ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஆஃபர் டே சேல்ஸ் ஷாப்பிங் – செய்யக் கூடாத 7 தவறுகள்!

அமேசான், ஃபிளிப்கார்ட் உள்பட முக்கிய இ-கமர்ஸ் தளங்கள் குறிப்பிட்ட நாட்களைக் குறிவைத்து ஆஃபர் டே சேல்ஸ் என்ற பெயரில் சலுகை விலையில் பொருட்கள் விற்பனையை அறிமுகப்படுத்துவதுண்டு. அப்படியான ஆஃபர் டே சேல்ஸில் மற்ற சாதாரண நாட்களை விட அதிகப்படியான சலுகைகள் தருவதாக இ-கமர்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கும்.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்

ஆஃபர் டே சேல்ஸில் செய்யக்கூடாத 7 தவறுகள்!

  • மைண்ட் செட் ரொம்பவே முக்கியம்… என்ன தேவை என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டு அதை மட்டும் வாங்குவது சிறந்தது.
  • போலியான பொருட்களைத் தவிர்க்க கவனமாக செயல்படுங்கள். ஆஃபரில் நிறைய ஃபேக் ப்ராடக்டுகள் விற்கப்பட வாய்ப்புகள் உண்டு.
  • பொருளை விற்பவர் குறித்த தகவல்கள், அதற்கான ரிவ்யூக்கள் எப்படியிருக்கிறது என்பதை சரிபார்த்துக் கொண்டு வாங்குவது நல்லது.
  • ஆஃபரில் கிடைக்கும் பொருட்களை மற்ற ஆன்லைன் தளங்களில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குங்கள். அதன் பழைய விலை விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
  • ஆஃபர் பொருளின் உண்மையான பிராண்ட் சைட்டில் அதன் விலையை சரி பார்க்கவும். (உதாரணமாக போட் ஹெட்செட் அமேசான் ப்ளிப்கார்ட்டில் 30% ஆஃபர் விலை ரூ.1,499 என்றிருக்கும். ஆனால், போட் நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் அதன் உண்மை விலையே ரூ.1,499 தான்).
ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்
  • பிராண்ட் பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. மாடல் வெளியான வருடம், விலை கம்பேரிசன் பண்ணிப் பாருங்கள். புது ரிலீஸ் பொருட்களுக்கு 10% ஆஃபர் இருக்கும். அதுவே, பழைய ஸ்டாக்குகளுக்கு 80% வரை ஆஃபர் இருக்கும். அவை சீக்கிரமே தரம் இழக்கும்.
  • இ.எம்.ஐ ரொம்ப முக்கியம். 0% இ.எம்.ஐ என்றாலும் சில வங்கிகள் ப்ராசஸிங் கட்டணம் விதிப்பார்கள். அனைத்து கிரெடிட் கார்டு இ.எம்.ஐ டிரான்ஸாக்ஷன்களுக்கும் ஜிஎஸ்டி உண்டு. கேஷ் பேக் ஆஃபர் பார்த்து வாங்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top