Kavin

எதே…அடுத்த சிவகார்த்திகேயன் கவினா? அலசி பார்த்துடுவோமா?

நம்ம சாக்லேட் பாயான நடிகர் கவின் கனா காணும் காலங்களில் அறிமுகமாகி, ஒரு சின்னத்திரை நடிகராக விஜய் டிவியில் வலம் வந்து, நடிப்பு மட்டும் இல்லாம நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது,  அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்றது-ன்னு அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இன்னைக்கு அவருடன் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களுக்கு சவால் விட்டுட்டு இருக்காரு. இன்னொரு பக்கம் கவின் ஆர்மி-ல இருக்க பாய்ஸ் அண்ணே தான் டா அடுத்து சிவகார்த்திகேயன்-னு கூவிட்டு இருக்காங்க. அதுக்கேத்த போல என்ன மயிலு, அஸ்க்கு மாரோ, கிருட்டு கிருட்டு பாட்டு-ன்னு தொடர்ந்து கவின் சாங்ஸ்-க்கு 2k கிட்ஸ் வைப் பண்ணிட்டு இருக்காங்க.

நடிகர் கவின்
நடிகர் கவின்

இந்த பயணத்தில் முதல் முதலாக கவினை சேலெக்ட் பன்னது யாருன்னு தெரியுமா? இவர் எப்படி நெல்சன் கிட்ட உதவி இயக்குநராக சேர்ந்தாரு? இவரோட அடுத்த படம் என்ன? இதெல்லாம் பத்தி தான் வீடியோல சொல்லப் போறேன், அப்படியே கவினோட சில சீக்ரெட்ஸும் சொல்றேன். நீங்க கவின் ஆர்மி-ல இருந்தா அப்படியே கமெண்ட்-ல ஒரு அட்டெண்டன்ஸா போட்டு வீடியோ-வை முழுசா பாருங்க.

எல்லா மிடில் க்ளாஸ் பசங்களுக்கு இருக்க குட்டி குட்டி கனவுகளை சுமந்துகிட்டு சென்னை வந்த திருச்சி பையன் தான் நம்ப கவின். ‘நீங்க இனி வேலைக்கு போக வேண்டாம் நான் பாத்துக்குறேன்னு’ – அப்பா கிட்ட சொல்ற ஒரு நாள் வந்தா போதும்-ன்னு நினைச்ச கவின் இப்போ அவர் நினைச்சு பார்க்காத உயரத்தை எட்டியிருக்கிறார். மீடியா கனவோடு சென்னை-க்கு வந்த கவினுக்கு கதவை திறந்து விட்டது வேற யாரும் இல்லை, அது நம்ப இயக்குநர் நெல்சன் தான். கனா காணும் காலங்கள் சீரிஸ்-க்கு நடிகர்களை தேர்வு செய்யும் போது நெல்சன் கண்ணில் பட்ட தங்கம் தான் கவின். முதல் முதலாக அவர் தான் கவினை சேலெக்ட் பண்றாரு. அங்க தொடங்கிய பயணம் தான் அது. பிறகு கொஞ்சம் கொஞ்சமா நெல்சன் உடனான பழக்கம் அதிகமாகி நெல்சன் இயக்கும் பாடங்களின் கலந்துரையாடல்களில் பங்கு கொள்வது-ன்னு அவரோட
 வெள்ளித்திரை பயணத்துக்கு அப்போவே அடிக்கல் போட்டு இருக்காரு கவின். விஜய் டெலிவிஷன் நடத்திய 2 அவார்ட் ஷோ-வில்  நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி இருக்காரு. அதுல அவரு ஒரு ஒரு விஜய் டிவி நட்சத்திரங்களுக்கும் கொடுக்கும் இன்ட்ரோ சம்பவம் வேற மாதிரி இருக்கும்.

அதுக்கு பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் ‘வேட்டையன்’ கேரக்டரில் நடிச்சு அந்த சீரியல் ரசிகர்களுக்கு செல்லப் பிள்ளையா சுத்திட்டு இருந்தாரு. இன்னொரு பக்கம் அந்த சீரியல் பார்க்கும் இளசுகள் மனசுலையும் இடம் புடிச்சுட்டாரு. அப்புறம் என்ன சொல்லவா வேணும். சோசியல் மீடியா முழுக்க கவின் ஆர்மி-யின் அட்டகாசங்கள் எல்லை மீறி போயிட்டு இருந்துச்சு. சரி இங்க ஸ்கோர் பண்ணியாச்சு அடுத்து என்ன-ன்னு யோசிச்சுட்டு இருந்த அப்போ கவினுக்கு கிடைச்ச வாய்ப்பு தான் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படம். இதன் மூலம் வெள்ளித்திரை-க்கு என்ட்ரி கொடுத்த  கவினுக்கு அடுத்ததா கிடைச்ச வாய்ப்பு தான் பிக் பாஸ் 3. அந்த வீட்டுக்குள்ளே ரொம்ப நல்லா விளையாடிட்டு இருந்த கவின்-க்கு ஒரு நாள் கமல் கொடுத்த சர்ப்ரைஸ் தான் கவின் டீச்சரோட போன் கால்…. டீச்சர் கால்ல அவ்ளோ அழகா கவினை பத்தி சொல்லி இருப்பாங்க. அது கவினுக்கு  மறக்கவே முடியாத  மொமெண்ட், அந்த வீட்டுக்குள்ள இருந்த வரை லாஸ்லியா-க்கும் இவருக்கும் வெளிய வந்த ‘மேரேஜ் தான்’ போடு!-ன்னு கவின் ஆர்மி வெளிய இருந்து Flames-ல போட்டு பார்த்துட்டு மஜா பண்ணிட்டு இருந்தா, இவங்க வெளிய வந்து எங்களுக்கு செட் ஆகல! நாங்க பிரிச்சுட்டோம்-ன்னு ஒரு ஷாக் கொடுத்தாங்க, அதுக்கு பிறகு ரெண்டு பேரும் பேச்சு வார்த்தை கூட இல்லாம சைலேண்ட்டா முவ் பண்ணிட்டாங்க.

Also Read – ‘மக்கள் நாயகன்’ பிக்பாஸ் அசீம் கெட்டவரா.. இல்லை, ரொம்ப கெட்டவரா?

சரி வெளிய வந்து பெருசா எதையாச்சும் செய்யணும்-ன்னு செஞ்ச படம் தான் லிப்ட்! செம்ம திகிலோட ரொம்ப நீட்-டா வந்த பேய் படம்-ன்னு சொல்லலாம். படம் முழுக்கவே ஒரு நாள் இரவு நடக்கும் கதை தான், இருந்தாலும் படம் அவ்ளோ சுவாரஸ்யமா போகும். இந்த படத்துக்கு ஒரு ஹைப் கொடுத்தது சிவகார்த்திகேயன் பாடிய ‘என்ன மயிலு’ ப்ரோமோ சாங் தான். இப்படி ஒரு படம் வருதுன்னு வெளிய தெரிய காரணமே சிவா அண்ணா தான்-னு கவினே சொல்லி இருக்காரு. இதோட கவினுக்கு இன்னொரு பெரிய ஹிட் கொடுத்தது அஸ்க்கு மாரோ பாட்டு, 2k கிட்ஸ் ரீல்ஸ்-ல வைப் பண்றதுக்காகவே அளந்து செஞ்ச பார்ட்டி சாங். தரன் குமார் இசையில் இந்த பாட்டு யூ டியூப்-ல 49 மில்லியன் வியூஸ் வாங்கி வெளுத்து கட்டுச்சு. நடிப்பு மட்டும் இல்லாம கவின் நெல்சன் கூட இருந்ததால் அவரோட படங்களையெல்லாம் ஃபாலோ பண்ணி டாக்டர் படத்தில் அவரோட உதவி இயக்குநராகவும் வேலை பார்த்து இருக்காரு. இன்னொரு பக்கம் ஜீ 5 நெட்ஒர்க்-கில் வெளியான ஆகாஷ் வாணி வெப் சீரிஸில் நடிச்சு இருந்தாரு.
எப்படி சார்….இவ்ளோ பண்றிங்க? எங்க சார் படிச்சீங்க ? என்ன படிச்சு இருக்கீங்க-ன்னு கேட்டா மனுஷன் சிரிச்சுகிட்டே ‘எனக்கு 22 அரியர் இருக்கு, லயோலா காலேஜ் தான், க்ளாஸ்-க்கு போகவே மாட்டேன்-னு சொல்றாரு.

நடிகர் கவின்
நடிகர் கவின்

அடுத்து வெளியாக இருக்கும் வேட்டையனோட  ப்ளாக் பஸ்டர் மூவி ‘டாடா’ இதோட ட்ரைலர்-ல பார்க்கும் போது இது ஒரு அப்பா – பையன் சென்டிமென்ட் படமா இருக்கும்-ன்னு தோணுது, கூட ஜோடியா அபர்ணா தாஸ் நடிச்சு இருக்காங்க. படத்தில் 3-வது பாடலாக ரிலீஸ் ஆகியிருக்கும் கிருட்டு கிருட்டு பாட்டு ஒரு பக்கம் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. இதுல கவினோட டான்ஸ்-ல பார்த்துட்டு நிஜமாவே கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயனா? அப்படிங்குற கேள்வி எல்லா ரசிகர்களுக்கு வந்துருச்சு.

இந்த படத்தை அடுத்து கவின் ‘ஊர் குருவி’ படத்தில் கமிட் ஆகியிருக்காரு.
இதுக்கு இடையில் ஒரு விஷயம் நோட் பண்ணா கவின் கூட சேர்ந்து நடிக்கும் ஹீரோயின்கள்லாம் அட்லீ படத்தில் வந்த ஹீரோயின்களா இருக்காங்களே-ன்னு மீம் பாய்ஸ் வேதனையை தெரிவிச்சுட்டு இருக்காங்க, இந்த மீம் பாய்ஸ் கதரல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், உங்களுக்கு இந்த லிஸ்ட்-ல இல்லாம கவின் வேற யாரோட ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும்-ன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

1 thought on “எதே…அடுத்த சிவகார்த்திகேயன் கவினா? அலசி பார்த்துடுவோமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top