கண்கள் இரண்டால்..

கண்கள் இரண்டால் பாட்டு சுப்ரமணியபுரம் படத்தை காலி பண்ணிருச்சு! ஏன் இப்படி சொல்கிறார் சசிக்குமார்?

ஜேம்ஸ் வசந்தனைக் கூப்பிட்டு சுப்பிரமணியபுரம் கதையை முழுக்க நரேட் பண்ணும்போது காதல் பாடல்களா சிறு பொன்மணி, தோட்டம் கொண்ட ராசாவே, இதயம் போகுதேனு எல்லாமே இளையராஜா பாடல்களா சொல்லியிருக்காரு. இந்தப் படத்துல காதல் பாடல்கள் வேற கிடையாதுனும் குறிப்பிட்ருக்காரு. என்னடா முதல் படம் வாய்ப்பு கொடுத்துட்டு பாட்டு ஒண்ணுகூட வைக்கலைனு அவர் வருத்தப்பட்டு ஒரு பாட்டாவது கொடுனு சசிக்குமார்கிட்ட கேட்ருக்காரு.

சுப்பரமணியபுரம் படத்துல ஹீரோ – ஹீரோயின் மீட்டிங் பாயிண்டே 4 சீன்தான். அதுக்குமேல கிடையாது. அப்போ, அந்த இடத்துல எதாவது பாட்டு வைக்கலாம்னு ஜேம்ஸ் வசந்தன் கேட்டதுக்கான பாட்டு ஒண்ணு கொடுத்துருக்காரு. அந்தப் பாட்டுதான் கண்கள் இரண்டால். இன்னைக்கு வரைக்கும் அந்தப் பாட்டு பல பேரோட ஃபேவரைட் பாட்டா இருக்கும். குறிப்பா 90’ஸ்க்கு முன்னாடி 80’ஸ் லவ் பண்ண எல்லாருக்கும் கண்கள் இரண்டால் வேறமாறி ஃபீலிங் ஒண்ணை கொடுத்துருக்கும். சரி, எதுக்கு 80’ஸ் செலக்ட் பண்ணீங்கனு கேட்டா..

மதுரைல 80-கள்ல ரௌடிசம் கொஞ்சம் அதிகமாச்சு. அதை கதைக்குள்ள வைக்கணும்னு மெயின் ரீசனா எடுத்துட்டுதான் கதை எழுதுனேன்னுவாரு. அதுமட்டுமில்ல அந்தப் படத்துல 80’ஸ் பீரியடை காமிக்கிறதால முழுக்கவே இளையராஜா பாட்டு மட்டும்தான் யோசிச்சு வைச்சிருந்தாராம். கண்கள் இரண்டால் பாட்டை வைக்கிறதுக்கு இன்னொரு முக்கியமான ரீஸன்.. அவங்க காதலை இன்னும் அழுத்தமா சொல்லணும். அதுக்கு இன்னொரு பாட்டு வேணும். அழுத்தமா முன்னாடியே சொன்னால்தான் கிளைமாக்ஸ்ல அவங்க பிரியும் போது அண்ட்ன வலி பார்க்குறவங்களுக்கு அதிகமா இருக்கும்னு நினைச்சிருக்காரு.

Also Read – விஜய் ரசிகர்களும் ரசிக்கும் முகவரி.. கிளாசிக் ஹிட்டுக்கான 4 காரணங்கள்!

கண்கள் இரண்டால் பாட்டை கேட்ட உடனே அந்தப் பாட்டுல சசிக்குமார் கொஞ்சம் மயங்கி கொஞ்சம் கொஞ்சமா அந்த மான்டேஜஸை கூட்டிட்டு பெஸ்ட்டா அவருக்கு புடிச்ச மாதிரி எடுத்துகிட்டே இருந்துருக்காரு. ஒரு கட்டத்துல ஆடியன்ஸ் மத்தில அந்தப் பாட்டால அந்தப் படம் காதல் படமா மாறிடுச்சுனு சசிக்குமார் தன்னோட இன்டர்வியூல சொல்லுவாரு. ஆனால், சுப்பிரமணியபுரம் காதல் படமில்லை. பக்காவான அரசியல் படம். மறைமுகமா படம் முழுக்க அரசியல் பேசிட்டே இருக்கும். கண்கள் இரண்டால் பாட்டையும், காதல் சீன்ஸையும் தூக்கிட்டுப் பார்த்தா அந்தப் படம் பக்காவான அரசியல் படம்னு சொல்லுவாப்புல. ஆமால்ல!

1 thought on “கண்கள் இரண்டால் பாட்டு சுப்ரமணியபுரம் படத்தை காலி பண்ணிருச்சு! ஏன் இப்படி சொல்கிறார் சசிக்குமார்?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top