ஏழரை சனி, அஷ்டமத்து சனி, விரைய சனி – வித்தியாசம் தெரியுமா?

சனீஸ்வரபகவான்தான் நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவராகக் காட்சி அளிக்கிறார். நம்முடைய ஜாதகத்தில் எத்தகைய சனி நிகழ்ந்தாலும் நம்முடைய வினை பயன் மூலமே நன்மையோ தீமையோ நிகழ்கிறது. ஜாதகத்தில் என்ன வகையான சனிகள் இருக்கின்றன.. அவை என்னவெல்லாம் பலன்களை நமக்குக் கொடுக்கும் என்பதைப்பற்றி தான் நாம இந்தக் கட்டுரையில் பார்க்கப்போறோம்.

சனீஸ்வர பகவான்
சனீஸ்வர பகவான்

ஏழரை சனி

ஏழரை சனி என்பதனை தோஷமாக கருதுவது தவறு என்பதனை நாம் முதலில் உணர வேண்டும். ஏழரை சனியை ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று முறை சந்திப்பார்கள். 22 வருடங்களுக்கு ஒருமுறை ஒருவருடைய ஜாதகத்தை ஏழரை சனி ஆட்சி செய்கிறது. இந்த சனி காலத்தில் சிறு சிறு தடங்கல்கள் மட்டுமே ஏற்படுமே தவிர, பெரிய தடங்கல்கள் ஏதும் ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது தற்காலிகமே தவிர நிரந்தரமானது இல்லை. ஏழரை சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு ஏற்படும் பெரிய ஆபத்தை சிறிய தடைகள் மூலம் தடுத்து நிறுத்துவதே ஏழரை சனியின் வேலையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சனிபகவான் ஆட்சி செய்யும் போது ஏழரை சனியானது பிறக்கிறது. சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து எள்ளுபொடி கலந்த தயிர் சாதத்தைக் காக்கைகளுக்கு படைத்துவர ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

ஜென்ம சனி

ஜென்ம சனி என்பது, ஒருவரின் ராசியில் சனிபகவான் ஒன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது பிறக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்மசனி நிகழும் போது, பல்வேறு இழப்புகள் அல்லது அதற்கு ஏற்றார்போல துன்பங்கள் ஏற்படும் என்பது ஜோதிட வல்லுநர்கள் சொல்லும் வாக்கு. ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் ஜென்ம சனியின் தாக்கத்தைக் கட்டுபடுத்த உதவும். வியாழக்கிழமை தோறும் தஷிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை சாத்தி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

சனீஸ்வர பகவான்
சனீஸ்வர பகவான்

மங்கு சனி

மங்கு சனி என்பது ஒருவருடைய குழந்தை பருவத்தில் தொடங்கி அவருடைய 25 வயது வரைக்கும் வருவதாகும். இச்சனியின் தாக்கமானது பெரிதளவில் கிடையாது. இச்சனியின் ஜாதககாரர்களுக்கு தாக்கம் ஏற்படுவதை விட அவர்களின் பெற்றோர்களுக்கே தாக்கமானது காணப்படும்.

பொங்கு சனி

பொங்கு சனி என்பது ஒருவருடைய 35 வயதில் தொடங்கி 55 வயது வரை ஆட்சி செய்யும். இச்சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு அக்காலகட்டத்தில் பொருளாதார ரீதியான தாக்கம் ஏற்படும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

மாரக சனி

மாரக சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு மரணம் உண்டாகும் என்பது ஐதீக ரீதியாக எழுதப்பட்டது. ஆனால் இச்சனியின் பார்வை படும் ஜாதககாரர்களுக்கு மரணம் நிச்சயம் என்பது கிடையாது. மரணத்திற்கு சரியாக உள்ள பிரச்னைகள் உண்டாகும் என்பதே உண்மை.

அஷ்டம சனி

அஷ்டம சனி என்பது, முன் ஜென்மத்தில் ஒருவர் செய்யும் வினகளைப் பொறுத்து சனி பகனான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பதாகும். வயதிற்கேற்ப அஷ்டமத்து சனி பிரச்னைகளைக் கொடுக்கும். அந்த வகையில், 4 முதல் 15 வயதுள்ளோருக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள் மற்றும் 40 வயட்திற்குட்பட்டவர்களுக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னைகள் தோன்றும் என்றும் கூறுகிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அஷ்டமத்து சனியில் இருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கேற்ற வேண்டும்.

குச்சனூர் ஆலயம்
குச்சனூர் ஆலயம்

அர்த்தாஷ்டம சனி

அர்த்தாஷ்டம சனியானது சனிபகவான் ராசியின் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பிறக்கிறது. பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தும் சனியாகும். தொழில் பாதையை இச்சனியானது பார்ப்பதனால் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். இச்சனியின் தாக்கத்தை தாங்குவதற்கு ஞாயிற்றுகிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரையும் சனிக் கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்றும் வழிபடுதல் வேண்டும்.

விரைய சனி

விரைய சனி ஏழரை சனியின் முதற்கட்டமாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு ஜாதகத்தில் 2 1/2 ஆண்டு காலம் ஆட்சி செய்கிறது. இச்சனியின் காலத்தில் பொருளாதரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

பாத சனி, வாக்கு சனி

பாத சனி மற்றும் வாக்கு சனி என்பது எந்த ராசியில் சனி அமர்கிறாறோ அந்த ராசியின் முன்பாக உள்ள ராசியில் இச்சனியானது பிறக்கிறது. பாத சனி என்பதால் பயணங்களில் கவனமாக இருக்கும் காலமாகப் பார்க்கப்படுகிறது. வாக்கு சனி நிலவும் போது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும் தருணம் ஏற்படும். வாக்கை காப்பாற்ற செய்யும் முயற்சிகளைத் திருந்த வண்ணம் செய்தல் வேண்டும். இத்தாக்கத்தை எதிர்கொள்வதற்கு குச்சனூரில் உள்ள சனி பகவான் ஆலயத்துக்குச் சென்று வர நன்மை உண்டாகும்.

கண்டக சனி

கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள். குரல்வளையை இறுகப்பிடித்தால் நாம் எப்படி திணறுகிறோமொ அதே போல் ராசியில் ஏழாம் இடத்தில் வரும் இந்த கண்டக சனியால் வரும் இடர்பாடுகள் இருக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனிகாலத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top