கப்படுகிறது. ஒரு படம் வெளியானவுடன் அதற்கு விமர்சகர்கள், ஊடகங்கள் கொடுக்கும் ரேட்டிங் அடிப்படையில் `மெட்டாகிரிட்டிக் ஸ்கோர்’ கொடுக்கப்படுகிறது. இந்த ரேட்டிங் பயனாளர்கள் தொடர்ச்சியாக அளிக்கும் ரேட்டிங்கைப் பொறுத்து மாற்றப்படுவதாகச் சொல்கிறது ஐ.எம்.டி.பி.

IMDb Rating

ஐ.எம்.டி.பி-யின் ரேட்டிங் ஒவ்வொரு பயனாளர் கொடுக்கும் ரேட்டிங்குக்கு பிறகும் மாற்றப்படுவதில்லை. மாறாக ஒரு நாளில் பயனாளர்கள் கொடுக்கும் ரேட்டிங்கின் அடிப்படையில் நூலிழை அளவில் பல நூறு முறைகளுக்கு மேல் சிறிய அளவில் மாற்றம் செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட படத்துக்கு அதிக ரேட்டிங் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் `Weighted Averages’ என்ற முறையையும் பின்பற்றுகிறது ஐ.எம்.டி.பி. ஒரு குறிப்பிட்ட படம் அல்லது வெப் சீரிஸுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரேட்டிங்குகள் குவியத் தொடங்கினால், அதன் ரேட்டிங்கைக் கணக்கிடுவதற்கெனவே பிரத்யேகக் கணக்கிடும் முறையைப் பின்பற்றுவதாகவும் அந்த நிறுவனம் சார்பில் சொல்லப்படுகிறது. பயனாளர்கள் கொடுக்கும் ரேட்டிங்கை மொத்தமாகக் கூட்டி, பயனாளர்களின் எண்ணிக்கையால் வகுத்து ரேட்டிங்கைக் கொடுப்பதில்லை என்றும் அதன் இணையதளத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஒவ்வொருவரின் ரேட்டிங்குக்கும் மதிப்பு கொடுக்கப்படுகிறது என்றும் ஐ.எம்.டி.பி சொல்கிறது.

சமீபத்திய ரேட்டிங் படி ஐ.எம்.டி.பி-யின் டாப் 5 ரேட்டிங் கொண்ட படங்கள்

  1. சஷாங்க் ரிடம்ஷன் – 9.3
  2. தி காட்ஃபாதர் – 9.2
  3. சூரரைப் போற்று – 9.1

சுமார் 67,000 பயனாளர்களின் ரேட்டிங்கின் அடிப்படையில் சூரரைப் போற்று படம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த ரேட்டிங் என்பது நிரந்தரமானது கிடையாது. ரேட்டிங் மாறும்போது, இந்த இடமும் மாற வாய்ப்பிருக்கிறது. அதேநேரம், சிறந்த 250 படங்கள் என்ற ஐ.எம்.டி.பியின் பட்டியலில் சூரரைப் போற்று படத்துக்கு இடம் கிடைக்கவில்லை.

Also Read – இந்த சினிமாக்கள் Netflix-ல் ரிலீஸாகி இருந்தால் Description என்னவாக இருந்திருக்கும்?

42 thoughts on “IMDb வரலாறு… அதன் ரேட்டிங் எப்படிக் கணக்கிடப்படுகிறது?”

  1. buying prescription drugs in mexico online [url=https://foruspharma.com/#]buying prescription drugs in mexico[/url] best online pharmacies in mexico

  2. top 10 pharmacies in india [url=https://indiapharmast.com/#]indian pharmacy[/url] pharmacy website india

  3. canada rx pharmacy world [url=http://canadapharmast.com/#]canadian pharmacy antibiotics[/url] online canadian pharmacy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top