கமல் - நதியா

கமல் – நதியா… மிஸ்ஸான செம்ம காம்போ – காலம் செய்த மேஜிக்!

‘ராஜாதி ராஜா’, ‘ராஜகுமாரன்’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலத்திலேயே திடீரென நடிப்புக்கு பிரேக் விட்டு திருமணம் செய்துகொண்டவர் நதியா. அதன்பிறகு 2005-ஆம் ஆண்டு வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி’ படம் மூலம் தனது செகண்ட் ரவுண்டை தொடங்கிய நதியா, தற்போதும் மோஸ்ட் வாண்டட் நடிகையாக இருந்துவருகிறார். சிவாஜி தொடங்கி விஷால் வரை பல ஹீரோக்களுடன் இணைந்து நதியா நடித்திருந்தாலும் ஏனோ கமலுடன் மட்டும் அவர் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவேயில்லை.

கமல்ஹாசன்

இந்நிலையில் நதியா தற்போது கமலுடன் நடிக்கப்போகிறார் என்றும் அதுவும் அவருக்கு ஜோடியாகவே நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது.  மலையாளத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘த்ரிஷ்யம்’ முதல் பாகத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படம் மிகப்பெரிய கலெக்சனைப் பெற்றது. அதைப்போலவே ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தையும் கமலை வைத்தே தயாரிக்கத் திட்டமிட்டனர் படத்தின் தமிழ் உரிமையை பெற்றிருக்கும் தயாரிப்பாளர்கள். அங்குதான் ஒரு சிறு பிரச்சனை உருவாகியது.

‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் கௌதமி. அவருடன் கமல் இணக்கமாக இருந்தபோது அந்தப் படம் உருவானது. தற்போது இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுள்ள நிலையில் கமல் அவருடன் இணைந்து நடிப்பது என்பது நடக்காத காரியமாக உள்ளது. எனவே இரண்டாம் பாகத்தில் வேறொரு நடிககையை நடிக்கவைக்கத் திட்டமிட்டனர். அதன்படி மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த மீனாவையே தமிழிலும் நடிக்கவைக்கத் திட்டமிட்டனர். ஆனால், மீனாவின் நடிப்பின்மீது கமலுக்கு ஏனோ பெரிய அபிப்ராயம் இல்லாததால், நதியாவை அணுகியிருக்கின்றனர் படக்குழுவினர். நதியாவும் தனது கரியரில் இருந்த ஒரு பெரும் குறையைக் களையப்போகும் மகிழ்ச்சியில் மிகுந்த சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

நதியா

‘மாஸ்டர்’ ஹிட் தந்த லோகேஷ் கனகராஜூடன் கமல் இணையும் படத்திற்கான வேலைகள்தான் தற்போது பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்,அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே, வெகு விரைவிலேயே ‘பாபநாசம்-2’ படத்தின் ஷுட்டிங்கை தொடங்கி முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கமலும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாரம்.

அதன்படி அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஷூட்டிங்கை முடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2022 பொங்கலுக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிட முடிவு செய்திருக்கின்றனராம் படக்குழுவினர். இதற்கிடையில் கொரோனாவால் தியேட்டர் ரிலீஸில் ஏதாவது பிரச்சனை வந்தாலும் மலையாளத்தைப் போலவே இங்கும் ‘பாபநாசம்-2’ படத்தை ஓடிடி மூலமாகவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்றாற்போல கையைக் கடிக்காதவகையில் சிக்கனமாக படத்தை முடிக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர் படக்குழுவினர்.

Also Read : உங்கள் காலைப் பொழுதை இனிமையாக்கும் ஒன்பது பாடல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top