ஒரு ரூபாய் நோட்டு

உங்களிடம் பழைய ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறதா… ரூ.45,000 வரை சம்பாதிக்கலாம் – எப்படி?

பழைய ஒரு ரூபாய் நோட்டு உங்களிடமிருந்தால், அதை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ரூ.45,000 வரை ஏலத்தில் விற்கமுடியும். எப்படி?

பழைய ஒரு ரூபாய் நோட்டு!

உங்களிடம் பழைய ஒரு ரூபாய் நோட்டு இருந்தால், அதை சும்மாவே உங்கள் பர்ஸிலோ, வீட்டிலோ வைத்திருக்க வேண்டியதில்லை. அது உங்களுக்குப் பல ஆயிரங்களை சம்பாதித்துக் கொடுக்கும். இதற்கு உங்களிடம் இருக்கும் அந்த ஒரு ரூபாய் நோட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட நோட்டாக இருக்க வேண்டும். அத்துடன் Coin bazzar வைக்கும் சில கண்டிஷன்களையும் உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டு பூர்த்தி செய்தால், அதை ரூ.45,000-வரை விற்க முடியும்.

ஒரு ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு

கண்டிஷன்கள் என்னென்ன?

  • அந்த ரூபாய் நோட்டு 1957-ல் நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ஹெச்.எம்.படேல் கையெழுத்திட்டதாக இருக்க வேண்டும்.
  • அதன் சீரியல் எண்கள் 123456 எனத் தொடங்க வேண்டும்.

இந்த இரண்டு கண்டிஷன்களைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் Coin bazzar தளத்தில் அந்த ரூபாய் நோட்டை விற்க இயலும். அந்தத் தளத்தின் Shop செக்‌ஷனில் Extremely rare பகுதியில் இதை நீங்கள் விற்கலாம்.

ஆர்.பி.ஐ அறிவுறுத்தல்

ஆர்.பி.ஐ
ஆர்.பி.ஐ

பழைய ரூபாய் நோட்டுகள்/நாணயங்களை விற்பது குறித்து ஆர்.பி.ஐ கடந்த ஆகஸ்டில் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருந்தது. அதில், “ஆன்லைன்/ஆஃப்லைனில் ரூபாய் நோட்டுகள்/நாணயங்கள் விற்பனையின்போது சிலர் ஆர்.பி.ஐ-யின் பெயரைப் பயன்படுத்தி சிலர் கட்டணம் வசூலிப்பது தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆர்.பி.ஐ எந்தவொரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இதற்காகக் கட்டணம் வசூலிக்க எந்தவொரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ ஆர்.பி.ஐ எந்த அங்கீகாரமும் அளிக்கவில்லை’’ என்று தெரிவித்திருந்தது.

Also Read – சிலிண்டர் மானியம் வரவில்லையா – இதைச் செய்தால் உடனே உங்கள் அக்கவுண்டுக்கு வரும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top