`எல்லாம் சும்மா தீயா இருக்கும்…’ சிங்கர் சிம்புவின் பெஸ்ட் பாடல்கள்!

வாரிசு படத்துல தீ பாட்டை சிம்பு பாடியிருக்காரு. சோஷியல் மீடியா முழுக்க காட்டுத்தீ மாதிரி அந்தப் பாட்டு தான் பரவியிருக்கு. தளபதிக்கு சிம்பு பண்ண தரமான சம்பவம், தளபதி பாட்டா? இல்லை சிம்பு பாட்டா?, என்ன சிம்பு தீயா இருக்காருனு விஜய், சிம்பு ஃபேன்ஸ் ஃபயர் விட்டுட்டு இருக்காங்க. சிம்பு பாடுனாலே அந்தப் பாட்டுல் செம ஹிட்டுதான். எக்ஸாம்பிள் சொன்னாலே பத்தாது. இந்த வீடியோல எந்த மியூசிக் டைரக்டர்ஸ் கூட சேர்ந்த எந்த ஐகானிக் பாடல்களையெல்லாம் கொடுத்துருக்காருனுதான் பார்க்கப்போறோம்.

Simbu
Simbu

சிம்பு பாட்டுனு சொன்னதும் நமக்கு டக்னு ஸ்ட்ரைக் ஆகுற காம்போ யுவன் – சிம்புதான். அவங்க காம்போல ஏகப்பட்ட பாடல்கள் வந்து மாஸா ஹிட்டாகி இன்னைக்கும் ரிபீட் மோட்ல கேட்டுட்டு இருக்கோம். அதுல ஃபஸ்ட் பாட்டு லூசுப்பெண்ணே பாட்டுதான். இந்த பாட்டை எழுதும்போது நிறைய வார்த்தைகள் யுவன்கிட்ட சிம்பு சொல்லியிருக்காரு. கடைசில லூசுப்பெண்ணே எப்படி இருக்குனு கேட்டதும், யுவன் சிரிச்சாராம். சார், நான்லாம் அப்படிதான் கூப்பிடுவேன். அதுனால, அப்படியே வைச்சுக்கலாம்ன்றுக்காரு. லிரிக்ஸ் முழுசா எழுதி முடிச்சதும், காதல் வராதான்ற வார்த்தையை பாட்டோட ஃபஸ்ட் லைனா வைச்சிருக்காங்க. சிம்பு, யுவன்கிட்ட லூசுப்பெண்ணே ஃபஸ்ட் லைனா வைங்கனு சொன்னதும் யுவன் கம்போஸ் பண்ணியிருக்காரு. பாட்டு செமயா வந்துருக்கு. பொண்ணை மட்டும் லூசுனு சொன்னா சண்டைக்கு வருவாங்கனுதான், சிம்பு லூசுப்பெண்ணே, லூசுப்பையன் உம்மேல லூசா சுத்துறான்னு ஜெண்டர் ஈகுவாலிட்டி பார்த்து எழுதியிருக்காரு. இன்னைக்கும் ரெண்டு பேரும் சேர்ந்து மேடை ஏறுனா எல்லாரும் யுவன் – சிம்புகிட்ட வைக்கும் கோரிக்கை, லூசுப்பெண்ணே பாடுங்கன்றதுதான். பெரிய பாட்டு. ஆனால், எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பே ஆகாது. ஒரு புறம்போக்கு முதல் முதலா சரக்கடிக்க கத்து தந்தான், எவண்டி உன்ன பெத்தான், நோ மணி, வைச்சுக்கவா, என் ஆசை மைதிலியே, யம்மாடி ஆத்தாடினு எல்லாப் பாட்டும் ஹிட்டு தான். ஆனால், யுவன், சிம்புவுக்கு ஒருபாட்டை டெடிகேட் பண்ணா, என்னப் பாட்டு பண்ணுவாருனு மேடைல கேப்பாங்க. அதுக்கு நலந்தானா பாட்டை சொல்லுவாரு. அதுக்கு அடுத்தது அவரைப் பாட சொல்றது, லூசுப் பெண்ணே பாட்டுதான். அப்படியொரு மேஜிக்கை அந்தப் பாட்டு கிரியேட் பண்ணிச்சு.

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல அவர் பாடுல சில பாடல்களும் ஹிட்டு. சிம்பு, ரஹ்மான் காம்போவும் செம காம்போ. டி.ஆர் மியூசிக்ல ஐ.எம் அ லிட்டில் ஸ்டார் பாட்டுதான் சிம்பு பாடுன முதல் பாட்டு. அதுக்கப்புறம் மோனிஷா என் மோனலிசா, சொன்னால்தான் காதலா படத்துல அவர் மியூசிக்ல பாடல்களை பாடுனாரு. அப்பா மியூசிக்ல பாடிட்டாரு. அதனால, அவர் சிங்கர்னுலாம் சொல்ல முடியாதுனு சொல்லலாம். ஆனால், டி.ஆர்க்கு அடுத்து அவர் பாடுன மியூசிக் டைரக்டர், ஏ.ஆர்.ரஹ்மான். பைலா மோருன்ற அந்தப் பாட்டு எவ்வளவு பேருக்கு தெரியும்னு தெரியல. ஆனால், அவங்க கூட்டணில சிம்பு பாடி ஹிட்டான பாட்டு ஷோக்காலி. வெந்து தணிந்தது காடுல, காலத்துக்கும் நீ வேணும் பாட்டு சிம்பு பாடுனதுதான். செமயான லவ் டிராக். மல்லிப்பூ புடிச்ச எல்லாருக்கும் இந்தப் பாட்டும் அவ்வளவு புடிச்சுது. இப்படி ரஹ்மான் மியூசிக்ல இந்த ரெண்டு பாட்டும் சிம்பு பாடி ஹிட்டாச்சு. ஹாரிஸ் மியூசிக்ல எனக்கு தெரிஞ்சு ஒரேயொரு பாட்டுதான் பாடியிருக்காரு. அதுவும் செம ஹிட்டு. கோவில் படத்துல காதல் பண்ன பாட்டு வரும். வடிவேலு, கோவை கமலா, திப்பு இவங்ககூட சிம்புவும் பாடியிருப்பாரு. கிராமத்து சைட்லாம் கல்யாணத்துக்கு இந்தப் பாட்டுலாம் இன்னைக்கும் போடுவாங்க. பஸ்ல போற லவ் ஜோடிகளுக்குலாம் இந்தப் பாட்டு வந்த புதுசுல ஆந்தமாவே இருந்துச்சு. தேவா மியூசிக்ல பாடியிருக்காரு. ஆனால், ஸ்ரீகாந்த் தேவா – சிம்பு கூட்டணில வந்த பாட்டு போட்டுத்தாக்கு பாட்டுதான் சிம்பு ஃபேன்ஸ்க்கு ஆல்டைம் ஃபேவரைட் லிஸ்ட்ல இருக்குற பாட்டு. தாறு மாறு ஹிட்டு. பாட்டைக் கேட்டாலே அவ்வளவு எனர்ஜி வரும். ஸ்ரீகாந்த் தம் படத்துக்கு பாட்டு போடும்போது, சாணக்யா பாட்டுக்கு நிறைய லிரிக்ஸ் முதல்ல எழுதி பாடி காட்டுனாராம். சிம்பு பார்த்துட்டு எதுவும் ஹிட் ஆகாதுனு கான்ஃபிடண்டா சொன்னாராம். அப்புறம், சாணக்யா சாணக்யானு சொன்னதும் செம ஹிட்டு பாட்டுனு சொல்லியிருக்காரு. அவ்வளவு மியூசிக் அறிவு சிம்புக்குனு சொல்லுவாரு.

Simbu
Simbu

ஜி.வி.பிரகாஷ் மியூசிக்லயும் சிம்பு பாடியிருக்காரு. காளை படத்துக்கு அவர்தான் மியூசிக். அந்தப் படத்துல குட்டி பிசாசே பாட்டு வரும். எந்த நிகழ்ச்சி வந்தாலும் இந்தப் பாட்டைப் போட்டு டான்ஸ் ஆடுனால், தனி வைப் ஒண்ணை செட் பண்ணும். டி.வில தீபாவளி, பொங்கள் நிகழ்ச்சி புரோமோலயெல்லாம் இந்த பாட்டு ஓப்பனிங்கை மியூசிக்கை போடுவாங்க. அப்பவே செலிபிரேஷன் மோட் ஒண்ணு வரும். ஜி.வி.பிரகாஷ் – சிம்புவோட பெஸ்ட் காம்போ பாடல் இதுதான். சிம்புவோட கரியர்ல யுவனுக்கு அடுத்த செமயா அமைஞ்ச மியூசிக் டைரக்டர் தமன். அவங்க காம்போல எல்லாருக்கும், இல்லை பெரும்பாலானவங்களுக்கு புடிச்ச பாட்டு ஒஸ்தி படத்துல வந்த பொண்டாட்டி பாட்டுதான். கல்யாணம் ஆன எல்லாரும் புதுசுல இந்த பாட்டை தான் ரீல்ஸாலாம் போடுறாங்க. சிம்பு சும்மா உருகி பாடியிருப்பாரு. மம்பட்டியான் காட்டு வழில இருந்து வாரிசு தீ வரைக்கும் அவங்க காம்போல எல்லாமே ஹிட்டுதான். ஆனால், பொண்டாட்டி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட். தரன் குமார் மியூசிக்ல போடா போடி படத்துல இவரு பாடுன எல்லாமே நல்லாருக்கும். அதுவும் லவ் பண்லாமா, வேணாமா பாட்டு, ஓ இப்படியும் பாட்டு எழுதலாமா? பாடலாமா? மியூசிக் போடலாமா?னு யோசிக்க வைச்ச படம். செம ஜாலியான பாட்டு. கன்ஃபியூஸ் இல்லாமல் போறவனுக்கும் இந்த பாட்டைக் கேட்டா கன்ஃபியூஷன் வரும். அப்படியொரு பாட்டு. இன்னைக்கும் மீம்ஸ்லலாம் இந்த டெம்ப்ளேட் அடிக்கடி சுத்தும். குறளரசன், அதாங்க சிலம்பரசன் தம்பி. அவர் மியூசிக்லயும் நிறைய பாடியிருக்காரு. ஆனால், அவர் மெலடி பக்கத்தை முழுசா இவர் மியூசிக்லதான் பார்த்தோம். இது நம்ம ஆளு படத்துல ஐயோ காத்தாக வந்த பொண்ணே பாட்டு செம ஃபீல் குட்டா இருக்கும்.

Varisu
Varisu

அனிருத் மியூசிக்லயும் இவர் ஒரு பாட்டு பாடியிருக்காரு. ரம் படத்துல பேயோஃபோபிலியானு பாட்டு ஒண்ணு இருக்கு. எத்தனை பேருக்கு புடிக்கும்னு தெரியல. ஆனால், கேட்க நல்லாருக்கும். விவேக் -மெர்வின், நிவாஸ் கே பிரசன்னா, விஷால் சந்திர சேகர் மியூசிக்லயும் பாடியிருக்காரு. தமிழ் சினிமால வந்த பாடல்கள் இதெல்லாம். இதைத் தவிர்த்து சவுத் இந்தியாவே அதிரும் அளவுல பாட்டு ஒண்ணு பாடியிருக்காரு. பல நாள் ரீல்ஸ்ல அந்தப் பாட்டு மட்டும்தான் ஓடிச்சு. டி.எஸ்.பி மியூசிக்ல புல்லட் பாடல். அந்தப் பாட்டு வைரலான பிறகு தெலுங்குல மோஸ்ட் வாண்டட் சிங்கரா சிம்பு மாறிட்டாருனே சொல்லலாம். பாலிவுட்லகூட இப்போ ஒரு பாட்டு பாடியிருக்காரு. மியூசிக் டைரக்டராகவும் பல விஷயங்கள் பண்ணியிருக்காரு. சக்க போடு போடு ராஜா, 90 எம்.எல் படத்துக்குலாம் இவர்தான் மியூசிக். ஆல்பம் பாடல்கள் சிலவும் பண்ணியிருக்காரு. முதல்ல லவ் ஆந்தம். செமயான பெப்பி பாட்டு. அப்புறம் பீப் சாங்க். இந்தப் பாட்டால ஏகப்பட்ட பஞ்சாயத்து சிம்புவுக்கு வந்துச்சு. அந்த நேரத்துல மனுஷன் ரொம்ப டிப்ரஷன்ல இருந்துருக்காரு. ஏ.ஆர்.ரஹ்மான சரியா அப்போ, தள்ளிப்போகாதே பாட்டை ரிலீஸ் பண்ண சொல்லி, அந்த பேச்சை மறக்க வைச்சதாகூட சிம்பு சொல்லுவாரு. வோட் சாங் அடுத்த ஆல்பம். போடு மாமானு பாட்டு வரும். சிம்பு கரியர்ல இன்னொரு ஹிட்டு பாட்டு, பெரியார் குத்து. ரமேஷ் தமிழ்மணி இந்தப் பாட்டுக்கு மியூசிக். ஆனால், இந்தப் பாட்டுக்கு அதிகமா விமர்சனமும் வந்துச்சு. இப்படி சிம்பு பண்ண பாடல்களோட சம்பவங்களை சொல்லிட்டே போகலாம்.

நடிகர் சிம்பு, டைரக்டர் சிம்பு, லிரிசிஸ்ட் சிம்பு, மியூசிக் டைரக்டர் சிம்பு வரிசைல பாடகர் சிம்புவுக்கும் எப்பவுமே ஸ்பெஷல் இடம் உண்டு. சிம்பு பாடுனதுல உங்களோட ஃபேவரைட் பாடல் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top