பூவே உனக்காக

இரண்டு க்ளைமாக்ஸ்… ஒரு நாள் முதலே ரிலீஸ்.. பூவே உனக்காக ஹிட்டுக்கு காரணம் என்ன?

ஒரு படம் ஹீரோவுக்கு திருப்புமுனையா இருக்கலாம். இல்லை இயக்குநருக்கு திருப்பு முனையாக இருக்கலாம். ஆனா பூவே உனக்காக அந்தப்படத்துல வேலை பார்த்த இயக்குநர், இசையமைப்பாளர், ஹீரோனு எல்லோருக்குமே ஒரு திருப்புமுனையா அமைஞ்சது. இதுமட்டும் இல்ல.. தமிழ்நாட்ல ஒரு நாளைக்கு முன்னாலயே ஒரே ஒரு தியேட்டர்ல மட்டும் ரிலீஸ் ஆச்சு. பூவே உனக்காக படத்துக்கு ரெண்டு க்ளைமாக்ஸ்..பூவே உனக்காக படத்துல விஜய் நடிக்க கூடாதுனு சொன்னதன் காரணம் ஒன்னு இருக்கு. விஜய் படங்கள்ல தொடர்ச்சியா இருந்த ஒண்ணு, இந்த படத்துல மிஸ் ஆச்சு. சூரிய வம்சம் மாதிரி பெரியஹிட்டுக்கள் கொடுத்திருந்தாலும், இயக்குநர் விக்ரமன் கரியர்ல அதிக நாட்கள் ஓடின படமும் இதுதான். இந்தப்படத்துல நடிச்சதுக்கு ஒரே ஒரு நடிகர் மட்டும் சம்பளம் வாங்கவே இல்லைனு சொல்லி இந்தப் படத்தைப் பத்தி சொல்லிட்டே போகலாம்.

அதுவரைக்கும் மசாலா படங்கள்ல மட்டுமே நடிச்சுக்கிட்டிருந்த விஜய்க்கு ஒரு வெற்றி தேவையா இருந்தது. முன்னாடி இயக்கின புதிய மன்னர்கள் தோல்வியால துவண்டு போயிருந்த விக்ரமனுக்கும், சொந்தப்படம் எடுத்து சொத்துக்களை இழந்து தவிச்ச இசையமைப்பாளர் எஸ்.ஏ ராஜ்குமாருக்கும் வெற்றி அவசியமாக பட்டது. அப்படி மூணுபேருக்குமாக சேர்த்து கிடைச்சதுதான் பூவே உனக்காக படத்தோட வெற்றி. இந்தப்படத்தோட சக்ஸஸ்னு பார்த்தா விட்டுக் கொடுக்கிற காதல்தான்னாலும், அந்த காதலையே நினைச்சு கடைசி வரைக்கும் வாழ்றவன்னு முடிச்சதுதான். இதுபோக இந்தப்படத்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து படம் பார்த்தாங்க. அதுக்குக் காரணம் அந்தப்படத்தோட பாடல்கள்.. சொல்லாமலே யார் பார்த்தது, ஆனந்தம் ஆனந்தம், ஓ பியாரி பாடல்கள் எல்லாம் செம்மஹிட்.

இதுதவிர, முரளியோட கெச்ட் அப்பியரன்ஸ்ல வர்ற மச்சினிச்சு வர்ற நேரம் மண்மணக்குது பாட்டும் வொர்த் சாங். இந்தப்பாட்டுக்காக முரளி சம்பளமே வாங்காம நடிச்சுக் கொடுத்திருக்கார். இதுபோக இந்தப் படத்துல வந்த இதயங்கள் பாட்டு ஒன்னு இருக்கும். அந்தப் பாட்டு சரியா கவனிக்கப்படாததால, அதை வரியை மட்டும் பயன்படுத்தி வானத்தைப் போல படத்துல ரோசாப்பூ மாலையிலேனு மாத்தியிருப்பார், எஸ்.ஏ ராஜ்குமார். இந்தப்படத்துக்கு பாசிட்டீவ், நெகட்டீவ்னு மொத்தமா 2 க்ளைமாக்ஸ் இருந்தது. அந்தப்படத்தோட தயாரிப்பாளர் செளத்ரிக்கு பாசிட்டீவ் க்ளைமாக்ஸ்தான் பிடிச்சிருந்ததாம். ஆனா விக்ரமனுக்கு நெகட்டீவ் க்ளைமாக்ஸ் இருந்தாத்தான் இந்தப் படம் நிற்கும்னு சொல்லி அடம்பிடிச்சிருக்கார். இதுக்கிடையில ரெண்டையும் ஷூட் பண்ணி, சென்சார்லாம் வாங்கி வைச்சுட்டார் விக்ரமன்.

அப்போ ஆர்.பி செளத்ரி பாசிட்டீவ் க்ளைமாக்ஸை பார்த்துட்டு எந்திரிக்க, சார் இன்னொரு க்ளைமாக்ஸையும் பார்த்துட்டு போங்கனு சொல்ல, அது உனக்கு பிடிச்சிருக்கு, உன் வீட்லயே போட்டு பார்த்துக்கனு சொல்லிட்டு போயிட்டார். ஆனா விக்ரமன் விடாம, நீங்க இப்போ 4 படங்கள் பண்றீங்க, அடுத்து நிறைய படங்கள் பண்ணுவீங்க. எனக்கு இது ஒரு படம்தான். இது ஓடாட்டி நான் வீட்டுக்குத்தான் போகணும். அதனால அந்த நெகட்டீவ் க்ளைமாக்ஸை வைக்க அனுமதிக்கணும்னு கேட்டிருக்கார். அப்போ உனக்கு தெரிஞ்ச நண்பர்களைக் கூப்பிட்டு ப்ரிவ்யூ போடு, ரெஸ்பான்ஸ் பார்க்கலாம்னு சொல்ல, க்ளோஸ் சர்க்கிள்களை கூப்பிட்டு போட்டார் விக்ரமன். படத்தை முரளி, எஸ்.ஏ.சி உள்ளிட்ட பலரும் பார்த்துட்டு வெளில வந்தாங்க. வெளில வந்தப்போ அவங்க கண்கள் கலங்கியிருந்தது. அந்த அளவுக்கு நெகட்டீவ் க்ளைமாக்ஸ் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

Also Read – ஹரி – விஷாலின் வெறியாட்டம் – தாமிரபரணி ஏன் ஸ்பெஷல்?

சரி நெகட்டீவ் க்ளைமாக்ஸே போகலாம்னு சொல்லிட்டு, ஆர்.பி செளத்ரி அனுமதி கொடுக்க, மறுபடியும் ஒரு சிக்கல் வந்தது. வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆகுறதா இருந்தது. ஆனா மதுரையில இருந்த தியேட்டர்ல ஒரு நாளைக்கு முன்னதாவே ரிலீஸ் ஆகணும். அப்படி இல்லைன்னா வெள்ளிக்கிழமை ராமராஜன் படம் ரிலீஸ் ஆகிடும்னு ஒரு நிலை இருந்தது. மதுரையில கொஞ்சம் முக்கியமான பெரிய தியேட்டர் அது. இந்த விஷயம் ஆர்.பி செளத்ரிக்கு பிடிக்கலை. ஆனா விக்ரமன்தான் பரவாயில்லை சார், ரிஸ்க் எடுக்கலாம்னு சொல்ல, ரிசல்ட் நெகட்டீவா வந்துடுச்சுன்னா அடுத்து யாருமே படத்தை வாங்க வரமாட்டாங்க, ஒரு ஏரியாகூட விற்காது. பணம் முழுக்க நட்டமாகிடும்னு சொல்ல, சார், எனக்காகத்தான் இந்தப் படம் எடுக்கறதா சொன்னீங்க, ரிஸ்க் எடுக்கலாம்னு விக்ரமன் சொல்ல, படம் மதுரையில ஒரு நாள் முன்னாடியே ரிலீஸ். அதுவரைக்கும் இல்லாத மக்கள் கூட்டம் விஜய் படத்துக்காக கூடியது. முதல் ஷோவே சக்ஸஸ்னு ரிசல்ட் வர விநியோக்ஸ்தர்கள் படத்தை வாங்க குவிஞ்சாங்க. மறாவது நாள் தமிழகம் முழுக்க ரிலீஸ்.. படம் 270 நாட்களைத் தாண்டி ஓடியது.

பிப்ரவரியில் ரிலீஸான படம் அடுத்த தீபாவளி வரைக்கும் ஓடிச்சு. தீபாவளிக்கு புதுப்படங்கள் வராம இருந்திருந்தா, இன்னும் படம் ஓடிட்டே இருந்திருக்கும். இந்தப்படத்தோட வெற்றியால விஜய்யோட மார்க்கெட்டும் சம்பளமும் உயர்ந்தது. படத்தோட கதையா பார்த்தோம்னா, ஓர் இந்துக் குடும்பமும் கிறிஸ்தவக் குடும்பமும் நெருங்கி பழகுது. இரண்டு வீட்டிலும் வசிக்கும் ஆணும் பெண்ணும் ஊரைவிட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ண, ரெண்டு குடும்பத்துக்கும் மோதல் வருது. ஓடிப் போன ஜோடியின் மகனாக இரண்டு குடும்பங்களையும் ஒண்ணா சேர்க்க வர்றார், விஜய். படத்துல மொத்தம் மொத்தமநாலே திருப்பு முனைதான். முதலாவது விஜய் யார்னு காட்டுற இடைவேளை, இரண்டாவது ஃபளாஷ்பேக்ல விஜய் காதலிக்கும் பெண் சொல்ற வார்த்தை, மூணாவது புதுமுக இளம் ஜோடிக்கு நடக்கும் மதமாற்ற விஷயம். நான்காவது படத்தோட க்ளைமாக்ஸ். ஒவ்வொன்றுமே நேர்த்தியா இருந்ததுதான் படத்தோட வெற்றி. அதுலயும் தான் ஆசைப்பட்டது நான் நடக்கல.. தான் காதலிச்ச பொண்ணு ஆசைப்பட்டதாவது நடக்கட்டுமேங்குற ஒன்லைன் இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துக்கிட்டிருக்கு. ‘மதம் மனுசங்க கிட்டதான் இருக்கு.. ஆனால் காதல் காக்கா, குருவிகிட்ட கூட இருக்கு’, ‘காதல்ங்கறது ஒரு செடில பூக்கிற பூ மாதிரி. உதிர்ந்துருச்சின்னா உதிர்ந்ததுதான்’னு சொல்லப்பட்ட வசனங்கள் செம்மையா வொர்க்கவுட் ஆச்சு. படத்துல காமெடிகள் உள்பட எந்தவொரு காட்சியும் அநாவசியாமாக இல்லாம, கதை ஓட்டத்துடன் முழுமையா ஒத்துப்போனதும் சக்ஸஸ்க்கு மிகப்பெரிய காரணமா இருக்கலாம்.

இந்தப் படத்துல ஃபைட்டே கிடையாது, பஞ்ச் டயலாக் கிடையாது, உருகி உருகி காதல் பண்ற பாட்டுக்கள் கிடையாது. ஆனாலும் இது ஒரு காதல் படம். மதப்பிரச்னையைப் பத்தி பேசிட்டு, மதக்கலவர காட்சிகளே படம்ங்குறதே இன்னைக்கும் ஆச்சர்யமாத்தான் இருக்கு. இந்த படத்தோட பாதிப்பாத்தான் உன்னை நினைத்துப் படமும் இருக்கும். இந்த ரெண்டு படங்கள்ல க்ளைமாக்ஸூம் கிட்டத்தட்ட ஒன்னாவே இருக்கும். ஆனா டிரீட்மெண்ட் வேறரகம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top