ஷாஹித் கபூர்

பாலிவுட்டின் ஸ்பெஷல் பீஸ்… ஷாகித் கபூர் சம்பவங்கள்!

சாக்லெட் பாயாக கரியரை தொடங்கி, இப்போது இந்தி சினிமாவின் மிகச் சிறந்த வெர்சடைல் (versatile) நடிகர்களுள் ஒருவராகத் திகழும் ஷாகித் கபூர், பாலிவுட்டின் தனக்கென தனி பாணி என்று ஒன்று இல்லாத தனிப் பாதையில் பயணித்து கவனம் ஈர்க்கிறார். அவர் பற்றிதான் இந்த வீடியோ ஸ்டோரியில் பார்க்கப் போகிறோம்.

‘தி ஃபேமிலி மேன்’ டைரக்டர்ஸ், விஜய் சேதுபதி நடிச்சிருக்காருன்னு ‘ஃபர்ஸி’ வெப் சீரிஸ் பார்க்கப் போன தமிழ் ரசிகர்கள் பலருக்கும் ‘யார்ரா இந்த ஹீரோ?’ன்னு வாய்ப்பிளக்க வைத்துள்ளார் ஷாகித் கபூர். ‘பத்மாவத்’ போன்ற சில சர்ச்சைக்குரிய படங்களில் இவர் முகத்தை பலரும் பார்த்த ஞாபகம்… ஆனா, இவர் ஒரு மிரட்டலான நடிகர்னு இப்பதான் தமிழ் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கும் தெரிய் வருது. ஆக்ச்சுவல்லி, ஷாஹித் கபூரோட திரை வாழ்க்கையை அகழாய்வு செஞ்சா நிறைய சர்ப்ப்ரைஸான விஷயங்கள் கிடைக்குது. நிறைய நிறைய ஸ்கோப் இருந்தும்கூட ‘ஸ்டார் வேல்யூ’வை நோக்கி ஓடாம, அவர் தன்னோட கரியரை எவ்ளோ நிதானமாக மூவ் பண்ணியிருக்காருன்றது ஆச்சரியமா இருக்குது.

அப்பா பங்கஜ் கபூர் பழம்பெரும் இந்தி திரைப்படக் கலைஞர். காந்தி படத்துல காந்தியா நடிச்ச பென் கிங்ஸ்லிக்கு வாய்ஸ் கொடுத்தவர். அம்மா நீலிமா அஸீமும் நடிகர்தான். இப்படி திரைக் குடும்பப் பின்னணி இருந்தாலும் இந்தி சினிமாவுக்குள் ஷாஹித் கபூர் என்ட்ரி ஆனதுல இருந்து இருபது வருடங்களுக்கு மேலாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது வரை தன்னோட திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு தன்னோட கரியரை நகர்த்தியிருக்காருன்றதுதா நிஜம்.

ஷாகித் கபூர்

ஆரம்பத்துல ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்த ஒரு இளம் நடிகர், படிப்படியாக தன்னை அப்கிரேடு செய்துகொண்டு இப்போ ஒரு படத்துக்கும் அடுத்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்லாத அளவுக்கு வெரைட்டி காட்டி மிரட்டுற நடிகராக உருவெடுத்து இருக்காருன்னா, அந்த ஜர்னி அசாதாரணமானதும் கூட.

முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்ட ஷாகித் கபூர், 90ஸ்ல பேக்ரவுண்ட் டான்ஸரா நிறைய படங்கள்ல ஒர்க் பண்ணிருக்கார். ‘Taal’ படத்துல கூட்டத்துல ஒர்த்தரா ஐஸ்வர்யா ராய் கூட டான்ஸ் ஆடினவர்.

ஷாஹித்தின் முதல் படம் ‘இஷ்க் விஷ்க்’ (Ishq Vishk) 2003-ல் வெளியானது. இந்த டீனேஜ் ரொமான்ஸ் படத்தில் பக்கத்துவீட்டு லவ்வர் பாய் மாதிரி க்யூட்டா வருவார். படம் செம்ம ஹிட். சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைச்சுது. அப்புறம் 2005-ல் வந்த ‘வாஹ்! லைஃப் ஹோ தோ எய்ஸி’ (Vaah! Life Ho Toh Aisi!) என்ற டிராமா ஜானர் மூவியும் ஷாகித்துக்கு வெற்றிப் படமா அமைஞ்சுது. இந்த இரண்டு படங்களுமே யூத் ஆடியன்ஸ்கிட்ட செம்ம ரீச்.

அப்புறம் 2006-ல் கொஞ்சம் மெச்சூர்டான, அமைதியான, இளம் குடும்பத் தலைவர் ரோலில் ‘விவாஹ்’ (Vivah) படத்தில் நடித்து ஒட்டுமொத்த ஃபேமிலி ஆடியன்ஸையும் வசப்படுத்தினார்.

இந்த மூணு படத்துலயும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம்னா, இந்த படங்கள்ல ஷாஹிக் கபூர் – அமிர்தா ராவ் ஜோடியின் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரிதான். அந்த டைம்ல இப்படி ஒரு கெமிஸ்ட்ரி எந்த ஜோடிக்கும் ஒர்க் ஆகலைன்னு சொல்ற அளவுக்கு பாலிவுட்ல பேசப்பட்டது.

ஷாகித் கபூர்

அந்த நேரத்துலதான் இம்தியாஸ் அலியின் ‘ஜப் வெ மெட்’ (Jab We Met) பட வாய்ப்பு, ஷாஹித்துக்கு கிடைச்சுது. அதுதான் பாலிவுட்டில் அவரை அடுத்த லெவலுக்குக் கொண்டு போச்சு. ‘பிடா’ (Fida), ‘சுப் சுப் கே’ (Chup Chup Ke), ‘36 சைனா டவுன்’ (36 China Town) படங்களில் சேர்ந்து நடிச்சிருந்தாலும், ‘ஜப் வெ மெட்’ படத்தில் ஷாஹித் – கரீனா கபூர் கெமிஸ்ட்ரி அல்டிமேட்டா இருந்துச்சு. இன்னிக்கு வரைக்கும் பாலிவுட் ரசிகர்களில் ஒன் ஆஃப் தி ஃபேவரிட் ரொமான்ட்டிக் மூவி லிஸ்ட்ல இந்தப் படம் இருக்குறதுன்றதை மறுக்க முடியாது. அந்த அளவுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்.

ஒரு எலிட்டான (Elite) வாழ்க்கையில் விரக்தியடைந்த இளம் தொழிலதிபர் ரோல்ல ஷாகித் வருவாரு. அவரோட வாழ்க்கைல பாசிட்டிவ் வைப் தரும் துறுதுறு ரகளையான கேரக்டரில் கரீனா கபூர். இந்தப் படத்துல தன்னோட சேட்டைகளால கரீனா ஸ்கோர் பண்ண, ஷாஹித் அண்டர்ப்ளே பண்ணியே அப்ளாஸ் அள்ளியிருப்பாரு.

இதையெல்லாம் சொல்லும்போது உங்களுக்கு பரத் – தமன்னா நடிச்ச ‘கண்டேன் காதலை’ படம் நினைவுக்கு வரலாம். யெஸ்… அதோட தமிழ் ரீமேக்தான் இது. சந்தானம் காமெடி எல்லாம் கூடுதல் திணிப்பா இருந்தாலும், தமிழ்ல ஓரளவு நியாயம் செய்யும் அளவுக்கு நல்லாவே ரீமேக் பண்ணியிருப்பாங்க. பரத் அடக்கி வாசிக்க, தமன்னா கொஞ்சம் சம்பளத்துக்கு அதிகமாவே நடிச்சிருப்பாங்கன்றது எல்லாம் வேற ஏரியா.

‘ஜப் வெ மெட்’-ல பெர்ஃபார்மன்ஸ் ரீதியியே தன்னோட புது வெர்ஷனை ஸ்க்ரீன்ல காட்டினாலும், ஸ்டன்னிங்கா ஏதாவது கொடுக்கணும்ன்ற தாகம் மட்டும் ஷாஹித்துக்கு தீராம இருந்துச்சு. அதுக்குத் தீனி போடுற மாதிரி அமைஞ்ச படம்தான் 2009-ல் வெளிவந்த ‘கமினே’ (Kaminey). இதுநாள் வரைக்கும் அம்பி ரேஞ்சுல வலம் வந்துட்டு இருந்த ஷாஹித்தை அந்நியன் ரேஞ்சுல பார்த்த ரசிகர்கள் மிரண்டுட்டாங்க. அதுவுன் டிவின்ஸா டபுள் ஆக்‌ஷன்ல மிரட்டியிருப்பாரு. பிரியங்கா சோப்ராதான் ஹீரோயின். வி்ஷால் பரத்வாஜின் இந்த டார்க் த்ரில்லர் படம், ஷாகித் கரியர்லயே மிகப் பெரிய ப்ரேக் த்ரூ கொடுத்துச்சு. அங்கிருந்துதான் ஷாகித் எனும் மிகச் சிறந்த வெர்சட்டைல் ஆக்டர் எமர்ஜ் ஆகிறார்.

அப்புறம் இன்னொரு ஸ்வீட் சர்ப்ரைஸ் 2013-ல் வெளிவந்த ‘ஆர்… ராஜ்குமார்’ (R… Rajkumar). பிரபுதேவா டைரக்‌ஷன்ல வெறும் 38 கோடி போட்டு 100 கோடி கல்லா கட்டின மாஸ் என்ட்டர்டைனர் படம். பிரபுதேவா – ஷாஹித்தின் அதிரிபுரிதி காம்போ பாத்து பாலிவுட்டே மிரண்டு போச்சு. குறிப்பாக, அந்த ‘கந்தி பாத்’ (Gandi Baat), ‘சாரி கே ஃபாலு சே’ (Saree Ke Fall Sa) பாடலும் டான்ஸும் செம்ம வைரல். நிச்சயம் நீங்க இந்த ரெண்டு பாடலையும் கடந்து வந்திருப்பீங்க.

என்னடா மாஸ் மசலா பக்கம் ஷாஹித் ஒதுங்கிட்டாரோன்னு பார்த்தா, அதுக்கு அடுத்த வருஷமே கம்ப்ளீட்டா வேற மாதிரி ‘ஹைதர்’
(Haider)ல வந்து நிக்கிறார். ஷாகித் கரியர் ஸ்பெஸ்டா வந்துச்சு விஷால் பரத்வாஜ் இயக்கிய ‘ஹைதர்’ படம். ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’ (Hamlet) நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட அந்தப் படத்துல காதல், பழிவாங்கல், வலின்னு ரொம்ப இன்ட்டென்சான கேரக்டர்ல பிச்சு உதறியிருப்பார். வலிமிகுந்த வேதனையை மனதில் சுமந்தபடி, பழிவாங்கும் வெறியை தன் கண்கள் வழியே காட்டி ஷாஹித் தன்னை ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதுவும் அந்த மூணு நிமிட ‘மோனோலாக்’ (monologue) சீன் எல்லாம் உலகத் தரம். ( https://youtu.be/xVymODkZo24 )

அதுக்கு அப்புறம் 2016-ல் தன்னோட பெர்ஃபார்மன்ஸால பேச வைச்ச படம் ‘உட்தா பஞ்சாப்’ (Udta Punjab). பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கப்படும் இளைஞர்களின் வாழ்க்கையை நம் மனதை உலுக்கும்படி, எந்த காம்ப்ரமைஸும் ஆகாம பதிவு செய்யப்பட்ட பகீர் படம்தான் இது. டிரக் அடிக்ட் ஆகி தன்னோட நட்சத்திர அந்தஸ்தை இழந்துகொண்டிருக்கும் ராக் சிங்கரான டாம் சிங் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் மனுஷன். சைக்கிள் கேப்ல ஸ்கோர் பண்ணி அப்ளாஸ் வாங்குற ஆலியா பட்டுடன் போட்டி போட்டு நடிச்சி அசத்தியிருப்பார் ஷாஹித் கபூர்.

2017-ல் சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த ‘பத்மாவத்’ படத்தில் ரத்தன் சிங்காக நடித்து, அந்தக் கதாபாத்திரத்துக்கே உரிய கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாட்டின் மூலம் தன்னை ஒரு தேர்ந்த நடிகராக மீண்டும் நிரூபித்திருப்பார் ஷாஹித் கபூர்.

கோவிட்டுக்கு முன்னாடி வெளிவந்து தியேட்டரில் வசூலை அள்ளிய கபீர் சிங் (Kabir Singh) படத்தில் இன்னொரு பெரும் பாய்ச்சலைக் காட்டியிருப்பார் ஷாஹித் கபூர். தெலுங்கில் சக்கைப்போடு போட்ட ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் தான் இது. அசலுக்கு நியாயம் சேர்த்திருக்கும் இந்தப் படத்தில் தன்னோட திறமையால் ஒரிஜினலுக்கே ஒசத்தியான பெர்ஃபார்மன்ஸை கொடுத்திருப்பார். அதேமாதிரி, போன வருஷம் வந்த ‘ஜெர்ஸி’யையும் ஆத்மார்த்தாமா ரீமேக் பண்ணியிருந்தாலும், பாய்காட் பாலிவுட் உள்ளிட்ட பல வெளிக்காரணங்களால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது. ஆனால், ஒரு நடிகராக ஷாஹித் மீண்டும் வெற்றி பெற்றார் என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியான நடிப்பைத் தந்து பாராட்டுகளை அள்ளினார்.

Also Read – விக்னேஷ் சிவன் சூப்பர் டைரக்டரா… சுமார் டைரக்டரா?!

சினிமா கரியர்ல ஸ்டார்கள் வரிசையில் வலம் வராமல், மாஸ் – க்ளாஸ்களைத் தாண்டி தனித்துவ நடிகராக மட்டுமே திகழ வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் ஷாஹித் கபூர்.

‘கபிர் சிங்’ படம் வந்தப்ப, ஏன் இந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கீறீங்கன்னு ஒரு ப்ரஸ்மீட்ல கேட்டிருப்பாங்க. அதுக்கு ஷாகித் கபூர் சொன்ன ஒரு பதில் போதும், அவரோட சினிமா மீதான தெளிவான பார்வை என்ன என்பதைச் சொல்ல.

“நான் ‘ஜப் வெ மெட்’ படத்துல மென்மையாகவும், ‘பத்மாவத்’ படத்தில்கண்ணியமாகவும் இப்போ ‘கபிர் சிங்’கில் ஆக்ரோஷமான கதாபாத்திரத்திலும் நடிச்சிருக்கேன். ‘உட்தா பஞ்சாப்’பில் வரும் டாமி சிங் ரோல், கபீர் சிங்கை விட மோசமான விஷயங்களை உள்ளடக்கிய கதாபாத்திரம். இதன்மூலம் நான் சொல்ல வர்ற விஷயம் ஒண்ணுதான்: நான் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். அதை நேர்மையாகத் திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நட்சத்திர அந்தஸ்துக்காக எல்லோருக்கும் பிடிக்கும் விஷயங்களை மட்டுமே என்னால் செய்ய முடியாது. நடிப்பு என்பது நேர்மையாக இருப்பது. மக்களுக்கு நமது கதாபாத்திரம் மீது வெறுப்பு வரலாம். ஆனால், பரவாயில்லை. அதுதான் நடிப்பு.”

செம்ம எக்ஸ்ப்ளைனேஷன் ல்ல்…

ரியல் லைஃப்லயும் பாலிவுட் ஸ்டார்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஷாகித். அவரோட தனிப்பட்ட – தொழில் சார்ந்த சர்க்கிள் ரொம்ப ரொம்ப சின்னது. தான் உண்டு, தனது சினிமா தொழில் உண்டுன்னு இருக்குற பக்கா ஜெண்டில்மேன்.

ஒரு நடிகருக்கு ஹிட் படம், ஃப்ளாப் படம் என்பதெல்லாம் பெரிய மேட்டரில்லை. திறமை, அனுபவம், வெற்றிகளில் நிதானமான முன்னேற்றம் காண வேண்டும். டக் டக்னு மேல வந்து சடனா சக்சஸ் ஆகுறது என்னிக்குமே டேஞ்சர். தனக்கு வரக் கூடிய வாய்ப்புகளில் சரியானதை தேர்ந்தெடுத்து, ஒரு ஸ்டார் ஆக அல்லாமல், ஒரு ஆக்டராக ரசிகர்களுடன் மனசார கனெக்ட் ஆகி இருப்பதுதான் தன்னோட சக்சஸ் ஃபார்மூலாவாகக் கொண்டு, அதை மிக நிதானமாக பின்பற்றி வருகிறார் ஷாஹித். அதனால்தான் அவர் பாலிவுட் ஸ்டார்களில் தனி பீஸ் ஆக ஜொலிக்கிறார்.

20 வருஷத்துல ரொம்ப ரொம்ப ஃபில்டர் பண்ணி 30 ப்ளஸ் படங்களில் மட்டும் நடித்துள்ள ஷாகித் கபூர் இன்னும் எல்லைகளைத் தொடுவார் என்பது அவரது அணுகுமுறையில் இருந்தே தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top