ஆடியோ புக்ஸ்

லாக்டவுன் போரடிக்குதா… இந்த ஆடியோ புத்தகங்கள் உதவலாம்!

புத்தகங்களை வாசித்த நாள்கள் மாறி தற்போது புத்தகங்களை ஒலி வடிவில் கேட்கும் சூழல் வந்துவிட்டது. சங்க கால இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை இன்றைக்கு ஆடியோ புத்தகங்களாக ஒலி வடிவில் கிடைக்கின்றன. இதனால், பயணத்தின் போது அல்லது பிற வேலைகளை செய்துகொண்டே புத்தகங்களை நம்மால் கேட்க முடிகிறது. அவ்வாறு நீங்கள் கேட்க ஏதுவான டாப் ஆடியோ புத்தகங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன் மிகவும் புகழ்பெற்ற புத்தகம். இந்த சரித்திர புதினத்தின் ஆடியோ வடிவிலான புத்தகம் யூ டியூபில் இலவசமாக கிடைக்கிறது. குக் வித் கோமாளி 2 வின்னர் கனியின் குரலில் வெளியான பொன்னியின் செல்வன் ஒலி வடிவ புத்தகம் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

ஒலி பீடியா

“ஒலிபீடியா என்பது நாட்டுடைமை மற்றும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் உள்ள தமிழ் நூல்களை தன்னார்வலர்கள் மூலம் ஒலி வடிவமாக மாற்றும் ஒரு சிறு முயற்சி. அவ்வாறு உருவாக்கப்படும் ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் யாவர்க்கும் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைக்கச் செய்வதே.” என்கிறார்கள், ஒலி பீடியா குழுவினர். இவர்கள் ஜெயகாந்தன், லா.ச.ரா, கோவை ஞானி போன்ற தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும் எட்வெர்ட் ஜென்னர், சார்லி சாப்ளின், கன்பூசியஸ் போன்றோரையும் நமக்கு ஒலி புத்தகத்தின் வழியாக அறிமுகப்படுத்துகின்றனர்.

ஸ்டோரி டெல் ஆப்

தமிழ், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, இந்தி போன்ற பல மொழியில் உள்ள இலக்கிய புத்த்கங்களும் ஒலி வடிவில் இந்த ஆப் வழியாக ஒலி வடிவில் நமக்கு கிடைக்கின்றன. பார்த்திபன் கனவு, கடல்புறா, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சிவகாமியின் சபதம் போன்ற பல பிரத்தி பெற்ற நூல்கள் ஒலி வடிவில் இங்கு உள்ளன.

https://play.google.com/store/apps/details?id=grit.storytel.app&hl=en_IN&gl=US

தி சேன்ட் மேன்

நெய்ல் கெய்மன்

அமேசானின் ஆடிபிளில் நெய்ல் கெய்மன் மற்றும் டிர்க் மேக்ஸ்ஸின் மிகவும் புகழ்பெற்ற புத்தகமான தி சேன்ட் மேன் ஒலி வடிவில் கிடைக்கிறது. சுமார் 10:54 மணி நேரம் ஓடும் இந்த புத்தகம் Riz Ahmed, Kat Dennings, Taron Egerton, Neil Gaiman, James McAvoy, Samantha Morton, Bebe Neuwirth, Andy Serkis, Michael Sheen ஆகிய 9 பேர் கொண்ட குழுவால் ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தகங்களை விரும்பும் நபர்கள் இந்த புத்தகத்தை முயற்சி செய்யலாம். 4.6 ரேட்டிங் பெற்றுள்ள இந்த ஆடியோ புத்தகம் பலரின் மத்தியிலும் இன்றைக்கு வைரல்.

https://www.audible.in/pd/The-Sandman-Audiobook/B086WQYZCV

ஸ்டீஃபன் ஃப்ரை

ஸ்டீஃபன் ஃப்ரை
ஸ்டீஃபன் ஃப்ரை

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஹாரிபாட்டர் நாவல் முதல் கிரேக்க புராணங்களில் உள்ள கட்டுக்கதைகளை மறுபரிசீலனை செய்யும் மித்தோஸ் வரையிலான பல புத்தகங்களை ஸ்டீஃபன் ஃப்ரையின் குரலில் நாம் கேட்கலாம். இந்த புத்தகங்கள் அமேசானின் ஆடிபிளில் கிடைக்கிறது.

https://www.audible.in/search?keywords=harry+potter&ref=a_pd_The-Sa_t1_header_search

Also Read : லாக்டவுனில் பார்க்க 10 ஃபீல் குட் படங்கள்! – பார்ட் 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top