புத்தகங்கள் படிக்கனும், தமிழ் மற்றும் பிற இலக்கியங்களைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னு உங்களுக்கு ஆசை இருக்கா.. அப்போ உங்களுக்கான கட்டுரைதான் இது. யூ டியூப் சேனல்களில் இன்றைக்கு இல்லாத விஷயங்களே இல்லைனு சொல்லலாம். நமக்கு தேவையான பல விஷயங்களையும் யூ டியூப் மூலமா தெரிஞ்சுக்கலாம். அந்த வகையில், புத்தகங்களை தமிழில் அறிமுகப்படுத்துற சில யூ டியூப் சேனலகளை இந்தக் கட்டுரையின் வழியாக தெரிஞ்சுக்கலாம். வாங்க!
The Book Show
ஆர்.ஜே.ஆனந்தியோட சேனல்தான் `The Book Show’. Self-help, Psychology, Finance, Science, Relationships மற்றும் Life-style உட்பட பல ஜானர்களில் வெளியாகும் புத்தகங்கள் பற்றியும் அறிமுகம் பண்றாங்க. ஆங்கில புத்தகங்களை அதிகமா ரிவியூ பண்ற இவங்க சமீப காலமா தமிழ் புத்தகத்தையும் ரிவியூ பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ரொம்ப எனர்ஜியான பெர்சன் இவங்க. இவங்களொட வீடியோஸ பார்த்தா நமக்கும் அந்த புக்கை படிக்கனும்னு ஆசை வந்துரும்னா பார்த்துக்கோங்க!
White Nights
ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல் பெயர் `வெண்ணிற இரவுகள்’. இதே பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சேனல்தான் `வொயிட் நைட்ஸ்’. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியான புத்தகங்களை இந்த சேனலின் வழியாக நமக்கு அறிமுகம் செய்கின்றனர். கார்த்திக் என்பவர்தான் இந்த சேனலை ஆரம்பித்து நடத்தி வருகிறார். புத்தகங்களை அறிமுகப்படுத்த ஒரு தளம் இருந்தால் நல்லா இருக்கும்னு அவர் யோசிச்சு நண்பர்களிடமும் ஆலோசனைக் கேட்டு ஆரம்பிக்கப்பட்ட சேனல்தான் இது. ரொம்பவும் ஃபேமஸான புத்தகங்களை மிகவும் எளிமையாக கார்த்திக் அறிமுகம் செய்து வைக்கிறார்.
Try With Shanmu
ஆங்கில புத்தகங்களின் அறிமுகம் அல்லது கதை தெரிஞ்சுக்கனும்னு நீங்க ஆசைப்பட்ட `ட்ரை வித் சண்மு’ ரொம்பவே பயனுள்ள யூ டியூப் சேனலாக இருக்கும். நிறைய ஆங்கில நாவல்களின் கதையை தன்னுடைய யூ டியூப் பக்கம் வழியாக சண்முகப்பிரியா சொல்றாங்க. கதைகளை மிகவும் சுவாரஸ்யமாக சொல்றாங்க. இதோட சேர்த்து குக்கிங், மேக்கப் மற்றும் ஸ்கின் கேர் தொடர்பான வீடியோக்களையும் பதிவிடுறாங்க.
MR. AR
அப்துல் ரஹ்மான் என்பவருடைய சேனல்தான் `MR. AR’. பக்காவான புக் ரிவியூ சேனல் இது. அதிகமான ஆங்கிலப் புத்தகங்களை ரிவியூ பண்ணி போடுறாரு, ஏ.ஆர். அப்பப்போ சில தமிழ் புத்தகங்களையும் ரிவியூ பண்றாரு. இவர் ரிவியூ பண்ற புத்தகங்கள் எல்லாம் கொஞ்சம் சுவாரஸ்யமானதாகே இருக்கும்.
Arivu Square
ஹரி ஸ்ரீகாந்தன் என்பவர் நடத்தி வரும் சேனல்தான் இது. ஆங்கில புத்தகங்களின் சம்மரிகளை தமிழில் சொல்லி.. வாரம் ஒரு வீடியோவாகப் பதிவு செய்து வருகிறார். லைஃப் சேஞ்சிங் புக்ஸ், ஆட்டோபயோகிராஃபி புக்ஸ் மற்றும் ஜெனரல் நாலேட்ஜ் புக்ஸ் பற்றி இவருடைய வீடியோக்கள் இருக்கும். “எனக்கு சொல்லிக் கொடுக்குறதுனா ரொம்ப புடிக்கும். நாம படிக்கிற புக்ஸ்ல இருக்குற ஒரு தாட் நம்மளோட வாழ்க்கையை மாற்றும். என்னை நம்பி இந்த சேனலைப் பாருங்க. உங்க நாலேட்ஜ்க்கு நான் கேரண்டி” எப்டினு ஸ்ரீகாந்தன் நம்பிக்கை கொடுக்குறாரு.
Also Read : மதுரையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகைக்காக சிறப்பு ஏற்பாடு; அதிகாரி மீது நடவடிக்கை – என்ன நடந்தது?