லியோ

பல்கேரியா விவேகம்… காஷ்மீர் லியோ… டேய் எப்புடிறா?!

லியோ படம் எடுக்குறதுக்கு காஷ்மீர் குளிர்ல நாங்க எவ்ளோலாம் கஷ்டப்படுறோம் தெரியுமானு நேத்து ஒரு வீடியோ விட்ருக்காங்க படக்குழு. அந்த வீடியோவுக்கு ஆதரவாவும் எதிர்ப்பாவும் நிறைய கருத்துகள் வந்திட்டு இருக்கு. இதுக்கு முன்னாடி வந்த சில மேக்கிங் வீடியோக்களோட கம்பேர் பண்ணியும் நிறைய கருத்துகள் சுத்துது. அதெல்லாம் தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம். 

லியோ ஷூட்டிங் ஸ்பாட்
லியோ ஷூட்டிங் ஸ்பாட்

பொதுவாவே மேக்கிங் வீடியோன்னாலே ஹீரோ பண்ணின சாகசங்கள், அவரு எவ்ளோ கஷ்டப்பட்டாரு, எவ்வளவு தடைகளுக்கு மத்தியில அவரு நடிச்சு கொடுத்தாரு இப்படித்தான் போகும். ஆனா இந்த வீடியோ டோட்டலா வேற மாதிரி இருந்தது. கிட்டத்தட்ட ஏழு நிமிச வீடியோ அதுல கடைசி 30 செகண்ட் மட்டும்தான் விஜய் வர்றாரு. மத்த எல்லாருமே பெரிய டெக்னீசியன்ஸ்கூட இல்ல சின்ன சின்ன வேலை பார்க்குற படக்குழுவைச் சேர்ந்தவங்க. லைட் மேன், கேமரா அசிஸ்டெண்ட், செட் அசிஸ்டெண்ட், ப்ரொடக்‌ஷன்ல வேலை பார்க்குறவங்க, தையல்காரர் இவங்க எல்லாம் மைனஸ் 10 டிகிரி குளிர்ல நைட் ஷூட் பண்றதுக்கு எப்படி கஷ்டப்பட்டாங்கனு சொல்லிருக்காங்க.

நியாயமா பார்த்தா ஷூட்டிங் ஸ்பாட்ல மேக்சிமம் ஹீரோக்கள் கேரவன்ல இருப்பாங்க. ஷாட் டைம்ல மட்டும் வந்து நடிச்சுக் கொடுத்திட்டு போவாங்க. ஆனா இவங்க எல்லாருமே முழு நேரமும் அந்த Environment-லதான் இருக்கணும். ஹீரோ கஷ்டப்படுற போட்டோ, வீடியோ வரும். இவங்களோட கஷ்டம் வெளியவே வராது. அந்த வகைல இதுதான் முதல் முறையா அவங்க மேல ஒரு சின்ன வெளிச்சம் விழுந்துருக்குனு பாசிட்டிவா எடுத்துக்கலாம். வலிமை படத்தோட மேக்கிங் வீடியோல Thanks to Ajith Sir’s Hardwork னு போட்டதையும், இந்த லியோ மேக்கிங் வீடியோல Tribute to cast & crew னு போட்டதையும் கம்பேர் பண்ணி மீம்ஸ் சுத்திட்டு இருக்கு.

எல்லாருமே காசுக்காகத்தான் வேலை பார்க்கிறோம். இருந்தாலும் அந்த மைனஸ் டிகிரி குளிர்ல, மூக்குல ரத்தம் வர, கையெல்லாம் உறைஞ்சு போய் வேலை பார்த்து, ஒரு படத்துக்காக இவ்வளவு சவால்களை தாங்கி பண்றாங்கன்றது உண்மைலயே பாராட்டுக்குரியது. அதே நேரத்துல படம்தான எடுக்குறீங்க.. அதை அவ்வளவு மழையிலயும், குளிர்லயும் போய் விடாம இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கணுமா? நீங்க மட்டுமா கஷ்டப்படுறீங்க… எல்லாரும்தான் கஷ்டப்படுறாங்க. நீங்க எல்லாரையும் போட்டு கொடுமைப் படுத்திட்டு அதை வீடியோவாவேற எடுத்து பரிதாப ஓட்டு வாங்குறீங்களானு நெகட்டிவ் கமெண்டுகளும் வரத்தான் செய்யுது.

Also Read – பெரிய ஹீரோ இல்லை.. பெரிய டைரக்டர் இல்லை.. ஆனால், இந்த படங்கள் எப்பவும் பெஸ்ட்!

காஷ்மீர்ல இருக்குறவங்கள்லாம் வெறும் கைல பாத்திரம் விளக்கமாட்டாங்க. கைல க்ளவுஸ் மாட்டிருப்பாங்க. ஒரு க்ளவுஸ்கூட வாங்கித் தரமாட்டீங்களானு ரிவோல்ட் ஆகிட்டாங்க. கல்யாணம் ஆகி ரெண்டு நாள்ல ஷூட்டிங் வந்துட்டாங்க, அம்மா இறந்து இரண்டு நாள்ல வந்துட்டாங்க, குழந்தை பிறந்து பத்துநாளா பாக்கலனு விஜய் டிவி ரியாலிட்டி ஷோ மாதிரி ஆக்கிட்டீங்களேனும் எதிர் தரப்பு கரிச்சுக்கொட்டுது. இதுக்கு முன்னாடியும் நிறைய படங்கள் காஷ்மீர்ல ஷூட் பண்ணிருக்காங்க. இது ஒண்ணும் முதல் படமும் கிடையாது.

வீடியோல குளிர், மழை பத்தியெல்லாம் சொல்லிருக்காங்க. சொல்லாம விட்ட ஒரு மேட்டர் நிலநடுக்கம். சமீபத்துல லியோ டீம் தங்கியிருந்த ஹோட்டல்ல நிலநடுக்கம்  வந்து மொத்த டீமையும் அரள விட்டிருந்திருக்கு. யூ-டியூபர் இர்ஃபான் வியூகூட அந்த ஹோட்டல்லதான் தங்கியிருக்கேன்னு வீடியோகூட போட்டிருந்தாரு. அநேகமா அவரும் இந்த படத்துல இருக்க வாய்ப்பிருக்குனு ஒரு புரளியைக் கிளப்பிவிடுறாங்க. இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில உருவாகிருக்க லியோ படம் எப்படி இருக்கப்போகுதுனு பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top