தமிழ்நாட்டுல தமிழனே பானி பூரி வித்தாகூட அவங்கிட்ட போய், “பையா, ஏக் பிளேட் பானி பூரி”னு இந்தில மட்டும்தான் கேப்பாங்க. நார்த் இந்தியன்ஸ் மேல அவ்வளவு வன்மம். அதேமாதிரி, நார்த் இந்தியால வேஷ்டி சட்டை போட்டுட்டுப் போனா, வணக்கம்னு சொல்லிட்டு பின்னாடி போய் சிரிப்பாங்க. அவ்வளவு தூரம் சவுத் இந்தியன்ஸ் மேல அவங்களுக்கு வன்மம். காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, சொத்து பிரச்னை இப்படி சவுத் இந்தியன்ஸ் சட்டையைப் பிச்சு மாறி மாறி, பறந்து பறந்து சண்டை போட்டாலும், ஒருத்தன் “இந்தி கத்துக்கோங்கடா”னு சொன்னா சவுத் இந்தியன்ஸ் மொத்த பேரும் சுத்தி நின்னு நார்த் இந்தியன்ஸை பொளக்கட்டும் பற பறனு களம் எட்டுல வைச்சு செய்ய ஆரம்பிச்சுருவாங்க. இந்த வீடியோல சவுத் இந்தியன்ஸ் – நார்த் இந்தியன்ஸ் பஞ்சாயத்துகளை பார்ப்போம்.
உலக அளவில் சினிமாவுக்காக இவ்வளவு சண்டை போட்டுக்குற ஒரு நாடுனா, அது இந்தியாவா மட்டும்தான் இருக்கும். தமிழ்நாட்டுக்குள்ள அஜித் – விஜய் பிரச்னை, மாநிலம் தாண்டுனா உங்க சூப்பர் ஸ்டார் பெருசா, எங்க சூப்பர் ஸ்டார் பெருசான்ற பிரச்னை, சவுத் இந்தியாவைத் தாண்டுனா சவுத் இந்தியன்ஸ் படங்கள்லாம் பெஸ்டா, இல்லை.. நார்த் இந்தியன்ஸ் படங்கள்லாம் பெஸ்டான்ற பிரச்னை. இப்படி காலைல எழுந்ததுல இருந்து தூங்குறதுக்கு முன்னாடி வரைக்கும் சினிமாவை வைச்சு மட்டுமே சண்டை போட்டுட்டு இருக்காங்க. இந்திய அளவில் சினிமா பிரச்னையா பார்த்தா நார்த் இந்தியன் சினிமா பெஸ்ட்? சவுத் இந்தியன்ஸ் சினிமா பெஸ்டா? அப்டின்றதுதான். இவ்வளவு நாள் இந்தில படங்கள் வந்தால், அது பான் இந்தியா படமா பார்ப்பாங்க. அதையும் நார்த் இந்தியன்ஸே சொல்லிப்பாங்க. ஆனால், இன்னைக்கு மொத்த இந்தியாவும் கொண்டாடுனா மட்டும்தான் அதை பான் இந்தியா படமா பார்ப்பாங்க. அதுவும் மக்கள்தான் அதை முடிவு பண்ணுவாங்க.
Also Read – ஆமால்ல.. ஹேட்டர்ஸ் இல்லாத டைரக்டர்ஸ் இவங்கதான்!
சவுத் இந்தியால இருந்து வந்தவங்கள்னாலே, அவங்க இப்படித்தான்னு டெம்ப்ளேட் போட்டு மூளைல மாட்டி வைச்சிருக்காங்க. அதுல முதல் விஷயம், கருப்பா இருப்பாங்கடான்றது. எங்க ஊர்ல பானி பூரி கடை வைச்சிருக்கவன்குட செம ஹேன்ட்ஸமா இருப்பான். ஆனால், சவுத் இந்தியால மோஸ்ட் ஹேண்ட்ஸமா இருக்குற நடிகர்கள்கூட அவ்வளவு ஹேண்ட்ஸமா இல்லைனு ரீசன்டாகூட மீம்ஸ்லாம் பார்த்தேன். இதுல இருந்து என்ன தெரியுது? பியூட்டிலாம் ஒரு மேட்டரே இல்லைனு தெரியுதா? போய் புள்ளக்குட்டிங்களை படிக்க வைங்கடா. அதேமாதிரி, ரஜினி இவருக்கு என்ன பண்ணாருனு தெரியல. அவரு மேல வன்மம் அவ்வளவு வைச்சிருக்கானுங்க. அவர் அழகா இல்லை, இவர்லாம் நடிகரா, முடி நரைச்சிடுச்சு, ஓவரா ஹீரோயிஸம் காட்றாரு அப்படி இப்படினு அவ்வளவு சொல்றானுங்க. ஏன்டா, உங்க ஊர்ல வந்த படங்களை எடுத்துப் பாருங்க. அவர் அளவுக்கு யாராலயாவது ஸ்டைல் பண்ண முடியுமா? நீங்கலாம் ஸ்டைல் பண்ணனும்னா அதுக்கு ஏத்த மாதிரி டிரெஸ்ஸிங், டயலாக், மேக்கப் எல்லாம் தேவை. ஆனால், தலைவர் நடந்து வந்தாலே செம மாஸா இருக்கும். அப்போ, நீங்க மட்டும் அவரை வைச்சு செய்றீங்கனு நீங்க கேக்கலாம். எங்க ஆளு நாங்க மட்டும்தான் அடிப்போம்.
பாலிவுட்லயும் சரி, மற்ற மொழிகள்லயும் சரி, அவ்வளவு கிளாசிக்கான நல்ல படங்கள் வந்துட்டுதான் இருக்கு. அதெல்லாம் விட்ருங்க. சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் எடுத்துக்கோங்க. உங்க ஊர்ல இருக்க, முன்னணி நடிகர்கள் எல்லாரும், சவுத் இந்தியன் படங்களை மட்டும்தான் எடுத்து ரீமேக் பண்ணி நடிச்சுட்டு இருக்காங்க. த்ரிஷ்யம்ல தொடங்கி கைதி, வீரம் வரைக்கும் எல்லாமே இங்க பிளாக்பஸ்டர் ஹிட்டு. சவுத் இந்தியன் படங்களை விமர்சிக்கிறவங்களுக்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லணும். உங்க ஊர் மக்கள் அதிகமா ரசிக்கிறதே, சவுத் இந்தியன் படங்களைதான். இந்த படங்களுக்கு எவ்வளவு மாஸ்னு யூடியூப் காரன்கிட்ட கேட்டுப்பாரு. கதை கதையா சொல்லுவான். அப்புறம், தயவு செய்து எங்க ஊர் படங்களை ரீமேக் பண்ணி கொல்லாதீங்கடா. அப்படி ஆசை இருந்தா, யாரோட பயோபிக்காவது எடுத்து வைங்க. இல்லைனா, ராமர் பாலத்தை கண்டுபிடிக்கிறேன்னு கிளம்பி போங்கடா. இன்னொன்னு, ரஜினி லுங்கி கட்டிட்டு எங்கயும் நடிக்கல. வெள்ளை கலர்ல அவர் கட்டிட்டு சுத்துறது வேஷ்டி. தயவு செய்து இனிமே லுங்கி டான்ஸை போட்டு சாவடிக்காதீங்க. என்னங்கடா ராஸ்கலானு அவர் இதுவரை டயலாக் பேசுனது இல்லை. ஆனால், சவுத் இந்தியன்ஸ் மூவி பத்தி பேசும்போதுலாம், அந்த டயலாக்கை சொல்றீங்க. என்னத்தயாவது சொல்லிட்டு சுத்துறது.
இட்லி, தோசை, வடை, சோறு, சாம்பார் – இதைத்தவிரவும் நாங்க பரோட்டா, பிரியாணி, சிக்கன், மட்டன்னு ஏகப்பட்ட வெரைட்டீஸ் சாப்பிடோம். ஆனால், நீங்க இட்லி, தோசை, சோறு, சாம்பார் மட்டும்தான் நாங்க சாப்பிடுவோம்னு நினைச்சுட்டு கலாய்க்கிறதுலாம் ஓவர்டா. மதுரைக்காரன் கையில சிக்குன, மொவனே சங்குதாண்டி. ரா ஒன் படத்துல ஷாரூக்கான் சவுத் இந்தியனா நடிச்சிருப்பாரு. சும்மா சும்மா அதுல நூடுல்ஸ் கூட தயிர் ஊத்தி பிசைஞ்சு சாப்பிடுற சீனைக் காட்டுவாங்க. படம் வந்தப்பவே அவ்வளவு விமர்சனம் பண்ணாங்க. அப்படிலாம் வியர்ட் காம்போலாம் இங்க யாரும் ட்ரை பண்ண மாட்டாங்கனு எப்படி சொல்லி புரிய வைக்கிறது. இதை வைச்சே சண்டை போட்டாங்க. சும்மா மதராசி.. மதராசினு கத்தினு சுத்தாதீங்க.. ஏ மதராசி வாலானு ஆந்திராகாரன்கிட்ட சொன்னா கழுத்தை கடிச்சு மொளகா தொட்டு சாப்பிட்ருவான். முதல்ல கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கோவானு எக்கச்சக்க இடங்கள் இருக்கு. முதல்ல இதெல்லாம் இருக்குனு தெரிஞ்சுக்கோங்க. அப்புறம் வந்து கலாய்ங்க.
சவுத் இந்தியன்ஸுக்கு இங்கிலீஷ் பேச வராதுனு நிறைய மூவில கிண்டல் பண்ணுவாங்க. ஏங்க, இவங்களை தெரியல. இவங்கதான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் மச்சான். வாயத்திறந்தாலே ரைம்ஸ் மட்டும்தான் ஃப்ளோவா பாடுவாங்க. கொய்யால, மை நேம் இஸ்னு சொல்லவே உங்கள்ல பாதி பேருக்கு வராது. இதுல நீங்க சவுத் இந்தியன்ஸ கிண்டல் பண்றீங்க. இங்கயே ஆயிரம் சண்டை போவுது. மலையாளம்தான் மாஸ், தெலுங்கு பேசுறவங்கக்கிட்ட வைச்சிக்கிட்ட தெவசம் பண்ணிடுவோம், கன்னடம் பேசுறவங்கதான் கிளாஸ், தமிழ்தான் முன்னாடி, மீதி எல்லாம் பின்னாடுனு அடிச்சுனு இருக்காங்க. இதுல நீங்க இடைல வந்து இந்தி கத்துக்கோனு சொல்லி, பங்காளி சண்டை போட்டுட்டு இருந்தவங்களை பாசக்காரங்களா மாத்தி விட்டீங்க. இப்போ, எல்லாரும் சேர்ந்து உங்களை தெளிய வைச்சு தெளிய வைச்சு அடிக்கிறானுங்க. தேவையா பாஸ்? ஆனால், எவ்வளவு பிரச்னை வந்தாலும் இந்தி கத்துக்கோன்றதுல மட்டும் ஒண்ணு சேர்ந்துடுறீங்கடா. நல்லா வருவீங்க. மொழி அறிவு இல்லைன்றதை எப்ப புரிஞ்சுக்கப்போறீங்க?
நார்த் இந்தியன்ஸ் மேல வன்மம்லாம் கிடையாது. ஆனால், இவங்க பண்ற சில சேட்டைகள் எல்லாம் இருக்கு பார்த்தீங்களா, அதை செஞ்சே ஆகணும். நாமளும் நார்த் இந்தியன்ஸ் பத்தி நிறைய தவறான மதிப்பீடுகள் வைச்சிருக்கோம். ஆனால், அதுல பெரும்பாலும் உண்மையாவேதான் இருக்கு. இவங்க நம்மக்கிட்ட சண்டை போடுற விஷயங்கள் எல்லாம் பார்த்தீங்களா? படத்துக்கு, மாட்டுக்கு, சாப்பாட்டுக்கு.. ஆனால், நம்ம உங்க ஊர்ல உங்களுக்கு வேலை கிடைக்கணும், உங்க வாழ்க்கைத்தரம் உயரணும், 100 ரூபாய்க்குலாம் வேலை பார்க்கக்கூடாது, படிக்க வைங்க.. கல்வி முக்கியம், பான் பிராக் போட்டு துப்பாதீங்க.. சுகாதாரம் முக்கியம், அடிமையா வேலை பார்க்காதீங்க.. சுயமரியாதை முக்கியம்னு அவங்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்துட்டு இருக்கோம். ஆனால், அவங்க சவுத் இந்தியால இருந்து கிளம்பி போய் மோடிக்கு ஓட்டுபோட்டு திரும்ப இங்க வந்து 20 ரூபாயைக் குறைச்சு 80 ரூபாய்க்கு வேலை பார்க்குறாங்க. ஒருவகையில பாவமாதான் இருக்கு. ஆனால், உங்க அட்ராசிட்டீஸ் அளவைதான் தாங்க முடியல. மத்தபடி, ஒண்ணா இருப்போம். மண்ணா பழகுவோம். ஏன்னா, சவுத்.. நார்த்னு அடிச்சுக்கிட்டாலும், நீங்க வேற நாடு.. நாங்க வேற நாடு இல்லை. ஒரே நாடு இந்தியா!