பிரியா அட்லீ

அட்லி ஹேட்டர்ஸுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க… மனைவி ப்ரியா கொடுத்த பதில்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர், அட்லி. இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பின்னர், `ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் வெற்றி பெற்று அட்லிக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதனையடுத்து, `தெறி, மெர்சல், பிகில்’ என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்தாலும் இயக்குநர் அட்லியின் மீது பழைய படங்களைக் காப்பி அடித்து படங்களை எடுப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு. 

பிரியா – அட்லி

சமூக வலைதளங்களில் அட்லியின் படங்களின் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து அவரையும் பலமுறை கேலிக்கு ஆளாக்கியுள்ளனர். எனினும், விஜயின் சினிமா கெரியரில் அட்லி இயக்கிய மூன்று படங்களும் மிகவும் முக்கியமானவை என்றே கூறலாம். விஜய்க்கு இளைய தளபதியில் இருந்து தளபதி என்னும் டைட்டில் மாறியது அட்லி இயக்கிய மெர்சல் படத்தில் இருந்துதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அட்லி பாலிவுட்டில் தனது தடத்தை பதிக்க இருக்கிறார். அட்லி தற்போது இந்தியில் ஷாரூக்கான் நடிக்க இருக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் முடிந்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்லியின் மீதான விமர்சனங்களுக்கு அவரது மனைவி பிரியா அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளங்களின் வழியாக பதிலடி கொடுப்பார். இந்த நிலையில், அட்லியின் மனைவி பிரியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், “அட்லியை வெறுப்பவர்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?” என பிரியாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ப்ரியா, “எங்கள் மீது  அதிகமாக அன்பு செலுத்துபவர்களுக்கு நன்றி. அன்பைப் பரப்புவோம்” என்று பதிலளித்துள்ளார். பிரியாவின் பதில் அட்லி மற்றும் பிரியா ரசிகர்களிடையே வைரல் ஆகியுள்ளது. 

Also Read : நடன உலகைக் கலக்கும் மசாகா கிட்ஸ் – யார் இவங்க?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top