ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால் மீட்பது எப்படி… சிம்பிள் ஸ்டெப்ஸ்!

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவிட்டால் அதை உடனடியாக சில நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மீட்க முடியும். எப்படி?

ஆன்லைன் மோசடி

இன்றைய சூழலில் டிஜிட்டல் முறையில்தான் பெரும்பாலான பணபரிவர்த்தனைகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைனில் பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது, அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ள இது உதவும். ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நேரத்தில், ஆன்லைன் பண மோசடிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. Norton Lifelock என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் 2.7 கோடி பேர் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

பொதுமக்களின் பெயர், பிறந்ததேதி, பாஸ்வேர்டுகள் போன்றவற்றைத் திருடும் ஹேக்கர்கள், அதைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கும் செயல்கள் பல இடங்களில் அரங்கேறியிருக்கின்றன. அதேபோல், பரிசு விழுந்திருப்பதாகப் போலியான இணையதள முகவரிகளை இ-மெயில், குறுஞ்செய்திகள் வழியாக அனுப்பி, ஒருவர் அந்த இணைப்பை கிளிக் செய்யும்போது அவரது தகவல்கள் திருடப்பட்டு, அதன்மூலம் பண மோசடிகள் நடந்த செய்திகளையும் நாம் கடந்து வந்திருப்போம்.

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தைப் பெறுவது எப்படி?

வங்கிகளில் அமலில் இருக்கும் விதிகளின்படி, வாடிக்கையாளர் ஒருவருக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக நடந்த பணபரிவர்த்தனைகளில் இழந்த பணத்தை முழுமையாகத் திரும்பப் பெறமுடியும். இதுபோன்ற மோசடிகளால் பணத்தை இழந்தால், உடனடியாக அதுகுறித்து வங்கிகள், பேமெண்ட் கேட்வே நிறுவனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் புகார் அளிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிமுறையின்படி, “நீங்கள் சட்டவிரோத பணபரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்டால், அதுகுறித்து உடனடியாக வங்கிக்குத் தெரியப்படுத்தினால் உங்களது இழப்பைப் பெரும்பாலும் குறைத்துவிட முடியும்; சில சமயங்களில் இழப்பு ஏதுமின்றி தப்ப முடியும்’ என்கிறது.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

பெரும்பாலான வங்கிகளில், தங்கள் வாடிக்கையாளர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டால் அதை காப்பீடு மூலம் நிவர்த்தி செய்யும் வசதி இருக்கிறது. காப்பீடு வசதியைப் பெற ஆன்லைன் மோசடி/சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் குறித்து உடனடியாக வங்கி தரப்புக்குப் புகார் தெரிவிக்க வேண்டும். வங்கிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், அதுகுறித்து காப்பீடு நிறுவனத்திடம் தகவல் அளிக்கப்பட்டு, வாடிக்கையாளரின் இழப்பு குறைக்கப்படும். ஆன்லைன் பண மோசடியில் இழந்த பணத்தைப் பொதுவாக வங்கிகள் 10 நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதேநேரம், சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்து, சம்பவம் நடந்து 3 நாட்களுக்குள் வங்கியில் புகார் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.25,000 வரை இழப்பை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் வரும்.

Also Read – கார் லோன் வாங்கப் போறீங்களா… இந்த 4 விஷயங்களை மறக்காம செக் பண்ணுங்க!

43 thoughts on “ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால் மீட்பது எப்படி… சிம்பிள் ஸ்டெப்ஸ்!”

  1. pharmacy website india [url=https://indiapharmast.com/#]best online pharmacy india[/url] indian pharmacies safe

  2. reputable canadian pharmacy [url=https://canadapharmast.online/#]reliable canadian online pharmacy[/url] buy canadian drugs

  3. mexico pharmacies prescription drugs [url=http://foruspharma.com/#]mexico drug stores pharmacies[/url] best online pharmacies in mexico

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top