எம்.ஆர்.ராதா

எம்.ஆர்.ராதா-வின் ரீல் – ரியல் தக் லைஃப் சம்பவங்கள்!

எம்.ஆர்.ராதாகிட்ட ஜட்ஜ், எம்.ஜி.ஆரை சுட்ட துப்பாக்கிக்கு உங்கக்கிட்ட லைசன்ஸ் இருக்கானு கேட்ருக்காரு. அதுக்கு உடனே.. `ஐயா, நான் சுட்டேன், ராமச்சந்திரன் உயிரோட இருக்காரு சாகல.. அதே துப்பாக்கில நானும் சுட்டுக்கிட்டேன்.. நானும் உயிரோட இருக்கேன், சாகல.. இப்படி சுட்டும் யாரையும் சாகடிக்காத துப்பாக்கிக்கு எதுக்குங்க லைசன்ஸு’னு கவுண்டர் கொடுத்துருக்காரு. இதை கே.எஸ்.ரவிக்குமார் சொல்லுவாரு. அதாவது படத்துல தக்லைஃப் கொடுக்குறதுல அவர் கிங்க்.. ஆனால், ஜட்ஜுக்கு முன்னாடி அவ்வளவு பெரிய கேஸ்ல குற்றவாளியா நின்னு இப்படி பேசுற கட்ஸுலாம் சான்ஸே இல்லை.

நான் பிச்சைக்காரன்.. இவன் பெரிய குபேர மச்சான்!

ரத்தக்கண்ணீர்ல ஒவ்வொரு சீனும் அவ்வளவு இன்டன்ஸா.. அதேநேரத்துல அவ்வளவு ஃபன்னா இருக்கும். பொட்டி தூக்குற ஒருத்தருக்கும் இவருக்கும் சண்டை வரும் ஒரு சீன்ல. அதுல இவரைப் பார்த்து பிச்சைக்காரன் அப்டினு சொல்லிடுவாரு. பார்த்தியா பிச்சைக்காரன்றான்.. இவன் குபேர மச்சான், பொட்டி தூக்கிட்டு வந்து எட்டணா வாங்குற.. நான் எதுவுமே பண்ணாமல் சோறு வாங்குறேன். உன்னைவிட பெரியன்டா நான்னுவாரு.  

அக்னி பகவானும் அந்தர் பல்டியும்!

திருவண்ணாமலை தீபம் எரிஞ்சா அரோஹரானு கண்ணத்துல போட்டுக்குவான்னு கமெண்ட் பண்ணதும், அந்த தொழிலாளி அது அக்னி பகவான்னுவாரு. உடனே, இவரு.. அக்னி பகவானா? கண்ணத்துல போட்டுக்குறியா? வீடு எரிஞ்சா மட்டும் ஐயோ அப்பானு வாயிலயும் வயித்துலயும் ஏன்டா அடிச்சுக்குற? அதுவும் அக்னி பகவான்தான அடி பல்டின்னுவாரு.

சிங்கிள்ஸின் ரியல் தலைவன்னா எம்.ஆர்.ராதா தான்!

ஒரு படத்துல அவங்கம்மா, உனக்கு கல்யாண விஷயமா ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொல்லுவாங்க. ஐ டோண்ட் லைக்.. எனக்கு கல்யாணம், கில்யாணம்னு எதைப் பத்தியும் பேசக்கூடாது. என்னை கல்யாணம் பண்ணிக்க ஃபேர் கேர்ள் இந்தியாவுலயே கிடையாதுன்னுவாரு.. சிங்கிள்ஸ்லாம் நோட் பண்ண வேண்டிய டயலாக் இதெல்லாம்.

`கல்யாணமா கல்யாணம்.. கல்யாணம் எதுக்கு பண்றதுனே இந்தியால இன்னும் எவனுக்கும் தெரியாதுன்னுவாரு, அதுக்கு அவங்கம்மா எனக்கு வயசாகுதுல, என் மூச்சு இருக்கும்போதே நீ கல்யாணம் பண்ணிக்கணும்பாங்க. இப்படி ஒவ்வொருத்தன் மூச்சுக்கும் கல்யாணம் பண்ணா, என் மூச்சு என்னாவுறது’னு தக் லைஃப் கொடுப்பாரு. நன் இப்போ சொன்னதுலாம் சும்மா சாம்பிள்தான்.. இந்த மாதிரி அவரோட தக் லைஃபை சொல்லணும்னா, சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம். அவ்வளவு இருக்கு. பார்ட் – 2 வேணும்னா மறக்காமல் கமெண்டுங்க!

1 thought on “எம்.ஆர்.ராதா-வின் ரீல் – ரியல் தக் லைஃப் சம்பவங்கள்!”

  1. You’re welcome! I’m glad to hear that you’re open to exploring various topics. If you have any specific questions or areas of interest you’d like to delve into, please feel free to share them. Whether it’s about the latest advancements in technology, recent scientific discoveries, thought-provoking literary works, or any other subject, I’m here to offer insights and assistance. Just let me know how I can help, and I’ll do my best to provide valuable information and engage in meaningful discussions!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top