சில படங்கள் நல்ல எங்கேஜிங்கா இருக்கும். ஆனா, ஏனோ வெகுஜன ஆடியன்ஸை ரிலீஸான நேரத்துல தியேட்டருக்கு அழைத்து வராம போயிருக்கலாம். அது மாதிரியான ஆவரேஜ் படங்களை இப்ப கூட பார்க்கலாம். எத்தனை தடவை பார்த்தாலும் போரே அடிக்காது. அப்படியான 9 படங்களைப் பற்றிதான் இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கப் போறோம்.
இங்கே ‘ஆவரேஜ்’னு நாம சொல்றது, ஒரு படம் ரிலீஸான காலத்துல ஆவரேஜா வசூல் பண்ணின, சில்வர் ஜூப்ளி லெவலுக்கு எல்லாம் இல்லாம ஓரளவு ஆவரேஜா தியேட்டர்ல ஓடின படங்களைப் பத்திதான் பார்க்கப்போறோம்.
அதிசயப் பிறவி
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1990-ல் வெளியான படம் ‘அதிசயப் பிறவி’. சிரஞ்சீவியின் சூப்பர் ஹிட் படமான ‘யமுடுக்கு முகுடு’ (Yamudiki Mogudu)-ன்ற தெலுங்கு காமெடி ஃபான்டஸி படத்தின் ரீமேக்தான் ரஜினி, கனகா நடித்த இந்தப் படம். எமதர்மன் அவசரப்பட்டு ரஜினி உயிரை எடுத்துடுறாரு. அந்தப் பஞ்சாயத்தை தீர்க்க, ரஜினி மாதிரியே உருவாத்துல அச்சு அசலா இருக்குற இன்னொரு ரஜினி உடம்புல இறக்கிவிடப்படுறார். அப்புறம் நடக்குற அதகளம்தான் திரைக்கதை. ரஜினிக்கு நல்லாவே காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். படம் ஜாலியாதான் இருக்கும். பாடல்களும் ஹிட்தான். ஆனா, தெலுங்கு அளவுக்கு இங்கே படம் ஒர்க் அவுட் ஆகலை. ஆனா, பெருசா போராடிக்காதுன்றது மட்டும் உறுதியா சொல்லலாம்.
வியட்நாம் காலனி
1994-ல் சந்தான பாரதி இயக்கத்தில் பிரபு – கவுண்டமணி – வினிதா காம்ப்போல வெளிவந்த படம் ‘வியட்நாம் காலனி’. மலையாள பட ரீமேக்தான். ஆனா, அசலான அனுபவத்தைத் தரக் கூடிய படம். ஒரு காலனியை காலி பண்ற மிஷன்ல பிரபுவும் கவுண்டமணி களம் இறங்கி, அந்தக் காலனி வாசியா மனோரமா வீட்ல வாடகைக்கு குடியேறுறாங்க. அவங்க மிஷன் பாசிபிள் ஆச்சான்றதுதான் ஸ்டோரி லைன். இதுக்கு இடையில வினிதா – பிரபு லவ் போர்ஷன் செம்ம கலாட்டாவா இருக்கும். படம் முழுக்கவே போராடிக்காம நல்லா காமெடியா போகும். பிரபுவோட அண்டர் ப்ளேவும், கவுண்டமணியோட வழக்கமான கலாட்டாவும் செம்மயா ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இப்ப பார்த்தா கூட டைம் போறதே தெரியாது.
90ஸ் படங்கள் – மே மாதம்
‘ரோமன் ஹாலிடே’-ன்ற க்ளாசிக் அமெரிக்க ரொமான்டிக் படத்தை தழுவி 1994-ல் வெளியான படம் ‘மே மாதம்’. வினீத், சோனாலி நடிச்சிருப்பாங்க. ஜிவி ஃபிலிம்ஸ் தயாரிப்புன்றதால ரஹ்மான், லெனின் – விடி விஜயன், பிசி ஸ்ரீராம்னு செம்ம ஸ்ட்ராங்கான டீம்.
ஒரு பணக்கார வீட்டுப் பொண்ணு வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி எளிய மக்களோட சில காலம் வாழ வேண்டிய சூழல். அதையொட்டியே காதல்னு படம் முழுக்க ரொம்ப ஜாலியா இருக்கும். ரஹ்மானின் பாடல்கள் ஒவ்வொன்றும் காலம் கடந்த ஹிட் ரகம்.
கேமரா ஒர்க் செம்மயா இருக்கும். சென்னையின் இரவுகளை ரொம்ப அழகா பதிவு செஞ்சிருப்பாரு பிசி ஸ்ரீராம்.
அதேபோல, இந்தப் படத்தை மாதிரி வேற எந்தப் படமும் மகாபலிபுரத்தின் அழகை அவ்ளோ நேரத்தியா பதிவு செய்யலைன்னே சொல்லலாம். படம் முழுக்க மனோரமாவோ பெர்ஃபார்மன்ஸ் ஆகச் சிறப்பா இருக்கும். க்ளைமாக்ஸ்ல ஜனகராஜ் என்ட்ரியும் வித்தியாசமா இருக்கும். இப்போ டிவில போட்டா கூட அப்படியே உட்கார்ந்து பார்க்குற அளவுக்கு எங்கேஜிங்கா இருக்கும். இதுக்கு கிரேஸி மோகனோட ரைட்டிங் ரொம்ப சப்போர்ட்டிங்கா இருக்கும்.
லக்கி மேன்
பிரதாப் போத்தன் இயக்கத்துல 1995-ல் வெளிவந்த படம். கார்த்திக், கவுண்டமணி, செந்தில், ராதாராவி, சங்கவினு பெரிய பட்டாளமே நடிச்சிருக்கும் காமெடி ஃபேன்ட்ஸி படம். கவுண்டமணிதான் எமதர்மன், செந்தில் – சித்திரகுப்தன். பிரம்மச் சுவடி வானத்துல இருந்து பூமில விழுந்துடுது. அதை கார்த்திக் யூஸ் பண்ணி பணக்காரர் ஆகுறார்.
பிரம்மச் சுவடி இல்லைனன யார் உயிரையும் எடுக்க முடியாத சூழல்ல, கவுண்டமணியும் செந்திலும் பூமிக்கு வந்த அதை மீட்க ட்ரை பண்றாங்க. எமதர்மன் பூமியில பண்ற ரவுசு, தேடல் படலம், இடையில் ரவுடிக் கவிஞர் ராதாரவியின் ரவுசுன்னு படம் முழுக்கவே செம்ம காமெடியா இருக்கும். இப்ப ட்ரை பண்ணா கூட நமக்கு எங்கேஜிங்கான ஜாலி அனுபவம் கேரன்ட்டி. கார்த்திக் நடித்த பெஸ்ட் காமெடி பட லிஸ்டுல லக்கி மேனுக்கு தனி இடம் தரலாம்.
90ஸ் படங்கள் – ஆணழகன்
அதே 1995-ல் வெளிவந்த படம் ‘ஆணழகன்’. அப்பா தியாகராஜன் இயக்கத்துல் பெண் வேடத்துல பிரசாந்த் நடிச்ச படம். பிரசாந்த், சார்லி, சின்னி ஜெயந்த், வடிவேலு நாலு பேரும் பேச்சிலர்ஸ். இவங்க ஒரு ஃபேமி மாதிரி நடிச்சு கே.ஆர்.விஜயாவின் வாடகை வீட்டில் குடியேறுறாங்க. அதுக்காகதான் பிரசாந்த் பெண் வேஷம் போடுறார். இடையில் காதலும் பிரச்சினைகளும் வருது. இதைவிட வேற என்ன வேணும் ஸ்க்ரிப்ட்ல… படம் முழுக்க செம்ம ரகளையா இருக்கும்.
பிரசாந்த், சார்லி, சின்னி ஜெயந்த், வடிவேலு கூட்டணி நம்மை சிறப்பா என்டர்டெயின்மென்ட் பண்ணும். அதுவும், கே.ஆர்.விஜயாவை ஏமாத்துற சீன் எல்லாம் சரவெடியா இருக்கும். நல்ல எங்கேஜிங்கா, நல்லா ஜாலியா காமெடியா இருக்கே ஏன் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடலைன்னு இப்ப வரைக்கும் நமக்கு டவுட் வரலாம்.
Also Read – செம்ம தரமான சம்பவங்கள்.. டைரக்ஷனில் மிரட்டிய நடிகர்கள்!
தேடினேன் வந்தது
1997-ல் பிரபு – மந்த்ரா – கவுண்டமணி காம்போல வெளிவந்த படம் ‘தேடினேன் வந்தது’. ஸ்க்ரிப்ட் – டயலாக் கிரேஸி மோகன். கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை ஒரு இடத்துல புதைச்சு வைப்பாங்க. அந்தப் பணத்தை எடுக்க நடக்குற முயற்சிகள்தான் படமே. என்ன மேட்டர்னா, புதைச்சு வைக்கப்பட்ட இடத்துல வீடு கட்டி ஒரு ஃபேமிலி குடியிருப்பாங்க. அந்த வீட்டுக்குள்ள பிரபுவும் கவுண்டமணி ஐக்கியமாகி பணத்தை எடுக்க ட்ரை பண்றதுதான் திரைக்கதை. இதுல ரெண்டு மொட்டை பாஸ் நடுநடுல வந்து செம்ம பல்பு வாங்கி கலகலப்பூட்டுவாங்க.
ஒட்டுமொத்தமா படம் செம்ம ஜாலியா இருக்கும். பாடல்களும் நல்லா இருக்கும். இரண்டரை மணி நேர படத்துல ஒரு இருநூத்தம்பது ஜோக்குக்கு மேல தேறும். அவ்ளோ ஜோக்குகளை டயலாக் முழுக்க கொட்டி வெச்சிருப்பாரு கிரேஸி மோகன். ஒருவேளை, அவ்ளோ ஜோக் அடுத்தடுத்து வந்து திகட்டினதுனாலதான் படம் பெருசா போகலையோன்னு தோணும்.
பெரிய இடத்து மாப்பிள்ளை
1997-ல் வெளிவந்த படம் ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’. குரு தனபால் இயக்கத்தில் ஜெயராம், கவுண்டமணி, விவேக், தேவயானி, மந்த்ரா நடிச்ச படம். இதுல அண்ணன் தம்பியா வர்ற விஜயகுமாரும் ராஜன் பி தேவும் பட்டைய கிளப்பியிருப்பாங்க. குடும்பத்துல குழப்பம், ஹீரோ மேல ரெண்டு பேருக்கு காதல்னு வழக்கமான பரிச்சயமான கதைதான்னாலும் படம் முழுக்க ஜெயராம் – கவுண்டமணி பண்ற கலாட்டா செம்மயா இருக்கும். ஒரு முழு நீள காமெடி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் உள்ள படம் இது. கவுண்டமணியோட விவேக் காமெடியும் செம்மயா ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.
90ஸ் படங்கள் – காதலா காதலா
பிரபுதேவா பீக்ல இருந்த டைம்ல… 1998-ல் கமல் – பிரபுதேவா – ரம்பா – செளந்தர்யா காம்போல மிகுந்த எதிர்பார்ப்போட வெளிவந்த படம் ‘காதலா காதலா’. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப் படத்துக்கு கிரேஸி மோகன் டயலாக். கிரேஸி – கமல் காம்போ படங்கள்ல இருக்குற அத்தனை பேரும் இருப்பாங்க. இந்த டீமுக்கே உரிய ஆள்மாறாட்டத்தால வர்ற காமெடிகள் இந்தப் படத்துலயும் ஏராளமா இருக்கும். ஒவ்வொரு சீன்லயும் பத்து பதினைஞ்சு ஜோக் இருக்கும். படம் முழுக்க ஜோக்குகளால் சூழ்ந்திருக்கும். இன்னிக்கு பார்த்தா கூட புதுசா பத்து ஜோக் கிடைக்கும். அவ்ளோ ஜாலியா இருந்தும் கூட. அப்போ அந்தப் படம் ஆவரேஜ்தான். ஆனா, இப்ப பார்த்தா கூட செம்ம எங்கேஜிங்கான காமெடி மூவியா இருக்கும்.
இந்த லிஸ்ட்ல வேற எந்தெந்தப் படங்களை சேர்ககலாம்னு நீங்களே கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.