வணங்கான்

எடுத்துப்பாரு ரெக்கார்டு எனக்கே ரெட் கார்டா – பாலாவுக்கு வணங்கான் ஏன் முக்கியம்?!

பூஜை போட்ட அன்னைக்கே முதல் படம் டிராப் ஆனது, இன்னும் ஒரு மாசத்துல நான் கடவுள் ஷூட்டிங் இருக்கும்போது அஜித் திடீர்னு விலகுனது, என் இன்னொரு அம்மான்னு குறிப்பிட்ட தன் மனைவி தன்னை விவாகரத்து பண்ணதுன்னு பாலாவுக்கு சறுக்கல்களோ அந்த சறுக்கல்களிலிருந்து மீள்றதோ பெரிய விசயமேயில்ல.. அப்படிப்பட்டவருக்கு கடந்த சில வருசங்களா கொஞ்சம் பேட் டைம்னுதான் சொல்லனும். தொடர் சிக்கல்கள், தொடர் நிராகரிப்புகள்னு கடும் இக்கட்டான சூழல்லதான் இயக்குநர் பாலா இப்போ இருக்கிறாரு. எப்படி இந்த சிக்கல்கள்லாம் அவருக்கு வந்துச்சு.. இதுக்கு முன்னாடி அவர் தன்னோட கரியர்ல என்ன மாதிரியான சிக்கல்களை எப்படியெல்லாம் கடந்து வந்திருக்கிறாரு.. வணங்கான் ஏன் அவருக்கு ரொம்ப முக்கியமான படம்..? அதுல ஏன் அவர் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காருங்கிறதை பத்திலாம்தான் இப்போ நாம பாக்கபோறோம். அதே மாதிரி பாலாவோட ஒரு படத்துல பவர் ஸ்டார் நடிச்சிருக்கிறாரு அது என்னங்கிறதையும் அதைப் பத்தின ஒரு சுவாரஸ்யமான தகவலையும் இந்த வீடியோவுல பாக்கப்போறோம்.

சரத்குமார்,ரேவதியை வெச்சு அகிலன்னு தன்னோட முதல் படத்தை ஆரம்பிச்சு, பூஜையோடவே அந்த படம் நின்னுபோய், அதுக்கப்புறம் சேது கதையை எழுதி, அதை முரளி,விக்னேஷ் மாதிரியான ஹீரோக்கள் ரிஜெக்ட் பண்ண, அப்போ யாருக்குமே தெரியாத விக்ரமை வெச்சு ஒருவழியா ‘சேது’ படத்தை ஆரம்பிச்சா திரைத்துறையில ஸ்ட்ரைக், இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கிட்ட ஃபண்ட் இல்ல.. இப்படி பல பிரச்சனைகளைக் கடந்து 1999 டிசம்பர் 10-ஆம் தேதி சென்னை அவுட்டர்ல ஒரு பழைய தியேட்டர்ல ஒரேயொரு ஷோவா ரிலீஸ் ஆகுது ‘சேது’. அப்படி வெளியான சேது, அதோட குவாலிட்டியாலயும் மவுத் டாக்காலயும் கொஞ்சம் கொஞ்சம் பிக்கப் ஆகி, மிகப்பெரிய வெற்றியை குவிச்சது. ஒரு பக்கம் வசூல், இன்னொரு பக்கம் தேசிய விருது உள்ளிட்ட கௌரவம்,, விருதுகள்,இன்னொரு பக்கம் பல மொழிகள்ல ரீமேக் ரைட்ஸ் விற்பனைன்னு ஓவர் நைட்ல பாலாவும் விக்ரமும் ஸ்டார்ஸ் ஆனாங்க. அதுமட்டுமில்லாம தமிழ் சினிமாவோட போக்கையை திருப்புன ஒரு படமாவும் சேது மாறி நின்னுச்சு.

இப்படிபட்ட சேது ஹிட்டுக்குப் பிறகு பாலா டைரக்சன்ல நடிக்க ஏகப்பட்ட ஹீரோஸ் முன்வராங்க. அப்படிதான் அஜித் நடிக்க, பாலா டைரக்சன்ல ‘நந்தா’ படம் ஆரம்பமாகுது. ஆனா கதை விசயத்துல அஜித்துக்கு திருப்தி இல்லாமபோகவே அவர் விலகிடுறாரு. அன்னைக்கு தேதிக்கு பாலா நினைச்சிருந்தார்னா அஜித்துக்கு ஈக்குவலா அப்போ ஃபேமஸா இருந்த எத்தனையோ ஹீரோக்கள்ல ஒருத்தரை தன்னோட அடுத்த பட ஹீரோவா தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனா அவர் தேர்ந்தெடுத்தது தன்னோட முதல் பட சிக்கல்கள்ல தனக்கு பக்க பலமா இருந்த நடிகர் சிவக்குமாரோட மகனும் ஒரு பெரும் வெற்றி கிடைக்காதாங்கிற தவிப்புலயுமிருந்த சூர்யா. இப்படி சூர்யாவை வெச்சு பாலா நந்தாவ ஆரம்பிக்கிறாரு. இந்தப் படத்துல சிவாஜிய நடிக்கவைக்க எவ்வளவோ டிரை பண்னாரு பாலா. கதையைக் கேட்ட சிவாஜியும் ரொம்ப ஆர்வமா இருந்தாரு. ஆனா ராமேஷ்வரம் உள்ளிட்ட கடல் பகுதிகள்ல நிறைய ஷூட் இருந்ததால சிவாஜியோட ஹெல்த்துக்கு பிரச்சனை வந்திரும்னு அவரோட பசங்க நடிக்கவேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம்தான் அந்த ரோலுக்கு ராஜ் கிரண் வந்தாரு. நந்தா படம் மூலமா சூர்யா, ராஜ் கிரண் ரெண்டு பேருமே வேறொரு துருவத்துக்குப் போனாங்க. நந்தா பத்தி சூர்யா ஒரு பேட்டியிலகூட, ‘ எப்போ நந்தாவுல நான் கமிட் ஆனேனோ, அந்த நொடியிலேர்ந்து என் லைஃப் மாறிடுச்சு. எந்த வேலையையும் தவறு இல்லாம ஒழுக்கமா செய்யனுங்கிற எண்ணத்தை எனக்குள்ள விதைச்சது பாலா அண்ணந்தான்’ னு சொல்லியிருப்பாரு. அது அவ்வளவும் உண்மைதான். நந்தாவுலதான் சூர்யாவோட தோற்றம், பார்வை, பாடி லேங்க்வேஜ், மாடுலேசன் எல்லாத்துலயும் புதுசு பண்ணி அவரை வேறொரு ஆளா மாத்திவிட்டிருப்பாரு பாலா. இன்னொரு பக்கம் கருணாஸுக்கு நந்தா படம்தான் முதல் படமா அமைஞ்சு. முதல் படத்துலயே அவரும் ஃபேமஸ் ஆகுறாரு.
இப்படி தன்னோட முதல் ரெண்டு படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு ரெண்டு ஸ்டார் ஹீரோக்களை தந்த பாலா, அடுத்து அந்த ரெண்டு பேரையுமே ஒண்ணா வெச்சு ஆரம்பிச்ச படம்தான் பிதாமகன். இந்தப் படம் மூலமா விக்ரமுக்கு தேசிய விருதையும் கஞ்சா கருப்பு, சங்கீதா, மகாதேவன் போன்ற நடிகர்களுக்கு வெளிச்சத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாரு.

பிதாமகனுக்குப் பிறகு திரும்பவும் பாலா – அஜித் கூட்டணி உருவாகுது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்க அஜித் நடிக்க நான் கடவுள் படம் ஆரம்பமாகுது. அஜித்தும் இதுக்காக நிறைய முடியும் வளர்க்க ஆரம்பிக்கிறாரு. அடுத்த மாசம் வாரணாசியில ஷூட் ஆரம்பிக்கப்போகுதுன்னு அஜித்தே தன் வாயால மீடியாவுல சொல்லி அடுத்த கொஞ்ச நாள்லயே அஜித்துக்கும் பாலாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அஜித் அதுலேர்ந்து விலகிடுறாரு. அஜித் விலக, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும் விலகிடுறாரு. ஆனாலும் மனசு தளராத பாலா, நரேன் உள்ளிட்ட பல இளம் ஹீரோக்களை லுக் டெஸ்ட் பண்ணி கடைசியில ஆர்யாவை கமிட் பண்ணி அந்தப் படத்தை ஆரம்பிச்சாரு. இந்த பிராசஸ்ல கிட்டத்தட்ட மூணு, நாலு வருசம் ஓடிடுது. அதேசமயம் நான் கடவுள் படத்தை காசில அப்படி எடுக்குறாங்களாம்.. இப்படி எடுக்குறாங்களாம்னு, ஆர்யா அகோரியா நடிக்கிறாராம்.. ஒரு சீன்ல பொணத்த கடிச்சு திம்பாராம்னு மீடியாவுல நியூஸ் வர வர.. மக்கள் மத்தியில படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கூடுது. ஆனா படம் வந்தப்புறம் மக்கள் எந்த காசி வாழ்க்கையையும் அகோரிகள் வாழ்க்கையையும் ஆர்வமா பாக்கணும்னு தியேட்டர் வந்தாங்களோ அது எல்லாமே படத்தோட முதல் 20 நிமிசத்துலயே முடிஞ்சுட ஆடியன்ஸுக்கு பெரும் ஏமாற்றமா போச்சு. குறிப்பா கதைக்கு தேவையில்லாம வாண்டடா பாலா, குரூரமான காட்சிகளை படத்துல வைக்கிறார்னு முதல்முறையா அவர் மேல நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பிச்சுது. விளைவு வசூல் ரீதியா படம் நஷ்டமாச்சு. ஆனாலும் படத்துக்கு தேசிய விருது கிடைச்சுது. ஆர்யா கரியர் நெக்ஸ்ட் லெவல் போச்சு. மொட்ட ராஜேந்திரன், சிங்கம்புலி போன்ற நடிகர்கள் இந்த படம் மூலமா கிடைச்சாங்க.

அடுத்ததா அதே ஆர்யாவையும் விசாலையும் வெச்சு பாலா எடுத்த படம்தான் அவன் இவன். இந்தமுறை குரூரம்லாம் இருக்காதாம் காமெடியா ஒரு படம்தான் பாலா பண்ணப்போறாராம்னு மீடியா ஒரு பக்கம் கொளுத்திப்போட இந்தப் படத்துக்கும் ஒரு மாதிரி எக்ஸ்ப்டேசன் கிரியேட் ஆச்சு. ஆனா இந்தப் படத்துலயும் ஜி.எம் குமாரை நிர்வாணமா ஓட விடுறது, ஆர்.கே.சுரேஷை கொடூரமா கொல்றது, லூசு ஹீரோயின், காமெடி போலீஸ், ஓவரா பேசுற சின்னப் பையன், ஐயர் ஜட்ஜ்னு அவரோட டிபிக்கல் டெம்ப்ளேட்லயே படம் இருக்க, ரசிகர்கள் ரொம்பவே கடுப்பானாங்க.
இந்த சரிவிலிருந்து மீள கொஞ்சம் டைம் எடுத்துகிட்ட பாலா, அடுத்ததா அதர்வா நடிப்புல ஆரம்பிச்ச படம்தான் பரதேசி. இந்தப் படம் நிஜமாவே ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துச்சு. தேயிலை தொழிலாளர்களின் வாழ்வியலையும் அதன் பின்னாடி இருக்குற முதலாளிகளின் சுரண்டல்தன்மையையும் பட்டவர்தனமா காட்டியிருப்பாரு பாலா. இந்தப் படத்துல பவர் ஸ்டார் சீனிவாசனை ஒரு ரோல்ல நடிக்க வைக்க கூப்பிட்டிருந்தாரு பாலா. ஆனா அவரால பாலா எதிர்பாக்குற நடிப்பைக் கொடுக்க முடியாததால அவரை தூக்கிட்டு அந்த ரோல்லதான் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரை நடிக்க வெச்சாரு பாலா.

பரதேசிக்கப்புறம் அவர் பண்ண ரெண்டு படம் தாரை தப்பட்டை, நாச்சியார். இந்த ரெண்டு படத்தைப் பத்தியும் நோ கமெண்ட்ஸ். இது ரெண்டையும் பாலாதான் பண்ணாரான்னு பாக்குறவங்களை யோசிக்கவைக்கும்.
அதுக்கப்புறம்தான் பாலாவுக்கு பிரச்சனைகள் முற்ற ஆரம்பிச்சுது. தன்னால உச்சத்துக்குப்போன விக்ரம், சூர்யா ரெண்டு பேரோடயும் மனஸ்தாபம் வர ஆரம்பிச்சுது. தெலுங்குல அர்ஜூன் ரெட்டி படத்தை பாத்த விக்ரம், அந்தப் படம் கொஞ்சம் சேது டைப்ல இருந்ததாலயும் பாலாவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும் தனக்கு வாழ்க்கை கொடுத்த பாலா மூலமாவே தன்னோட மகனும் அறிமுகமான மாதிரியும் இருக்கும்னு விக்ரம் நினைச்சு ஆரம்பிச்ச படம்தான் வர்மா. ஆனா வர்மாங்கிற டைட்டில், ஒட்டுத்தாடியோட துருவ் விக்ரம் இருக்குற மாதிரியான ஃபர்ஸ்ட் லுக்னு ஆரம்பம் முதலே படத்துக்கு நெகட்டிவ் வைப் கிரியேட் ஆச்சு. ஆனாலும் அதையெல்லாம் மீறி விக்ரம் உள்ளிட்ட டீம் படத்தை கான்ஃபிடெண்டா புரோமோட் பண்ணி ரிலீஸுக்கு ரெடி பண்ணாங்க. அப்போ நடந்த ஆடியோ லாஞ்ச்லதான் துருவ் விக்ரம் பாலாவை, பாலா மாமா பாலா மாமான்னு அட்ரஸ் பண்ண, சோஸியல் மீடியா கைஸ் அதை புடிச்சுக்கிட்டு இப்போ வரைக்கும் பாலா மாமா, ஹாரிஸ் மாமா, ஹரி மாமான்னு கூப்பிட்டிருக்கிறதுக்கு காரணம் அதுதான்.

Also Read – ரியல் ரஜினி.. ரீல் ரஜினி.. யார் நல்லவர்?

இந்த சூழ்நிலையிலதான் தமிழ் சினிமாவுல அதுவரைக்கும் நடந்திடாத ஒரு சம்பவம் நடந்துச்சு… படத்தோட ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, படத்தோட தயாரிப்பாளர் ‘எங்களுக்கு இந்தப் படத்தோட அவுட் புட் பிடிக்கலை. அதனால படத்தை ரிலீஸ் பண்ணலை’ங்கிற ஒரு வரலாறு காணாத அறிக்கையை வெளியிட, மொத்த திரையுலகமும் ஆடிப்போச்சு. அதுலயும் பாலா மாதிரியான ஒரு டைரக்டரோட ஒர்க் பிடிக்கலைன்னு சொன்னது அவரோட மொத்த சாதனைகளையும் பெருமைகளையும் கேள்விக்குள்ளாக்குற மாதிரி இருந்ததுதான் எல்லோருக்குமே ரொம்ப வருத்தமான ஒண்ணா இருந்துச்சு.குறிப்பா இது எல்லாத்துக்கும் பின்னாடி விக்ரம் இருந்தாருன்னும் சொல்லப்பட்டுச்சு. அதுக்கேத்தமாதிரி அவரும் மௌணமாவே இருந்தது சந்தேகத்தை அதிகமாக்குச்சு.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலதான் சூர்யா ‘உங்களுக்கு நான் இருக்கேன்’னு உள்ள வர்றாரு. தன்னோட அடுத்த படத்தை பாலா டைரக்ட் பண்றாருனு சூர்யா அறிவிக்க, வணங்கான் படம் ஆரம்பமாகுது. ஆரம்பத்துலயே இந்தப் படத்துக்காக நான் தனியா எதுவும் கெட்டப் மெயிண்டெய்ன் பண்ண முடியாது, சீக்கிரமா படத்தை முடிச்சுடனும்ங்கிற மாதிரியான சில கண்டீசன்களோடதான் சூர்யா வந்தாரு. இதுக்குலாம் ஒத்துக்கிட்டுதான் பாலாவும், வணங்கான் படத்தை சூர்யாவை வெச்சு ஆரம்பிச்சாரு. ஒரு செட்யூல் ஷூட்டிங் போய்ட்டிருக்கும்போதே ‘பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஒத்துவரலை’, ‘சூர்யாவை பாலா, நந்தா டைம் சூர்யா மாதிரி நடத்துறது சூர்யாவுக்கு பிடிக்கலை, அதனால படம் டிராப் ஆகிடும்’ங்குற மாதிரியான நியூஸ் வர, அதுக்கேத்த மாதிரி அடுத்த செட்யூல் ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டும் ஆகவும் சூர்யாவே வணங்கான் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் பண்ணி, அபப்டிலாம் எதுவும் இல்லன்னு மறைமுகமா பதில் சொன்னாரு. ஆனா அடுத்த சில மாதங்கள்லயே மீடியா சொன்ன மாதிரி படம் டிராப்தான் ஆச்சு.

இது மாதிரி நடக்குறது ஒண்ணு பாலாவுக்கு புதுசுல்லன்னாலும் திரும்ப சூர்யா ரோல்ல நடிக்க யாரை அப்ரோச் பண்றதுன்னு பாலா கொஞ்சம் தடுமாறிதான் போனாரு. அந்த டைம்லதான் அருண் விஜய், வணங்கான் படத்துக்குள்ள வர்றாரு. படம் திரும்ப டேக் ஆஃப் ஆகுது. இதோ படத்தோட ஷூட்டிங் மொத்தமும் நல்ல விதமா முடியதான் செஞ்சிருக்கு.

தன்னால ஆளான விக்ரம், சூர்யா ரெண்டு பேரும் அடுத்தடுத்து தன்னை நிராகரிச்சதுக்கப்புறம் பாலா இந்தப் படத்தை டைரக்ட் பண்ணியிருக்கிறதால கண்டிப்பா ஒரு மாபெரும் வெற்றிப்படமா இது இருந்தாதான் அவங்களுக்கு பதிலடி கொடுத்த மாதிரி இருக்கும்ங்கிற டென்சன் பாலாவுக்கு உண்டு. அதேமாதிரி, ஒரு பிரேக்குகாக காத்துக்கிட்டிருக்கிற அருண் விஜய் பாலாவை நம்பி சரியான டைம்ல கை கொடுத்திருக்கிறதால அவருக்கு அந்த பிரேக்கைக் கொடுக்கவேண்டிய கட்டாயம் பாலாவுக்கு ஏற்பட்டிருக்கு. இது எல்லாத்தையும் விட, ‘வர்மா’ படத் தயாரிப்பு நிறுவனம், ‘அவுட்புட்’ எங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்லி பட ரிலீஸை நிறுத்தியிருக்கிறதால.. என்னால இந்த ஜெனரேசன்லயும் ஒரு சென்சேனல் படத்தைக் கொடுக்க முடியும்னு நிரூபிக்கவேண்டிய நிர்பந்தமும் பாலாவுக்கு ஏற்பட்டிருக்கு. இது எல்லாத்தையும்விட தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்பட்டிருக்கிற மனக்கசப்புகளுக்கும் மருந்தா ‘வணங்கான்’ வெற்றி பாலாவுக்கு இருக்கனும்னு அவர் நலம் விரும்பிகள் விரும்புறாங்க.
இப்படிப்பட்ட சிச்சுவேசன்லதான் வணங்கான் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ரீசண்டா வெளியாகியிருக்கு. ஒரு கையில பெரியாரையும் இன்னொரு கையில பிள்ளையாரையும் வெச்சுக்கிட்டு களிமண் பூசி அருண் விஜய் நிக்கிற மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் சோசியல் மீடியாவுல ஒரு அட்டென்சனையும் டிஸ்கசனையும் ஏற்படுத்தியிருக்கு. இன்னும் சொல்லப்போனா இந்த போஸ்டர்ல பழைய பாலாவோட அம்சங்களும் நிறையவே தெரியுறதால படமும் நிச்சயமா எல்லாரையும் கவரும் ஒரு படமா வந்து வெற்றிப்படமா மாறும்னு நம்ப முடியுது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top