நயன் – விக்கி கல்யாணம்… விருந்தினர்கள் முதல் மெனு வரை… All updates!

நயன்தாரா – விக்னேஷ்சிவன் லவ்கீக ஸ்டோரி எல்லாருக்கும் தெரியும். ஒரு ஃபேன் பாயா ‘நானும் ரௌடிதான்’ கதையை விக்கி, நயன்கிட்ட சொல்ல போய்ருக்காரு. கதையை நயன் ஓகே பண்ணலனாலும் பரவால்ல, அந்த கதையை சொல்ற 2 மணிநேரம் அவங்க்கூட இருந்தா போதும்னு நினைச்சுட்டுதான் போய்ருக்காரு. ஆனால், இன்னைக்கு ஃபேன் பாய்ல இருந்து பாய் பெஸ்டியா மாறி, பாய் பெஸ்டில இருந்து பாய் ஃப்ரெண்டா மாறி, பாய் ஃப்ரெண்டுல இருந்து லைஃப் பார்ட்னரா விக்கி, நயனுக்கு மாறிட்டாரு. ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது நம்ம ஃப்ரெண்ட் லவ் பண்ற பொண்ணு பேரை வைச்சு ஓட்டுவாங்க. கடைசில பெஸ்ட் பேர்னு நம்ம கூட்டத்துல பேரும் வாங்கிருவாங்க. அப்படிதான் நயனும் விக்கியும். அவங்க கல்யாணம் பிரம்மாண்டமா இன்னைக்கு நடந்துச்சு. இதுல அவங்க லவ்வ வெளிய போட்டு விட்ட பையன், மன்சூர் அலிகான்தான் .சரி… கல்யாணத்துல யாருலாம் கலந்துக்கிட்டாங்க… அதைத்தான் இந்த வீடியோல தெரிஞ்சுக்கப்போறோம்.

நயன் - விக்கி
நயன் – விக்கி

ரஜினிகாந்த் – தர்பார், அண்ணாத்தனு சூப்பர் ஸ்டார்கூட சேர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் சேர்ந்து ரெண்டு படம் நடிச்சிட்டாங்க. லேடி சூப்பர் ஸ்டார் கல்யாணத்துக்கு சூப்பர் ஸ்டார் வரலைனா நல்லாருக்குமா? அதனாலதான் ஷூட்டிங்க்கு கரெக்டா போறமாதிரி நயன் கல்யாணத்துக்கும் கரெக்டான டைம்க்கு நம்ம ரஜினிகாந்த் வந்துட்டாரு.

ரஜினிகாந்த் - நயன்தாரா
ரஜினிகாந்த் – நயன்தாரா

ஷாருக்கான் – கல்யாண மாப்பிள்ளைக்கே டஃப் கொடுக்குற மாதிரி செமயான காஸ்ட்யூம்ல ஷாரூக்கான் வந்து கலக்கியிருக்காரு. ஒரு ஃபங்ஷன்ல ஷாரூக்கான் சொல்லுவாரு. நயன்தாராவ பாலிவுட்க்கு கடத்திட்டு போய்டுவேன்னு. சொன்னது மாதிரியே ஜவான்ல நடிக்க அட்லீயை வைச்சு கடத்திட்டுப் போய்ட்டாரு, ஷாரூ. அவரோட வருகை, லுக் எல்லாம் சோஷியல் மீடியால செம வைரல்.

ஷாரூக்கான்
ஷாரூக்கான்

அஜித், விஜய் – ஏகே 62 டைரக்டர் விக்னேஷ் சிவன். அப்போ அவர் கண்டிப்பா வருவாருப்பானு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனால், அவரோட மனைவி ஷாலினிதான் கல்யாணத்துக்கு வந்துருக்காங்க. சிலர், இல்லை… இல்லை இது அஜித்தும் வந்திருக்காருனு அடம் பிடிச்சுட்டு இருக்காங்க. அஜித் விஜய் சேர்ந்து எண்ட்ரி கொடுத்தாங்கனுலாம் போடுறாங்க. ஆனால், அதுக்கான சோர்ஸ் ஒண்ணுமில்லைப்பா உண்மையிலேயே அவங்க வந்தாங்களானு நெட்ஃபிளிக்ஸ்காரன்கிட்டதான் கேக்கணும்.

நயன்தாரா
நயன்தாரா

சூர்யா, கார்த்தி – ரோலக்ஸ் கல்யாணத்து வந்துருக்காருங்க. அதாங்க… சூர்யா. தன்னோட மனைவி ஜோதிகாகூட வந்துருக்காரு. அவங்களும் நயந்தாரா கல்யாணத்துக்கு கூலா ஒரு எண்ட்ரி கொடுத்துருக்காங்க. காஷ்மோரானு ஒரேஒரு படத்துலதான் ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. அதுவும் வில்லன் மாதிரியான கேரக்டர். ஆனால், செமயா இருக்கும், ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வரும்போது. கார்த்தியும் நயன் கல்யாணத்துக்கு வந்து அட்டண்டன்ஸ போட்டுட்டாரு.

கார்த்தி
கார்த்தி

விஜய் சேதுபதி – நயன், விக்கி காதல் தொடங்குனதே விஜய் சேதுபதி படத்துல இருந்துதான்னு தெரியும். இப்போ, காத்துவாக்குல ரெண்டு காதல் வரைக்கும், நயன்தாரா – விக்கி – விஜய் சேதுபதி நட்பு தொடர்ந்துட்டு இருக்கு. அவங்க கல்யாணத்து விஜய் சேதுபதி வராமல் இருப்பாரா? குடும்பத்தோட வேஷ்டி சட்டையோட வந்து மணமக்களை வாழ்த்தியிருக்காரு, விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி - நயன்தாரா
விஜய் சேதுபதி – நயன்தாரா

அட்லீ – ராஜா ராணில இருந்து தொடங்குன ஃப்ரெண்ட்ஷிப், இப்போ ஜவான் வரைக்கும் தொடர்ந்துட்டே இருக்கு. இதுக்கப்புறம் நயன்தாரா பாலிவுட்லயும் ஒரு கலக்கு கலக்குவாங்கனு நினைக்கிறேன். அதுக்கு விக்னேஷ் சிவன் நல்ல லக்கா இருக்கட்டும். அப்படி திக்கான ஃப்ரெண்ட்ஸா இருந்துட்டு கல்யாணத்துக்கு வராமல் இருப்பாங்களா? அட்லீயும் ஷாரூக்கூட வந்து மாஸ் பண்ணியிருக்காரு.

அட்லீ
அட்லீ

போனீ கபூர் – நயன்தாரா இதுவரைக்கும் போனீ கபூர் படங்கள்ல எதுவும் நடிச்ச மாதிரி இல்லை. ஆனால், ஏகே 62-ல நிறைய வாய்ப்புகள் இருக்கு. அந்த கனெக்ட்னாலகூட வந்துருக்கலாம். நல்ல வேளை ஃபேன்ஸ உள்ள விடலை. இல்லைனா, அங்கையும் போனீ மாம்ஸ்கிட்ட அப்டேட் விடுங்க ப்ரோனு கத்தியிருப்பாங்க.

போனீ கபூர்
போனீ கபூர்

டிடி – பொதுவா நடிகர் – நடிகைகள், டைரக்டர் – நடிகர்கள் இவங்களுக்குலாம்தான் கெமிஸ்ட்ரி செமயா வொர்க் அவுட் ஆகும்ணு சொல்லுவாங்க. ஆனால், ஒரு ஆங்கருக்கும் நடிகைக்கும் கெமிஸ்ட்ரி செமயா வொர்க் அவுட் ஆகுதுனா… அது டிடி – நயன்தாராக்குதான். விருது விழாலயும் சரி, இண்டர்வியூலயும் சரி ரெண்டு பேருக்கும் இடையில உள்ள கெமிஸ்ட்ரி செமயா இருக்கும். அவங்களும் பட்டுப்புடவையோட மங்களகரமா நயன் – விக்கி கல்யாணத்துக்கு வந்துருக்காங்க.

டிடி
டிடி

கௌதம் வாசுதேவ் மேனன் – நயன்தாரா – விக்னேஷ் கல்யாணத்தை நெட்ஃபிளிக்ஸுக்காக டைரக்ட் பண்றது இவர்தான்னு சொல்றாங்க. அவரும் வழக்கம்போல ஜி.வி.எம்-க்குனு ஒரு ஸ்டைல் இருக்கும்ல அந்த ஸ்டைல்ல கல்யாணத்துக்கு வந்துட்டாரு.

ஜி.வி.எம்
ஜி.வி.எம்

ஜெயம் ரவி, மோகன் ராஜா – தனி ஒருவன் படத்துல ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் செமயா வொர்க் அவுட் ஆகியிருக்கும். அதுவும் அந்த லவ் புரொபோஸல் சீன்ஸ்லாம் வேற லெவல். இவங்களும் தங்களோட அன்பை தெரிவிக்கும்விதமா கல்யாணத்துல கலந்துக்கிட்டாங்க.

வசந்த் ரவி
வசந்த் ரவி

இவங்களையெல்லாம் தவிர்த்து பார்த்தா மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி இப்படி ஏகப்பட்ட செலிபிரிட்டிகள் நயன் – விக்னேஷ்சிவன் கல்யாணத்துல கலந்துக்கிட்ருக்காங்க. தண்ணீர் பாட்டில்ல இருந்து சாப்பாட்டு மெனு வரைக்கும் எல்லாமே டிஃபரண்ட்டா ட்ரை பண்ணியிருக்காங்க. பார் கோடு கொடுத்துருக்காங்க. அதை ஸ்கேன் பண்ணாதான் உள்ளயே விடுவாங்களாம். சரி, அந்த நெட்ஃபிளிக்ஸ் டாகுமெண்ட்ரி எப்போ சார் விடுவீங்க!

Also Read: சுவாதியை பரமன் கொல்வதுதான் சுப்ரமணியபுரம் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்டா… 4 தகவல்கள்; ஒரு வதந்தி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top