ஏன்யா இப்படி பாடி வைச்சிருக்கீங்க… சந்தோஷ் நாராயணன் தக்லைஃப் சம்பவங்கள்!

தமிழ் சினிமால புது சவுண்ட்ஸ கொடுக்குற மியூசிக் டைரக்டர்தான் தனியா தெரிவாங்க. முன்னணி மியூசிக் டைரக்டராகவும் பெரிய படங்கள்ல வொர்க் பண்ற மியூசிக் டைரக்டராவும் இருப்பாங்க. அப்படி ஒருத்தர்தான் சந்தோஷ் நாராயணன். அவர் பண்ற எல்லாப் படங்களுமே அட்டகாசமா இருக்கும். அவரோட மொத்த கரியர் படங்களையும் எடுத்துப் பார்த்தா ஒருசில படங்களைத் தவிர மீதி எல்லாப் படங்களுமே தரமான சம்பவங்கள் தான். ஆனால், மனுஷன் பாட ஆரம்பிச்சார்னு வைங்க. ஒவ்வொரு லைனும் தக் லைஃபாதான் இருக்கும். சிங்கட் பிரதீப் சொல்லுவாரு, “அவர் பாட்டு பாடுறவனே இல்லை”னு. இருந்தாலும் அவர் பாடுன சில பாடல்கள் பலரோட ஃபேவரைட் லிஸ்ட்ல இருக்கும். அதையும் தாண்டி அவர் பண்ண தரமான தக் லைஃப் சம்பவங்களை இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

ஜெகன் கிரிஷ்ணன் ஒரு ஸ்டான்டப் காமெடில சந்தோஷ் நாராயணன் பத்தி பேசுவாரு. செமயா இருக்கு. அதுல என்ன சொல்லுவாருனா, “விருப்பமே இல்லாத மாதிரி பாடுவாரு. யாரோ ஃபோர்ஸ் பண்ணி, வற்புறுத்தி, என்னை ஏன்டா பாட வைக்கிறீங்கன்ற மாதிரி பாடுவாரு. இத்தனைக்கும் அவர் போட்ட மியூசிக்லயே அப்படி தான் பாடுவாரு”னு கலாய்ப்பாரு. ஆக்சுவலா அவர் பாட்டுலாம் கேட்டா எக்ஸாக்டா அப்படிதான் நமக்கு ஃபீல் ஆகும். ரொமான்டிக் சாங்லாம் அல்டிமேட். மனுஷன் வாய்ஸ் இருக்கே… சரி, அதுக்கு சில எக்ஸாம்பிள்ஸ்தான் இனிநான் சொல்லப்போற லிஸ்ட். சந்தோஷ் நாராயணன் செம ஜாலியான ஆள். அதுனால, நாம சொல்றதையும் ஜாலியா எடுத்துப்பாருனு நம்புவோம்.

காலி பசங்கடா

கப்பல் படத்துக்கு சந்தோஷ் மியூசிக் போடல. இந்தப் படத்துல கெட்ட வார்த்தை பேசுற போட்டி ஒண்ணு வரும். அந்தப் போட்டில வைபவ் ரௌடிகளைப் பார்த்து கெட்ட வார்த்தை பேசுவாரு. அதுல ஒரு லைன் வரும் “காளை மாட்டையே கதற கதற தான்” அப்டினு அந்த லைன்லாம் இவரைத் தவிர வேற யாரு பாடுனாலும் செட் ஆகியிருக்காது. பாட்டு ஃபுல்லாவே லிரிக்ஸ் இந்த மாதிரிதான் இருக்கும். “நான் பருப்பு, நீ செருப்பு”னு அவர் வாய்ஸ்க்கு பாட்டு எழுதுன மாதிரி இருக்கும். வொய் பிளட்டு சேம் பிளட்டு… யோவ் சந்தோஷ் வேறலெவல்யா நீ!

சிட்டுக்கு சிட்டுக்கு

பொதுவா தமிழ்ல எல்லாப் படத்துலயும் ஹீரோவோ ஹீரோயினோ புரொபோஸ் பண்ணி அவங்க லவ் பண்றவங்க சிரிச்சா செம மெலடியா ஒரு பாட்டு வரும். அப்படியே காதல்ல உருகி தள்ளியிருப்பாங்க. லிரிக்ஸ்லாம் அப்படி அல்வா மாதிரி எழுதி கொடுப்பாங்க. இப்போ நான் சொன்ன எதுவுமே இல்லாத ஒரு ரொமான்ஸ் பாட்டு சிட்டுக்கு சிட்டுக்கு. ஏ1 படத்துல வர்ற இந்தப் பாட்டுக்கு சந்தோஷ் நாராயணன்தான் மியூசிக் போட்டு பாடியிருப்பாரு. “மஜிலியா சுத்த உட்டா ரங்க ராட்டினம். எங்கம்மாவாண்ட பொண்டாட்டினு உன்னைக் காட்டணும்”னு தல வாய்ஸ்ல டக்கரா பாடியிருப்பாப்புல. அதுலயும் சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு பாடுறதுலாம் அல்டிமேட்.

பச்சா பச்சிக்கி

சந்தானம் பாட்டுதான் இதுவும். பாரிஸ் ஜெயராஜ் படத்துல வரும். இந்தப் பாட்டோட ஹைலைட்டே பாட்டு வரிகள்தான். “பச்சா பச்சிக்கே நமஸ்தே கூட ஐந்து பத்து ரூபாய் சமோசே”னு பாட்டு தொடங்குறதுல இருந்து சந்தோஷ் நாராயணன் தக் லைஃப் பண்ண ஆரம்பிச்சிருவாரு. “வந்திரு வந்திரு வந்திரு வந்திரு தரமாட்டேன் தந்திரு” லைன்லாம் கேட்டு செம சிரிப்பு வரும். இந்த மாதிரி குட்டி குட்டியா நிறைய பாட்டுல அவர் பண்றது தான் ஹைலைட்டே. சந்தோஷ் பண்ற தக் லைஃபாவும் அதுதான் நமக்கு தெரியும். இதுக்கு முன்னாடிலாம் யாரும் இவரை மாதிரி பாட்டுல இந்த மாதிரி ட்ரை பண்ணது இல்லை. அங்கதான் தலைவன் நிக்கிறாரு.

பேபி

சந்தோஷ் நாராயணன் ஆல்பத்துல எனக்கு ரொம்ப ஃபேவரைட்டான ஒரு ஆல்பம் ‘ஜிகர்தண்டா’. அந்தப் படத்துல நான்தான் நடிப்பேன்னு அசால்ட் சேது சொன்னதும், வேற வழியில்லாமல் படத்தை தொடங்குவாங்க. அப்போ, இந்தப் பாட்டு வரும். ஏற்கெனவே, அந்த சீனைப் பார்த்து நாம கொஞ்சம் அப்செட் மோட்ல இருப்போம். அப்போ தலைவன் வாய்ஸ் “ஓ ஆசை வந்து யாரை விட்டுச்சு பேபி”னு பாட்டு தொடங்கும். வேற லெவல் தக் லைஃபா இருக்கும். அந்த சிச்சுவேஷனுக்கு அந்த லிரிக்ஸ், மியூசிக், வாய்ஸ் எல்லாமே அப்படி செய் ஆயிருக்கும்.

எவன்டா எனக்கு கஸ்டடி

ரீசண்ட் டைம்ஸ்ல நிறைய பேர் முனுமுனுக்குற பாட்டு இதுதான். மகான் படத்துல வந்த இந்தப் பாட்டையும் சந்தோஷ்தான் பாடியிருப்பாரு. எவன்டா எனக்கு கஸ்டடி, நாம எவ்ளோ பெரிய லம்பாடினு வழக்கம்போல அவருக்குனே லிரிக்ஸ் எழுதி கொடுத்துருப்பாங்க. தலைவன் அவர் ஸ்டைல்ல பட்டையைக் கிளப்பி விட்ருப்பாரு.

மாட்னா காலி

சந்தோஷ் நாராயணனைப் பார்த்து பலரும் வாயைப் பொளந்தது இந்தப் பாட்டுலதான். கமல் கெட்டப்பை ஒரே பாட்டுல மிஞ்சுற மாதிரி அத்தனை கெட்டப் போட்டு அட்டகாசம் பண்ணியிருப்பாரு. பாட்டு பேரே செம  பேரு. “மாட்னா காலி மாட்ரவர ஜாலி”னு தொடங்கி “ஒடியா ஒடியா ஒடியா”னு குரல்லயே வெரைட்டி காட்டியிருப்பாரு. ஒடியா சொல்லும்போது அவர் ஆட்டிடியூட்லாம் பார்க்கும்போது யார்யா நீ? இவ்ளோ நாளு எங்கயா இருந்த?னு தோணும். “அங்கப்பாரு இங்கப்பரு”னு சொல்றது, “தவளைக்கிட்ட தட்டான் செத்தான், பாம்புக்கிட்ட தவளை செத்தான், கீரிக்கிட்ட பாம்பே செத்தான் மாட்னா காலி”னு சொல்றது, “அச்சச்சோ அவரா?, அச்சச்சோ அப்பப்பா, அச்சாப்போ அப்படியா, அவரா, இவரா, மாஸ் பண்ணு மாப்ள”னு சொல்றது ஆ… ஆ…னு இடைல இடைல சவுண்ட் உட்றது – இப்படி மொத்தப் பாட்டையும் கேட்டா தரமான தக்லைஃபா இருக்கும். பாட்டுல இப்படிலாம் பண்ண முடியுமா தோணும். பாட்டு சரியான சிரிப்பா இருக்கும்.

அம்மா நானா

ரீசண்ட் டைம்ஸ்ல வந்த சந்தோஷ் நாராயணனின் இன்னொரு தக் லைஃப் சம்பவம்தான் இது,. குலுகுலு படத்துல இந்தப் பாட்டு வரும். “அம்மா அம்மா நானா, அம்மா அம்மா நானா, அம்மா அம்மா நானா, அம்மா அப்பாட்ட போனும்” – என்னய்யா லிரிக்ஸ் இது. உங்களுக்கு மட்டும் பாடுறதுக்கு எப்படி இப்படிலாம் லிரிக்ஸ் எழுதி தர்றாங்கனு கேக்க தோணும். வைப் பண்ண சரியான பாட்டு. அந்த மனுஷன் குரல் ஒரு தடவை புடிச்சுப் போச்சுனா என்ன பிரதீப் குமார்? என்ன ஹரிஹரன்? என்ன யுவன்? என்ன சித் ஸ்ரீராம்? சிங்கர் சந்தோஷ் நாராயணன் தெரியுமா?னு நாம கேக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் பாடுன பாட்டுல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!

5 thoughts on “ஏன்யா இப்படி பாடி வைச்சிருக்கீங்க… சந்தோஷ் நாராயணன் தக்லைஃப் சம்பவங்கள்!”

  1. I like what you guys are up too. Such intelligent work and reporting! Keep up the superb works guys I’ve incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my web site 🙂

  2. Thank you for another informative web site. Where else may I get that type of info written in such a perfect approach? I’ve a project that I am just now operating on, and I have been at the glance out for such information.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top