சீமான்

`யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்’ – கே.டி.ராகவன் குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

கே.டி.ராகவன் வீடியோ, அண்ணாமலை ஆடியோ குறித்த கேள்விக்கு யாரும் செய்யாதையா அவர் செய்துவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மாயோன் பெருவிழா

சீமான்
சீமான்

கிருஷ்ண ஜெயந்தி விழா மாயோன் பெருவிழா என்ற பெயரில் நாம் தமிழர் கட்சி கொண்டாடி வருகிறது. சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் சீமான் முன்னிலையில் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

கே.டி.ராகவன் கேள்வி – சீமான் பதில்

செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் பா.ஜ.க-வின் கே.டி.ராகவன் வீடியோ, அண்ணாமலை ஆடியோ வெளியான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த சீமான், “அதெல்லாம் விடுங்க… சமூகக் குப்பை. அதையெல்லாம் எடுத்து பேசிக்கிட்டு இருக்கதெல்லாம்… இதுல எது அநாகரிகம் பாருங்க… அவருடைய அனுமதி இல்லை. அவருடைய ஒப்புதல் இல்லை. அவருக்குத் தெரியாம நீங்க அவருடைய படுக்கையறையில… கழிவறைல கருவி வைச்சு வீடியோ வைச்சு எடுத்து வர்றது…. முதல்ல அதுதான் சமூகக் குற்றம். முதல்ல அவரைத்தான் கைது பண்ணியிருக்க வேண்டும். நடவடிக்கை எடுத்துருக்கணும்ல. உலகத்துலயே எங்கேயுமே நடக்காத ஒன்றை அவர் செஞ்சுட்டார்னு காட்டிட்டு இருக்கீங்க. என்னது இது. சட்டசபைல வைச்சு ஆபாசக் காட்சிகளைப் பார்த்துட்டு இருந்தாங்க.. பொறுப்புல இருக்கவங்க…அதெல்லாம் செய்யக் கூடாது. அவர் தனிப்பட்ட முறையில அவர் அறையில பண்ணதை, அதை எடுத்து வைச்சுக்கிட்டு அவர் அப்படிப் பண்ணிட்டார். இப்படி பண்ணிட்டார்னு சொல்லிகிட்டு… கேடு கெட்ட சமூகமா மாறிடுச்சோனு ஒரு பயம் வருதுல…

சீமான்
சீமான்

யார் யாருகூட பேசுறா… யார் என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேக்குறது, பதிவு பண்றது, அதை வெளியிடுறதுன்னு.. இதனால என்ன சாதிச்சுட முடியும்னு நினைக்குறாங்க? இதனால என்ன வந்துறப்போகுது. பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மயப்படுத்திட்டு இருக்கு அரசு. அதப்பத்திலாம் பேசலை. 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்போறேன்னு பிரதமர் சொல்லிட்டு இருக்கார். ஆனால், 6 லட்சம் கோடி ரூபாய்க்காக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குக் குத்தகைக்கு விடப்போறதா சொல்றாங்க. 100 லட்சம் கோடி ரூபாய் இருக்கும்போது ஆறு லட்சம் கோடிக்குக் குத்தகைக்கு விட வேண்டிய அவசியம் என்ன? அதெல்லாம்தான் பிரச்னை.

உச்ச நீதிமன்ற நீதியரசர் ரமணா சொல்றார். எந்த விவாதமும் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்ற நிலை எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ’ என்கிறார். மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா அண்ணன் சொல்றார்,20 ஆண்டுகளில் எந்தவொரு விவாதமும் இல்லாமல் 36 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததே இல்லை’ என்கிறார். இது சர்வாதிகாரம் இல்லை. கொடுங்கோன்மை. இதையெல்லாம் பத்திதான் பேசணும். அதைவிட்டுவிட்டு அவர் வீடியோ வெளியிட்டு விட்டார்; ஆடியோ வெளியிட்டு விட்டார்னு பேசிட்டு இருக்கீங்க…’’ என்று பேசினார்.

Also Read – பகீர் கிளப்பிய மதன்… பா.ஜ.க பொதுச்செயலாளர் பொறுப்பை உதறிய கே.டி.ராகவன் – என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top