கலைஞர் கருணாநிதி

கலைஞர் பேனா சர்ச்சையும்.. கலைஞரின் தக்லைஃப் சம்பவங்களும்!

மெரினா கடற்கரைல கலைஞர் பேனா நினைவுச் சின்னம் 81 கோடி ரூபாய் செலவுல வைக்கப்போறதா சொல்லிருந்தாங்க. அதற்கான கருத்துகேட்பு கூட்டத்துல நீங்க சிலை வச்சீங்கன்னா நான் வந்து உடைப்பேன்னு சீமான் பேசுனது சர்ச்சையா போய்கிட்டு இருக்கு. இந்த சிலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய கருத்துகள் சுத்திட்டு இருக்கு. தி.மு.க இந்த மாதிரி பஞ்சாயத்தை சந்திக்குறது இது முதல் முறைகிடையாது. ஒவ்வொரு முறையும் தி.மு.க எதாவது நினைவுச் சின்னம் அமைக்கிறப்போவும் அதுல நிறைய பஞ்சாயத்துகள் வந்திருக்கு. அதை கலைஞர் சாதுர்யமா எதிர்கொண்ட விதமும் வரலாற்றுல பேசப்பட்டிருக்கு. அப்படியான சில தக்லைப் ஃப்ளாஷ்பேக்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

1971-76 கலைஞர் கருணாநிதி ஆட்சில இருந்தப்போ சென்னை நுங்கம்பாக்கம்ல வள்ளுவர் கோட்டம் கட்டுறாரு. 1976 வது வருடம் பிப்ரவரி ஒண்ணாம்தேதி அதோட திறப்பு விழா ஏற்பாடு பண்ணிருந்தாங்க. மூன்றுநாள் விழாவா நடத்துற பிளான். அந்த டைம்ல பிரதமர் இந்திராகாந்தி எமெர்ஜென்சி அறிவிச்சிருந்தாங்க. கலைஞர் எமெர்ஜென்சியை எதிர்த்ததால 1976 ஜனவரி 30 ஆம் தேதி அவரோட அரசை டிஸ்மிஸ் பண்ணிடுறாங்க. மறுநாள் வள்ளுவர் கோட்டம் திறப்பு விழா முதல்நாள் பதவி போயிடுது. ஆனா திட்டமிட்டபடி அந்த விழா நடந்தது. அப்போ குடியரசுத்தலைவரா இருந்த பக்ருதீன் அலி அகமது வள்ளுவர் கோட்டத்தை திறந்துவைக்கிறார். பாத்து பாத்து கட்டின கலைஞரையே முன்னாள் முதல்வர்ங்குற அடிப்படையில பார்வையாளரா இன்வைட் பண்ணிருந்தாங்க. ஆனா பத்தாவது வரிசையில அவருக்கு சீட் ஒதுக்கியிருந்தாங்க. அதுமட்டுமில்லாம அவரோட காரை நிறுத்துறதுக்கு வள்ளுவர் கோட்டத்துக்கு அரை கிலோமீட்டர் தள்ளி இடம் ஒதுக்கியிருந்தாங்க. அங்க இருந்து அவர் நடந்துதான் வரணும். இதனால அந்த விழாவுக்கு போகாம புறக்கணிச்சிடுறாரு கருணாநிதி. இதுமட்டுமில்ல கலைஞர் அந்த இடத்துக்கு அடிக்கல் நாட்டுனதா வச்சிருந்த கல்வெட்டையும் தூக்கிட்டாங்க. கலைஞர்தான் அந்த வள்ளுவர் கோட்டத்தைக் கட்டினாருனு தடயமே தெரியாத அளவுக்குதான் பண்ணி வச்சிருந்தாங்க. ஆனா இதுக்கு வேற ஒரு சந்தர்பத்துல தக்லைஃப் பண்ணினாரு கலைஞர்.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

சென்னை மவுண்ட் ரோடுல ஒரு அண்ணா சிலை இருக்கும். எம்.ஜி.ஆர் முதல்வரா இருந்த டைம்ல ஒரு போராட்டத்துக்கு போறதுக்கு முன்னாடி அந்த சிலைக்கு மாலை போட்டு போகணும்னு பிளான் பண்றாரு கருணாநிதி. இதை தெரிஞ்சுக்கிட்டு அந்த சிலைக்கு மாலை போடுறதுக்காக இருந்த படிக்கெட்டை மட்டும் அகற்றிட்டாங்க ஆட்சியாளர்கள். மேல ஏறி சிலைக்கு மாலை போட முடியாம அந்த பீடத்து மேல மாலையை வச்சிட்டு போயிடுறாரு. இந்த சம்பவத்துனால அதே மவுண்ட் ரோடுல வேற ஒரு அண்ணா சிலை நமக்குனு வைக்கணும்னு நினைக்குறாங்க. ஆனா அதுக்கான அனுமதி கிடைக்கல. வள்ளுவர் கோட்டம்ல வைக்கிறதுக்கு அனுமதி கிடைக்குது. இந்த சந்தர்பத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்க நினைச்சார் கருணாநிதி. வள்ளுவர் கோட்டம்ல ஒரு அண்ணா சிலையை நிறுவி அதுக்கு கீழே சிலை திறப்பாளர்னு போட்டு வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதினு போட்டாரு. ஆக வள்ளுவர் கோட்டத்தை கட்டினது நான்தான்னு அங்க பதிய வைச்சாரு.

இதே மெரினால இன்னொரு சம்பவமும் நடந்தது. 2001 வது வருடம் அப்போ முதல்வரா இருந்த ஜெயலலிதாவுக்கு டான்சி ஊழல் வழக்குல தண்டனை கிடைக்குது. அவங்களோட முதல்வர் பதவியும் பறிபோகுது. பன்னீர்செல்வம் முதல்வராகிறாரு. இப்படி பரபரப்பா போயிட்டு இருக்குறப்போ திடீர்னு பார்த்தா மெரினா இருந்த கண்ணகி சிலை காணாம போயிடுது. லாரி மோதி சிலை சேதாரம் ஆகிடுச்சு அதனால அந்த சிலையை அங்க இருந்து எடுத்துட்டோம்னு அரசு தரப்புல சொல்றாங்க. மியூசியம்ல பத்திரமா வச்சிருக்கோம்னு சொல்றாங்க. அறிஞர் அண்ணா காலத்துல இந்த கண்ணகி சிலை மெரினால வைக்கப்பட்டுச்சு. அதை எப்படி நீங்க அகற்றலாம்னு எதிர்கட்சிகள் குரல் கொடுக்கிறாங்க. திரும்ப வேற இடத்துல வைக்கிறோம்னு விளக்கம் சொன்னாங்க. இதுக்கு நடுவுல பத்திரிகைகள்ல ஒரு செய்தி வருது. கண்ணகி சிலை ஜெயலலிதாவோட வீடு இருக்குற போயஸ் கார்டனை நோக்கி கை நீட்டுன மாதிரி இருக்கு. வாஸ்துப்படி அது சரியில்ல. அதனாலதான் ப்ளான் பண்ணி தூக்கிட்டாங்க அப்படினு செய்திகள் கெளம்புனது. இந்தச் செய்தி கிளம்பியதும் டென்சன் ஆனார் கலைஞர். தேனாம்பேட்டைல இருக்குற தி.மு.க இளைஞரணி அலுவலகமான அன்பகம்ல கண்ணகி சிலை ஒண்ணு நிறுவுன கலைஞர் அந்த சிலை போயஸ் கார்டனை நோக்கி கை காட்டுற மாதிரியே வச்சாரு. 2006-ல கலைஞர் ஆட்சி வந்ததும் திரும்பவும் மெரினால அதே இடத்துல கண்ணகி சிலையை வச்சாரு.

பேனா நினைவுச் சின்னம்
பேனா நினைவுச் சின்னம்

இன்னைக்கு பேனா சிலைக்கு திரும்பவும் சர்ச்சைகள் வந்திருக்கு. அரசு செலவுல இப்படி ஒரு நினைவுச்சின்னம் தேவையா அப்படினு தி.மு.கவை நோக்கி குரல் எழுப்புறாங்க எதிர்கட்சிகள். இதே மாதிரி ஒரு கேள்வியை தி.மு.கவும் எழுப்பியிருக்கு. 2012-ல மெரினாவுல இருக்குற எம்.ஜி.ஆர் நினைவிடத்தை புதுப்பிச்சாங்க அப்போ இருந்த அ.தி.மு.க அரசு. புதுசா கட்டின நுழைவு வாயில்ல ஒரு குதிரை சிலையும் இரட்டை இலை சின்னம் வடிவத்துல பண்ணியிருந்தாங்க. அரசு பணத்துல கட்சி சின்னம் வச்சிருக்காங்கனு சொல்லி தி.மு.க தரப்புல இருந்து வழக்கு தொடர்ந்தாங்க. ஆனா அது இரட்டை இலையே கிடையாது பறக்கும் குதிரையோட இறக்கைனு குபீர் விளக்கம் கொடுத்தது அ.தி.மு.க. ஏங்க நடுவுல காம்பு இருக்கேனு கேட்டதுக்கு அது சும்மா தூண்தான்னு சொன்னாங்க.

கடலுக்கு நடுவுல 360 மீட்டர் தொலைவுல 81 கோடி ரூபாய் செலவுல கட்டப்படப்போற இந்த கலைஞர் பேனா நினைவுச் சின்னம் இன்னும் என்னென்ன அரசியலையெல்லாம் சந்திக்கப்போகுது. அதை ஸ்டாலின் எப்படியெல்லாம் எதிர்கொள்ளப்போறாரு அப்படிங்குறதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

1 thought on “கலைஞர் பேனா சர்ச்சையும்.. கலைஞரின் தக்லைஃப் சம்பவங்களும்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top