`லியோ’ டைரக்டர் லோகேஷ் கனகராஜ்னு சொன்னாலே அவரோட மாஸ்தான் கண்ணு முன்னாடி வந்து போகுது. சமீபத்துல பழைய கிளாசிக் படங்களையெல்லாம் திரும்ப பார்த்துட்டு இருக்கும்போது, இந்த சீன் விக்ரம் படத்துல வந்த சீன்ல.. அப்டினு ஷாக் ஆச்சு. சின்ன திருத்தம், அந்த படத்துல வந்த சீன்களை தான் நம்ம லோகேஷ் அண்ணன் படங்கள்ல வைச்சுருக்காப்டி. இதே எங்கண்ணன் அட்லீ பண்ணா சும்மா இருப்பீங்களா? அதனால, லோகேஷ் அண்ணன் என்னென்ன சீன்லாம் விக்ரம் படத்துல இன்ஸ்பைர் ஆகி வைச்சிருக்காருனு பார்ப்போம். லோகேஷ் கனகராஜ், லியோன்ற பெயரை எங்க புடிச்சாருனு டவுட் இருந்துச்சு. அதுவும் கொஞ்சம் செட் ஆகுற மாதிரியான சம்பவத்தை கண்டுபிடிச்சுருக்கோம். ஜப்பான்காரன் என்னென்னமோ கண்டுபுடிக்கிறான். இவன் என்னத்தைக் கண்டு புடிச்சுருக்கான்ற டயலாக்தான் உங்களுக்கு நியாபகம் வரும். ரைட்டு, ஒரு சின்ன டிஸ்கிளைமர் இப்போ போடப்போறேன்.. நல்லா கேட்டுக்கோங்க.. தமிழ் சினிமா டைரக்டர்ஸ் நிறைய பேருக்கு குவின்டின் புடிக்கும். அவரே ஒரு இன்டர்வியூல, “I steal from every single movie ever made”னு சொல்லிருக்காரு.
விக்ரம் படத்தை மட்டும் எடுத்துருக்க.. மாஸ்டர், கைதிலாம் விட்டுட்டனு கேக்காதீங்க. லோகேஷ் அண்ணன் யூனிவர்ஸ் ஸ்டார்ட் பண்ணது விக்ரம்ன்றதால, அங்க இருந்து ஆரம்பிக்கலாம்னுதான். எந்த டைரக்டரா இருந்தாலும் கண்டிப்பா அவங்களுக்கு இன்ஸ்பிரேஷன் இருக்கும். அப்படி பார்க்கும்போது லோகேஷ்க்கு குவின்டின் டொரன்டினோ, மார்ட்டின் ஸ்கார்சஸேலாம் ரொம்ப புடிச்ச இயக்குநர்கள். விக்ரம் படத்துல நமக்கு புடிச்ச சில ஐடியாக்களை லோகேஷ், இவங்க படத்துல இருந்துதான் எடுத்துருக்காருனு சொல்லலாம். இந்த வீடியோ பண்றதால லோகேஷ் டேலன்டான ஆள் இல்லை, அவருக்கு ஒண்ணும் தெரியாதுனுலாம் சொல்ல வரலை. அதேநேரத்துல சின்ன வருத்தம். அந்த வெளிப்பாடாக இந்த வீடியோவை நீங்க வைச்சுக்கலாம்.
குவின்டினோட எல்லா படங்களுமே லோகேஷோட ஃபேவரைட்தான். குறிப்பா சொல்லணும்னா ஜாங்கோ அன்செயின்ட். ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களை அடிமையாவே வைச்சிருந்தவங்களைப் பத்தின படம். அந்த மக்கள்ல இருந்து ஒருத்தன் அடக்குமுறைக்கு எதிரா நின்னு மாஸா பல சம்பவங்களை பண்றதுதான் கதை. ரத்தம் தெறிக்க, ஆக்ஷன் தளும்ப, சும்மா அப்படி இருக்கும் படம். அந்த படத்துல ஃபைட் சீன் ஒண்ணு வரும். துப்பாக்கிய வைச்சு ஹீரோ சும்மா விளையாடுவாரு. டிகாப்ரியோதான் வில்லன். அவர் வீட்டுக்குள்ள அந்த ஃபைட் சீன் நடக்கும். இதை பார்க்கும்போதே டக்னு, விக்ரம் படத்துல போர்கண்ட சிங்கம், யார் கண்டு அஞ்சும்னு மாஸா வீட்டுக்குள்ள போய் கமல் சண்டை போடுற சீன்தான் நியாபகம் வரும். துப்பாக்கியை சுடுற ஸ்டைல்கூட அந்த சீன் கூட அவ்வளவு மேட்ச் ஆகும். இந்தப் படத்துல கிங்னு ஒரு கேரக்டர் வருவாரு. அவரு கை கொடுத்தா, கோட்டுகுள்ள இருந்து துப்பாக்கி வந்து சுடும். இந்த சீனை ரஞ்சித் கபாலில யூஸ் பண்ணிருப்பாரு. இப்படி குவின்டினோட இன்ஸ்பிரேஷனா நிறைய சம்பவங்களை தமிழ் இயக்குநரகள் தங்களோட படங்கள்ல பண்ணியிருக்காங்க.
நெல்சன் ஒரு இன்டர்வியூல கில் பில் இன்டர்வெல் பிளாக்னு கலாய்ப்பாரு. அந்த வீடியோகூட செம வைரல் ஆச்சு அந்த படத்தையும் குவின்டின்தான் டைரக்ட் பண்ணியிருப்பாரு. அவரை டைரக்டர்ஸோட டைரக்டர்ஸ்னு சொல்லுவாங்க. ஏன், அப்படி சொல்றாங்கனு கில் பில் தெரிஞ்சுக்க கில் பில் பாருங்க. கில் பில் படத்துல வந்த ஒவ்வொரு சீனும் மாஸ்தான். ஆனால், கதையா யோசிச்சுப் பார்த்தா 2 லைன்ல திருக்குறள் மாதிரி அழகா சொல்லிடலாம். அதுக்குள்ள அவ்வளவு ஆக்ஷன், எமோஷன், மாஸ்னு சேர்த்து மனுஷன் எடுத்து வைச்சிருப்பாரு. சரி, விஷயத்துக்கு வருவோம். விக்ரம்ல சந்தனம் கேங்க்ல ஜாஃபர் வருவாரு. அவர் வர்ற இடம்லாம் அவ்வளவு ரத்தக்களறி ஆகிடும். ஏன்னா, எவ்வளவு பெரிய கேங்க்ஸ்டரா இருந்தாலும், கூட்டத்துக்குள்ள புகுந்து வந்த இடமே தெரியாமல் குதிகால் நரம்பை கட்டிங் பிளேயர் வைச்சு கட் பண்ணிட்டு போய்ட்டே இருப்பாரு. லோகேஷோட அந்த ஐடியா செமனு தோணுச்சு. ஆனால், கில் பில் படத்துல எக்ஸாக்ட்டா இந்த சீன் வரும்.
Also Read – செம்ம தரமான சம்பவங்கள்.. டைரக்ஷனில் மிரட்டிய நடிகர்கள்!
கில் பில் படத்துல ஹீரோயின் ஹாஸ்பிடல்ல கோமால இருந்து முழிச்சதும் எழும்ப முடியாமல் இருப்பாங்க. ஆனால், ட்ரை பண்ணிட்டே இருப்பாங்க. அவங்களை பாலியல் வன்கொடுமை பண்ண வந்த ஒருத்தனை கொலையும் பண்ணி போட்ருவாங்க. அந்த நேரத்துல ஒருத்தன் உள்ள வருவான், பெட்ல ஆள பார்த்தா ஆள காணாது. திடீர்னு கத்துவான். என்னடானு பார்த்தா, கால்ல கத்தியை வைச்சு கட் பண்ணிடுவாங்க. என்ன, லோகேஷ்ணா இதெல்லாம்னு தோணும். ஆனால், விக்ரம் படத்துல ஜாஃபரை அந்த கேரக்டருக்கு செலக்ட் பண்ணது, கட்டிங் பிளேயர் கைல கொடுத்து அதையே வெப்பனாக்க வைச்சதுலாம் செம ஐடியா. விக்ரம் படத்துல கேரக்டர்களை அப்பப்போ ஏஜென்ட்னு போட்டு அறிமுகப்படுத்துவாங்க. அந்த ஐடியாவும் எனக்கு தெரிஞ்சு இங்க இருந்துதான் லோகேஷ் எடுத்துருப்பாருனு நினைக்கிறேன். எக்ஸாக்டா ஒவ்வொரு கேரக்டரையும் கில் பில் படத்துல குவின்டின் அப்படிதான் அறிமுகப்படுத்துவாரு. ஆக்சுவலா, குவிண்டினே அந்த ஐடியாவை ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் அமெரிக்கா படத்துல இருந்துதான் எடுத்ததா சொல்வாங்க.
டரண்டினோகிட்ட இருக்குற இன்னொரு பெரிய பிளஸ் ஃபைட் சீன்களை அவ்வளவு கோரமா காட்றது தான். லோகேஷுக்கு அந்த வகையிலும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனா குவின்டின் இருப்பாருனு நினைக்கிறேன். ஏன்னா, அவரோட முதல் படத்துல இருந்து கடைசியா வந்த ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் வரை ஆக்ஷன்லாம் சும்மா பட்டாஸா இருக்கும். அவரோட படங்கள்ல அமெரிக்கால வந்த ரெட்ரோ பாடல்களை நிறைய யூஸ் பண்ணுவாரு. அதைக் கேட்கும்போது அந்த பாட்டு தனி ஃபீலை ஏற்படுத்துற மாதிரி இருக்கும். எங்க இருந்துயா இப்படிலாம் பாட்டு புடிக்கிறனுதான் தோணும். லோகேஷும் தன்னோட படங்கள்ல நிறைய ரெட்ரோ பாடல்களை யூஸ் பண்ணுவாரு. குறிப்பா விக்ரம்ல வந்த சக்கு சக்கு வத்திக்குச்சிலாம் இன்னும் ஃபேன்ஸ் வைப் பண்ணி முடியல. அதேமாதிரி, கவர்மென்டுக்கு ஹெல்ப் பண்ற ஏஜென்ட் மாதிரி விக்ரம்ல ஃபகத் ஃபாஸில் வருவாரு. எக்ஸாக்ட்டா அப்படியொரு கேரக்டர் ஜாங்கோ அன்செயிடுல வருவாரு. அதாங்க, கிங் கேரக்டர். என்ன மாதிரியான கேரக்டர் அதெல்லாம்? ப்பா!
உலகம் முழுக்க ஃபேன்ஸ் இருக்குற குவின்டின் டைரக்ட் பண்ண மிஸ் பண்ணக்கூடாத படங்கள்னு எல்லாம் சொல்லலாம். ஆனால், ஒரு 5 படம் சொல்லணும்னா.. பல்ப் ஃபிக்ஷன், இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், கில் பில், ரிசர்வியர் டாக்ஸ், கிரைந்தவுஸ் டெத் ப்ரூஃப் இந்த 5 படங்களையும் மிஸ் பண்ணாம பாருங்க. எல்லாம் நல்லாவே இருக்கும். எல்லாமே இருக்கும். படங்களை பார்க்கும்போது இந்த ஆள் வயலண்டான ஆளா இருக்காருனு தோணும். ஆனால், மனுஷன் இண்டர்வியூஸ்லாம் பார்த்தா.. சிரிச்சுக்கிட்டே இருக்கலாம். சில நேரங்கள்ல, யார்யா இவரு, என்னலாமோ பேசிகிட்டு இருக்காருணும் தோணும். ஆனால், அந்த ஆள் படம் ஒண்ணு பார்த்தாலே லோகேஷ் ஃபேன் பாய்க்கு டஃப் கொடுக்கலாம். குவின்டின் பையன் பெயர் லியோ. ஒரு வேளை ஃபேன்னு காட்டதான் அந்த பெயரை வைச்சிருக்காரோ.. என்னவோ.. சும்மா சொல்லுவோம்.
சரி, விக்ரம் படத்துல இவர் படங்கள்ல மட்டும் இருந்துதான் சீன்ஸ் இன்ஸ்பைர் ஆகி வைச்சுருக்காரானு கேட்டா.. இல்லை. டெட் காட்செஃபோட ராம்போ படங்கள்ல இருந்துதான் அதிகமா இன்ஸ்பைர் ஆகியிருப்பாருனு நினைக்கிறேன். சமீபத்துல வந்த லியோ டீசர், இதுக்கு முன்னாடி அவர் பண்ண விக்ரம் டீசர் எல்லாமே ராம்போகூட கனெக்ட் ஆகும். அப்படியே, நார்கோஸ் கூடவும் விக்ரம் டீசர் கனெக்ட் ஆகும். கதை கூட ராம்போ படங்களோட அவ்வளவு மேட்ச் ஆகும். வேணும்னா கமெண்ட்ல சொல்லுங்க. அதைப் பத்தியும் நம்ம குவின்டினுக்கு ஏன் இவ்வளவு பைத்தியமான ஃபேன்ஸ் இருக்காங்கன்றதைப் பத்தியும் தனி வீடியோ போடுவோம்.