உதயநிதி ஸ்டாலின்

அடுத்தடுத்து 3 படங்கள்… சினிமாவில் பிஸியாகும் எம்.எல்.ஏ உதயநிதி!

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பிறகு அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனது தொகுதி மக்களுக்காக இவர் செய்யும் வேலைகளும், சட்டமன்றம் – பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவர் பேசும் உரையாடல்களும் அடிக்கடி டிரெண்டாவது வழக்கம். இப்படி சினிமா வேலைகளை மறந்து முழுக்கவே ஒரு அரசியல்வாதியாக பிஸியாக இருக்கும் உதயநிதி, ஒரு சின்ன பிரேக்குக்குப் பிறகு சினிமா பக்கமும் கவனம் செலுத்த இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறனின் இயக்கத்தில் உதயநிதி நடித்தகண்ணை நம்பாதே’ படத்தில் முழு ஷூட்டிங்கும் முடிந்தப்பிறகு, மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் கமிட்டானார். தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டதால் இதன் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. தற்போது முதல் வேலையாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கை சென்னையில் ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி. 

அதன்பின்னர், இந்தியில் வெற்றியடைந்த `ஆர்டிகள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் படமும் பாதியில் நிற்பதால், செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு மேல் இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி செல்லவுள்ளார், உதயநிதி. இந்த இரு படங்களின் ஷூட்டிங் நடக்கும் சமயத்திலேயே மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் படத்திலும் உதயநிதி கமிட்டாகியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கர்ணன்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்கவிருந்த மாரி செல்வராஜ், உதயநிதி கேட்டுக்கொண்டதால் அந்தப் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு இவரது பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைப் போன்று இந்தப் படத்தின் கதைக்களமும் ரொம்பவும் அழுத்தமாக இருக்கும் என்கிறார்கள். அடுத்தடுத்து மூன்று படங்களின் ஷூட்டிங் என சீரியஸ் அரசியலுக்கு சின்ன ப்ரேக் விட்டு சினிமாவில் பிஸியாகப்போகிறார், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.

Also Read – பாடகராக ஆசைப்பட்ட விஜய்… ரூட்டை மாற்றிவிட்ட எஸ்.பி.பி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top