நீரஜ் சோப்ரா

`11 வயசுல 80 கிலோ…22 வயசுல ஒலிம்பிக் கோல்டு’- `தங்கமகன்’ நீரஜ் சோப்ரா சம்பவங்கள்!

நீரஜ் சோப்ரா | ஜாவலின் த்ரோனாலே என்னான்னே தெரியாத ஹரியானாவோட பாரம்பரிய விவசாய குடும்பத்தோட மூத்த ஆண் வாரிசு அந்தப் பையன். கூட்டுக் குடும்பத்துல ஜாஸ்தி செல்லத்தோட வளர்ந்த அந்தப் பையன், குடும்பத்துல இருக்க மத்தவங்க மாதிரி இல்லாம கொஞ்சம் குண்டாவே இருக்கார். 11 வயசுல 80 கிலோ வெயிட் இருந்த அந்தப் பையனைக் கூட இருக்க பசங்கலாம் `சர்பஞ்ச்’ (பஞ்சாயத்து தலைவரே)னு கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க. இதைக்கேள்விப்பட்ட அவரோட சித்தப்பா சுரீந்தர் அவரை பக்கத்துல இருக்க ஜிம்முக்குக் கூட்டிட்டுப் போயிருக்கார். அந்த ஜிம் கொஞ்ச நாட்கள்லயே மூடப்படுது. இதனால அவரை பானிபட்ல இருக்க கிரவுண்டுக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அங்கதான் சின்ன பையனா இருந்த நீரஜ், முதன்முதல்ல ஜெய்வீரைச் சந்திக்கிறார். அவரோட அறிமுகம் நீரஜுக்கு ஈட்டி எறிதல்ங்குற ஒரு ஸ்போர்ட்டையும் அறிமுகப்படுத்துது. டீனேஜரா ஃபீல்டுக்குள்ள வந்த முதல் 2 வருஷங்கள்லயே ஜூனியர் சர்க்யூட்டை அதிரவைக்கிறார் நீரஜ். ஜாவலின் த்ரோ மேல அவருக்கு இண்ட்ரஸ்ட் வர்றதுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு.

இப்பவும் வீட்டுக்குப் போறப்போ, தொழுவத்தில் இருக்கும் எருமை மாடுகளைப் பராமரிக்குறது, டிராக்டரை ஒட்டிக்கிட்டு விவசாய வேலைகளைப் பாக்குறது நீரஜுக்குப் பிடிச்ச விஷயங்கள். சின்ன வயசுல இருந்தே த்ரோ பண்றதுல அவருக்கு இயல்பாவே ஆர்வம் அதிகமா இருந்திருக்கு. நீர்நிலைகள்ல இருக்க மாடுகளை கரைக்குக் கொண்டுவர இவரைத்தான் கூப்பிடுவாங்களாம். எவ்வளவு தூரமா இருந்தாலும், குச்சிகளையும் கற்களையும் வைச்சு அதை ஈஸியாவே மேனேஜ் பண்ணிருக்கார். அப்படித்தான் சின்ன வயசுல அவரோட வலது கை கொஞ்சம் கொஞ்சமா ஸ்ட்ராங்காகியிருக்கு.

நீரஜ் சோப்ராவுக்கு டிராவல் ரொம்பவே பிடிச்ச விஷயம். 2013ல உக்ரைன்ல நடந்த வேர்ல்டு யூத் சாம்பியன்ஷிப் அப்போதான் முதன்முதல்ல ஃபிளைட் ஏறியிருக்கார். முதல் ஃப்ளைட்லயே விண்டோ சீட் கிடைக்கவே, அவர் மொத்த டிராவல்ல பாதி நேரம் ஜன்னல் வழியா மேகங்களைப் பார்த்துக்கிட்டும், தரையை எப்படியாவது பார்த்துடணும்னும் முயற்சி பண்ணிட்டே இருந்தாராம். எளிமையான குடும்பப் பின்னணியில பிறந்த அவர், 2020 டோக்கியோ ஒலிம்பிக்குக்குப் பிறகுதான் தன்னோட அப்பா, அம்மாவை முதல்முறையா ஃப்ளைட்ல கூட்டிட்டுப் போனாராம். குடும்பத்துல இருக்க சிலர், ஃப்ரண்ட்ஸ்னு ஒரு சார்ட்டட் ஃப்ளைட்ல கர்நாடகாவோட விஜயநகருக்குக் கூட்டிட்டுப் போனது அவருக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமான ட்ரிப். அவரோட டிராவல் பக்கெட் லிஸ்ட்ல கடவுளின் தேசமான கேரளாவுக்கு முக்கியமான இடம் ஒதுக்கியிருக்காரு. `இந்தியால நாம எக்ஸ்ப்ளோர் பண்ண வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கு’னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாராம். ஆனா, டைட் ஷெட்யூல், டோர்னமெண்டுகளால் அவருக்கு இன்னும் பிராப்பரா ஹாலிடே கிடைக்கவே இல்லைனுதான் சொல்லணும். டைம் கிடைச்சா ஃப்ரண்ட்ஸ் கேங்கோட வெளில கிளம்புறது அவரோட ஹாஃபி.

நீரஜ் சோப்ரா கலந்துக்குற எந்தவொரு பெரிய காம்படிஷனுக்கும் குடும்பத்துல இருந்து யாரும் போகக்கூடாதுனு முடிவு பண்ணி, அதை ஃபாலோ பண்ணிட்டும் வர்றாங்க. அவரோட போட்டிகளை எல்லாம் அவங்க டிவிலதான் பார்த்து தெரிஞ்சுக்குவாங்களாம். `ஒருவேளை குடும்பத்துல இருந்து யாராவது போட்டியைப் பார்க்க நேர்ல போனா, அது நீரஜை டிஸ்ட்ராக்ட் பண்ணிடும்’னு நாங்க நம்புறோம்’னு இதுக்கு கோரஸா ஒரு விளக்கமும் கொடுக்குறாங்க.

Also Read -DRS-ல மாற்றம் வரவே `தோனி’தான் முக்கியமான காரணம்… Dhoni செய்த சம்பவம் தெரியுமா?!

நீரஜோட சர்வதேச வெற்றிகளுக்குப் பிறகு அவங்க குடும்பம் இன்னொரு விஷயத்தையும் ஒவ்வொரு மேட்சின்போதும் செய்ய வேண்டி இருக்கு. நீரஜோட போட்டியைப் பார்க்க வர்றவங்களோட கூட்டம் அதிகமா இருக்குமாம். நீரஜோட இண்டர்நேஷனல் மேட்ச்களப்போ உள்ளூர் மட்டுமில்லாம, வெளியூர்கள்ல இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமா அவரோட மேட்சைப் பார்க்க வீட்டுக்கு வர்றதை வழக்கமா வைச்சிருக்காங்களாம். இதனாலேயே, ஒவ்வொரு போட்டியப்பவும் தங்களோட விவசாய நிலத்துல பெரிய திரையைக் கட்டி ஒரு குட்டி தியேட்டர் சைஸுக்கு மாத்த வேண்டி இருக்காம். இப்படி ஒரு சம்பவத்தை அவரைத் தவிர வேற யாரும் பண்ணிருக்கவே முடியாதுனு நீங்க நினைக்குற சம்பவம் எது… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top